Showing posts with label Panorama. Show all posts
Showing posts with label Panorama. Show all posts

Thursday, September 18, 2008

விக்ஷணரியில் கண்டெடுத்தது -
அகல் பரப்புத் தொடர் காட்சி – Panoramic view

அகல் பரப்புத் தொடர் காட்சி படக்கள் அல்லது panoramic photograhs என்று சொல்லப்படும் படங்கள் சில :-













அருமையா இருக்கில்லே.. அப்படியே ஒரு சில நொடிகள் அந்த இடத்துக்கே போன மாதிரி ஒரு உணர்வு வருது இல்லையா.. .. அது தான் ஒரு உத்தமமான அகல் பரப்புத் தொடர் காட்சி படத்தின் வெற்றியும் கூட.

ஏன்னா , நம்ம கண்களின் தீர்மானிக்கப்பட்ட பார்வையின் பரப்பளவு (natural field of vision) 700 - 1600 வரையில் தான். வெளியூர் போகும்போது நாம் தங்கியிருக்கும் ஹோட்டல் அறை ஜன்னல் வெளியே பார்க்கும்போது சில நேரம் தோணும் - "ஆஹா, என்னமா இருக்கு "ன்னு, ஆனா நாம கண்களால் பார்த்ததை படம் பிடிச்சு பார்க்கும்போது அந்த ஒரு feel / effect வருவதில்லை.

அதுக்கு காரணம் நம் கண்களின் தீர்மானிக்கப்பட்ட பார்வையின் பரப்பளவு தான். அது மட்டும் இல்லை, நாமே நேரடியா பார்க்கும் போது கழுத்தை இடமிருந்து வலம் திருப்பி தான் முழு காட்சிய்யை ரசிப்போம். ஆனால் கேமேராவில் படம் பிடிக்கும்போது இந்த மாதிரி திருப்பி எல்லாம் படம் எடுக்க முடியாது ( நான் சொல்வது சாதாரண கேமரா). ஆனால் கேமராவை வச்சு நீங்க 1800 - 3600 வரையிலான காட்சியை தனிப்பட்ட படங்களாக எடுத்து அதை எல்லாம் ஒண்ணு சேர்த்து ஒரு முழுமையான காட்சியாகவும் காட்டலாம்.


இந்த மாதிரி நேரத்தில் தான் " அகல் பரப்புத் தொடர் காட்சி படங்கள்" என்று சொல்லப்படும் Panoramic shots வெகுவாக எடுக்கப்படுது. இதிலே வித்தை என்னனா, நீங்க கழுத்தை இடமிருந்து வலம்ன்னு திருப்பி பார்ப்பது மாதிரி, ஒரே காட்சிய்யை மொத்தமாக எடுக்காமல் துண்டு துண்டாக, 3 - 5 படங்களகாக தனித்தனியா எடுத்து ஒண்ணா சேர்த்து பிசிறில்லாம ஒட்டறது தான். ( ஹை! கட்-அண்ட்-பேஸ்ட்டா அதான் எனக்கு தெரியுமே! ன்னு தங்கவேலு படத்திலே வராமாதிரி சொல்லக்கூடது.. )

அகல் பரப்புத் தொடர் காட்சி படக்கள் எடுக்க கவனத்தில் கொள்ள வேண்டிய நுணுக்கங்கள்

கவனிக்க 1 :- Camera Settings

உங்கள் கேமரா Manual Mode ல் உள்ளதான்னு சரிபார்க்கவும் . காரணம் ஒரு காட்சின்னு பார்க்கும்போது சில இடத்தில் சூர்யவெளிச்சம் அதிகமாகவும் சிலவிடங்களில் குறைவாகவும் இருப்பது தான் இயற்கை. ஆனால் நம் கண்கள் இந்த ஒளிவிளையாட்டில் இருக்கும் குறைபாடுகளை பார்த்தாலும் அது மூளைக்கு போய் சேர்வதில்லை. ஆனால் கேமாராவில் படம் பிடிக்கும்போது இந்த ஒளி வித்தியாசத்தை துல்லியமாக காட்டினால் " அகல் பரப்புத் தொடர் காட்சி படக்கள்" (Panoramic pictures) ன் மெருகு கூடும்.

அகல் பரப்பு தொடர் காட்சியில் நீங்க ஒட்டவேண்டும்ன்னு எடுக்கும் எல்லா படங்களுக்கு ஒரே மாதிரியான Zoom - shutter speed - Aperture ஐ பயன்படுத்தவும். இல்லைன்னா band aid போட்டு ஒட்டினா மாதிரி patches இருக்கும்.

உங்களிடம் உள்ள கேமராவை பொறுத்து அதற்கு ஏற்றாப்போல் Manual Mode settings ல் சரிபார்த்து வைக்கவும்.

கவனிக்க 2 :- துண்டு காட்சி படங்கள்
ஒரேகாட்சியை 3-5 துண்டுகளாக எடுக்கப்போறோம். ஆனால் ஒரு நிபந்தனை .. எல்லா துண்டு-காட்சிக்கும் கண்டிப்பா ஒரு ஒற்றுமைவாய்ந்த காட்சிப்பொருள் இருக்கணும். உதா ;- இந்த 3 படத்தை பாருங்க..
++

காட்சி கொஞ்சம் கொஞ்சமா ரயில் தண்டவாளமும் , நடுவிலே வரும் சாலையை விட்டு நகர்ந்து போகிரா மாதிரி எடுக்கப்பட்டிருக்கு.

இதுக்கு Tripoid இருந்தா கண்டிப்பா பயன்படுத்துங்க.. இல்லைனா காம்பவுண்ட் சுவர் , பாக்லணி கம்பி ன்னு ஏதையாவது சப்போர்ட்டுக்கு வச்சு படம் எடுங்க. உயரத்தில் இருந்து படம் எடுக்கறீங்கன்னா கண்டிப்பா கேமராவிலிருந்து தொங்கும் வளயத்தை (hand guard thinggy) கைய்யில் கண்டிப்பாக மாட்டிக்கொள்ளவும்.

கவனிக்க 3 :- மென்பொருள்
படங்களை ஒட்ட நான் பயன்படுத்திய மென்பொருள் Autostich. இதை இலவசமா இங்கிருந்து தரவிறக்கம் செய்யலாம்.


  1. Zip கோப்பிலிருந்து Extract செய்த பிற்ப்பாடு autostich.exe ஐ ஓடவிடவும்.
  2. ஓட்டவேண்டிய படங்களை File - Open பட்டியலிலிருந்து multiple select using Ctrl + Click செய்யவும்.
  3. Multiple select செய்த பிறகு Open குடுத்தால் சில நொடிகளில் அதுவே தானாக Align செய்து ஒட்டியும் தந்துவிடும்.( முக்கியமா நீங்க சும்மா இருக்கணும்)

    உங்கள் கணினியின் வேகத்தை பொறுத்து ஒட்டுதலுக்கான நேரத்தில் தாமதம் இருக்கக்கூடும்.

    அதனால கொஞ்சம் பொறுமையா இருக்கிறது நல்லது.


இப்போ இந்த 3 படத்தையே autostich ஒட்டவச்சப்புறம் பாருங்க
படத்தை பெரிதாக்கி பார்த்தால் Pixellation இருக்காது



கவனிக்க 4 :- பிற்தையாரிப்பு
இப்போ இதே படத்தை கொஞ்சம் பிர்தையாரிப்பு (Photoshop) பண்ணினப்புறம் பாருங்க
படத்தை பெரிதாக்கி பார்த்தால் Pixellation இருக்காது


ரொம்பவே சுமாரான 3 படங்களை அகல் பரப்புத் தொடர் காட்சி படங்களாக எடுத்து ஒட்டினப்புறம் ஏதொ பாக்குற மாதிரி இருக்கில்லையா.. அப்போ அழகான ஒரு சூழலை இதே முறையில் எடுத்து ஒட்டினால் எவ்வளவு ரம்யமாக இருக்கும்ன்னு நீங்களே எடுத்து பார்த்தால் தான் உணர முடியும். வீதி கூடிய காட்சியாக இருந்தால் Horizondal Panorama ன்றும் உயரம் கூடியதாக இருந்தால் அதை Virtical Panorama என்றும் சொல்வார்கள்.

Autostich இலவசமாக தரவிறக்கம் செய்யக்கூடிய ஒரு ரொம்பவே எளிமையான மென்பொருள். இதையே ஹை-டெக்கா செய்ய .. Photoshop CS3 ல் Photomerge ன்னு வசதி இருக்கு. Canon கேமரா வச்சிருக்கிரவங்களுக்கு கேமரா கூடவே தரப்படும் Photostich மென்பொருளும் இதுக்கு பயன்படுத்தலாம். GIMP ஆர்வலர்கள் கவலை வேண்டாம். Pandora மென்பொருள் இங்கே கிடைக்கும். அதை வைத்துக் ஜிம்ப்பிலும் விளையாடலாம்!.
 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff