ஒரு அழகான புகைப்படம் எடுத்து அதை மெருகேத்தி யாருக்காவது காமிச்சீங்கன்னா, அவங்க கேக்கர முதல் கேள்வி, "என்ன கேமரால எடுத்தது"ன்னுதான் இருக்கும்.
கேக்கரவங்க நெனப்பு என்னென்னா, காஸ்ட்லியான காமெரால எடுக்கர படம்தான் ப்ரம்மாதமா இருக்குங்கரது.
ஆனா, உண்மை என்னென்னா, நல்ல படம் எடுக்க, உயர்தர கேமராவெல்லாம் இரண்டாம் பட்சம். டிஜிட்டல் யுகத்தில், எல்லாத்தையும் மெருகேத்தி பாலிஷ் போட வழி வகைகள் இருக்கு ( அதில் பலப் பல விஷயங்களை PiTல் An& அண்ணாச்சி ஏற்கனவே பிரிச்சு மேஞ்சிருக்காரு ).
நல்ல கேமரா இல்ல, அதனாலதான் என் படம் சரியில்லையோங்கர கவலையை புறம் தள்ளுங்கள். ஆயிரம் ரூபாய் கேமராவில் கூட நல்ல படம் எடுக்க முடியும். காட்சியமைப்புதான் ரொம்ப முக்கியம். லட்ச ரூபாய் கேமராவைக் கொண்டு, தப்பான ஏங்கிளில் சொத்தையாக ஒரு காட்சியை கட்டம் கட்டினால், படம் எடுபடாது.
ஸோ, காட்சியமைப்பை மெருகேத்துங்க. வ்யூ ஃபைண்டரில் பாக்கும் காட்சி, ப்ரிண்ட்டு போட்டு நடு ஹால்ல மாட்டினா நல்லா இருக்குமான்னு யோசிச்சு, முன்ன பின்ன நகந்து, எடுங்க.
ஏய், அடுங்குய்யா, தலைப்புக்கு வாடாங்கறீங்களா?
வந்துட்டேன்! :)
என்னதான், ஒரு காட்சியை சரியா கட்டம் கட்டினாலும், அது எவ்ளோ காஸ்ட்லியான கேமராவை வைத்து கட்டம் கட்டியிருந்தாலும், சில சமயம் அந்த படங்களுக்கு திருஷ்டிப் பொட்டு வச்சாமாதிரி, எடுபடாமல் போயிடுது. கேமராவிலிருக்கும் தூசி காரணமாக, எடுக்கப்படும் படத்தில், அங்கங்க திட்டு திட்டா அழுக்கு தெரிஞ்சு சொதப்பிடும்.
DSLR வைத்திருப்பவர்கள் பலருக்கும் நிகழும் நிகழ்வு இது.
point & shoot கேமராவுக்கு அநேகமாய் இந்தப் ப்ரச்சனை இல்லை. அடிக்கடி கழுற்றி மாட்டும் ப்ரச்சனையில்லாததால், அழுக்கு சேர வாய்ப்பு குறைவு. வெறும், முகப்பு லென்ஸை மட்டும், கேமராவுடன் வந்த மஞ்சா துணி கொண்டு துடைத்தால் போதும்.
ஆனா, DSLR கேமராவை பல இடத்தில் துடைக்கணும். இல்லன்னா, சீரான தெளிவான காட்சிகளை படம் எடுக்கும்போது, படம் வில்லங்கமா முடிஞ்சிடும்.
சமீபத்தில் நான் எடுத்த ஒரு ஏரி+வானம் இருந்த படம். அழுக்கால், ரொம்ப டேமேஜ் ஆகியிருந்தது. (க்ளிக்கி பெருசா பாத்தீங்கன்னா தெரியும். சிகப்பு வட்டத்துக்குள் சுழிச்சு வச்சிருக்கேன்)

DSLRல் அடிக்கடி, லென்ஸை கழற்றி மாட்டுவதால், தூசி உள்ளே சேர்ந்து விடுகிறது. ஷட்டர் மூடி திறக்கும்போது, சில சமயம் இந்த தூசி, உள்ளேயிருக்கும், சென்ஸார் மீதும் விழுந்து விடும். இனி, இந்தத் தூசியை துடைப்பதைப் பத்திப் பாப்போம்.
கேமராவை துடைப்பதர்க்கு, சுத்தமான இடத்த தேர்ந்தெடுத்துக்கோங்க. தூசி படர்ந்த இடங்கள் தவிர்க்கவும்.
தூசி பல இடங்களில் சேரும். அவையாவன:
1) கேமரா body
இதுக்கு ஒண்ணும் ப்ரத்யேகமா ஒண்ணும் இல்லை. microfiber (கேமராவுடன் வரும் மஞ்சா துணி) துணியை எடுத்து துடைச்சிடுங்க. துடைப்பதற்கு முன் ஊதிவிடவும். இல்லன்னா, கீரல் விழுந்துடும். வாயால் ஊதி தூசியை அப்புறப்படுத்த முடியாத தம்மில்லா க்ளிக்கர்கள், மெடிக்கல் ஷாப்பில் கிடைக்கும், air blower பயன் படுத்தலாம். compressed air பயன் படுத்தக் கூடாது. கெடுத்துடும்.
2) முகப்பு லென்ஸ்

இதை சுலபமா தொடச்சிடலாம். முதலில், லென்ஸ் மேல் ஊதி, தூசியை அப்புறப்படுத்தவும். தூசிய வச்சுக்கிட்டே தொடச்சா, கீரல் விழுந்துடும். ஊதியவுடன், காமெராவுடன் வரும் மஞ்சள் துணியை (microfiber soft cloth) எடுத்து வட்டமாய் துடைத்து எடுக்கவும். லென்ஸ் துடைக்க கிட்டும் cleaner fluidம் உபயோகிக்கலாம். cleaner fluid உபயோகிக்கும்போது, க்ளீனரை லென்ஸில் ஊற்றாமல், துணியில் நனைத்து, துணியால் துடைக்கவும். nail polish remover, தண்ணி, alcohol swab, இதெல்லாம் உபகோகிக்காதீங்க. டாமேஜ் ஆயிடும்.
3) உள்புற லென்ஸ் மற்றும் கண்ணாடி

லென்ஸை கழற்றி எடுத்துடுங்க. கேமரா பாடிக்குள்ள பாத்தீங்கன்னா ஒரு கண்ணாடி இருக்கும். அதை துடைக்கணும்னு அவசியம் இல்லை. ஏன்னா, அது சும்மா, வியூ ஃபைண்டரில் நமக்கு காட்சியை காட்ட மட்டுமே பயன்படும் கண்ணாடி. அதில் அழுக்கிருந்தாலும், படத்தில் விழாது. கண்ணாடியை துடைப்பதர்க்கு முன், air blower கொண்டு, உட்புறத்தில் காற்றடித்து தூசியை அப்புறப்படுத்தவும். காமெராவை தலைகீழா புடிச்சுக்கிட்டு பண்ணீங்கன்னா, தூசி கீழ விழ ஏதுவாயிருக்கும். கடைசியா, கண்ணாடி மேலும் காற்றடிக்கவும். கையால் அதை தொட்டு துடைக்கவேண்டாம். ரொம்ப, லேசான ஐட்டம் அது, ஸ்ப்ரிங் ஒடஞ்சுடுச்சுன்னா, காமிரா கந்தலாயிடும்.
அடுத்ததா, லென்ஸின், பின்புறத்தையும் மஞ்சா துணி lense cleaner வைத்து துடைத்து விடவும்.
கண்ணாடிக்கும் வ்யூ ஃபைண்டருக்கும் நடுவில் இருக்கும் இடத்தையும், துணியை வைத்துத் துடைக்கவும். என் கேமராவில், பல மாசமா இருந்த குட்டி தூசி, இந்த ஏரியாவில்தான் இருந்திருக்கு. சமீபத்தில்தான் கவனிச்சுத் துடைச்சேன். ஒரு cotton swab எடுத்து அதை, மஞ்சா துணியில் சுற்றி,அந்த ஏரியாவில் நுழைச்சு துடைக்க்லாம்.
4) சென்ஸார்

இதை ஜாக்கிரதையா கையாளணும். (டாமேஜுக்கு கொம்பேனியார் பொறுபேத்துக்க முடியாது :)). தூசி கண்டிப்பா சென்ஸாரில் தான் இருக்குண்ணு ஊர்ஜீதம் செஞ்சவங்க இந்த ஸ்டெப்பை எடுங்க.
எப்படி ஊர்ஜீதம் செய்யரதுன்னு கேட்டீங்கன்னா, முதல் மூன்று ஸ்டெப்பை முடித்ததும், காமெராவை மீண்டும் பொறுத்தி நீலவானத்தையோ, வெள்ளை பேப்பரையோ படம் பிடித்து, படத்தை ஜூம் செய்து பார்க்கவும். தூசித் திட்டுக்கள் இன்னமும் தெரிஞ்சா, சென்ஸாரை துடைக்க ஆயத்தமாகவும்.
சென்ஸாரை துடைக்கணும்னா, அதன் முன்னால் இருக்கும் கண்ணாடியையும், ஷட்டரையும் தூக்கிப் பிடிக்கணும். கேமரா menuல் அதைச் செய்ய ஒரு ஆப்ஷன் இருக்கும்.
Canon Rebel வைத்திருப்பவர்கள், கேமராவை manual மோடில் போட்டு, 'Sensor cleaning: manual' தெரிவு செய்து, ஓ.கே அமுக்குங்கள். இப்படி செய்தவுடன், கேமராவின் கண்ணாடி மேலே ஏறி, ஷட்டரும், 'ஆ'ன்னு திறந்து, சென்ஸாரை நமக்குக் காட்டும்.
இப்படிச் செய்யாமல், கையால் கண்னாடி/ஷட்டரை தூக்கி சென்ஸாரை துடைக்க யத்தனித்தால், காமெராவை தலையை சுத்தி தூரப் போட வேண்டிவரும், உஷாரு.
எல்லா DSLR கேமராவிலும், சென்ஸார் துடைக்க, இந்த ஆப்ஷன் இருக்கும், தெரியாதவங்க, பின்னூட்டினா, தெரிஞ்சவங்க சொல்லுவாங்க.
சரி, இப்ப, சென்ஸாரை தெரிய வச்சாச்சு. அடுத்தது, air blowerஐ எடுத்து, காமெராவை தலைகீழா புடிச்சு, புஸ் ப்ஸ்னு காத்தடிச்சு, தூசியை விரட்டலாம். தவறியும், சென்ஸார் மேல், உங்கள் விரலோ, வேறு பொருளோ பட்டு விடக் கூடாது. கேமராவின் ஜீவநாடி இது. உஷாரு.
ஊதியாச்சா? புரியலையா? சந்தேகம் இருக்கா? வீடியோ பாத்து தெரிஞ்சுக்கோங்க.
ஊதியதோடல்லாமல், இன்னும் ஒரு படி மேலே போய், sensor cleaning kit உபயோகித்து,
சென்ஸாரை துடைத்தும் எடுக்கலாம். இந்த வீடியோவில் காட்டியிருப்பதைப் போல்.
நான் எனது canonல், sensor cleaning fluid எல்லாம் பயன் படுத்தாமல், வெறும் காற்றை மட்டும் உபயோகித்து துடைத்ததில், தூசி அப்புறப்படுத்தப்பட்டு விட்டது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். தெளிந்த வானம் இப்ப இப்படி தெரியுது. உங்க கண்ணுக்கு தூசி தெரிஞ்சா சொல்லுங்க, ஊதிடறேன் :)

பி.கு1: இதெல்லாம் பெரிய வேலையா இருக்கே, வேர வழியில்லையான்னு நெனைக்கறவங்க, காமெரா கொம்பேனியாரிடமே கொடுத்து வருஷத்துக்கு ஒரு தபா சர்வீஸ் செஞ்சுக்கலாம்.
பி.கு2: (பிற்சேர்க்கை) நம்ம ப்ரேம் என்னா சொல்றாருன்னா,
"லென்ஸை கழற்றித் துடைக்கும்போது, நேராக குளிர்ந்த காற்று படும் இடத்தில உட்கார்ந்து clean பண்ணாதிங்க...லென்ஸுக்கு உள்ள நீராவி condense ஆகிவிடும்... உஷாரு!" ( நன்றி ப்ரேம். good tip).

Useful information. Thanks
ReplyDeleteரொம்ப பயனுள்ள தகவல் பாஸ்! எனக்கு தேவையான தகவல்கள் இருக்கே :))
ReplyDeleteஅண்ணே ரொம்ப கஷ்டமான வேலையா இருக்கும் போல இருக்கே, பேசாம சர்ப் எக்ஸலில் ஒரு 30 நிமிடம் ஊற வெச்சு அலசி வெய்யிலில் காயப்போட்டோ கழுத சுத்தமாகிடபோவுது! :)))
ReplyDeleteநான் என்னுடைய mobile phone இல் எடுத்த படங்கள் ..
ReplyDeleteபார்க்க இங்கே சொடுக்கவும் ...
www.prashanthanphotos.blogspot.com
நன்றி...
ReplyDeleteமிகவும் பயனுள்ள தகவல்... புரியிறா மாதிரி தமிழில சொல்லியிருக்கிறீங்க... :)
vilvarasa, you proved me right. மொபைல் ஃபோனில் எடுத்த படங்கள் அமக்களம் :)
ReplyDeleteகுசும்பன்,
ReplyDeleteபயனுள்ள தகவல். காய வெக்கரதுக்கு முன்னாடி, சொட்டு நீலம் போடணுமான்னு சொல்லலியே? :)
நிமல், ஆயில்யன், An&,
ReplyDeleteநன்னி! :)
PiT இன் சேவை புகைப்பட ஆர்வலர்களுக்கு தேவை !!! (ரொம்ப மொக்கையா இருக்கோ)
ReplyDeleteஅறிமுகபடுத்திய நண்பர் விஜயலயனுக்கு நன்றி.
lens cleaning பற்றி எனது அனுபவம்...
நேராக குளிர்ந்த காற்று படும் இடத்தில உக்காந்து clean பண்ணாதிங்க...லென்ஸ் உள்ளார நீராவி condense ஆகிவிடும் ....
சமீபத்துல a/c van'la போகும்போது lens'a liquid போட்டு துடைத்தேன்; தலைக்கு மேல a/c blower, நேர் கிழே கேமரா லென்ஸ், (body'la fix பண்ணி தான் இருந்தது).
van'la இருந்து வெளிய வந்து போட்டோ எடுத்தா, எல்லாம் ஒரே மங்கலாக இருந்தது .....
பின்னர் தான் கவனித்தேன் உள்ள 3cm விட்டத்துக்கு water droplets....
condense ஆன தண்ணீர் ஆவி ஆகறதுக்கு ஒரு மணி நேரத்துக்கு மேல ஆச்சு... missed many shots....எல்லாத்துக்கும் மேல செலவு வச்சிடுமோன்னு ஒரு பீதி ....தப்பித்தேன்.
பயனுள்ள தகவல்.
ReplyDeleteஹையா.. ஜாலி... எனக்கு மஞ்சா துணி போதும்
ReplyDeletePrem, good tip. பதிவிலும் சேத்தாச்சு. நன்னி :)
ReplyDeleteமற்றுமொரு குறிப்பு...camera warranty period'la இருக்கும்போது, முடிந்தால், தூசி இருக்கோ இல்லையோ, authorised service centre'la குடுத்து ஒரு முறை clean பண்ணிக்கறது நல்லது. உதரணத்துக்கு 1 வருடம் warranty என்றால், சுமார் 11 மாதங்கள் நெருங்கும்போது, செலவில்லாமல் சுத்தம் பண்ணிக்கலாம். நான் அப்படி தான் பண்ணிருக்கேன்.
ReplyDeleteVery very useful post!!
ReplyDeleteThanks :)
Very very useful post!!
ReplyDeleteThanks :)
Thank u somuch
ReplyDelete