வணக்கம் கிளிக்கர்ஸ் & வ்யூவர்ஸ்.
இந்த தடவை முதல் மூன்று தேர்ந்தெடுக்க நிறையவே சிரமப் பட வேண்டியதாயிற்று. முடிவைப் பார்க்கும் முன்
சக பதிவர் சிங்கை நாதனின் இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு நம்மாள் இயன்றதை உதவுவோம்
அடுத்து :
போட்டியில் வெற்றி பெறாமல் போனதால் மற்றப் படங்கள் குறைந்து போனது என்ற அர்த்தம் இல்லை. சிறு சிறு விஷயங்களால் அவை பின் தள்ளப்பட்டன. உதாரணத்துக் இரமேஷின் படம். போட்டிக்கு என்று இல்லை பொதுவாகவே பெயரை படத்தின் நடுவில் போடும் போது படத்தின் மீதான தாக்கம் குறைந்து போகிறது.
போட்டிக்கு என்று வரும்போது சின்ன சின்ன விஷயங்களையும் கவனத்தில் கொள்ளவேண்டியது கட்டாயமாகிப் போகிறது. இல்லாவிட்டால் எங்களுக்குப் பிடித்தப் படம் என்று வந்த அனைத்துப் படத்துக்குமே அல்லவா நாங்கள் பரிசு தரவேண்டும் :)
அடுத்து தேர்வுமுறை. தேர்வு செய்யப் படும் படங்கள் நடுவர்களின் ரசனை மற்றும் படங்களின் மேல் அவர்களின் விருப்பு வெறுப்பற்ற தனிப்பட்ட விமர்சனத்தால் மட்டுமே தேர்வு செய்யப் படுகிறது. ஆகவே எல்லோருடைய ரசனையும் ஒத்துப் போகவேண்டும் என்றில்லை. இது புரிந்துக் கொள்ளப்படும் என்று நினைக்கிறேன்.
மூன்றாம் இடத்தை பிடிக்கும் படம் :
ஒப்பாரி,காவியம், அமல் , கார்த்தி & விஜயாலயன் படங்கள் இதற்கு கடும் போட்டி.
ஒப்பாரியின் படம் :
பின்னனி கருமையாக இருக்க வேண்டும் என்பதற்காக செய்த பிற்சேர்க்கை/மாற்றத்தில் கட்டிடத்தின் மேலே இருக்கும் இலைக்கு அருகில் திட்டு திட்டாக தெரிவது பெரிய பலவீனம். அது போலவே படத்தின் வலப்புறத்திலும்.
ஒப்பாரி : இன்னும் சற்று கவனம் தேவை.
காவியம் :
வித்தியாசமான கோணம் சந்தேகமே இல்லை. Cluttering lines ஐயும் மீறி தெரியும் அழகு நன்றாய் இருக்கிறது. கோபுரத்தின் அடிப்புறத்தில் இருக்கும் ஷார்ப்னெஸ் மேலே போகப் போக குறைந்துக் கொண்டு வருகிறது. அபெர்ச்சர் இன்னும் குறைந்த்து எடுத்திருக்கலாம். மொத்தத்தில் அருமையான முயற்சி. பொதுவாக போட்டிகளில் கலந்துக் கொள்ளும் போது புகைப்படத்தில் அதை தவிர்த்து வேறெதுவும் கவனத்தை சிதறடிக்காதவாறு இருக்க வேண்டும். பெரும்பாலான போட்டிகளில் Border, *Signature* & Time Stamp ஏற்றுக் கொள்ளப் படுவதில்லை. வரும் போட்டிகளில் இதை கவனத்தில் கொள்ளவும்.
விஜயாலயன் படம் : கோபுரத்தில் இருந்து வரும் ஒளிக்கீற்று அருமை. ISO அதிகம் போலிருக்கிறது. தேவையான ஷார்ப்னெஸ் மிஸ்ஸிங். முதல் பங்கெடுப்பிலேயே முதல் பத்தில் வந்திருப்பது மகிழ்ச்சியான விஷயம்.
அமலின் கோல்டன் கேட் ப்ரிஜ்.
அருமையான கோணம். கீழிருக்கும் dead space அவ்வளவாக படத்திற்கு துணைபுரியவில்லை. கான்ட்ராஸ்ட் குறைவு. இன்னமும் லேசாகா கான்ட்ராஸ்ட் அதிகரித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். மேல் பகுதியில் இன்னும் அதிகம் இடம் விட்டிருக்கலாம்.
ஆக மொத்தத்தில் மூன்றாம் இடத்துக்கு தேசப்பிதாவை வித்தியாசமான கோணத்தில் காட்டு முன்னேறிய படம்
வாழ்த்துகள் கார்த்திக்:
இரண்டாம் இடத்தைப் பிடிக்கும் படம் :
சிங்கப்பூரின் சிங்கத்தை வித்தியாசமான கோணத்தில் வித்தியாசமான வண்ணத்தில் காட்டி இரண்டாம் இடத்தை பிடித்த சத்தியாவிற்கு எங்களின் வாழ்த்துகள்.
நடுவர்கள் அனைவராலும் ஒருமனதாகத் தேர்ந்தெடுத்து முதலிடம் பிடித்த "உண்மையின்" படம். வாழ்த்துகள் கிரண்.
வெற்றிப் பெற்றவர்கள் உங்களின் பரிசுப் பணம் எப்படி அனுப்ப வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள் என்பதை 25ம் தேதி ஆகஸ்ட் 2009 க்குள் சொல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம். பதில் வராதபட்சத்தில் இந்தப் பணம் சிங்கைநாதனின் இதய மாற்று அறுவைச் சிகிச்சைக்கு கொடுக்கப் படும். அறுவை சிகிச்சை பற்றிய மேலும் விவரங்கள் இங்கே
நன்றி

அனைவருக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteஉண்மையின் படத்தில் பின்னாலிருக்கும் மேகங்களும் அது வெளி வந்திருக்கும் விதமும் மிக அருமை.
படத்தை இளங்காலையிலோ அல்லது இளமாலை வேளையிலோ எடுத்திருக்கலாம்(அந்த இடத்தில் சூரிய வெளிச்சம் எப்பொழுது படும் என்பதை பொருத்தது)
உறுதியான சூரிய ஒளியால் படத்தில் கொஞ்சம் கடினமான நிழல்கள் விழுந்திருக்கின்றன.(You know Iam just knit picking here.... :))
அருமையான தேர்வு...என்னோட வாக்கும் இந்த மூணு பேருக்கே
ReplyDeleteTruth, good Job.
நல்ல தேர்வு. வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டுகள்
ReplyDeleteஎன் படம் முதல் முறையாக இரண்டாம் இடம் பிடித்திருக்கிறது...மிக்க மகிழ்ச்சி. கார்த்திக், கிரண் மற்றும் பங்கு பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.
ReplyDeleteசிங்கைநாதனின் இதய மாற்று அறுவைச் சிகிச்சை பற்றி படித்ததும் மிக வருத்தமாக இருக்கிறது. ஒரு மாதத்திற்கு முன்பு தான் எனது பிறந்த குழந்தைக்கு இருதய அறுவை சிகிச்சை(open-heart bypass) நடந்தது. பல நண்பர்கள் இது போல் உதவினார்கள். என் மகள் இப்போது நன்கு தேறி வருகிறாள். நண்பர் சிங்கை நாதன் உடல் நலம் தேற வேண்டும் என்று பிரார்த்திப்பதோடு என் பங்கிற்கும் ஆவன செய்கின்றேன். எனது பரிசு பணத்தையும் அவருக்கே கொடுத்து விடுங்கள்.
வெற்றி பெற்ற மூவருக்கும் போட்டியில் இணைந்த நண்பர்களுக்கும், தேர்வுக்குழுவினருக்கும் மனமார்ந்த பாராட்டுகளும் இனிய வாழ்த்து(க்)களும்.
ReplyDeleteவாழ்துக்கள் கார்த்திக் சத்தியா மற்றும் உண்மை.
ReplyDeleteநடுவர்கள் என் குறைகளை மிகச்சரியாக குறிப்பிட்டிருக்கிறார்கள். இலைகளின் திட்டுக்கள் என் மானிடரில் சரியாக் தெரியவில்லை, பின்பு வேறொரு மானிடரில் பார்த்து தெரிந்துகோண்டேன். இந்த படம் panorama stitch, போட்டோஷாப்பில் இணைத்துவிட்டு பார்ததபோது வலது புறத்தில் கொஞ்சம் விடுபட்டிருந்தது (எடுக்கும் போது சரியாக எடுத்தாதானே) ஆகவே இடதுபுறத்திலிருந்து கொஞ்சம் இணைத்திருந்தேன். திருத்திக்கிறேன்.
தேர்வு சிறப்பு! வெற்றி பெற்றவர்களுக்கு என் வாழ்த்துக்கள்
ReplyDeleteவெற்றி பெற்ற கார்த்திக், சத்தியா மற்றும் உண்மை அனைவருக்கும் என் நல்வாழ்த்துக்கள் !!
ReplyDeleteபோட்டியில் பங்குகொண்ட நண்பர்களுக்கும் பாராட்டுக்கள்!! நடுவர்களின் தேர்வுக்கும் கருத்துக்களுக்கும் மிகவும் நன்றி!!
இந்தப் போட்டிக்கு நான் இரண்டாவது தடவையாக அனுப்பிய படம் இது, முதல் பத்துக்குள் வந்ததுமே மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது, இப்போது வெற்றி பெற்ற படங்களில் என் படமும் இருப்பது ரொம்ப பெருமையா இருக்கு. வெற்றி பெற்ற மற்ற நண்பர்களுக்கும் போட்டியில பங்கேற்ற எல்லா நண்பர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஎனது பரிசுப்பணத்தையும் நண்பரின் அறுவை சிகிச்சைக்கே கொடுத்துவிடுங்கள்.
இந்தப் படத்திற்கு நான் எழுதிய கவிதை ஒன்றையும் இணைக்கிறேன்
"நீ அடிமையாய் நடந்து சுதந்திரமாய் எங்களைப் பறக்க வைத்தாய், நாங்கள் உன்னை சிலையாய் நிற்க வைத்தோம் இன்று பறந்து கொண்டே இருக்கிறோம் இறங்க இடம் தெரியாமல்... "
போட்டியில் வெற்றி பெற்ற மூவருக்கும் வாழ்த்துக்கள்!
ReplyDeleteபோட்டியில் கலந்துகொள்ளவில்லை. வெற்றி பெற்ற நண்பர்களுக்கும், முதல் பத்தில் வந்தவர்களுக்கும் வாழ்த்துகள்!
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteஒவ்வொரு போட்டியின் போதும் அனைவரின் படங்களின் (என்னுடையதை தவிர) தரம் கூடிக்கொண்டே போகிறது. புகைப்படங்களின் மீதும் புகைப்படக்கலையின் மீதும் ஆர்வமும் கூடிக்கொண்டே போகிறது.
PIT குழுவினரும் பல விதமான பயனுள்ள தகவல்கள் தந்து தமிழ் மக்களின் மத்தியில் புகைப்பட கலையை வளர்த்து வருகிறார்கள்.
நன்றிகள் பல...
மீண்டும் ஒரு முறை அனைவருக்கும் வாழ்த்துக்களுடன்...
வெண்ணிலா மீரான்.
நண்பர் நாதன் விரைவில் குனமடைந்து தங்கள் குடும்பத்தினருடன் சந்தோஷமாக வாழ இறைவன் உதவியும் அருளும் புரிவானாக..!
Congrats winners!
ReplyDeleteTruth, sema click.
பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்! மேலும் சிங்கை நாதனின் இதய மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற பிரார்த்திக்கிறேன்.
ReplyDeleteமுதல் போட்டியிலேயே முதல் பத்திற்குள் தெரிவானத்தில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.
Point and Shoot கேமராவில் tripod இல்லாது இரவில் படங்கள் எடுக்கும்போது sharpness அவ்வளவாக கிடைக்க மாட்டேன் என்கிறது. D-SLR உம் tripod உம் அவசியம் என்பது மட்டும் புரிகிறது.
vetriyaalargal anaivarukkum vaazhtukkal...maasaa maasam vanthudunga...
ReplyDelete-suresh babu
Truth, Sathiya, Karthik,
ReplyDeleteTHANKS A BUNCH FOR AGREEING TO FORWARD THE PRIZE MONEY TO SINGAI NATHAN'S NEEDS.
:)
நன்றி உண்மை - சத்யா - கார்த்திக்.
ReplyDeleteநீங்கள் கேட்டுக்கொண்ட படி மொத்த பரிசு தொகையையும் பதிவர் சிங்கை நாதனின் சிகிச்சைக்கு Paypal மூலம் அனுப்பியாகிவிட்டது.
சிங்கை நாதன் விரைவில் குணமடையவேண்டும் என்று ஆண்டவனை வேண்டிக்கொள்கிறோம்.
The Prize money of 80$ has been forwarded for senthil's treatment as requested by our Mega contest winners.
Sent to: Rajan Somasundaram
Email: ******
Amount sent: $80.00 USD
Date: 26-Aug-2009
Time: 10:14:08 IST
Status: Completed
Fine..
ReplyDelete