வணக்கம் மக்கள்ஸ்,
ஒரு பள்ளிகூடத்தில் படிச்ச பையன் அதே ஸ்கூலுக்கு வாத்தியா வந்த கதைதான் என்னுதும்,முழுக்க முழுக்க PIT தயாரிப்பான நானும் PITன் மூத்த உறுப்பினர் தீபாவும்தான் இந்த மாசத்துக்கு நடுவர்கள் .என்னது போட்டிதலைப்பை இன்னும் சொல்லலையா?
silhoutte இத தமிழ்ல்ல என்னன்னு சொல்ல? :( நிழற் படம்னு சொல்லலாமா ஆனா தப்பா புரிஞ்சுக்கற அபாயம் இருக்கே. அதனால silhoutteன்னே வெச்சுக்குவோம்.உச்சரிப்பு எப்படியெப்படியோ சொல்றாங்க. பாமர உச்சரிப்பான சில்லவுட்டையே வெச்சுக்குவோம்.( இல்லைனா எனக்கு சொல்றதுகுள்ள நாக்கு சுலுக்குதுங்க:( )
பின்னனி வெளிச்சமாகவும் படத்தில் உருவத்தில் எந்த விவரங்களும் இல்லாமல் அவுட்லைனை மட்டும் உருவத்தை யூகிக்கும் படி டார்க்காக எடுக்கும் படங்கள் சில்லவுட் என மிக சுருக்கமாக வைத்துக்கொள்ளலாம். மற்றபடி உதாரண படங்களை பார்த்தாலே உங்களுக்கு புரிந்துவிடும். மற்றபடி உங்கள் படத்தில் எந்த விபரங்களும்(டீடெய்ல்ஸ்) இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்
Exposure1/1000 F11 ISO 100
silhoutte சில குறிப்புகள்.
சில்லவுட் உண்மையில் ரொம்ப ஈசிங்க.சாதாரணமா எடுக்கும் படத்தின் ஆக்சுவல் ஷட்டர் ஸ்பீடை இன்னும் அதிகப்படுத்திவிட்டாலே போதும் சில்லவுட் ரெடி.
சாதாரணமா சப்ஜெக்டைவிட பேக்ரவுண்ட் வெளிச்சமாக இருந்தாலோ. சூரிய ஒளியோ வேறு ஒளியோ கேமராவை பார்த்து விழும்போது போது சப்ஜெக்டைசாதாரணமான மோடில் ( ஆட்டோ, ப்ரொகிராம்) படமெடுத்தாலே அது சில்லவுட்டாகத்தான் வரும். கேமராக்கள் சாதாரணமாக ஒளி அதிகம் உள்ள இடத்தின் ஒளியைதான் கணக்கில் எடுக்கும் ( ஸ்பாட் மீட்டரிங் தவிர)
Exposure1/4000 F8 ISO 100
சூரிய உதயம் or அஸ்தமனத்தின் போதும், சூரியன் மறைந்த பின் அடிவானத்தில் உண்டாகும் வெளிச்சத்தின் பின்னனியில் எடுக்கப்படும் சில்லவுட்டுக்கள் மனத்தை மயக்கும்.அந்த பின்னனியில் ஒருவரையோ அல்லது பலரையோ குதிக்க விட்டு சில ஆக்சன் ஷாட்டுக்கள் முயற்சி பண்ணலாம்.ஏனெனில் வெளிச்சப்புள்ளியை கணக்கில் எடுப்பதால் ஷட்டர் ஸ்பீடு வேண்டிய அளவுக்கு மேலேயே கிடைக்கும். படம் ஷேக் ஆகாது.
சூரிய உதய அஸ்தமன பேக்ரவுண்டுகள் அழகான படத்திற்கான பாதி வேலைகளை செய்துவிடும்.
மற்றபடி மதிய வேளையோ எந்த வேளையோ ஷட்டர் ஸ்பீடைமட்டும் அதிகப்படுத்தி சில்லவுட் எடுக்கலாம். ஆனால் நல்ல ஐடியாக்களையே முழுதும் சார்ந்திருக்க வேண்டி வரும்.வேண்டுமெனில் சூரியனுக்கு எதிர் திசையை பயன்படுத்தி நீலவானம் + மேகங்களை பேக்ரவுண்டாக வரவைக்கலாம்.
DSLRகேமராவாக இருந்தால் போகசிங் பேக்ரவுண்ட் மேல் விழாமல் சப்ஜெக்ட்ட் மேல் விழ வைக்க, ஸ்பாட் மீட்டரிங் வைத்துக்கொண்டு சப்ஜெக்ட் மேல் ஹாஃப்ப்ரஸ் செய்து போகஸ் ஆனபின்பு பிரேமுக்குள் வெளிச்சமான இடத்தை நோக்கி போகஸிங் பாயிண்ட் வரவையுங்கள்.
சப்ஜெக்ட் போகஸ் ஆனபின்பு படத்தை எடுக்கும்போது எந்த இடத்தில் போகசிங் பாயிண்ட் இருகிறதோ அந்த இடத்து ஒளிக்கு தகுந்தபடி மீட்டரிங் எடுத்துக்கொள்ளும். சூரிய அஸ்தமனத்தில் இதை முயற்சித்தால் அற்புதமான படங்கள் கிடைக்கும்.
நிலவொளியில் மற்றும் இரவொளியிலும் சில நல்ல சில்லவுட் படங்கள் எடுக்கலாம்.
Exposure 1/5 F4.8 ISO 650
இதையெல்லாம் தவிர சாதாரணமாக எடுத்த படத்தை எப்படி பிற்தயாரிப்பின் மூலம் silhoutte படமாக மாற்றுவதுன்னு அடுத்த போஸ்ட்ல டீட்டெய்லா நம்ம ஆனந்த் அண்ணாச்சி விளக்குவாரு. ஆனா மக்களே அத படிச்சுட்டு ஆல்ரெடி எடுத்து வெச்ச படத்த பிபி பண்ணி அனுப்பிடாதீங்க. ஃப்ரெஷ்ஷா ஒரு படம் எடுங்க.புதுசா படம் எடுக்க எடுக்கதாங்க இன்னும் மெருகேர முடியும்.
நம்ம நந்தகுமார் எடுத்தப்படத்தை பாருங்க.. சூப்பரா இருக்கில்லே!
(ஹை!.. இது ஆல்ரெடி ப்ரைஸ் வாங்கின படம்.. சோ நோ ரீ-எண்ட்ரீ )
PiT மாதாந்திர போட்டி விதிமுறைகள்
படம் அனுப்ப வேண்டிய கடைசி தேதி : 15 ம் தேதி, 23:59 IST
போட்டி விதிமுறைகள்

// ஒரு பள்ளிகூடத்தில் படிச்ச பையன் அதே ஸ்கூலுக்கு வாத்தியா வந்த கதைதான் என்னுதும்,//
ReplyDeleteஆனாலும் ரொம்ப தன்னடக்கம் உங்களுக்கு வாத்தி :-))
சரி வழக்கம் போல இந்தமாசமும் அனுப்புவோம்.
ஒ என் படம் சில்லவுட் உதாரண படமாக வந்ததற்கு மிக்க சந்தோசம். அனைவரும் கலக்குவோம்.
ReplyDeleteதலைப்பை பார்த்த உடனே நினச்சேன்....பதிவு போட்டது நீங்களா தான் இருக்கும்னு
ReplyDeleteஉங்க படைப்புன்னாலே எனக்கு உங்க சில்லௌட் தான் நினைவுக்கு வரும்...
சரி இப்போ நாங்க எல்லாம் பள்ளிக் கூட பிள்ளைகளா கை கட்டி நிக்குறோம்...நீங்க கலக்குங்க
நல்ல தலைப்பு ம் கலம் இறங்கிற வேண்டியதுதான். உதாரண படங்களே இவ்வளவு அருமையா இருக்கே
ReplyDeleteசொக்கா எனக்கு இல்ல எனக்கு இல்ல
5000 பொன்னாச்சே 5000 பொன்னாச்சே
என்ன பன்னுவேன் என்ன பன்னுவேன்
சொக்கா எனக்கு இல்ல எனக்கு இல்ல
சரி முயற்சி பன்னி பார்ப்போம்...
எப்போதும் போல, இந்த முறையும் படம் அனுப்பியாச்சு ...... சில்லவுட்-யோ என்னமோ பாத்து சொல்லுங்க !!!
ReplyDeleteஒரு வேண்டுகோள்:
ReplyDeleteபோட்டிக்கு படம் அனுப்பும் போது.. சப்ஜெக்ட்லே உங்க பெயரையும் .. படத்தை உங்கள் பெயரிலும் அனுப்புங்க.பிட்-போட்டி.. இந்த மாத போட்டி ன்னு எதுவும் சப்ஜக்ட் லே போட தேவையில்லை..
உதா:
Subject : Deepa
(just your name is enough.. no need to put PiT contest etc etc in the subject line)
Picture : Deepa.jpg
(again.. just your name is enough, no need to add additional details)
எல்லாருக்கும் ஆல் தி பெஸ்ட்..
.. கலக்குங்க மக்கள்ஸ்
// ஒரு பள்ளிகூடத்தில் படிச்ச பையன் அதே ஸ்கூலுக்கு வாத்தியா வந்த கதைதான் என்னுதும்,//
ReplyDeleteVaazhthukkal Nandhu! Neenga strict'ana vaathiyaa?
புதுசா வத்தியார் வந்தாலே பயம் தான்... என்ன பன்னுவாரோ ஏது பன்னுவாரோ... தெரியலையே..!
ReplyDeleteபரவாயில்ல தீபா மேடம் கூட இருக்காங்க.. கொஞ்சம் தைரியமா இருக்கு..
இருந்தாலும் என்ன பன்ன எல்லாம் ஜாம்பவான்களா கலந்துக்கிற போட்டியா இருக்கு... நம்ம படத்த ஒரு ஓர கண்ணால பார்த்தாலே பெரிய பாக்கியம்...
நானும் என்னோட படத்தை அனுப்பி இருக்கிறேன்.
எனது புகைப்படம் இங்கே
ReplyDeletehttp://shadowtjay.blogspot.com/
உதாரணமா கொடுத்த படங்கள் அத்தனையும் அருமை..!
ReplyDeleteஇந்த மாத போட்டியாளர்களின் படங்களை காண இப்போதிலிருந்து காத்திருக்க ஆரம்பித்து விட்டேன் :)
சென்ஷி, காத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. அத்தனையும் முத்துக்கள். வலப்பக்கம் ஸ்லைட்ஷோவில் தெரியுதேன். கண்டு களிக்கவும்.
ReplyDeleteநானும் அனுப்பிட்டேன். kamalk023@yahoo.com என்ற முகவரியில் இருந்து Kamal.jpg என்ற பெயரில் அனுப்பியிருக்கிறேன்...
ReplyDeleteநானும் அனுப்பிட்டேன்
ReplyDeleteவாழ்த்துகள் நந்து!!!
ReplyDeleteஇந்த படம்தான் இந்த மாதம்.
'Silhouette-செப்டம்பர் மாதப் போட்டிக்கு' என என்டர் ஆகியிருப்பது எனது படம்:)! முடிந்தால் Ramalakshmi எனப் பெயரைக் குறிப்பிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
ReplyDeleteஇங்கே என் பதிவு:
Dawn and Dusk [Silhouette-Sep PiT போட்டிக்கு]
me too joined
ReplyDeleteநானும் அனுப்பியிருக்கிறேன்
ReplyDeleteபல படங்கள்ள பேரு இல்லைங்க. கொஞ்சம் அந்த படங்களுக்கு கீழ கமெண்ட்ல பேரு சொல்லுங்க ப்ளீஸ்
ReplyDelete@ராமலக்ஷ்மி
ReplyDeleteஏற்க்கணவே உங்க பேரிலே ஒரு படம் இருக்கே ! பின்னூட்டத்திலே சொல்லியிருக்கிறது ரெண்டாவது படமா? போட்டிக்கு ஒரு படம் தான் அனுமதிக்கப்படும் ++ ஒரு முறை படத்தை அனுப்பிடா அதை மாத்த முடியாது.
இத்தொட இந்த பதிவுக்கான பின்னூட்டம் நிறுத்தப்படுகிறது. இனிமேல் அனுப்பும் படங்கள் போட்டியில் சேர்த்துக்கொள்ளப்படமாட்டாது.
ReplyDelete