Thursday, August 13, 2009

இலவச HDR

13 comments:
 
HDR படங்கள் உருவாக்க Photomatix மற்றும் Dynamic Photo HDR போன்ற மெனபொருட்கள் இருந்தாலும் அவை கொஞ்சம் விலை உயர்ந்தவைகளதான். Photomatix கிட்டத்தட்ட $100க்கும், Dynamic Photo HDR $55 க்கும் கிடைக்கின்றன. இலவச trial version கிடைத்தாலும், அவை சாணி அடிப்பதுப்போல watermark அடித்துவைக்கும்.

சிறிது தகிடுத்தத்தம் செய்து, watermark நீக்க முடியும் என்றாலும், நமக்குத் தெரிந்தது நீதி ,நேர்மை, கருமை, எருமை என்பதால் , நேர்மையாக இலவசமாய் கிடைக்கும் QTPFSGUI வைத்து, எப்படி HDR அல்லது Pseudo HDR ப்டங்களை உருவாக்குவதுப் பற்றி பார்க்கலாம்.





முதலில் நமக்குத்தேவை, குறைந்தது மூன்று வெவ்வேறு exposure (normal, under, over exposed) செய்யப்பட்ட படங்கள்.
(உங்களிடம் ஒரே ஒரு JPG மட்டுமே இருந்தால், கிம்பில் திறந்து, பின்ணனி லேயரை நகலெடுத்துக்கொண்டு, mode -> Multiply ல் under exposed பட்மும் , mode -> Screen ல் over exposed படம் என்று மூன்று படங்களாக சேமித்துக் கொள்ளுங்கள். இதற்கு Pseudo HDR என்று பெயர்)


உதாரணதிற்கு இந்த மூன்று படங்கள்.

Normal Exposure ( Exposure Value 0 )




Under Exposure ( EV -1 )



Over Exposure( EV +1)






Qtpfsgui முதலில் தரவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள்.


Qtpfsgui ஆரம்பித்து New Hdr ... -> Load Images தெரிவு செய்து மூன்றுப் படங்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள். Exposure for selected image பகுதியில் சரியான exposure அளவை செய்துக்கொள்ளுங்கள்.



Next பொத்தானை அமுக்கியவுடன் இந்த சன்னல் வரும். இதில் செய்ய வேண்டியது அதிகம் இல்லை. Next அமுக்கிக் கொள்ளுங்கள்.






Finish யை கிளிக்குங்கள்.






ஆட்டமே இனித்தான் ஆரம்பம். HDR என்று பொதுவில் அழைக்கப்படும் படங்கள் Tone Mapping ன் விளைவே. நாம் உபயோகிக்கும் கணினித் திரைகளில் HDR படங்களை சரியாக பார்க்க இயலாது. Tone Mapping , HDR படங்களை நமது கணினித் திரைக்கு ஏற்றவாறு மாற்றும். Tonemap the Hdr அமுக்கிக்கொள்ளுங்கள்.



Qtpfsgui ன் மிகப் பெரிய குறைப்பாடு live preview இல்லாதது. Apply பொத்தானை அமுக்கும் வரை விளைவை நம்மால் பார்க்கமுடியாது.( தானம் கொடுத்த மாட்டில் பல்லை எல்லாம் பிடிச்சு பார்க்காம வேலையை பார்ப்போம். )

Operator பகுதியில் தான் சித்துவேலைகள் இருக்கு.



உதாரணதிற்கு
Operator -> Reinhard 02 தெரிவு செய்து, Apply அமுக்கியவுடன் படம் திரையில் தெரியும். உங்களுத் தேவையான Operator தேர்ந்து எடுத்துக் கொள்ளலாம்.




ஒவ்வொரு மாற்றத்திற்கு பிறகும் Apply பொத்தானை அமுக்க மறக்காதீர்கள்.



கருப்பு வெள்ளைப் புள்ளிகளை கிம்பில் குறிப்பது பற்றி இங்கே பார்த்து இருக்கிறோம். அதேப் போல இங்கேயும் Apply Levels தெரிவு செய்து படத்தை மெருகேற்றிக் கொள்ளலாம்.



பலருக்கு செவ்வாய் கிரகத்தின் தோற்றம் போல ஒரு மாய உலக HDR வகைப் படங்கள் பிடிக்கும். பலருக்கு இய்ல்பான தோற்ற்ம் உடைய படங்கள் பிடிக்கும். விளையாடிப் பார்ப்பது மிக முக்கியம். Operator க்கு ஏற்ப தோற்றம் மாறும்.

உதாரணதிற்கு நான் Opeator ->Fattal உபயோகித்து வந்த விளைவு இது.





படத்தை சேமித்துக் கொள்ளுங்கள். ஞாபகம் இருக்கட்டும். Tonemapping பிற்சேர்க்கையின் ஆரம்பக் கட்டம் மட்டுமே. இதன் மேலும். உங்களின் வழக்கமான பிற்சேர்க்கைகள் தேவைப்படலாம்.

இந்தப் படத்தில் மூலப்படத்தை, Mantuik ( இயல்பான படம் ) மற்றும் Fattal ( செவ்வாய் கிரக மாயத் தோற்றப்படம் ) முறையில் மாற்றி இருக்கிறேன். முன்னரே கூறியதுப் போல உங்களுக்கு பிடித்த முறை தேர்ந்து எடுத்துக் கொள்ளுங்கள். எனக்கு பிடித்த முறை, இந்த இரண்டையும் இணைத்து உருவாக்கும் முறை. உதாரணதிற்கு நான் முதலில் Mantuik படத்தை கிம்பில் திறந்து அதன் மேல் Fattal படத்தை Overlay mode ல் இணைத்துக் கொண்டேன்.






13 comments:

  1. Thanks for the tip ! Very useful .

    ReplyDelete
  2. உபயோகமான தகவல்.

    //நாம் உபயோகிக்கும் கணினித் திரைகளில் HDR படங்களை சரியாக பார்க்க இயலாது. Tone Mapping , HDR படங்களை நமது கணினித் திரைக்கு ஏற்றவாறு மாற்றும்//

    டோன் மேப்பிங் அதுக்குத்தானா? டோன் மேப்பிங் செய்யாம, ஒரு படத்தை அப்படியே ப்ரிண்ட் பண்ணா நல்லா வருமா?

    ReplyDelete
  3. சர்வே
    HDR ல் Red, Green Blue எல்லாம்32bit
    ஆனா மானிடர் , பிரிண்டரில் Red, green Blue 8 bits .
    படம் கேவலமாய் வரும் .

    ReplyDelete
  4. 1)pre-gamma setting thaan konjam velangala...
    2)appuram inoru sandhegam, HDR means we are covering a wide contrast range-highlights and shadows, is it justified to clip levels there. In my opinion, we may be losing some intricate shadow details
    3)HDR-la noise pirachanai-ya ozhipadhu eppadi
    4)-1,0,+1 EV la 3 padam, illa -1,-2/3,0,+2/3,+1 EV la anju padam, illa -2,0,+2 .... best resukts-kum idhukum enna sambandham; net-la +8la ellam eduthum potirukaangale..

    P.S. romba kelvi ketirundha manichurunga, aiyaa

    ReplyDelete
  5. நாகப்பன்
    1. re-gamma setting thaan konjam velangala.
    விளக்கமா வேற ஒரு இடுகை எழுதறேன். சொல்ல நிறைய இருக்கு.

    2. we may be losing some intricate shadow details
    ஆமாம். உங்கப்படத்தில் முழுமையான கருப்போ இல்லை வெள்ளையோ இல்லனைன்னா படம் தட்டையா இருக்கும். இந்த clip levels உங்க விருப்பம் தான். கட்டாயம் இல்லை.

    3)HDR-la noise pirachanai-ya ozhipadhu eppadi
    இதுக்கு ஒன்னும் செய்ய முடியாது . எதாவது Noiseware plugins உபயோகிக்க வேண்டியதுதான். சில இலவச plugins கிடைக்கின்றன.

    4. best resukts-kum idhukum enna sambandham
    எப்படி இருந்தாலும் கடைசியாக 8 bitக்கு மாத்திதான் ஆகனும். அதனால பெரிச வித்தியாசம் ஒன்னும் இருக்கப் போறதில்லை. எனது பல படங்கள் ஒரே ஒரு raw file செய்தது. எனக்கு பெரிய வித்தியாசம இருக்கிற மாதிரி தெரியல.

    கேள்விகள் நிறைய கேளுங்கள். கேட்காட்டி கத்துக்க முடியாது :)

    ReplyDelete
  6. an&, i tried the tool. but it is not as good as dynamic photo hdr.
    also, the 'apply' click for each and every change is really hurting.

    ReplyDelete
  7. Survey
    There will be difference between $55 product to $0 product. Something gotta give :)

    ReplyDelete
  8. Interesting!!
    I usually use Tufuse(needless to see,its also free :D)
    I do have some complaints with that but It works for me most of the times!!
    have to try this some time!!

    Thanks a lot for the introduction!

    ReplyDelete
  9. பதில்களுக்கு நன்றி.

    என்னுடைய சில கத்து குட்டி HDRs இங்கே
    http://www.flickr.com/photos/premnagz/sets/72157622035542466/detail/

    Mostly from qtpfsgui.

    ReplyDelete
  10. Thanks for sharing this information.

    ReplyDelete
  11. i downloaded and installed this thing!!
    I hanged a couple of times when i tried...

    I guess i will stick with my Tufuse :)

    ReplyDelete
  12. CVR
    I am not aware of any issues. It worked for me in both work and home PC.
    Some comparability issue ?

    ReplyDelete
  13. நண்பர்களே,

    சர்வேசனின் இலவச HDR பதிவினை உபயோகப்படுத்தி உருவாக்கிய HDR படங்கள் உங்கள் பார்வைக்கு...
    http://www.flickr.com/photos/45424909@N05/

    நன்றிகளுடன்,
    ராமநாதன்

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff