Friday, October 4, 2013

நடனம் - செப்டம்பர் போட்டி முடிவு

10 comments:
 
வணக்கம் நண்பர்களே. முன்னேறிய பத்தில் வெற்றி பெறும் படங்களைப் பார்ப்போம்.

சிறப்புக் கவனம்:
# சந்தியா

# சரவணன்


வெளியேறும் பிற படங்களில் பெரிய குறையேதுமில்லை வென்ற படங்கள் அவற்றைவிடச் சிறப்பாக இருப்பதானால் என்றாலும் கீழ்வரும் படம் சிறப்புக்கவனம் பெற்றிருக்கும்  கத்திரிப்பில் கவனம் செலுத்தியிருந்தால்.. 

# துளசி கோபால்
  
படத்தின் சப்ஜெக்ட் எந்த பக்கம் நோக்கி இருக்கிறதோ அல்லது படத்திலிருப்பவர் பார்வை எங்கு செல்கிறதோ அந்த இடத்தில் அதிக இடம் விட்டு பின்பக்கமிருக்கும் வெற்றிடத்தை நீக்கி விடுவது அவசியம். இது போன்ற வெற்றிடங்கள் அருமையான சப்ஜெக்டில் முழுமையாகப் பார்வையைச் செலுத்த விடாமல் கவனச் சிதறலுக்கு வழி வகுத்திடும். 
 #
நல்ல லைட்டிங், சரியான சமயத்தில் பாவனையைச் சிறைப்பிடித்த விதம் எனப் பாராட்டுகளைப் பெறும் படம் இப்படி இருந்திருந்தால் இன்னும் சிறப்புதானே?

மூன்றாம் இடம்:
# பூபதி

இசையின்றி நாட்டியமா? இசையையும் அதில் மெய்மறந்த நங்கையையும் செலக்டிவ் கலரிங் மூலமாக பிரித்தும் இணைத்தும் காட்டியிருக்கும் விதம் அற்புதம்.

இரண்டாம் இடம்: 
# ஆயில்யன்

அபிநயம், துல்லியம், ஒளி அமைப்பு, DOF எல்லாம்.. எல்லாமே.. அருமை.

முதலிடம்:
# குணா அமுதன்

ஆடும் நங்கையரை அழகான கோணத்தில், இரவில், ஒளி வெள்ளத்தில் சிறப்பாகப் படமாக்கியிருக்கிறார். மேடை ஓரத்தில் அரை வெளிச்சத்தில் தெரிகிற.. குறு குறுவென்று எட்டிப் பார்க்கிற.. இரண்டு பெண்கள் படத்தின் மீதான நம் ஆர்வத்தை அதிகரிக்கிறார்கள். நாட்டியத் தாரகையரின் கைகளாலும் கால்களாலும் அமைந்த Leading line மிகச் சரியாக அந்த இரண்டு பெண்களை நோக்கி நம்மை அழைத்துச் சென்று (அவர்கள் மேடையை நோக்கி நிற்பதால்) அதே வேகத்தில் மீண்டும் ஒரிஜனல் சப்ஜெக்டான, முன்னால் ஆடும் பெண் மேல் கொண்டு வந்து நம் பார்வையை நிறுத்தும் மேஜிக் சூப்பர். பாராட்டுகள் குணா அமுதன்!

வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!

இம்மாதப் போட்டி அறிவிப்பு விரைவில்..

10 comments:

  1. குணா அமுதன் அவர்கள் உட்பட அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. வெற்றி பெற்றவர்களுக்கும், சிறப்பு கவனம் பெற்றவர்களுக்கும் இனிய பாராட்டுகள்.
    மோதிரக்கையால் குட்டியதற்கு நன்றிகள்.

    போக வேண்டிய தூரம் அதிகம் என்பதே உண்மை.

    மீண்டும் நன்றிகள்..

    ReplyDelete
  3. //போக வேண்டிய தூரம் அதிகம் என்பதே உண்மை.//

    எனக்கு தூரம் மட்டும் தெரியுது. போகுறதா .... அய்யோடா ..!

    வெற்றியாளர்களுக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  4. வெற்றி பெற்றவர்களுக்கும், சிறப்பு கவனம் பெற்றவர்களுக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. சிறப்புக் கவனம் பெற்றவர்களுக்கும் முதல் மூன்று இடம் பெற்றவர்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்.அதிலும் அந்த இரண்டு நங்கையரின் 'போஸ்'' அற்புதமாக இருந்தது. ஏதோ பேலூர் சிற்பங்களைப் பார்ப்பது போல உணர்வு. துளசியின் ,'தனஞ்சயன் சார் நடனத்துக்கே பிறந்தவர்.பாராட்டுகள்.

    ReplyDelete
  7. முதல் படம் [தேர்வு] அருமை :-)

    ReplyDelete
  8. அனைவருக்கும் வாழ்த்துகள் :)

    ReplyDelete
  9. அனைவருக்கும் நன்றி.

    வெற்றி பெற்ற படங்கள் அதீதம் மின்னிதழிலும்.. http://www.atheetham.com/?p=5822

    ReplyDelete
  10. ஆஹா புகைப்படங்களும் அவை வெளிப்படுத்தும் உணர்வுகளும் அருமை. வெற்றி பெற்ற, சிறப்பு கவனம் கொண்ட குணா அமுதன், ஆயில்யன், பூபதி, துளசி கோபால், சரவணன் & சந்தியாவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff