Tuesday, March 25, 2014

மார்ச் போட்டி முடிவுகள்:"முதல் பத்தும் வென்ற மூன்றும்"

8 comments:
 
வணக்கம் பிட் மக்கா,

பொதுவாகவே "பிட்" மாதாந்திர போட்டிக்கு நடுவரா இருக்கிறது ரொம்ப ரொம்ப கஷ்டமான விஷயம் தான்...ம்ம்ம்ம் எந்த படங்களை விடுவது எவைகளை தேர்வு செய்வதுன்னு ஒரே குழப்பம் தான்.....சரி ரொம்ப டெக்னிக்கலா இல்லாம கொஞ்சம் பார்த்தவுடன் கவனத்தை ஈர்த்த முதல் 10 படங்களையும் பின்னர் அவைகளில் பிடித்த 3 படங்களையும் உங்கள் பார்வைக்கு வைக்கிறோம்.

முதல் 10 இடங்களைப்பிடிக்கும் படங்களை எவ்வித வரிசையுமின்றி பார்க்கலாம் :

அசோக்:


புவனேஷ்:


ஜெயராம் அழகுதுரை:


மதன் மேத்யூ:


முரளி:


முத்துக்குமார்:


பிரபு:


சஞ்சய்:


சூர்யா:


விஜய்:



அடுத்தபடியாக போட்டியின் முடிவிற்குச்செல்லும் முன்னம் ஒரு விஷயத்தை தங்களுக்கு தெளிவுப்படுத்த விரும்புகிறேன்.

அதாவது ஒரு சில அன்பர்கள் போட்டிக்கு இரண்டு படங்களை அனுப்புகிறார்கள்,பிட்டின் போட்டி விதிகளின் படி அவ்வாறு அனுப்புகிறவர்களின் படங்கள் நீக்கப்படும் அல்லது முதலில் அனுப்பும் படம் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்  என்று இருந்தாலும் போட்டியின் விதியை மீறாமல் செயல்பட்டால் நல்லது எனக் கருதுகிறோம். எனவே ஒருவர் ஒரு படத்தைமட்டுமே அனுப்பவேண்டும். ஒருவரே இரண்டு பெயரில் வெவ்வேறு படங்களை அனுப்பி விட மாட்டீர்கள் என நம்புகிறோம்:)!

அடுத்ததாக நீங்கள் போட்டிக்கு அனுப்பும் படத்தில் வானமும் நிலமும் ஒருசேர‌  இருப்பின் அந்த படமானது கட்டாயம்  நேர்படுத்தப்படவேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.(Horizon Straighten குறித்த பதிவை நான் பிட்டில் விரைவில் பகிருகிறேன்.)

உதாரணம் இந்த மாதப்போட்டிக்கு வந்த திரு.மதன் மேத்யூ படத்தின் காம்போசிஷன் எனக்கு மிகவும் பிடித்திருந்தது,எனினும் இந்த Horizon நேர்படுத்தப்படாமல் இருந்ததால் அடுத்த கட்டத்தை எட்டிப்பிடிக்க தவறியது,எனினும் அவரது படத்தை நான் நேர்படுத்தியிருக்கிறேன்.

Org :

Corrected :


அடுத்ததாக போட்டியின் முடிவிற்கு செல்லலாம்:

மூன்றாமிடம் பிடிப்பது :

விஜய்:

நல்ல கம்போசிஷன்,படத்தில் செபியா டோன் அருமை.

இரண்டாமிடம் பிடிப்பது:

அசோக்:




மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் ‘என் உழைப்பை நம்பி என்னால் வாழமுடியும்’  என்கிற இவரது தன்னம்பிக்கை அழகாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மற்றவருக்கு நல்ல எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது . அதிலிருக்கும் வாசகமும், அதனை போகஸில் கொண்டு வந்திருப்பதும் சிறப்பு. சாதாரணப் படமாக இருந்தாலும் படத்திலிருக்கும் விஷயம் அசாதாரணமானது என்பதால் இரண்டாமிடம் பிடிக்கிறது.

முதலிடம் பிடிப்பது :

முத்துக்குமார்:




அன்றாட பிழைப்பை நம்பி வாழும் இவரது ஏழ்மையிலும், ‘என்னாலும் என்னுடைய மகிழ்சியை வெளிப்படுத்தமுடியும்’ என்பது போலவே ஒரு கவலையில்லாத சிரிப்பை வெகு இயற்கையாகச் சிரித்து நம்மை மகிழ்ச்சியாக்கிய அந்த தருணத்தை அழகாகப் படம் பிடித்துக் காட்டிய முத்துக்குமார் அவர்களுக்கு பிட்டின் வாழ்த்துக்கள்.


மீண்டும் சந்திப்போம்.

8 comments:

  1. வெகு அருமையான படங்கள். கடைசிக் கடைக்காரர் உண்மையிலியே கொடுத்துவைத்தவர்.சென்னை மாடவீதிக்குப் போய் ப்படங்கள் எடுக்கவில்லையே என்றிருக்கு. வெற்றி பெற்றவர்களுக்கும் எல்லோருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. அனைத்தும் பிரமாதமாக இருந்தால் தேர்ந்தெடுப்பது சிரமம் தான்... வெற்றி பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. அனைவருக்கும் வாழ்த்துகள். படங்கள் நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
  4. well deserved photos mainly 1st place ..all the best winners :-)

    ReplyDelete
  5. நான் மதன் மேத்யு. தாங்கள் என்னுடைய படத்திற்கு சொன்ன கருத்திற்கும் மற்றும் தாங்கள் செய்துள்ள correction கும் ரொம்ப நன்றி.

    ReplyDelete
  6. வெற்றி பெற்றவர்களுக்கும் முதல் பத்தில் இருக்கையைப் பிடித்தவர்களுக்கும், நடுவர்களுக்கும், பங்கு பெற்ற சக பதிவர்களுக்கும் என் இனிய பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff