Thursday, March 5, 2015

மார்ச் 2015 போட்டி அறிவிப்பு

15 comments:
 
வணக்கம்,

இம்மாத போட்டித் தலைப்பு: Negative Space

எல்லா படங்களிலும் வெற்றிடங்கள் அல்லது தேவையில்லாத இடங்களைத் தவிர்க்க வேண்டும் என்பதில்லை. சில நேரங்களில் இந்த வெற்றிடங்கள் ஒரு படம் தரும் உணர்வையே மாற்றி அமைத்துவிடும். ஒரு தேவையை உருவாக்கிவிடும்.

அச்சுத் தொழிலில் படங்களின் ஓரத்தில் எழுத்துக்களை சேர்ப்பதற்கும் இந்த வகையில் கட்டம் கட்டுவதை (கம்போஸ்  செய்வதை) கடைப்பிடிக்கிறார்கள்.

நீங்கள் எடுக்கும் படம் Minimalism ஆக கூட இருக்கலாம்.

அதாவது நீங்கள் செய்ய வேண்டியது... கருப்பொருளைச் சுற்றியிருக்கும், கவனத்தைக் கலைக்காத வெற்றிடத்தை சரியான வகையில் பயன்படுத்தி ஆஹா!சொல்ல வைக்க வேண்டும்

உங்களுக்கு எளிதாக புரிந்துகொள்வதற்கேற்ப கீழேயுள்ள படங்களுடன் அதற்கான காரணங்களும் செர்க்கப்படுள்ளன. மேலும் படங்களுக்கு இங்கே பாருங்க.

1) இந்தப் படத்தில் இருக்கும் வெற்றிடம், இந்தப் படகு செல்லும் திசையில் என்ன இருக்கிறது, மேலும் கடலின் பிரமாண்டத்தையும் நமக்கு உணர்த்துகிறது:

#Naufal MQ


2) இந்தப் படம் மினிமலிசத்திற்கு நல்ல எடுத்துக்காட்டு. பிள்ளையாரின் சிலையைச் சுற்றியிருக்கும் வெற்றிடம் ஒரு அமைதியை நமக்கு கடத்துகிறது:

#Ramalakshmi

3) இந்தப் படத்தில் சப்ஜெக்ட் மேலே மூலையில் ஓரங்கட்டப்பட்டு அலைகளுக்கு இடம் ஒதுக்கி கப்பல் கரை தட்டியிருப்பதை காட்டுகிறது:

#Naufal MQ


4) இந்தப் படங்களில் சப்ஜெக்டின்  மேற்பகுதியிலும் கீழ்ப்பகுதியிலும் இடம் ஒதுக்கப்பட்டு சப்ஜெடின் மீது நமது கவனத்தை அழகாக ஈர்க்கிறது:

#Ramalakshmi

#


5) இதில் ஒதுக்கப்பட்டுள்ள வெற்றிடம் மனிதன் இயற்கையின் பிரமாண்டத்தின் முன் சிறிய புள்ளிதான் என்பதை காட்டுவதாக உள்ளது:

#Naufal MQ

#

6) ரெட் சிக்னல் தான் இதில் சப்ஜெக்ட். பாதசாரிகள் கடந்து போகும் இடத்தை இதில் நெகடிவ் ஸ்பேசாக காட்டப்பட்டுள்ளது:

#Naufal MQ


நெகடிவ் ஸ்பேஸ்னா என்னன்னு இப்போ ஓரளவுக்கு புரிந்திருக்கும். மேலும் படங்களுக்கு இணையத்தில் தேடுங்க. கலக்கலான படங்களை எடுத்து போட்டிக்கு அனுப்புங்க. வாழ்த்துகள்!

போட்டி விதிமுறைகள் இங்கே.

படங்கள் வந்து சேரவேண்டிய கடைசித் தேதி 20 மார்ச் 2015
***

இதுவரை போட்டிக்கு வந்திருக்கும் படங்களைக் காண இங்கே செல்லலாம்:
https://picasaweb.google.com/111715139948564514448/201503#

15 comments:

  1. போட்டியில் பங்குபெறப்போகும் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. நீண்ட இடைவெளிக்குப் பிறகு என் பங்களிப்பை அனுப்பியிருக்கிறேன்.
    kalyani.jpg
    நன்றி.

    ReplyDelete
  3. முதல் முறையாக எனது படம் பதிவு செய்துள்ளேன் .........subash jpg

    ReplyDelete
    Replies
    1. பதிவிலேயே இணைப்பு உள்ளதே. போட்டி விதிமுறைகள்: http://photography-in-tamil.blogspot.in/2009/02/pit.html

      Delete
  4. first time i send photo. name: Vijayakumar

    ReplyDelete
  5. போட்டிக்கான உங்களின் படம், எங்களது PICASAWEB பக்கத்தில் இடம்பெற்றதும், படத்தின் கீழ், படம் எடுத்த விதம் பற்றியும், மற்ற மேல் விவரங்கள் பற்றியும் பின்னூட்டமாய் தெரிவிக்கலாம். இது, படத்தை பார்க்கும் மற்றவர்களுக்கு உபயோகமாய் இருக்கும்.
    Please guide me how to do this.
    Now I am finding a new appearance in the blog, and it is not allowing me to view the competition entries. Am I making any thing wrong?

    ReplyDelete
    Replies
    1. படங்களை இங்கே காணலாம்: https://picasaweb.google.com/111715139948564514448/201503#

      கூடிய விரைவில் முன் போலவே போட்டி ஆல்பம் தளத்தில் இடம் பெறும்.

      Delete
    2. Thank you for your swift response. Now I can able to see like before.

      Delete
  6. I couldn't see my photo in the Picasa album.Am I missing something?
    Thanks
    Saravanakamal

    ReplyDelete
    Replies
    1. உங்கள் படம் ஆல்பத்தில் இருக்கிறதே!

      Delete
  7. I like to learn photography Pls anybody give gud way

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff