வணக்கம் பிட் மக்கா,
**
பொதுவாக நம் படங்களை
போட்டோஷாப் பில்டர்களைக்கொண்டு ஷார்பன் செய்யும்போது நமது படத்தில் அனைத்து பகுதிகளும்
ஷார்பன் ஆகும். Lightroom அல்லது Camera Raw எடிட்டரில் படத்தை ஷார்பன் செய்யும்பொழுது
இதனை மாஸ்கிங் ஆப்ஷன் பயன்படுத்தி நமது ஷார்பன் பகுதியை நாம் செலக்டிவ்வாக செய்துகொள்ளமுடியும்.
**
ஆனால் போட்டோஷாப்பில் ஷார்பன் பில்டர்களைக்கொண்டு ஷார்பன் செய்யும்பொது
படம்முழுவதுமாக ஷார்பன் செய்யப்படும் அவ்வாறு ஷார்பன் செய்யும்போது படத்தில் இருக்கும்
Blur பகுதிகளும் பாதிக்கப்படும் இதனால் Depth
of Field பாதிக்கலாம்.மேலும் Sharpening Artifacts ஏற்படவும் சாத்தியமுள்ளது,
எனவே நாம் Selective Sharpen செய்துகொள்வதன் மூலம் இந்த Sharpen Artifacts ஐ blur பகுதிகளில்
தவிர்க்கலாம்.மேலும் படத்தின் பார்வை ஒருகுறிப்பிட்ட பகுதியில் பதியுமாறு செய்துகொள்ளலாம்.
சுருக்கமாக
சொல்லவேண்டுமென்றால் படத்தில் நாம் விரும்பும் பகுதிகளை மட்டும் ஷார்பன் செய்துகொள்வது
எப்படி என்பதன் செயல்முறை விளக்கமே இக்கட்டுரையாகும்.
கீழேயுயிருக்கும் படத்தை பாருங்கள்,இதில் சிறுவனும் அவனைச்சுற்றி
Blur பேக்கிரவுண்டும் இருக்கிறது. இப்போது இந்த படத்தை போட்டோஷாப் ஷார்பன் பில்டரைக்கொண்டு
ஷார்பன் செய்கையில் என்னுடைய Blurபேக்கிரவுண்டும் சேர்ந்தே தான் ஷார்பன் ஆகும்.
ஆக எனக்கு இந்தப்படத்தை பொருத்தவரை எனக்கு சிறுவனின் முகம்
மட்டும் ஷார்பன் செய்தால் போதும், Blur பேக்கிரவுண்டுகளில் எனக்கு Sharpen வேண்டாம்
என நினைக்கிறேன்,இதற்கு நான் என்னுடைய ஷார்பன் ஏரியாவை செலக்டிவாகத்தான் செய்தாக வேண்டும்
அல்லவா?
சரி போட்டோஷாப்பில் உங்களது படத்தை திறந்துகொள்ளவும்.
போட்டோஷாப்பில் பொதுவாகவே நான் சிபாரிசு செய்வது
Non Destructive-Editing தான் எனவே இதனை எப்படி Non-Destructiveவாக செய்வது எனவும் பார்க்கலாம்.
போட்டோஷாப்பில் பொதுவாகவே நான் சிபாரிசு செய்வது
Non Destructive-Editing தான் எனவே இதனை எப்படி Non-Destructiveவாக செய்வது எனவும் பார்க்கலாம்.
படத்தை போடோஷாப்பில் திறந்துகொண்டதும்,பேக்கிரவுண்டு லேயரை
மவுஸால் வலது கிளிக் செய்து பின்னர் Convert to SmartObject என மாற்றிக்கொள்ளவும்.
இப்போது ஷார்பன் பில்டருக்கு செல்லும்முன்னர் ஒரு சின்ன விஷயத்தை
உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன் அதாவது போடோஷாப்பில் ஷார்பன் பில்டர்களில் Unsharp
Mask,Smart Sharpen,High Pass பில்டர்கள் என வகை வகையாக இருந்தாலும் நான் பயன்படுத்துவது
Smart Sharpen பில்டரைத்தான்.எனவே இதுதான் சிறந்த ஷார்பன் பில்டர் எனவும் நான் குறிப்பிடவில்லை,நான்
பயன்படுத்துவது என்பதால் இக்கட்டுரையில் நான் Smart Sharpen பில்டரையே பயன்படுத்துகிறேன்,சரி
கட்டுரையை தொடருவோம்.
இப்போது Filter>Sharpen>Smart Sharpen செல்லவும்.
இப்போது தோன்றும் விண்டோவில் Amount,Radius,Reduce Noise ஆகிய அனைத்தும் உங்களது தனிப்பட்ட ரசனையை பொருத்தது,எனினும் Radius 1லிருந்து1,5 க்கு மிகாமல் பார்த்துக்கொள்ளவும் இல்லையென்றால் படத்தில் Sharpening Halos வந்துவிடும்.அதேபோல Reduce என்பதில் Lens Blur பிற Blurகளைக்காட்டிலும் நல்ல பலன் தருகிறது என்பதை நினைவில் கொள்ளவும்.
சரி ஷார்பன் செய்தப்பின்னர் ஓகே செய்துகொள்ளவும்.இப்போது உங்களது படம் ஷார்ப்பன் செய்யப்பட்டிருக்கும்.இப்போது இந்த ஷார்ப்னஸை நாம் தேவையான இடத்தில் மட்டும் அப்ளை செய்துகொள்ளபோகிறோம்.
இப்போது லேயர் பேலட்டை பாருங்கள் உங்களது பேகிரவுண்டு லேயரின் கீழே நீங்கள் அப்ளை செய்திருந்த ஷார்பன் பில்டரானது தனி லேயராக தெரிகிறது அல்லவா? இப்போது நான் வட்டமிட்டு காட்டியிருக்கும் குறியை இருமுறை கிளிக் செய்யவும். இப்போது தோன்றும் Blending Optionல் blend Modeஐ Luminosityக்கும் அதன் Opacityயை 80% க்கு மாற்றிக்கொள்ளவும்.
சரி இப்போது நான் படத்தில் காட்டியதுபோல Smart Filter Maskகை ஒரு முறை கிளிக் செய்து தேர்வு செய்துகொள்ளவும்.
இப்போது விசைப்பலகையில் CTRL+I ஐ அழுத்தவும் .
இப்போது உங்களது ஷார்பன் மறைக்கப்பட்டு படம் ரீசெட் செய்யப்பட்டிருக்கும் அதாவது பழைய நிலையில் ஷார்பன் இல்லாமல்.
சரி கடைசியாக உங்களது ஃபோர்கிரவுண்ட் நிறமாக வெள்ளை நிறத்தை
தேர்வுசெய்துகொண்டு பின்னர் பிரஷ் டூலைக்கொண்டு நீங்கள் எந்த இடத்தில் பிரஷ் செய்கிறீர்களோ
அந்த இடம் மட்டும் ஷார்ப்பாக மாறும்.
என்ன மக்கா கட்டுரை உபயோகமாக இருந்ததா....
குறிப்புகள் :
சரி ஏன் இந்த முறையை சிபாரிசு செய்கிறீர்கள்,இதற்கு பதிலாக பேக்கிரவுண்ட் லேயரை டூப்ளிகேட் செய்து பின்னர் ஷார்பன் பில்டரை பயன்படுத்தி ஷார்பன்
செய்து பின்னர் லேயர் மாஸ்கை பயன்படுத்திக்கொள்ளலாமே ஏன் நித்தி இதற்கு இவ்வளவு பெரிய
கட்டுரையை தந்திருக்கிறார் என போட்டோஷாப் தெரிந்தவர்கள் நினைக்கக்கூடும்.
Smart Filtersமுறையில் செய்யப்படும் ஷார்பன் செட்டிங்குகளில் ஏதாவது மாற்றம்
தேவைப்படுகிறது என்றால் Smart filtersஐ இருமுறை கிளிக் செய்தால் போதும் நீங்கள் கொடுத்திருந்த மதிப்புகள்
அப்படியே இருக்கும் அந்த மதிப்புகளில் என்ன மாற்றம் வேண்டுமென்றாலும் நீங்கள் எந்த
நேரத்திலும் Edit செய்துகொள்ளலாம்.லேயர் மாஸ்க் முறையில் அவ்வாறு மதிப்புகளை நேரடியாக எடிட்
செய்ய இயலாது என்பதால் தான் இந்த முறையை உங்களுக்கு சிபாரிசு செய்கிறேன்.
அன்புடன்,
நித்தி ஆனந்த்
cs3 la ithu panna mutiuma
ReplyDeletecs3 la panna mudiuma
ReplyDeleteVery nice article
ReplyDeletePls conduct photography course in Chennai
Hello Jayaram,I think Smart Sharpen tool is not available in CS3,So i recommend to use Highpass Filter by following this link
ReplyDeletehttp://photography-in-tamil.blogspot.in/2014/07/highpass-sharpening.html
hello yaravathu irukingala
ReplyDelete