Wednesday, February 3, 2016

பிப்ரவரி 2016 போட்டி

12 comments:
 

புகைப்படக் கலையில் தமிழ் நண்பர்கள் திறனையும் ஆர்வத்தையும் வளர்த்துக் கொள்ள வேண்டுமென்கிற ஒரே நோக்கத்துடன் பாடங்கள், அனுபவக் குறிப்புகளோடு எட்டரை ஆண்டுகளாக இயங்கி வருகிறது நம் PiT என்பதை அறிவீர்கள். இடைவிடாமல் வேறுவேறு தலைப்புகளில் நடத்தப்பட்டு வந்த மாதாந்திரப் போட்டிகள், இனி https://www.facebook.com/groups/488597597986621/ குழுவின் மூலமாக தொடர உள்ளன. ஃபேஸ்புக்கில் கணக்கு இல்லாதவர்கள் முதலில் ஒரு கணக்கை உருவாக்கிக் கொள்வது அவசியம். அதன் பின் மேற்சொன்ன குழுமத்தில் இணைந்திடுங்கள். ஆர்வமுள்ள உங்கள் நண்பர்களையும் சேர்த்திடலாம்.

அதன் பிறகு பிப்ரவரி மாதப் போட்டிக்கான படத்தை கீழ்கண்ட இணைப்பில் வலையேற்ற வேண்டும்: “Feb'2016 போட்டி” https://www.facebook.com/media/set/?set=oa.488598547986526&type=1 

குழும சுவற்றில் பதியாமல், மேலுள்ள இணைப்பைத் திறந்துதான் பதிய வேண்டும். ஒவ்வொரு போட்டி அறிவிப்பின் போதும் அந்தந்த மாதப் போட்டிக்கான ஆல்பத்தின் இணைப்பு  பதிவில் தரப்படும். படங்கள் PiT குழுவினரின் அனுமதிக்குப் பிறகே ஆல்பத்தில் இடம் பெறும்.

புதிய மாற்றமாக, இனிமேல் ஒரு நபர் இரண்டு படங்களை அனுப்ப அனுமதி. மற்றபடி “வழக்கமான விதிமுறைகள்தான்.

இம்மாதத் தலைப்பு : உயிருள்ளவை (Living things) . படம் மனிதர்களாகவோ வேறு உயிரினங்களாகவோ இருக்கலாம்.

 படங்களை அனுப்பக் கடைசித் தேதி: 25 பிப்ரவரி 2016

போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற வாழ்த்துகள்!
*** 

12 comments:

  1. Dear Admin,
    Pls upload Some sample photos.

    Thank u..

    Munish.K

    ReplyDelete
    Replies
    1. மாதிரிப் படங்கள் போட்டி ஆல்பத்தில் https://www.facebook.com/media/set/?set=oa.488598547986526&type=1 இடம் பெற்றுள்ளன.

      Delete
    2. தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி...!

      Delete
  2. போட்டியில் பங்குபெறப்போகும் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. புதிய மாற்றமாக, இனிமேல் ஒரு நபர் இரண்டு படங்களை அனுப்ப அனுமதி என்கிற விதி தளா்வினை செய்தமைக்கு பாராட்டுகின்றோம் மற்றும் வரவேற்கின்றோம். நமது அங்கத்தினா்களை என்னவென்று நினைத்துக்கொண்டீா்கள், சும்மா புகுந்து விளையாடி விடுவாா்கள் பாருங்கள்.

    ReplyDelete
  4. Facebook கணக்கு இல்லாதவர்கள் எப்படி கலந்து கொள்ள முடியும்? Facebook புகைப்படங்கள், பதிவுகள் Google search தேடுபொறியில் வராதவை. பதிவுகள், புகைப்படங்கள் உள்ள வலைத்தளங்கள் (blogspot, wordpress, flickr) Google தேடுபொறியில் கண்டுகொள்ள முடியும். தயவு செய்து இந்த limitation -ஐ கருத்தில் கொண்டு முடிவு செய்யவும்.

    ReplyDelete
    Replies
    1. ஃபேஸ்புக்கில் கணக்கை உருவாக்கிக் கொண்டால்தான் கலந்து கொள்ள இயலும். போட்டிப் படங்களை இலகுவாக இணைக்க இயலுமென்பதால் குழுவினர் ஆலோசித்து எடுத்திருக்கும் முடிவே இது. கூகுள் தேடுபொறியில் வராது என்றாலும் குறிப்பிட்ட ஆல்பங்களுக்கான இணைப்பு இங்கே போட்டி அறிவிப்புப் பதிவில் இருக்கும். அதே போல முடிவுகள் அங்கு மட்டுமின்றி இங்கும் பகிரப் படும். இணைந்து செயல்பட வாசகர்கள் ஒத்துழைக்க வேண்டுகிறோம்.

      Delete
  5. hot to know the status of uploaded photos and when i expect my photos in that album.

    ReplyDelete
    Replies
    1. அநேகமாக ஒவ்வொரு நாளும் ஆல்பம் அப்டேட் ஆகிறது. இந்தப் பதிவிலும், பிட் முகப்பின் வலது மேல்பகுதியிலும் போட்டி ஆல்பத்துக்கான இணைப்பு உள்ளது.

      Delete
  6. I dont have Facebook account, how can i participate? please explain

    ReplyDelete
    Replies
    1. போட்டியில் கலந்து கொள்ள ஃபேஸ்புக்கில் கணக்கை உருவாக்கிக் கொள்வது அவசியம்.

      Delete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff