சமீப இடுகைகள்...

Disclaimer : Copyrights to the Photos shown in this blog belongs to the respective owner of the photo(s). Refrain Copying and using the photo from this blog with out permission from the owner of the photo.

Friday, May 30, 2008

PIT - ஜூன் 2008 - போட்டி அறிவிப்பு

எங்கள் இனிய பிட் நண்பர்களே!

உங்கள் பாசத்துக்குரிய கைப்புள்ள/சர்வேசன் பேசுகிறோம்.

மேடம் க்யூரி, எடியூரப்பா, ஸ்ரீசாந்த், கே.பி.சுந்தராம்பாள், டேனியல் க்ரேக், ராஜர் ஃபெடரர், சுனிதா வில்லியம்ஸ், CVR, அன்னை தெரசா, வெள்ளிக்கிழமை ராமசாமி - இதெல்லாம் என்னங்க? பெயர்கள் அல்லது பெயர்ச்சொற்கள்...இல்லையா?

இந்த பெயர்ச்சொற்களை நாம எல்லாரும் நியாபகம் வச்சிக்க காரணமா இருக்கறது இப்பெயர்களுடன் நாம் தொடர்பு படுத்திப் பார்க்கும் வினைச்சொற்கள் அல்லது அவர்கள் செய்த/செய்கின்ற செயல்கள்/வேலைகள். இந்த மாதம் மேலே சொன்ன மாதிரி பெயர்ச்சொல்லையும் வினைச்சொல்லையும் இணைத்து ஒரு புகைப்படம் எடுக்கனும். அது தான் போட்டி.

என்னடா தலைப்பு கொடுக்கச் சொன்னா தமிழ் இலக்கணம் பத்தி பேசறான்னு நெனக்கிறீங்களா? அதாவது பெயர்ச்சொல்லாகிய உயிரினம், வினைச் சொல்லாகிய தன் அன்றாட வேலையில் ஈடுபட்டிருப்பதை காட்ட வேண்டும். கவனிக்க "உயிரினம்"!!! - மனிதர்களாகவும் இருக்கலாம், மிருகங்களாகவும் இருக்கலாம். வேலை செய்யும் தாவரங்கள் எதுவும் இல்லைன்னே நெனக்கிறோம். அதுனால மனிதர்ஸ் அண்ட் மிருகம்ஸ் ஒன்லி.

கீழே இருக்கற சாம்பிள் படங்களைப் பாருங்க, உங்களுக்கே புரியும்.










போட்டித் தலைப்பு
அன்றாட வேலையினூடே ஒரு நாள் (A Day at Work) - அன்றாட வேலையில் ஈடுபட்டிருக்கும் உயிரினங்களைப்(மனிதர்கள்/மிருகங்கள்) ஒரு படத்துக்குள் கொண்டு வருதல்.

நினைவில் வைக்க வேண்டிய தேதிகள்
ஜூன் - 1 : போட்டித் தொடங்கும் தேதி
ஜூன் - 15 , 23:59 இந்திய நேரம் : போட்டி முடிவடையும் தேதி
ஜூன் - 25 க்குள் முடிவுகள் அறிவிக்கப்படும்

எப்படி தெரிவிப்பது / கலந்துக் கொள்வது ?உங்களின் வலைப்பூவிலோ அல்லது photo sharing இணைய தளம் "Flickr, Picsasa Web, Photobucket" போன்ற ஏதாவது ஒரு இடத்தில் படங்களை வலையேற்றி இந்தப் பதிவின் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். உஙகள் வலைப்பூவில் இருக்கும் முதல் புகைப்படம் இந்த போட்டிக்கு எடுத்துக்கப்படும்.

எந்த மாதிரி படங்கள் எடுக்கலாம்
1. குழந்தைக்குச் சோறூட்டும் தாய்
2. வீட்டுப்பாடம் எழுதும் பள்ளிச்சிறுவன்
3. ஆணி புடுங்கிக் கொண்டிருக்கும் உங்கள் சக ஊழியர்
4. வண்டியை இழுத்துச் செல்லும் மாடு
5. சோற்று பருக்கையைச் சுமந்து செல்லும் எறும்பு
6. யாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் மளிகை கடைகாரர்
7. பூவை முழம்போடும் பூ விற்கும் பெண்

மேலே உள்ளவை ஒரு சாம்பிளுக்காக மட்டுமே கொடுக்கப்பட்டவை. As always, the sky is your limit.

கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டியவை
அ. புகைப்படம் உங்களுடையதாக இருக்க வேண்டும. மற்றவரால் பிடிக்கப்பட்ட, உங்களை கவர்ந்த படம் போட்டிக்கு எடுத்துக்க கூடாது.

ஆ. புகைப்படத்தை எடுக்கும்போது date option ஐ disable பண்ணிடுங்களேன். அது நமக்கு தேவை இல்லை. EXIF ல அது இருக்கும்.

இ. subject அ கொஞ்சம் சரியாக align பண்ணுங்க

ஈ. Focus சரி பார்த்துக்கவும்

உ. முடிந்தால் பிற்சேர்க்கை செய்து பாருங்கள்

ஊ. நீங்கள் போட்டியில் சேர்க்கும் புகைப்படத்துக்குள்ளே உங்களுடைய signatureஐ இடுவதைத் தவிர்க்கவும். அப்படி இடுவதென்றால், படத்துக்கு ஒரு பார்டர் அமைத்து, பார்டர் அகலத்தில் உங்கள் signatureஐ இடுங்கள்.

ஊ. இத்தலைப்பைப் பொறுத்தவரை காட்சியமைப்புக்கு(Composition) முக்கியத்துவம் கொடுத்து படங்கள் எடுக்கவும். மேலே உள்ள சாம்பிள் படங்களில், முதலில் இருக்கும் ஜீவ்ஸ் அண்ணாச்சியின் டீ கடை படத்தைப் பாருங்கள். ஒரு பெண் டீ ஆற்றிக் கொண்டிருக்கிறார், படத்தின் பேக் க்ரவுண்டும், அருகே இருக்கும் பொருட்களும் எந்த விதத்திலும் "ஒரு பெண் டீ கடையில் மும்முரமாக வேலை செய்து கொண்டிருக்கிறார்" என்று அவர் சொல்ல வந்திருக்கும் விஷயத்திற்கு இடையூறு ஏற்படுத்தாமல், படத்திற்கு பலம் மட்டுமே சேர்ப்பதை பாருங்கள். உங்கள் படத்தையும் ஒருவர் பார்க்கும் போது அப்படத்தில் "ஒருவர் வேலை செய்து கொண்டிருக்கிறார், அது என்ன வேலை என்று சுலபமகாப் புரிந்து கொள்ளுதல், வேலையில் அவர் காட்டும் முனைப்பு, அவர் பயன்படுத்தும் சாதனங்கள்" இவை மட்டுமே கவனத்தில் நிற்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

எ. விஜய் ஜோடி நம்பர் ஒன்ல இந்த ஜட்ஜஸ்லாம் சொல்லுவாங்களே "இன்னிக்கு என் கவனம் எல்லாம் இவங்க மேல தான் இருந்துச்சு, அவரை இவங்க பாக்கவே விடலை" அந்த மாதிரி. உங்கள் படத்தைப் பார்ப்பவரின் கவனமும் வேலையில் ஈடுபட்டிருப்பவர் மீதே செல்லுமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

ஏ. சும்மா உக்காந்துருக்கற நாயையோ, மனுசனையோ போட்டோ எடுத்துட்டு, இவுங்களோட அன்னாட வேலை சும்மா உக்காந்துருக்கறது தான்னு லந்து பண்ணப்பிடாது.

பிற்சேர்க்கைல என்னலாம் பண்ணலாம்?
நீங்கள் Pro user உபயோகிக்கும் Adobe CS3, GIMP போன்ற மென்பொருட்களை மட்டுமே எதிர் பார்க்காமல் lightroom, Piscasa போன்ற எளியவற்றை உபயோகிக்கலாம்
அ. Piscasa ல "I am Feeling Lucky" செய்து பாருங்கள்
ஆ. Rule of thirds கு உகந்த மாதிரி Crop செய்து பாருங்கள்
இ. புகைப்படம் அதன் உட்பொருளுக்கு ஏற்றவாறு நேர்க்கோணத்தில் அமைவது நன்று (Straighten the Photo according to the subject )
ஈ. "Selective Focus", "Selective Coloring" போன்ற நுட்பங்களை கையாண்டு புகைப்படத்தின் உட்பொருளை வெளிப்படுத்தலாம்.

இந்தத் தலைப்புல கலக்கலான படங்கள் வரும்னு எதிர்பார்க்கிறோம். ஆல் தி பெஸ்ட்!

The authors of this post wish to acknowledge the original works of the following Photographers, which have been showcased in this blog to inspire Photography enthusiasts.

1. Iyappan
2. Eflen001
3. Twobythree
4. Entrelec
5. Strandloper
6. Claude Renault
7. Ornellab

போட்டியாளர்களின் படங்களின் அணிவகுப்பு கீகீகீகீகீகீகீழே....:
...
....
.....
இன்னும் கீகீகீகீகீகீகீழே........
..
....











































































































































































































































1. இம்சை
2. Sankar
3. கவிதா/Kavitha
4. Jeeves
5. மணிமொழியன்
6. Ila
7. வாசி
8. வல்லிசிம்ஹன்
9. Amaan Abdullah
10. JackieSekar
11. கிரி
12. துளசி கோபால்
13. Peeveeclick
14. Newbee
15. ஆனந்த்
16. Boston Bala
17. Jil Jil
18. goma
19. Nathas
20. ரிஷான் ஷெரீப்
21. Athi
22. Sumathi
23. லக்குவண்
24. பாரிஸ் திவா
25. கயல்விழி முத்துலெட்சுமி
26. ராஜ நடராஜன்
27. நந்து f/o நிலா
28. Srikanth
29. சின்ன அம்மிணி
30. கௌசிகன்
31. பிரபு ராஜதுரை
32. ஒப்பாரி
33. T.Jay
34. Truth
35. Amal
36. MQN
37. நானானி
38. சூர்யா
39. ராமலக்ஷ்மி
40. கார்த்திக்
41. ஆயில்யன்
42. Shiju
43. நாமக்கல் சிபி
44. நிலாக்காலம்
45. Illatharasi
46. Geetha
47. Sathiya
48. Venkatesan PS
49. Kuttibalu
50. ஓவியா
51. Gokulan

...மேலும் படிக்க...

Thursday, May 29, 2008

கம்பி அழித்தல்

ஒரு படம் எடுக்கறோம். அதில் தெரியாத்தனமா நமக்குத் தேவையில்லாத சில விஷயங்களும் சேந்து வருது.
அந்த தேவையில்லாப் பொருள், படத்தின் ஓரத்திலோ, மேலோ, கீழோ இருந்தால் Crop செய்து வெட்டி எடுத்து விடலாம்.
ஆனா, சில சமயம், அந்த வேண்டாப் பொருள், படத்தின் மையத்தில் வந்து இம்சை கொடுக்கும்.

முக்கியமாக, தொங்கும் மின்சாரக் கம்பிகளும், மற்ற கேபிள் வயர்களும் பல படங்களின் அழகைக் கெடுத்து விடும்.
உதாரணத்துக்கு இந்தப் படம் (சமீபத்தில், சான் ஃப்ரான்ஸிஸ்கோவில் க்ளிக்கியது)


இந்த படத்துல பாத்தீங்கன்னா அந்த கறுப்புக் கம்பி முழுப் பட நீளத்துக்கும் இழுத்துக்கிட்டு இருக்கு. கொஞ்சம் அசிங்கமாவும் இருக்கு. படத்தை பாக்காம, மொதல்ல கம்பிக்குதான் கவனம் திரும்புது.
இந்த படத்தை, கம்பி இல்லாமல் எடுக்கணும்னா, ரெண்டு வழி.
ஒண்ணு, கவர்னர் ஆர்னால்டு ஷ்வார்ஜனேகருக்கு ஒரு பெட்டிஷன் போட்டு அந்த கேபிளை மண்ணுக்கு அடீல கொண்டு போக சொல்லலாம்.
ரெண்டு, நம்ம பிற்-தயாரிப்பு வித்தகர் An& கிட்ட ஐடியா கேட்டு, பிற்தயாரிப்பு செய்யலாம்.

ஆர்னால்டுக்கு இருக்கர பட்ஜெட் ப்ரச்சனையில, நம்மள எங்க கண்டுக்கப் போறார்னு, நான் An& கிட்ட ஐடியா கேட்டேன். கேட்ட அடுத்த நொடீல, இந்தா புடின்னு ஒரு மாயாஜால வித்தையை சொல்லிக் கொடுத்தாரு.

அதாகப்பட்டது அந்த ப்ரச்சனைக்குரிய படத்தை Gimpல் திறந்து கொள்ளுங்கள்.

அப்பாலிக்கா, Clone என்னும் ஐக்கானை க்ளிக்குங்கள். (கீழே படம் வரைந்து பாகம் குறிக்கப்பட்டுள்ளது)



Clone க்ளிக்கியாச்சா?

இப்ப என்ன பண்ணனும்னா, அந்த கறுத்த கம்பி இருக்குல்ல, அதுக்கு கொஞ்சம் கீழ உங்க எலிக்குட்டியை நகர்த்தி, CTRL அமுக்கிக் கொண்டே ஒரு க்ளிக்கு க்ளிக்குங்க.

அதாவது, கம்பிக்குக் கீழ் இருக்கும் வானத்தின் நிறத்தை, பதிவு செய்து கொள்ள இந்த ஸ்டெப்பு.

இது வரைக்கும் புரிஞ்சுதா?

இப்போ அந்த கம்பிக்கு மேலே ஒரு க்ளிக்கு க்ளிக்குங்க (CTRL விட்டுடணும்).

இப்ப கவனிச்சீங்கன்னா, நீங்க க்ளிக்கிய இடத்தில் இருக்கும் கம்பி அழிந்து, அந்த இடத்தில் வானத்தின் நீல நிறம் வந்திருக்கும்.

கம்பியின் முழு நீளத்துக்கும் இந்த மாதிரி ரிப்பீட்டு.

இதில் முக்கியமான வேலை, கம்பியின் நிறத்தை அழிக்க, அதற்க்கு கீழே இருக்கும் நிறத்தை துல்லியமா உபயோகிக்கணும்.

அதாவது, வானத்தின் முன்னால் தெரியும் கம்பிக்கு வானத்தின் நீல நிறம் வரணும்.
கட்டடத்தின் முன்னால் இருக்கும் கம்பிக்கு, கட்டடத்தின் கலரை ஒத்தி எடுத்துக் கொண்டு அதை உபயோகிக்கணும்.

வானத்தின் முன்னால் இருக்கும் கம்பியை இந்த டெக்னிக்கின் மூலமாய், அழித்ததில் கிடைத்த படம் கீழே.


கம்பி இல்லாம, படம் பாக்க நல்லாருக்குல்ல?

படத்தை க்ளிக்கி பெருசு பண்ணி பாத்தீங்கன்னா, கட்டடத்தின் மேலே செல்லும் கம்பி கண்ணுக்குத் தெரியும். அதை அழிக்கலாமா?

அதுதான் வீட்டுப் பாடம். ட்ரை பண்ணிப் பாருங்க. :)

படிச்சது ஞாபகம் இருக்கா? திரும்ப ஒரு ரீ-கேப் கீழே
1) நல்ல அழகான கம்பியோ, இல்ல வேற ஏதோ ஒரு குப்பையோ, இருக்கர மாதிரி ஒரு படம் புடிங்க :)
2) Gimpல் படத்தை திறங்க
3) Clone ஐக்கானை க்ளிக்குங்க
4) Ctrl அமுக்கிக் கொண்டே, கம்பி/குப்பையின் வெகு அருகாமையில் இருக்கும் காட்சியை க்ளிக்கி அந்த கலரை தெரிவு செய்யுங்க
5) இப்ப கம்பி/குப்பையின் மேல் க்ளிக்கி, கம்பி/குப்பையை மறைய வைங்க.

சுலபமா இல்ல? முயன்று பாருங்கள்!

டிப்பு தந்த An& க்கு நன்னி!

ஜமாய்ங்க!

பி.கு: ஜூன் மாதப் புகைப்படப் போட்டி அறிவிப்பு விரைவில் வெளிவரும்.
தங்களின் கேமரா/லென்ஸை தயார் நிலையில் வைத்துக் கொள்ளுங்கள்.
கம்பி/குப்பை உள்ள படங்களை எடுக்க அஞ்ச வேண்டாம்.
இருக்கவே இருக்கு கம்பி அழிக்கும் டெக்னிக்கு. :)

...மேலும் படிக்க...

Sunday, May 25, 2008

மே 2008 PIT புகைப்படப்போட்டி முடிவுகள்

வேலை பளு இன்றி சுதந்திரப்பறவையாக சுற்றிக்கொண்டிருந்த என்னை அடித்தது ஒரு சுனாமி!!
ஆமாம்..சில நாட்களுக்கு முன் வேலை பளு மிக அதிகமுள்ள ஒரு ஆப்பு ப்ராஜெக்ட் அடியேனிற்கு அலாட் செய்யப்பட்டது...அதனால் முதல் பத்து படங்கள் தேர்வு செய்வது கூட நான் நினைத்த படி சீக்கிரம் செய்ய முடியாமல்,பீவியுடன் பேசிவிட்டு அவரையே பதிவிடச்சொன்னேன்...
நேரமின்மையால் நான் சொன்னபடி 25-ஆம் தேதிக்கு முன்பாக முடிவுகளை அறிவிக்க முடியவில்லை.
இன்று 25-ஆம் தேதி ஞாயிராக ஆன படியால் விடிகாலை பீவியுடன் கலந்துரையாடிவிட்டு முதல் மூன்று படங்கள் உங்கள் பார்வைக்கு..

முதல் இடம்:Mugshots - பாபு


இரண்டாவது இடம்:நெல்லை சிவா

மூன்றாவது இடம்:நாதஸ்




பங்குகொண்டவர்கள்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.. :-)

...மேலும் படிக்க...

Thursday, May 22, 2008

மே போட்டி -முதல் பத்து ஜோடிகள்

மக்களே...
சென்ற மாதத்தை விட இந்த முறை, போட்டிக்கான உங்களின் பங்களிப்பு அதிகமாகி இருப்பதை வரவேற்கிறோம். நடுவர்களாக இந்த முறை சற்று திணறித் தான் போயிருக்கிறோம். அதே சமயம் அடுத்த மாத போட்டியின் போது படங்களின் தரம் இன்னும் ஒரு படி மேலே செல்ல வேண்டும்.

சரி நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த முதல் பத்து ஜோடிகள் உங்கள் பார்வைக்கு... இங்கே (வரிசைபடுத்தபடவில்லை)











முதல் மூன்று... விரைவில்... நன்றி.

...மேலும் படிக்க...

Saturday, May 17, 2008

பிக்காஸா வண்ணத் திருத்தம்

வண்ணத்திருத்தங்களைப் பற்றி ஏற்கனவே இங்கே படித்திருப்பீர்கள். சுருக்கமாக சொல்லவேண்டுமெனில் காட்சிப் பொருளின் வெள்ளை , உங்கள் படங்களில் முழு வெள்ளையாகத் தெரியவேண்டும், அதேப் போல கருப்பு படத்தில் முழு கருப்பாகத் தெரியவேண்டும்.
பழுப்பாகவோ அல்லது வேறு வண்ணம் கலந்தோ தெரிந்தால் , அதை பிக்காஸாவில் எளிய முறையில் சரிபடுத்துவது பற்றி பார்க்கலாம்.

மாலை வெயில் அல்லது மஞ்சள் விளக்கு வெளிச்சத்தில் எடுத்தப் படங்கள் ,மஞ்சள்/ஆரஞ்ச் வண்ணத்தோடு வரும், மதிய வெளிச்சத்தில் அல்லது ட்யூப் லைட் வெளிச்சத்தில் எடுக்கும் படங்கள் நீலச் சாயலோடும் வரும்.

உங்கள் கேமராவில் White Balance ,AUTO என்று வைத்து இருந்தால் பொதுவாக கேமராவே வண்ணத்தை சரி செய்ய முயற்சிக்கும். Fluorescent,Tungsten என்று தேவைக்கேற்ப வைத்துக் கொள்ளலாம்.


உதாரணத்திற்கு இந்த படத்தில் நீலம் அதிகமாகிவிட்டது போல தோன்றுகிறது ( நீலம் அதிகமாக வேண்டும் என்றே எடுத்தப் படம் என்பது வேறு விஷயம்.)



பிக்காஸாவில் படத்தை திறந்தப்பின் , Tuning பகுதிக்கு செல்லுங்கள்
.



One click fix for color என்று ஒரு பொத்தான் இருக்கும். அதை ஒரு அமுக்கு அமுக்கவும்.





அவ்வளவுதான். நீலம் சாயம் வெளுத்துப் போச்சு டும் டும் டும்.

நீல நிறத்தை தேர்ந்தெடுத்து , அதை குறைத்து இருப்பதை பார்க்கலாம்





இதை செய்தப்பின் படம் இந்த மாதிரி இருக்கும், நீலச் சாயல் இன்றி.



பொதுவாக இந்தப் பொத்தானே உங்களின் அனைத்து படங்களும் போதுமானதாக இருக்கும்.

இன்னொரு முறையும் இருக்கிறது. இதில் நீங்களே வெள்ளை வண்ணத்தை தேர்வு செய்யலாம்.

இந்தப் படத்தில் கொஞ்சம் மஞ்சள் அதிகம்( வீட்டுக்குள் மஞ்சள் வெளிச்சத்தில் எடுத்தப் படமாக இருக்கலாம். )



படத்தை திறந்து Tuning பகுதிக்குப் போனப்பின் .



Neutral color picker என்று ஒருப் பொத்தான் இருக்கும். அதை கிளிக்குங்கள்.




என்ன ஒன்றுமே ஆகவில்லையா? ஏற்கனவே சொன்ன மாதிரி நீங்கள்தான் வெள்ளை வண்ணத்தை தேர்வு செய்யப் போகிறீர்கள். படத்தின் மீது எலிக்குட்டியை ஒட விடுங்கள்.


இந்தப் படத்தில் கோப்பை வெள்ளை வண்ணமாக இருக்கவேண்டும். எலிக்குட்டியை வெள்ளை கோப்பையின் மீது கிளிக்கியவுடன்,



வண்ணம் திருத்தப்படும்




வண்ணம் திருத்தப்பட்ட படம் இங்கே.




அவ்வளவுதான் மேட்டர். வழக்கம் போல உங்களின் சந்தேகங்கள், கருத்துக்களை பின்னூட்டிவிடவும்.

...மேலும் படிக்க...

Friday, May 16, 2008

மே மாத புகைப்படப்போட்டி படங்களின் பட்டியல்

தயவு செய்து சரி பார்த்துக்கொள்ளவும்.
பதிவின் முதல் படம் போட்டிக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
வேறு படம் வேண்டுமென்றால் பின்னூட்டத்தில் அறிவித்த படி,பட்டியலில் குறிப்பிட்டிருக்கிறேன்.
எல்லாவற்றையும் சரி பார்த்துக்கொள்ளவும்.
கடைசியில் படங்களின் தேர்வு இந்த பட்டியலைப்பொருத்து தான் அமையும்.
நன்றி


  1. வல்லிசிம்ஹன்


  2. Baby Pavan


  3. Deepa


  4. Baranee


  5. Jil Jil


  6. சின்ன அம்மிணி


  7. Meendum


  8. பாலமுருகன்


  9. நிலாக்காலம்


  10. பொன்ஸ்~~Poorna


  11. Sankar


  12. Babu(Mugshots)


  13. இரவு கவி - கடைசி(7 -ஆவது) படம்


  14. Jawaharji


  15. komuty


  16. கைப்புள்ள


  17. கபிலன்


  18. நெல்லை சிவா


  19. START MUSIK


  20. SathyaPriyan


  21. SilverHills


  22. Kesavan


  23. Sriram J


  24. யாரோ ஒருவன்


  25. சயந்தன்


  26. கௌசிகன்


  27. நானானி


  28. கையேடு


  29. துளசி கோபால்


  30. ஓவியா


  31. சிநேகிதன்


  32. Saran/Saravanan


  33. ILA (3 -ஆவது படம்)


  34. சர்வேசன்


  35. Balaji-Paari


  36. கார்த்திக்


  37. ஹரன்


  38. எம்.ரிஷான் ஷெரீப்


  39. சூர்யா


  40. Veera


  41. Shiju


  42. Karthi Blog


  43. nathas


  44. கயல்விழி முத்துலெட்சுமி


  45. NewBee


  46. PPattian : புபட்டியன்


  47. ::Truth - The Other Side Though::


  48. priya


  49. Mohan Kumar


  50. அறிவன்#11802717200764379909


  51. Sriram


  52. MQN


  53. ராமலக்ஷ்மி


  54. T.JAY


  55. கடோத்கஜன்


  56. மணிவண்ணன்


  57. Senthil


  58. Geetha


  59. Gokulan


  60. நிழல்ஓவியன் Karthik


  61. பிரேம்ஜி


  62. Illatharasi


  63. Mani


  64. Amal (3 -ஆவது படம்)


  65. ஒப்பாரி


  66. நந்து f/o நிலா


  67. நந்து f/o நிலா


  68. Sathiya


  69. நட்டு


  70. Athi

...மேலும் படிக்க...

Thursday, May 8, 2008

கனவுக்காட்சி நினைவாகுமா ?

பொதுவாக கேமராவில் இருந்து நேரடியாக வரும் படங்கள் நாம் நினைத்த மாதிரி தெளிவாகவோ, இல்லை மென்மையாகவோ வருவதில்லை. நம்ம நல்ல நேரம், டிஜிடல் கேமரா இருப்பதால், படங்களை இலவசமாக கிடைக்க்கும் மென்பொருட்களை கொண்டு சரிபடுத்திக்கொள்ள முடியும்.

திரைப்படங்களில், பல இயற்கை காட்சிப் புகைபடங்களில் ஒரு கனவுப் போன்ற ( Dreamy look ) இருப்பதைப் பார்த்து இருப்பீர்கள். அதை GIMP மூலம் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம். இதே முறையைக் கொண்டு இதற்கு நேர்மாறான விளைவான, படத்தை கூர்மையாக(Sharpen- சரியான வார்த்தை என்னப்பா ?) ஆக்குவதும் எப்படி என்றும் பார்க்கலாம்.


உதாரணதிற்கு இந்தப் படத்தை எடுத்துக் கொள்ளலாம்




படத்தை திறந்து, Background Layer நகல் எடுத்துக் கொள்ளவும்.






நகலை தேர்ந்தெடுத்து , Gaussian Blur ரை தெரிவுச் செய்யுங்கள்




Blur Radius அளவு அதிகமாக அதிகமாக படத்தின் தெளிவு குறையும். உதாரணத்திற்கு 5 என்று எடுத்துக் கொள்ளலாம்.



அடுத்து layers பகுதியில் Mode Overlay என்று மாற்றவும்





படத்துக்கு ஒரு கனவுத் தோற்றம் வ்ந்து விட்டதா ?





இதற்கு நேர்மாறாக , படத்தை கூர்மையாக்க்கலாம்.

Colours -> Invert தெரிவுச் செய்யுங்கள்




இப்ப என்ன ஆச்சு ? படம் கூர்மையாக தெளிவாகவும் ஆகிவிட்டதா ?




எப்படி இது நடக்கிறது ? மேல்நிலைப் பள்ளியில் Low Pass Filter, Highpass Filter பற்றி படித்து இருப்பீர்களே ? என்னது மறந்து விட்டீர்களா ? போங்க, போய் முதலில் புத்தகத்தை எடுத்து படிங்க. அப்புறம் எல்லாம் புரியும் .

(உங்கப் பள்ளி பாடத்திட்டத்தில் இதெல்லாம் இல்லையா ? அப்படின்னா இரண்டாம் பாகத்தில் விரிவாகப் பார்க்கலாம்)

...மேலும் படிக்க...

PiT இணைப்பு

வருகைப் பதிவேடு

PiT'ers in Flickr

PIT Group - View this group's photos on Flickriver

  © Blogger template 'Neuronic' by Ourblogtemplates.com 2008

Back to TOP