முந்திய 10 சிகப்பை பாத்தாச்சு. இனி, வெற்றி பெற்ற மூன்று எது என்பதைப் பார்ப்போம்.நான் படம் பிடிக்கும்போது, அடிக்கடி தவற விடும் ஒரு விஷயம், படத்தின் ஷார்ப்னெஸ் (sharpness). ஒரு இம்மியளவு ஷட்டர் வேகம் முன்னே பின்னே அமைந்தாலும், படத்தின் துல்லியம் போய், ஒரு blurness அமைந்துவிடும்.
மிக முக்கியமாக, க்ளோஸ்-அப்பில் எடுக்கும் படங்களுக்கு, இந்த துல்லியம் மிக அவசியம். இல்லைன்னா, படத்தின் வசீகரம் குறந்து விடும்.
மனிதர்களை/மிருகங்கள்/ப்றவைகளை க்ளோஸ்-அப்பும் போது, அவர்களின், கண்ணை ஃபோக்கஸ் செய்து, துல்லியமாய் காட்ட வேண்டும். இல்லைன்னா, அந்தப் படம் எடுபடாமல் போக வாய்ப்பிருக்கிறது.
அதே போல், மற்ற விஷயங்களை எடுக்கும்போது, பார்ப்பவரின் கவனம் எங்கு ப்ரதானமாய் விழ வேண்டுமோ, அந்த இடம், ஃபோக்கஸில் துல்லியமாய் அமைய வேண்டும். இல்லைன்னா, படங்கள் சற்றே பிசு பிசுத்துப் போய் விடும்.
சிகப்புக்கு வந்த பலப் படங்களில், இந்த துல்லியமின்மை காணக் கிட்டியது.
துல்லியம், படத்தின் தலைப்பு, எடுத்தவரின் உழைப்பு, இஸ்க்கும் தன்மை, போன்ற வடிகட்டிகளை பயன் படுத்தி, என்னைக் கவர்ந்த மூன்று.
மூன்றாம் இடத்தில்:
kadalanban

துல்லியப் பரச்சனை லேசா இருக்கு. பழத்தின் மேல், 'பளிச்' காணும் (பெருசாக்கிப் பாத்தா). இலையின் மேல் ஃபோக்கஸா? (இல்ல, என் கண்ணு ஃப்யூஸ் போகுதான்னு செக் பண்ணவா?)
இரண்டாம் இடத்தில்:
அமல்

இதிலும் கூட சற்றே துல்லியம் குறைவாத்தான் இருக்கு (கண்டிப்பா ஐ டாக்டரை பாக்கணுமோ?)
முதல் இடத்தில், பளிச்னு நிக்கற படம்
Sathiya

"அப்படியே சாப்பிடலாம்"னு விளம்பரம் கொடுக்கக் கூடிய அளவுக்கு, பளிச்னு க்ளிக்கிய சத்யாவுக்கு வாழ்த்துக்கள்.
சிறப்பு கவனம் பெற்றவை:
sivabaraneedharanன்

ரொம்ப ஒவர் contrast ஆகி, ஒரு செயற்கைத்தனம் வந்துடுச்சு. ஏங்கிளும், கை கொடுக்கலை. கொஞ்சம் கூட பின்னாடி வந்து க்ளிக்கியிருந்திருக்கலாம்.. ?
அனைவருக்கும் நன்றீஸ்.
அடுத்த மாதம் சந்திப்போம். தொடர்ந்து கலக்குங்க.