Thursday, April 28, 2011

ஏப்ரல் 2011 - போட்டி முடிவுகள்

14 comments:
 
முந்திய 10 சிகப்பை பாத்தாச்சு. இனி, வெற்றி பெற்ற மூன்று எது என்பதைப் பார்ப்போம்.நான் படம் பிடிக்கும்போது, அடிக்கடி தவற விடும் ஒரு விஷயம், படத்தின் ஷார்ப்னெஸ் (sharpness). ஒரு இம்மியளவு ஷட்டர் வேகம் முன்னே பின்னே அமைந்தாலும், படத்தின் துல்லியம் போய், ஒரு blurness அமைந்துவிடும்.
மிக முக்கியமாக, க்ளோஸ்-அப்பில் எடுக்கும் படங்களுக்கு, இந்த துல்லியம் மிக அவசியம். இல்லைன்னா, படத்தின் வசீகரம் குறந்து விடும்.

மனிதர்களை/மிருகங்கள்/ப்றவைகளை க்ளோஸ்-அப்பும் போது, அவர்களின், கண்ணை ஃபோக்கஸ் செய்து, துல்லியமாய் காட்ட வேண்டும். இல்லைன்னா, அந்தப் படம் எடுபடாமல் போக வாய்ப்பிருக்கிறது.
அதே போல், மற்ற விஷயங்களை எடுக்கும்போது, பார்ப்பவரின் கவனம் எங்கு ப்ரதானமாய் விழ வேண்டுமோ, அந்த இடம், ஃபோக்கஸில் துல்லியமாய் அமைய வேண்டும். இல்லைன்னா, படங்கள் சற்றே பிசு பிசுத்துப் போய் விடும்.

சிகப்புக்கு வந்த பலப் படங்களில், இந்த துல்லியமின்மை காணக் கிட்டியது.

துல்லியம், படத்தின் தலைப்பு, எடுத்தவரின் உழைப்பு, இஸ்க்கும் தன்மை, போன்ற வடிகட்டிகளை பயன் படுத்தி, என்னைக் கவர்ந்த மூன்று.

மூன்றாம் இடத்தில்:
kadalanban

துல்லியப் பரச்சனை லேசா இருக்கு. பழத்தின் மேல், 'பளிச்' காணும் (பெருசாக்கிப் பாத்தா). இலையின் மேல் ஃபோக்கஸா? (இல்ல, என் கண்ணு ஃப்யூஸ் போகுதான்னு செக் பண்ணவா?)

இரண்டாம் இடத்தில்:
அமல்

இதிலும் கூட சற்றே துல்லியம் குறைவாத்தான் இருக்கு (கண்டிப்பா ஐ டாக்டரை பாக்கணுமோ?)

முதல் இடத்தில், பளிச்னு நிக்கற படம்
Sathiya

"அப்படியே சாப்பிடலாம்"னு விளம்பரம் கொடுக்கக் கூடிய அளவுக்கு, பளிச்னு க்ளிக்கிய சத்யாவுக்கு வாழ்த்துக்கள்.

சிறப்பு கவனம் பெற்றவை:
sivabaraneedharanன்

ரொம்ப ஒவர் contrast ஆகி, ஒரு செயற்கைத்தனம் வந்துடுச்சு. ஏங்கிளும், கை கொடுக்கலை. கொஞ்சம் கூட பின்னாடி வந்து க்ளிக்கியிருந்திருக்கலாம்.. ?

அனைவருக்கும் நன்றீஸ்.

அடுத்த மாதம் சந்திப்போம். தொடர்ந்து கலக்குங்க.

14 comments:

  1. Congrats!!!!.................Nice selections thanks to PIT..............

    ReplyDelete
  2. வழக்கம் போல் கலக்கல்

    //முதல் இடத்தில், பளிச்னு நிக்கற படம்
    Sathiya//

    பேசாம அவரை தூக்கி பிட் டீம்ல போட்டுடுங்க சர்!

    ரொம்ப டஃப் கொடுக்குறாரு :))

    ReplyDelete
  3. வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. வெற்றி பெற்ற மூவருக்கும் இனிய பாராட்டுகள்.

    ஸ்ட்ராபரீஸ் தான் இனி சிகப்பழகின் ராணியா:-)))))

    அருமைகளைத் தேர்ந்தெடுத்த பிட் குழுவினருக்கு நன்றி.

    ReplyDelete
  5. சிகப்பு என்றதும் ஸ்டாரபெர்ரி பக்கம் கண்களைத் திருப்பி முதலிடம் வந்த மூவருக்கும் வாழ்த்துக்கள்.

    சிறப்புக் கவனம் பெற்ற சிவபரணிதரனுக்கும் பாராட்டுக்கள்!

    ReplyDelete
  6. வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  7. என் படம் முதல் இடமா? எதிர் பார்க்கவே இல்லை! நன்றிஸ்!

    நானும் அமல் மாதிரி கருப்பு பின்னணியில எடுத்து பார்த்தேன்(http://www.flickr.com/photos/snarayanank/5613405798/) ஆனால் சரியா வரல.நீங்க நல்லா எடுத்து இருக்கீங்க அமல்!

    Kadalanban, அமல் மற்றும் சிவபரணிதரனுக்கும் எனது வாழ்த்துக்கள்!!!

    எனக்கு எக்ஸ்ட்ரா பில்ட்-அப் கொடுத்த ஆயில்யனுக்கும் மிக்க நன்றி:)

    ReplyDelete
  8. Wow...all the Strawberries are good...Congrats to all !!

    ReplyDelete
  9. வெற்றி மற்றும் சிறப்பு கவனம் பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்... :))

    ReplyDelete
  10. கடல் அன்பன்May 3, 2011 at 8:59 PM

    மிக்க நன்றி நண்பர்களே!

    ReplyDelete
  11. வெற்றி படங்கள் - II -ல இப்பெல்லாம் வெற்றி பெரும் படங்களை சேர்ப்பதில்லையா ??? அங்க recent-ஆ update ஆகாம இருக்கு :-) உங்கள் கவனத்திற்க்கு :-)

    நன்றி...

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff