Monday, June 4, 2012

ஜூன் 2012 - புகைப்படப் போட்டி அறிவிப்பு

34 comments:
 
நண்பர்களே, வணக்கம்.

மே மாதப் போட்டிக்கு 'காற்று'ன்னு தலைப்பு தந்திருந்தோம். 'காற்றை' எல்லாம் எப்படிய்யா படம்புடிப்பாங்கன்னு யோசிக்கிட்டு இருந்த எனக்கு, வந்திருந்த படங்களைப் பார்த்ததும், மகிழ்ச்சியாய் இருந்தது.
ரொம்பவே வித்யாசமான சிந்தனையுடன், தலைப்புக்கு மிகச் சரியாய் படம் அனுப்பியிருந்தாங்க, அநேகம் பேரும்.
போட்டியை சிறப்பாய் நடத்தி, வெற்றிப் படங்களை தேர்வு செய்த சிறப்பு நடுவர், சத்தியா அவர்களுக்கு நன்றீஸ்.

ஜூன் மாதத்துக்கான தலைப்பை யோசிக்கும் போது, சுள்ளுனு அடிக்கும் வெயில் நினைவுக்கு வந்தது. ஆனா, வெளியில் வெயிலை பாத்து மண்டை காஞ்சு போயிருக்கும் அனைவருக்கும், பிக்காஸாவிலும் வெயிலைப் பாத்து மண்டை காய வைக்கணுமான்னு ஒரு கேள்வி எழுந்தது. சில்லுனு, மழை, தண்ணீர்னு எதையாவது வைக்க்லாம்னா, அதையெல்லாம் ஏற்கனவே வெச்சு முடிச்சாச்சு.

அக்னி வெயில் முடிந்து, பள்ளிக் கூடங்கள் ஆரம்பித்தன என்ற செய்தி கண்ணில் பட்டது. பள்ளிக்கூட மணி அடிச்சதும், ஹோன்னு கத்திக்கிட்டு வீட்டை நோக்கி ஓடிச் செல்லும் குதூகலம் நினைவுக்கு வந்தது.சரி, அதைச் சார்ந்து எத்தையாவது வைப்போம்னு முடிவு பண்ணி, 'சீருடை'ன்னு வைக்கலாம்னு மனசு சொல்லிச்சு. ஆனா, ஒரே கலர் சொக்கா போட்ட பயலுவ படம் மட்டுமே வந்தா போட்டி களை கட்டாது. அதனால, தலைப்பை 'சீர்'னு வைக்கலாம்னு முடிவு.

ஸோ, ஜூன் மாதத்துக்கான தலைப்பு: சீர்/Uniformity
விதிமுறைகள் இங்கே
படம் வந்து சேர வேண்டிய கடைசி தேதி 20-06-2012


கீழே உள்ள மாதிரி 'சீரான படங்களை' எல்லாம் போட்டிக்கு அனுப்பலாம்..
சில உதாரணங்கள்.
- பள்ளிச் சிறார்கள் பலர், 'சீரு'டையில்
- வேலைக்குச் செல்லும் மக்கள், 'சீரு'டையில்
- பார்க்கிங் ஸ்டாண்டில் 'சீரா'க நிறுத்தப்ப்ட்டிருக்கும், ஒரே நிற டாக்ஸி வண்டிகள், அரசுப் பேருந்துகள், etc..
- பலசரக்கு கடைகளில், சீராக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் மசாலா டப்பாக்கள்
- தள்ளு வண்டியில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் காய்கறி
- அலுவலக 'க்யூப்', நாற்காலிகள்/மேசைகள்
- வரிசையான சாலை மரங்கள்..


AN&


கருவாயன்

சர்வேசன்:

Ramalakshmi Rajan


AN&

Ramalakshmi Rajan

Ramalakshmi Rajan

Anton Cruz


ஜமாய்ங்க!
***கவனத்திற்கு: அனுப்பும் படத்தின் கோப்புப் பெயர்(file name) மட்டுமின்றி, மின்னஞ்சலின் சப்ஜெக்டிலும் கண்டிப்பாக உங்கள் பெயர் இருக்க வேண்டும். ஒவ்வொரு போட்டியின் போதும் ஒரு சிலர் இதை செய்யத் தவறி விடுவதால் ‘யார் படம்?’ எனும் கேள்வி எழுகிறது. விதிமுறையைக் கவனமாகப் பின்பற்றக் கேட்டுக் கொள்கிறோம்.
***

34 comments:

 1. photos.in.tamil@gmail.com .
  not working i couldnt CC my entry to june month competition please suggest

  ReplyDelete
 2. I participated with a varisai of beads.....

  ReplyDelete
 3. I bought new DSLR Nikon D5100. I am started to take photos. I uploaded one photo for June competition. If anything wrong, please help to explain. Thanks.

  ReplyDelete
 4. //போட்டியை சிறப்பாய் நடத்தி, வெற்றிப் படங்களை தேர்வு செய்த சிறப்பு நடுவர், சத்தியா அவர்களுக்கு நன்றீஸ்.//
  நன்றி சர்வேசன்:)

  நல்ல தலைப்பு, உதாரண படங்கள் அருமை. இந்த வாட்டி எப்படியும் ஒரு நூறு படமாவது சீரா வர போகுது:)

  ReplyDelete
 5. this is sarawanan, i too sent a photo for june contest

  ReplyDelete
 6. பள்ளிச் சிறார்கள் பலர், 'சீரு'டையில்
  - வேலைக்குச் செல்லும் மக்கள், 'சீரு'டையில்
  - பார்க்கிங் ஸ்டாண்டில் 'சீரா'க நிறுத்தப்ப்ட்டிருக்கும், ஒரே நிற டாக்ஸி வண்டிகள், அரசுப் பேருந்துகள், etc..
  - பலசரக்கு கடைகளில், சீராக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் மசாலா டப்பாக்கள்
  - தள்ளு வண்டியில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் காய்கறி
  - அலுவலக 'க்யூப்', நாற்காலிகள்/மேசைகள்
  - வரிசையான சாலை மரங்கள்.. If you give suggestion like this how people think creatively....it will minimisethe thought....please give one or two examples....Thanks.

  ReplyDelete
 7. i sent myphoto to contest. sathishkumar.jpg

  ReplyDelete
 8. அலாய்ஸ்,

  தேர்ந்தவர்களுக்கு நடுவே ஆரம்ப நிலையில் இருப்பவர்களும் ஆர்வத்துடன் கலந்து கொள்கிற இப்போட்டிகளில் அவர்களை வழிநடத்த இப்படியாக உதாரணங்கள் கொடுப்பது வழக்கமான ஒன்றே. கொடுக்கும் உதாரணங்களை விட பலமடங்கு கிரியேட்டிவிட்டி காட்டி பிரமிக்க வைப்பார்கள் PiT குடும்பத்தினர் என்பதைத் தொடர்ந்து போட்டி ஆல்பங்களைப் பார்த்து வந்திருப்பீர்களானால் புரியும்....

  thanks for your feedback. hope you were able to submit your contest pic.

  ReplyDelete
 9. I have a doubt. Is uniformity of the object enough? (Eg: Chain in john danushan's photo in this month contest album) or should focus also be uniformity? (Eg: stone balls in asj@loys2012's photo in this month contest album).

  ReplyDelete
 10. ஜூன் மாதத்துக்கான படம் அனுப்பியுன். willi'G.jpg.

  ReplyDelete
 11. ஜூன் மாதப் போட்டிக்கு எனது படத்தையும் அனுப்பியுள்ளேன்..

  Sen.jpg

  ReplyDelete
 12. /I have a doubt. Is uniformity of the object enough? or should focus also be uniformity? /

  True, that you need to give more depth of field to make sure the concept is made clear. but again, there is no limit to the creativity.

  ReplyDelete
 13. I have sent my picture to the 'June 2012' competition.My file name is "Gunasundari.jpg"
  (the picture with my nickname 'Gunathi').Thanks PIT.

  ReplyDelete
 14. I have sent my picture to the 'June 2012' competition.The file named as "Gunasundari.jpg" contain picture with my nickname 'Gunathi'.Thanks PIT.

  ReplyDelete
 15. I have sent my picture to the 'June 2012' competition.The file named as "Gunasundari.jpg" contain picture with my nickname 'Gunathi'. Thanks PiT.

  ReplyDelete
 16. I have sent chitra.jpg for the competition

  ReplyDelete
 17. I have sent prakasam.jpg for this month's competition

  ReplyDelete
 18. pls verify if your pics are here

  https://picasaweb.google.com/111715139948564514448/June2012

  thanks for the participation. last day to submit, is today.

  ReplyDelete
 19. Have sent my photo (Vijee.jpg) for this month's contest. Thanks.

  ReplyDelete
 20. ஜூன் மாதப் போட்டிக்கு படம் (Vimal.Jpg) அனுப்பியுள்ளேன்.

  ReplyDelete
 21. போட்டிக்கான என்னுடைய படத்தினை ஜூன் 20 அன்று அனுப்பினேன். ஆனால் இதுவரை படம் போட்டிக்கு வைக்கப்படவில்லை

  ReplyDelete
 22. தமிழ் வாசகன்June 21, 2012 at 5:37 PM

  போட்டிக்கு என்னுடைய படத்தினை ஜுன் 20 அன்று அனுப்பி வைத்தேன் ஆனால் இதுவரை போட்டிக்கு எனது படம் வைக்கப்படவில்லை.

  ReplyDelete
 23. my photo (Vimal.jpg)which i sent yesterday around 11 PM is not added in the picasa web album.

  ReplyDelete
 24. My photo (Vimal.jpg)which i sent at 11.05 Pm (IST)yesterday has not been added to Picasa Web Album.

  ReplyDelete
 25. My photo has been added to the Album. Thanks.

  ReplyDelete
 26. இதுவரை வந்த படங்கள் யாவும் சேர்க்கப்பட்டு விட்டன. தமிழ் வாசகன், உங்கள் படமும்.

  ReplyDelete
 27. ENNODA PHOTO FIRST 10 PLACE LA VARALA ENA REASONKAGA ENNODA PHOTO REJECT PANEENGA NU SONA ENGALA BEGINNERS KU HELP FULLA IRUKKUM PLS. BY HASAN

  ReplyDelete
 28. FFFF - Please give the link of your photo and we will try updating our comments directly there.

  thanks

  ReplyDelete
 29. Hasan,

  போட்டியில் பங்கு பெற்றதர்க்கு நன்றி.
  உங்க படம் தலைப்புக்கு ஏற்றார் போல் இருந்தது. ஆனால், படத்தில் சில விஷயங்கள், கண்களைக் கவரும் படி அமையவில்லை.

  1) exposure கொஞ்சம் அதிகமாயிடுச்சு. கத்திரிக்காய் கீழிருக்கும் வெள்ளை பேப்பர் விரிப்பு, வெளிறிப் போய் கண்னை உருத்துகிறது.
  2) கேமரா ஃப்ளாஷோ, அதீதமான வெயிலோ, கத்திரிக்காயில் வெள்ளையாய் பிரதிபலித்து, ஈர்ப்பை குறைக்கிறது.
  3) பின்னணியில் இருக்கும் ஸ்கூட்டர், ஆரஞ்சு, கேட்டு இதெல்லாம் கூட அழகைக் கெடுக்கிறது.
  4) தலைப்புக்கு பொறுத்தமாய் இருந்தாலும், படம் முழுக்க ஒரே நிறத்தில் கத்திரிக்காய் ம்ழுக்க முழுக்க இருப்பது, சற்று 'dry'ஆக இருப்பதும் ஒரு காரணமாய் இருக்கலாம், வசீகரம் குறைந்ததர்க்கு.
  5) பிற்சேர்க்கை எதுவும் பண்ண முயற்சிக்கலையோ? மேலே சொன்ன சில விஷயங்கள், பிற்சேர்க்கை மூலம், ஓரளவுக்கு சரி செய்ய முடியும்..

  அடுத்த மாதம் சந்திப்போம். தொடர்ந்து முயலுங்கள். நன்றி.

  https://picasaweb.google.com/111715139948564514448/June2012#5750843460187714674

  ReplyDelete
 30. Hasan,

  Looked into your photo ( from Surveysan Link )

  - I am ready to comment on it. But Lemme tell you i am brutal straight forward on my comments. Might hurt some time.

  ReplyDelete
 31. @ Hasan,

  தங்கள் படத்தில் என்ன குறை, திருத்திக் கொள்கிறேன் எனக் கேட்பதில் தவறில்லை ஹஸன். ஆனால், ஏன் ஒதுக்கினீர்கள் எனக் கேட்கும் முன் போட்டிக்கு வந்திருக்கும் பிற மற்றும் தேர்வான படங்களை நன்கு பாருங்கள். அவற்றிலிருந்து கற்றுக் கொள்ள எவ்வளவு இருக்கிறதெனக் கவனியுங்கள். ஒவ்வொரு போட்டியையும் ஒரு work shop ஆக, பயிற்சிக் களமாக நினைப்பீர்களானால், நிச்சயம் அது உங்கள் திறனை மேம்படுத்திக் கொள்ள உதவும்.

  தொடர்ந்து பங்கேற்று வாருங்கள். வாழ்த்துகள்!

  ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff