Sunday, July 28, 2013

இரு படங்களை இணைக்க

9 comments:
 
சில நேரங்களில் சிலப் பல மனிதர்களுக்கு, இம்மாதிரி தேவைகள் ஏற்படும். அதாகப்பட்டது, இரண்டு புகைப்படங்களை, ஒன்றாய் இணைத்து, ஒரே படமாய் மாற்ற வேண்டிய அவா. ***

**அப்படிப்பட்ட அவா சமீபத்தில் எனக்கு ஏற்பட்டது. கீழே உள்ள இரண்டு படங்களை இணைக்க வேண்டிய கட்டாயம். Gimpல் இதை 'சுலபமாய்' செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.




முதல் பட பாப்பாவை இடது மூலையிலும், இரண்டாம் பட பாப்பாவை வலது மூலையிலும் வருமாறு செய்ய ஆயத்தமானேன்.

முதல் படத்தை, Gimpல் திறந்து,  Image->Transform->Flip Horizontally என்று செய்து கொண்டதும், பாப்பா இடது மூலைக்கு சென்று விட்டான். இப்படி.

அடுத்ததாக, இந்தப் படத்தின் அளவை பெரிது படுத்தி, வலப்பக்கம், இரண்டாம் படத்தை சொருக இடம் ஏற்படுத்தணும்.
image->canvas size தெரிவு செய்து, Widthஐ, இரண்டு மடங்காக அதிகரித்துக் கொள்ளவும். படத்தின் வலப்பக்கம் இப்பொழுது, ஒரு வெற்றிடம் வந்துவிடும்.

இப்பொழுது, இரன்டாம் படத்தை file->open மூலமாய் திறந்து, Select->All தெரிவு செய்து, Ctrl+C செய்தால், அந்தப் படம் காப்பி ஆகிவிடும். (or drag&drop 2nd pic into the 1st pic, and move)

முதல் படத்துக்குச் சென்று, ctrl+v செய்து, tools->transform tools->Move தெரிவு செய்து, paste செய்த படத்தை, வலப்பக்கம் நகர்த்திக் கொண்டால், இப்படி ஒரு படம் கிட்டும்.


கிட்டத்தட்ட வேலை முடிஞ்ச மாதிரி. ஆனா, படத்தின் நடுவில், இரண்டு வெவ்வேறான படம் என்பதை காட்டிக் கொடுத்து விடும் அளவுக்கு, அந்த 'ஒட்டு' கோடு தெரியும்.

image->flatten image செய்து கொள்ளவும்.

அப்பாலிக்கா, நடுவில் இருக்கும் ஒட்டு கோடு மட்டும், tools->Selection->Rectangular select மூலம், குட்டியாக ஒரு கட்டம் கட்டவும்.  அந்த நடுப் பக்கத்த தெரிவு செய்ததும், Filter->Blur->Gaussian Blur மூலமாய், சற்று மங்கலாக்கினால், ஒட்டு பட்டது, பெரிய அளவுக்கு தெரியாமல், படம் இப்படி ஆகிவிடும்.


இப்படி நீட்டி முழக்கி செய்யாமல், சடக்கென்று செய்ய, 'stitch' plug-inகளும் gimpல் இருக்கிறது. கூகிளினால் கிட்டும். விக்கியார் இதையும் விட்டு வைக்காமல், ஒட்டுதலின் பின்னணியை விளக்கியுள்ளார் இங்கே

1) open pic1
2) flip horizontally, as desired
3) increase canvas size to accommodate pic2
4) open pic2 and ctrl+c to copy
5) paste into pic1
6) Move and adjust as desired
7) flatten image
8) select the middle section
9) blur the middle section
10) save new image

இதை விட சுலப வழி தெரிந்தவர்கள், பின்னூட்டத்தில் தெரிவித்தால், உதவும்.

நன்றீஸ்.

-சர்வேசன்

9 comments:

  1. முயற்சிக்கு வாழ்த்துக்கள்... எளிதான வழியும் உண்டு...

    ReplyDelete
  2. உங்கள் தளம் .in என்று முடிவதால் தமிழ்மணம் இணைப்பதிலும், ஓட்டு அளிப்பதிலும் சில மாற்றங்கள் html-ல் செய்ய வேண்டும்... தொடர்பு கொள்ளவும்... dindiguldhanabalan@yahoo.com நன்றி...

    ReplyDelete
  3. gimp.... இதுவரை பயன்படுத்தியதில்லை..... பயன்படுத்திப் பார்க்க வேண்டும்.....

    ReplyDelete
  4. அதே பின்புலம் இருக்கும் படங்கள் என்பதால் இந்த மாதிரி செய்யலாம். மற்றவற்றில் தேவையான படத்தை மட்டும் தேர்ந்தெடுத்து மற்றதில் ஒட்டவேண்டி வரும்.

    ReplyDelete
  5. http://photography-in-tamil.blogspot.in/2013/07/blog-post.html இடுகையின் பின்னூட்டத்தில் நான் எழுதியிருந்தது - IrfanView என்ற விலையற்ற மென்பொருளில் உள்ள Image -> Create Panorama Image என்ற விருப்பத்தைப் பயன்படுத்தி இரு புகைப்படங்களை ஒன்றாக இணைத்து அனுப்பியிருக்கிறேன்.
    என்றென்றும் அன்புடன்
    பாலராஜன்கீதா

    ReplyDelete
  6. gimp பயன்படுத்தியதில்லை....
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. முதல் படத்தை ஃப்ளிப் செய்து அப்படியே வைத்துக்கொண்டு இரண்டாவது படத்திலிருக்கும் பாப்பாவை மட்டும் கத்தரிக்கோல் கொண்டு வெட்டி ஒட்டலாம். கிம்பைப் பயன்படுத்தி நான் இந்த முறையில் செய்த படம் இது..

    http://amaithichaaral.blogspot.com/2010/12/blog-post_17.html

    சூரியன் வேறு படம், தன்னையே செதுக்கிக் கொள்ளும் மனிதம் வேறு படம். மனிதனை ஃப்ளிஃப் செய்தபின், இரண்டையும் இணைத்ததில் கிடைத்தது இது.

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff