வணக்கம்.
பிட்டில் ஏற்கனெவே புகைப்படக்கருவியில் Copyright Info சேர்ப்பது எப்படி என ஒரு கட்டுரையை நான் எழுதியிருந்தேன். அதனை படித்த வாசக அன்பர்கள்,Point&Shoot கேமராக்களில் எடுக்கப்படும் படங்களுக்கும் நம்முடைய Copyright Infoவை சேர்க்க இயலுமா என என்னிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். எனவே போட்டோஷாப் கொண்டு எவ்வாறு உங்களது Copyright Info வை சேர்ப்பது என பார்க்கலாம்.
பிட்டில் ஏற்கனெவே புகைப்படக்கருவியில் Copyright Info சேர்ப்பது எப்படி என ஒரு கட்டுரையை நான் எழுதியிருந்தேன். அதனை படித்த வாசக அன்பர்கள்,Point&Shoot கேமராக்களில் எடுக்கப்படும் படங்களுக்கும் நம்முடைய Copyright Infoவை சேர்க்க இயலுமா என என்னிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். எனவே போட்டோஷாப் கொண்டு எவ்வாறு உங்களது Copyright Info வை சேர்ப்பது என பார்க்கலாம்.
இது Point&Shoot, Prosumer, செல்போன் கேமராக்களில் எடுக்கப்படும் படங்கள் மட்டுமின்றி, Graphic
Designers போட்டோஷாப்பில்
உருவாக்கும் கிராபிக்ஸ் படங்களுக்கும் Copyright Info சேர்த்துக்கொள்ளலாம்.
கீழேயுள்ள
படம்,என்னுடைய Canon கருவியிலேயே Embed
செய்யப்பட்ட Copyright Info இதனை நான் போட்டோஷாப்
Exif Viewerரில் பார்க்கும் பொழுது என்னுடைய படத்தில்
என்னுடைய பெயரை என்னுடைய கேமராவே
எழுதிவிட்டது.
ஆனால் கீழேயுள்ள இந்த படமானது என்னுடைய
Panasonic FZ-38 Prosumer வகையை
சேர்ந்தது.இந்த படத்தை நான்
போட்டோஷாப் Exif Viewerரில் பார்கிறேன் இங்கு என்னுடைய பெயரோ
Copyright Info வோ தெரியவில்லை.
சரி இப்போது இதனை மேனுவலாக
தயாரிக்க இருக்கிறோம்.
முதலில்
போட்டோஷாப்பை இயக்குங்கள்.அதில் File>New சென்று ஏதாவது ஒரு அளவில்
ஒரு டாக்குமென்டை உருவாக்கவும்.(1000X1000)
இப்போது
Window>Actions என்பதை
தேர்வு செய்யவும்.
இப்போது
உங்களது action pallette
ஆனது போட்டோஷாப் லேயர் பேனலில் வரும்.இனி Action Windowவில் Create
New Action என்பதை கிளிக் செய்யவும்.
இப்போது
தேன்றும் விண்டோவில் ஒரு புதிய பெயரை
கொடுத்துக்கொள்ளவும்.
இனி போட்டோஷாப்பில்,File>File
Info வை அழுத்தவும்.
இப்போது
தோன்றும் விண்டோவில் நான் கீழே காட்டியுள்ளபடி
Description டேபை தேர்ந்தெடுக்கவும்.
இப்போது
Copyright Status என்பது Description டேபில்
Unknown என்று இருக்கிறதல்லவா? அதனை
கிளிக் செய்து Copyrighted என
மாற்றவும்.பின்னர் Copyright Notice என்பதில்
உங்களது பெயரை Copyright Symbolலுடன் தட்டச்சு செய்துகொள்ளவும்.Copyright Info URL இல் உங்களது இணையதள
முகவரியை கொடுக்கவும்.கடைசியாக Author என்பதில் உங்களது பெயரையும் தட்டச்சு
செய்துகொண்டு கடைசியாக OK செய்யவும்.
இப்போது
Action டேபில் Stop பட்டனை அழுத்தவும்,இனி,உங்களது Copyright
Info வானது Action ஆக சேமிக்கப்பட்டிருக்கும்.
இனி, நீங்கள் Copyright செய்ய
விரும்பும் படத்தை திறந்துகொள்ளுங்கள்.இப்போது
Action பேனலுக்கு சென்று நீங்கள் உருவாக்கிய
Copyright Actionனை தேர்வுசெய்துகொண்டு Play பட்டனை அழுத்தவும்.உங்களது Copyright Infoவானது Embed செய்யப்பட்டிருக்கும்.
பின்னர் File>File
Info சென்று சோதித்துக்கொள்ளுங்கள்.
பின்னர்
File>Save அல்லது Save
As என்பதை தேர்ந்தெடுத்து,உங்களது படத்தை சேமித்துக்கொள்ளுங்கள்.
இனி Copyright Info சேர்க்க விரும்பும் படங்களை
போட்டோஷாப்பில் திறந்துகொண்டு நாம் உருவாக்கிய இந்த
Action ஐ Play செய்துகொண்டால் போதும்.
உங்களது
படத்தில் Copyright Info சேர்க்கப்பட்டிருக்கும்.
இவ்வாறாக
Copyright Info சேர்க்கப்பட்டதும்,உங்களது படத்தில் Copyright
Symbol சேர்க்கப்பட்டதைப் பாருங்கள்.
Copyright
Info சேர்க்கப்பட்டு
பின்னர் என்னுடைய Flickr Streamமில் பதிவேற்றம்
செய்யப்பட்ட படத்தை பாருங்கள்,நாம்
போட்டோஷாப்பில் Embed செய்த தகவல்கள்
பிளிக்கரில் Exif Data வில்தெரிவதைக் காணலாம்.
மீண்டும் சந்திப்போம்:).
***
***
No comments:
Post a Comment
பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி