Sunday, August 23, 2015

இந்த வாரப் படம் - அதிகாலைப் பனியில் ஆடுகளோடு மேய்ப்பன்

1 comment:
 
லகளாவிய அளவில் புகைப்பட ஆர்வலர்கள் தங்கள் படங்களைப் பகிரவும் சேமிக்கவும் பயன்படுத்தி வருகிற தளம் FLICKR. நமது PiT வாசகர்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகவும் ஒருவர் படங்களுக்கு மற்றவர் கருத்துகள் இட்டு ஆலோசனைகளைப் பரிமாறிக் கொள்ளவுமென 2007_ஆம் ஆண்டில் தொடங்கப் பட்டதே PiT Group Pool. [வரலாறு முக்கியமாயிற்றே :)!]. 2010_ல் சர்வேசன் இந்த க்ரூப்பை இங்கே அறிமுகம் செய்து ஃப்ளிக்கரில் கணக்கு வைத்திருக்கும் பிட் வாசகர்களை அதில் படங்களைப் பகிர அழைப்பு விடுத்தார். அத்தோடு சமீபமாக க்ரூப்பில் இணைக்கப்பட்ட படங்களிலிருந்து இந்த வாரப் படம் என ஒன்றைத் தேர்ந்தெடுத்து ஞாயிற்றுக் கிழமைகளில் ஒரு பதிவாக PiT-ல் இடம் பெறச் செய்தார். ஒவ்வொரு மாதமும் ஒரு உறுப்பினர் என்ற ரீதியில் நடுவராக இயங்கி அறிவிப்பாகி வந்த நடைமுறை, உறுப்பினர்களுக்கு இருக்கும் வேலைப் பளுவினால் தொடர்ந்து செயல்படுத்த முடியாது போனது.

அந்த நடைமுறையை மீண்டும் PiT-ல் செயல்படுத்த உள்ளோம். குறிப்பாகப் புதிதாகப் படம் எடுக்கிறவர்களுக்கு ஊக்கம் தரக் கூடிய ஒன்றாக அமையும் என நம்புகிறோம்.

ஆர்வமுள்ளவர்கள் இங்கே சென்று கணக்கை உருவாக்கிக் கொள்ளுங்கள். இங்கே சென்று பிட் க்ரூப்பில் இணைந்திடுங்கள். ஒரு நாளைக்கு இரண்டு படங்கள் மட்டுமே க்ரூப்பில் சேர்க்கலாம். பாதுகாப்புக் காரணங்களுக்காகப் பலரும் தங்கள் படங்களை டவுன்லோட் செய்திடும் வசதியை நிறுத்தி வைத்திருக்கிறார்கள். இது புரிதலுக்குரியதே. தேர்வாகும் படத்தை எடுத்தவர் தன் பக்கத்தில் downloading disable செய்திருந்தால் அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பப்படும். நேரமிருந்து அவர்கள் படத்தை photos.in.tamil@gmail.com மின்னஞ்சல் செய்தாலோ அல்லது  அவர்களது அனுமதியின் பேரில் பிரிண்ட் ஸ்க்ரீனோ இங்கு வெளியாகும். பதில் வராது போனால் வேறுபடங்கள் தேர்வு செய்யப்பட்டு விடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

தேர்வுகள் எதன் அடிப்படையில் இருக்கும் என்பது குறித்தும் சிறு விளக்கம்...

தேர்வாகும் படம், சில வேளைகளில் சிறந்த கலைஞர்களுடையதாகவும் இருக்கும். சில வேளைகளில் உற்சாகத்துடன் தொடர்ந்து படம் எடுத்துப் பழகும் புதியவர்களுடையதாகவும் இருக்கும். டெக்னிகலாக எவ்வளவு சிறப்பாக உள்ளது என்று மட்டுமே பாராமல், படத்தின் உள்ளடக்கம், உணர்வுகளைத் தொடும் விதம், காட்சி அமைப்புக்காக என மற்ற பல காரணங்களும் கணக்கில் கொள்ளப்படும். ‘இந்தத் தேர்வை விட அந்தப் படம் சிறந்ததில்லையா?’ என்பது போன்ற சிந்தனைகளைத் தவிர்த்து தேர்வாகும் படத்தில் இருந்து கற்றுக் கொள்ள என்ன இருக்கிறது என்பது நம் முதல் எண்ணமாக அமையுமேயானால் இந்த நடைமுறை எல்லோருக்கும் ஒரு சிறந்த அனுபவமாக அமையும். நான் சொல்வது சரிதானே:)?

அடுத்த சில மாதங்களுக்கு இந்த வாரப் படங்களைத் தேர்வு செய்து தர அன்புடன் முன் வந்திருக்கிறார் சிறந்த புகைப்படக் கலைஞரும், PiT Flickr Pool_ல் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து தன் படங்களைப் பகிர்ந்து வருகிறவருமான சரவணன் தண்டபாணி. இவரது ஃப்ளிக்கர் பக்கம் இங்கே. அவருக்கு PiT-ன் நன்றி. வேலைப் பளு அல்லது வெளியூர் பயணங்களால் அவரால் முடியாது போகும்போது மற்ற உறுப்பினர்கள் நடுவராகத் தேர்வு செய்வார்கள். அல்லது Guest ஆக வேறு அனுபவம் மிக்கக் கலைஞர்கள் உதவுவார்கள். தவிர்க்க முடியாமல் இடைவெளிகளும் நேரலாம். ஏன் வெளியாகவில்லை எனக் கேட்காமல் புரிதலுடன் அடுத்த ஞாயிறுக்குக் காத்திருப்பீர்கள் என நம்புகிறோம். முடிந்தவரை பெரிய இடைவெளி இல்லாமல் இதைக் கொண்டு செல்ல முயன்றிடுகிறோம், எப்போதும் போல உங்கள் அன்பான ஒத்துழைப்புடன்:).

இனி காணலாம் வாருங்கள்..

இந்த வாரப் படத்தை..

அதிகாலைப் பனியில் ஆடுகளோடு மேய்ப்பன்
by 
Sankalan Banik

தேர்வு: சரவணன் தண்டபாணி


வாழ்த்துகள் சன்கலன்! இவரது ஃப்ளிக்கர் பக்கம் இங்கே.
***


1 comment:

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff