Monday, August 10, 2015

ஆகஸ்ட் 2015 போட்டி அறிவிப்பு

14 comments:
 
அனைவருக்கும் வணக்கம், 

இம்மாதப் போட்டித் தலைப்பு: ஊர்வனவும் ஈரூடக வாழ்வனவும்

ஆமை, பாம்பு, முதலை, பல்லி, பல்லியோந்திகள், ஓணான், உடும்பு, டைனசோர் போன்றவை ஊர்வன (Reptile) என்ற விலங்கியல் வகுப்பில் அடங்கும் உயிரினங்களாகும். அதேபோல் தவளை, சாலமாண்டர், முதலை போன்றவை நிலத்திலும் நீரிலும் வழக்கூடியன. இவை நிலநீர் வாழிகள் அல்லது ஈரூடக வாழிகள் (Amphibian) என்ற விலங்கியல் வகுப்பில் அடங்கும் உயிரினங்களாகும். இவ்வாறு பல ஆயிரக்கணக்கான உயிரினங்கள் உள்ளன. அவற்றை சிறப்பாகப் படம்பிடித்து இம்மாதப் போட்டிக்கு அனுப்புங்கள். உயிருள்ள உயிரினங்கள் இப்போட்டிக்கு உகந்தன. டைனசோர் போன்றவற்றை உயிருடன் படம் பிடிக்க முடியாது என்பதால் அவற்றின் மொம்மை வடிவங்களும் உகந்தன. ஆயினும் உயிருள்ளவற்றுக்கே முன்னுரிமை. மொம்மையைப் படம் பிடிப்பது இலகு அல்லவா? உயிருள்ளவற்றை விஞ்சும் படங்கள் எடுத்தால் பார்க்கலாம்! 

எடுத்துக்காட்டுக்கு சில படங்கள் இங்கே:

#1

#2

#3

#4

வழமையான போட்டி விதிமுறைகள் இங்கே.

போட்டி அறிவிப்பு தாமதமாகியதால், இம்முறை படங்கள் வந்து சேரவேண்டிய கடைசித் தேதி 25 ஆகஸ்டு 2015
**


இதுவரை போட்டிக்கு வந்திருக்கும் படங்கள்: இங்கே 

14 comments:

  1. சிறு சந்தேகம்...எறும்பு, மண்புழு போன்றவற்றை எடுக்கலாமா...?

    ReplyDelete
    Replies
    1. இல்லை. எறும்பு ஹைமெனோப்ரா என்ற பூச்சி வகுப்பையும், மண்புழு ஒலிகோச்சடா என்ற புழு வகுப்பையும் சேர்ந்தது. விக்கிப்பீடியாவில் "List of reptiles", "List of amphibians" என்று தேடிப்பாருங்கள். ஊர்வன மற்றும் நிலநீர் வாழிகள் பலவற்றின் பட்டியல் கிடைக்கும்

      Delete
  2. அருமை. நான் வேடிக்கை மட்டும் பார்க்கணும்! எங்கூரில் இவை எதுவுமில்லை:-(

    சென்னை குழந்தைகள் பூங்கா போனபோது அருகில் இருந்த ரெப்டைல் பார்க் போனதில் எதாவது கிடைக்குமான்னு தேடறேன்.

    ReplyDelete
    Replies
    1. unga veedulla oru ballikudava illa nalla unga sulala kavanikkala neenga

      Delete
    2. அச்சச்சோ.... நெஜமாவே இங்கே பல்லி கிடையாது! இதைப் பற்றி ஒரு பதிவு முன்பு எழுதி இருக்கேன். நேரம் கிடைச்சால் பாருங்க.

      http://thulasidhalam.blogspot.com/2012/05/there-is-dragon-on-wall.html

      Delete
  3. போட்டியில் கலந்து கொள்ளப்போகும் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. போட்டியில் கலந்து கொள்ளப்போகும் அனைவருக்கும் வாழ்த்துகள்.
    nanathan jeykka povathu

    ReplyDelete
  5. நான் august மாதத்திற்கான photo அனுப்பினேன் அதை எப்படி பாா்பது frds...

    ReplyDelete
    Replies
    1. போட்டி ஆல்பத்திற்கான இணைப்பு பதிவின் இறுதியிலும், தளத்தின் வலப்பக்கம் மேல்பகுதியிலும் உள்ளது.

      போட்டி ஆல்பம் சில தினங்களுக்கு ஒருமுறையே அப்டேட் செய்யப்படும். தானாகப் படங்கள் இணையாது. நீங்கள் படத்தை இணைக்கும் போது இருந்த நிலையிலிருந்து ஆல்பம் அடுத்து அப்டேட் ஆகும் வரைக் காத்திருக்கவும். அதன் பின்னும் உங்கள் படம் ஆல்பத்தில் சேரவில்லை என்றால் மட்டும் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.

      Delete
  6. Morning send my photo but not visible in pit photography album , how to check it?pls tell me frds....

    ReplyDelete
  7. நான் அனுப்பிய
    august மாதத்திற்கான photo இன்னும் album ல் வரவில்லை ,photo என்ன ஆனது என்பதை எப்படி அறிய,photo pit photographyல் கிடைத்துவிட்டதா

    ReplyDelete
  8. இம்மாதத் தலைப்பே "ஊர்வன" ஆயிற்றே.. அதனால்தான் அனுப்பிய படங்கள் ஆல்பத்துக்கு மெதுவாக ஊர்ந்து வந்து கொண்டிருக்கின்றனவோ என்னவோ?! என் படம் உட்பட :-)))

    ReplyDelete
    Replies
    1. உங்கள் படம் ஆல்பத்தில் முன்னரே நடுவர் பார்வைக்கு இணைக்கப்பட்டு விட்டது. கடைசியாக வந்த இரண்டு படங்கள் பப்ளிக் வ்யூவுக்கு மாற்றப்படாமல் இருந்திருக்கின்றன. அதை சரி செய்தாயிற்று. நன்றி.

      எப்போதுமே முடிவுத் தேதிக்குப் பின் ஆல்பம் அப்டேட் ஆகும் போது யார் படமேனும் விட்டுப் போயிருந்தால் தெரிவிக்கலாம். சரி பார்க்க உதவியாக இருக்கும்.

      Delete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff