Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Monday, December 29, 2014

வணக்கம் பிட் மக்கா நலமா இன்றைய பிட் கட்டுரையானது tabletop புகைப்படக்கலைக்குத் தேவையான ஒரு Light tent ஐ  நாமாக உருவாக்கி அதில் படமெடுப்பது எப்படி என பார்க்க இருக்கிறோம் J !
கற்றது :


ஓரிரு வருடங்களுக்கு முன் நான் உறுப்பினராக இருக்கும் ஒரு பிரபல பிரெஞ்சு புகைப்படக்குழுவில் சாதாரண அட்டைப்பெட்டியை எப்படி light tentஆக‌ மாற்றி அதில் உணவுபொருட்களை flash உதவியுடன் படமெடுக்கலாம் என விளக்கியிருந்தனர்.

ஆனால் அப்போது என்னிடம் flash மற்றும்  flash trigger இல்லாததால் அதைப்பற்றி நான் யோசிக்கவில்லை, ஆனால் சமீபத்தில் என்னுடைய நண்பர் திரு.பாபுராஜ் அவர்கள் அவரது trigger ஐ என்னிடம் சோதனைக்காக அளித்திருந்தார், அதனை வைத்து சில portraitகளை சோதித்த பின்னர் எனக்குத் திடீரென இந்த Light tent ன் ஞாபகம் வந்தது, ஆனால் நமக்கு இந்த வெட்டிங்ஸ்,ஒட்டிங்ஸ் போன்றவைகளுக்கு எல்லாம் நேரம் கிடையாது என்று +1 படிக்கும் பக்கத்துவீட்டு பையன் மதன்குமாரை அழைத்து அவனிடம் கூறினேன், “அரையாண்டு  லீவுல‌ அசால்டா செஞ்சிடலாம் அண்ணா”னு சொன்னவன் சரியா அண்ணாச்சி கடையில இருந்து கொண்டு வந்த ஒரு அட்டை பாக்ஸை காட்டி இது “ஓகேவா” னு  கேட்டான் “டபுள் ஓகே” னு  சொன்னதும் வேலைல இறங்கிட்டான்.

அதாவது அட்டைப்பெட்டியின் அடிப்பகுதியை தவிர்த்து மற்ற பகுதிகளை வெட்டி எடுத்து அப்பகுதியை tissue பேப்பர் கொண்டு ஒட்டி கொடுத்துவிட்டான். tissue பேப்பருக்கு பதிலாக baking பேப்பரையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இந்த tissue பேப்பர் எனக்கு, எனது பிளாஷ் வெளிப்படுத்தும் harsh light ஐ  சாப்ட்லைட்டாக மாற்றித்தரும் diffuser ஆக‌ வேலைசெய்யும்.

கீழேயிருக்கும் படத்தை உங்கள் கண்கள் பார்த்தாலே போதும் கைகள் தானாக உருவாக்கிவிடும் என்பதால்Light tent உருவாக்குவது குறித்த விளக்கம் தேவையில்லை என்றே நினைக்கிறேன்.
© Nithi Clicks 2014

© Nithi Clicks 2014

ஒருவழியாக Light Tent தயாரகிவிட்டது,என்னைவிட ஆர்வமாக இருக்கிறான் மதன்குமார், “படங்கள் எடுத்து பார்த்திடலாமா அண்ணா” னு அன்றைய அவனது கிரிக்கெட் ஆட்டத்தை ரத்து செய்துவிட்டு என்னுடனே இருந்தான்.

என்னுடைய பிளாஷை நான் இங்கு flash triggerமூலமாக wireless ஆக fire செய்ய இருப்பதால் எனது பிளாஷை tripodல் பொருத்தி மேலிருந்து கீழாக வைக்கிறேன் (top angle) பார்க்க கீழேயுள்ள படங்கள்:

© Nithi Clicks 2014

© Nithi Clicks 2014
படம்பிடிக்க இருக்கும் பொருளின் முன்புலம் மற்றும் பின்புலம் எந்த நிறத்தில் வேண்டும் என்பதனை உறுதி செய்துகொள்ளுங்கள் பொதுவாக ஒன்று வெள்ளை அல்லது கருப்பு நிறம் இதுபோன்ற புகைப்படங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. எனவே இங்கு நான் மாணவர்கள் வரைபடங்களுக்கு பயன்படுத்தும் வெள்ளை நிற chart பேப்பரை எனது Light Tentல் விரித்து அதன் மீது என்னுடைய பொருளை வைக்கிறேன்.

நீங்கள் படம்பிடிக்க இருக்கும் பொருளின் பிரதிபலிப்பும் (reflection) உங்களுக்கு தேவையென்றால் கண்ணாடித்துண்டுகளைப் பயன்படுத்தி அதன்மீது பொருளை வைத்து படம்பிடிக்கலாம். உங்களின் Light Tentன் அளவை பொருத்து கண்ணாடிக்கடையில் கேட்டால் அவர்களே கண்ணாடித்துண்டை வெட்டிக்கொடுப்பார்கள்.

மேலும் ஒருவிஷயத்தை நான் உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்,அதாவது என்னுடைய Digitek flash ஆனது வெறும் 2000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் ஒரு மேனுவல் flash ஆகும்.இது உங்களது கேமரா செட்டிங்ஸ் உடன் synchronize ஆகாது எனவே எந்த அளவிற்கு flash, fire செய்யவேண்டும் என்பதனை உங்களது கேமரா செட்டிங்ஸை பொறுத்து தான் flashல் செட்செய்யவேண்டும்.

கேமரா,லென்ஸ்,செட்டிங்ஸ்:

இங்கு நான் எனது Canon 100D யுடன் Canon EF-50mm F1.8 II லென்ஸை பயன்படுத்துகிறேன், நான் F8,1/200,ISO100ல் படம்பிடிக்கிறேன், முதல் படத்தின் histogram ஐ வைத்தே ,  நீங்களே flash lightன் அளவை மேனுவலாக‌  அட்ஜெஸ்ட் செய்துகொள்வீர்கள், பொதுவாக flashகளின் துணையுடன் எடுக்கும் படங்களுக்கு உங்களது ஷட்டர் வேகம் 1/200 ஐ தாண்டக்கூடாது அதற்க்கு மேல் உங்களது ஷட்டர் வேகம் கேமராவோடு synchronizeஆகாது என்பதை நினைவில் நிறுத்திக்கொள்ளுங்கள், உங்களது அப்பச்சரின் அளவு நீங்கள் விரும்பும் depth of fieldஐ பொறுத்து அமைத்துக்கொள்ளுங்கள் J
சரி இனி தைரியமாக களத்தில் இறங்குவோம்.

பெற்றது:

முதல் படம் என்னுடைய குளிர்சாதன பெட்டியிலிருந்து எடுத்த தக்காளி பழங்களை எடுத்தேன்.
© Nithi Clicks 2014

அடுத்ததாக என்னோட favorite Danish Butter cookies :
© Nithi Clicks 2014
© Nithi Clicks 2014

பிறகு தோட்டத்தில் பறித்த சாமந்திப்பூ:
© Nithi Clicks 2014

கடைசியாக அம்மாவின் சில சமையலறை அயிட்டங்கள்:
© Nithi Clicks 2014
© Nithi Clicks 2014
மேலே பார்த்த படங்கள் அனைத்தும் இந்த Light tentல் எடுக்கப்பட்ட படங்களே பிற்சேர்க்கை என்று பெரிய அளவில் செய்யவில்லை வெறும் Levels adjustments ஐ கொண்டு கொஞ்சம் tone correction மட்டுமே செய்துகொண்டேன்.

அவ்வளவுதான் மக்கா மிக சுலபமாக செலவில்லாத Light Tent மூலமாக விலைகுறைந்த லென்ஸுடன்,சாதாரண மேனுவல் flash கொண்டு table top புகைப்படங்கள் எடுப்பது எப்படி என அறிந்துகொண்டீர்களா?

இந்தமுறையில் நீங்கள் ice cream parlor, restaurant, bakery, toy shop போன்றவற்றிற்கோ அல்லது சமையல் குறிப்பு போன்ற இணையதளங்களுக்கு இதுமாதிரி படங்களை எடுத்துக்கொடுத்து வருமானமும் ஈட்டிக்கொள்ளலாம்,சிறிய முதலீட்டில் பணம் சம்பாதிக்க ஏதுவாக இப்பதிவு உங்களில் ஒருவருக்காவது பயன்பெற்றால் அதுவே எனக்கும் எங்கள் “பிட்” தளத்திற்கு கிடைத்த வெற்றியாகும்.

மீண்டும் சந்திப்போம்
என்றும் அன்புடன்,
நித்தி ஆனந்த்

Sunday, April 6, 2014

இந்தக் கட்டுரை ஒரு நேயர் விருப்பம்.  அன்பர் அகமது சுபைர் அவர்கள் ஒருநாள் கேட்டார், “பறவைகளுக்கு 20 பாகம்... விலங்குகளுக்கு ஒரு பாகம் தானா???  இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன் உங்க கிட்டெ... :).” என்று.  ஆகவே பூச்சிகளைப் படம் பிடிப்பது பற்றி எழுதுகிறேன் இங்கு.

பூச்சிகள் உருவத்தில் மிகச் சிறியவை.  ஆகவே அவற்றைப் படம் பிடிக்க சிறிது சிரமப் பட வேண்டும்.  அந்நாட்களில் இப்போது இருப்பது போல ‘மேக்ரோ லென்ஸ்’ கள் கிடையாது.  ஆகவே பூச்சிகளைப் படம் பிடிக்க கேமிராவின் லென்ஸ் பூச்சியில் இருந்து ஒன்றிரண்டு அங்குல தூரத்தில் இருந்தால் தான் பூச்சியின் நுண்ணிய பரிமாணங்கள் தெரியும்.  ஆனால் கேமிராவின் லென்ஸோ ஒரு குறிப்பிட்ட தூரத்திகு மேல் இருந்து எடுத்தால் தான் படம் சரியாகத் தெரியும்.  அப்படி எடுத்தாலோ பூச்சி ஒரு புள்ளியாகத் தெரியும். ஆகவே நிலமையை சமாளித்திட பெல்லோஸ் ஸ்கோப் என்ற ஒரு கருவியின் உதவி தேவை.  துருத்தி போன்ற அக்கருவியில் உங்கள் கேமிராவின் லென்ஸைப் பொறுத்தி, ஒரு அங்குல தூரத்தில் இருந்து கூட படங்கள் பிடித்திடலாம்.



உங்கள் கேமிராவின் லென்ஸைக் கழற்றி எடுத்து அந்த இடத்தில் பெல்லோஸ் ஸ்கோப்பைப் பொறுத்தி, லென்ஸை அதில் பொறுத்திப் படம் பிடிக்க வேண்டும்.  அப்படிப் பிடித்த மூன்று படங்கள் இதோ:
(சிலந்தி முட்டைகளை தானே நூற்ற நூலால் சுற்றி பந்தாகச் செய்து தன்னுடனே சுமந்து செல்கிறது)
இந்த சிலந்தி தோட்டங்களில் தரையில் வாழ்ந்திடும் ஒன்று.  சுமார் 5 மில்லி மீட்டர் அளவில் இருக்கும் இது.  இந்தப் படம் ஒரு அங்குல தூரத்தில் இருந்து எடுக்கப் பட்ட்து.

சிலந்திக்கு மூன்று அல்லது நான்கு ஜோடிக் கண்கள் உண்டு, தூரத்துப் பார்வை, பரந்த பார்வை, கிட்டத்துப் பார்வை, தூரத்தினை அளந்திடும் வகை செய்ய முப்பரிமாணப் பார்வை உள்ள கண்கள் என்று.

(அன்று பிறந்த வண்ணாத்திப் பூச்சி)
இடையான் பூச்சிகளில் பல விதங்கள் உண்டு.  புல் வடிவில், இலை வடிவில், சருகு வடிவில், மலர் வடிவில் என்று.  ஆனால் அவை எல்லா வற்றிற்கும் சில பொதுக் குணங்கள் உண்டு.  அவை மாய்மாலம் (சுற்றுப் புறத்தோடு நிறத்தில் ஒன்றிடுதல்), தன்னைவிடப் பெரிய உயிரினங்களையும் பிடித்துத் தின்னல் என்று.  சில வகை இடையான்கள் கணவனோடு இன்பம் அனுபவித்துக் கொண்டிருக்கும் போதே கணவனின் தலையைக் கடித்துத் தின்று விடும்!  தலை இழந்து கணவன் துடிக்கும் போது மனைவிக்கு இன்பம் அதிகரிக்கிறது என்று ஒரு பூச்சி ஆராய்ச்சியாளர் சொல்லி இருக்கிறார்!!

(முன்னங் கால்களை மடித்து வைத்துக் கொண்டிருக்கும் குச்சி ரக
இடையான் பூச்சி)
இவ்வுலகில் லட்சக் கணக்கான பூச்சிகள் உள்ளன.  அவை ஒவ்வொன்றும் தனித் தன்மை வாய்ந்தவை, அவற்றைப் படம் பிடித்தல் ஒரு அருமையான பொழுது போக்கு.  அப்படிப் படம் பிடிக்கும் போது அவை பற்றி பல விஷயங்களையும் அறிந்திட வாய்ப்பு கிடைக்கும்.

(படங்கள் – நடராஜன் கல்பட்டு)
***

Legend Talks..
திரு கல்பட்டு நடராஜன்
-----------------------------------------------------------------------------------------------------------
தொடர்புடைய முந்தைய பதிவுகள்:


 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff