Sunday, July 22, 2012

புகைப்பட அனுபவங்கள் (8) - பெருமாளும் நானும்

4 comments:
 
இத் தொடரின் முதல் கட்டுரையில் திரு உபேந்த்ரா என்பவர் என்னை திரு டி.என்.ஏ. பெருமாள் என்பவருக்கு அறிமுகம் செய்து வைத்தார் என்று சொன்னேன்.

#1 டி.என்.ஏ.பெருமாள்பெருமாள் பறவைகள், விலங்குகளை படம் எடுப்பதில் நிபுணர். அவரை சந்தித்த முதல் நாளில் இருந்து அவர் எனக்குக் குருநாதரானார். அன்று முதல் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு பெருமாள், உபேந்த்ரா, நான் ஆக நாங்கள் முவரும் ஞாயிற்றுக் கிழமைகளிலும், விடுமுறை நாட்களிலும் காடு மேடுகளில் சுற்றித் திரிந்தோம் விலங்குகள், பறவைகள் இவற்றைப் படம் பிடித்திடும் நோக்கில்.

எனது அனுபவங்கள் பற்றி எழுது முன் பெருமாள் எடுத்த சில படங்களை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்:

# 2 பந்திபூர் சரணாலயத்தில் ஒரு புலி



# 3 பந்திபூர் சரணாலயத்தில் ஒரு காட்டு யானை



# 4 சிங்கம்

# 5 கோடுகள் போட்ட ஆந்தை

(இந்தப் படம் குறுக்கிடும் ஒளிக் கதிர்களால் இயக்கப் பட்ட கேமிரா கொண்டு எடுத்தது.)

பெருமாள் அதிகம் பேச மாட்டார். அவருடன் சுற்றியதில் பல விஷயங்கள் கற்றுக் கொண்டேன். அவரை சந்தித்திரா விட்டால் நான் பறவைகள் படங்கள் எதுவுமே எடுத்திருக்க முடியாது. பல பறவைகளைப் பற்றி அறிந்திருக்கவும் முடியாது.
பெருமாளின் கூற்றுப் படி, “ஒரு நல்ல படம் அலமாரி நிறைய உள்ள புத்தகங்களைக் காட்டிலும் சிறந்த விளக்கம் அளித்திடும் ஒரு பறவை அல்லது விலங்கு பற்றி.”

பறவைகளைப் படம் பிடிக்க விரும்புவோருக்கு பெருமாள் சொல்லும் அறிவுரைகள் பற்றி அறிய வேண்டுமா? படியுங்கள்:



Legend Talks..








திரு கல்பட்டு நடராஜன்



தொடர்புடைய முந்தைய பதிவுகள்:


4 comments:

  1. படங்கள் அனைத்தும் அருமை... நன்றி !

    ReplyDelete
  2. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/07/Tamil-photographers.html) சென்று பார்க்கவும். நன்றி !

    ReplyDelete
  3. i want to talk to Mr.Perumal
    can i have his number? pl

    Desingh
    9789042745

    ReplyDelete
  4. @ SmArt,

    உங்கள் அலைபேசி எண் திரு பெருமாள் அவர்களுக்குத் தெரிவிக்கப்படும்.

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff