Showing posts with label போட்டி அறிவிப்பு ஜனவரி 2013 photo contest pit photography in tamil. Show all posts
Showing posts with label போட்டி அறிவிப்பு ஜனவரி 2013 photo contest pit photography in tamil. Show all posts

Tuesday, January 1, 2013

PiT நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். PiTக்கு ஆதரவளித்து பங்களிப்பையும் அளிக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றீஸ்.

2012ல் உலகம் அழியவில்லை என்றாலும், நம்மைச் சுற்றி நிகழும் நிகழ்வுளைப் பார்த்தால், நாம் அழிவை நோக்கி மெல்ல மெல்ல சென்று கொண்டிருக்கிறோம் என்றே தோன்றுகிறது. இயற்கை வளங்களை அழிப்பதில் துவங்கி, சம மனிதனை மதிக்காத சூழ்நிலை வரை, நாம் வாழ்வை அணுகும் முறை சீர்கேட்டை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கிறது.

இயன்றவரை, 2013ல், நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும், சுற்றுச் சூழலுக்கும் பங்கம் இல்லாதவரை, நம் அனைவரின் வாழ்விலும் சிறு சிறு மாற்றம் உண்டாக்குமாறு   கேட்டுக் கொள்கிறேன்.

இனி, இந்த மாதத்தின் போட்டிக்கு போவோமா?

தலைப்பு: பிடித்ததில் பிடித்தது
அதாகப்பட்டது, உங்கள் கைவசம் உள்ள படங்களில், உங்களுக்கும் மெத்தப் பிடித்த படத்தை போட்டிக்கு அனுப்பலாம். கைவசம் இருப்பது திருப்திகரமாய் இல்லையானால் புதிதாய் பிடித்தும் அனுப்பலாம்.
இதுவரை PiT போட்டிகளுக்கு அனுப்பப்படாத படமாய் இருக்க வேண்டும்.

கடைசித் தேதி: ஜனவரி 20.
மற்ற விதிமுறைகள்: இங்கே

1) சர்வேசன் (பழனி 2 கோடைகானல்)
Palaru? (near Palani Hills)


2) Ramalakshmi
ALERT


3) An&
1+1+1


4) MQNaufal


5) Anton


==============

நீங்கள் அனுப்பும் பெரிய அளவுப் படங்களால் பிகாஸாவின் கொள்ளளவு அடிக்கடி நிரம்பி விடுகிறது. இதனால் பலரது போட்டிப்படங்கள் தானாக ஆல்பத்தில் சேர இயலாது போகிறது. இருபது பேர்களின் படங்கள் இடம்பெறக் கூடிய அளவை ஒருவரது படமே எடுத்துக் கொள்கிறது. இது தொடர்ந்தால் மூன்று மாதங்களுக்கொரு முறை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரியில் மாற்றம் கொண்டு வர வேண்டிய சூழல் ஏற்படும். பலர் கவனியாமல் பழைய முகவரிக்கே அனுப்ப நேரிடும்.

இந்தக் குளறுபடிகள் நேராமல் தவிர்க்க.. உங்கள் ஒத்துழைப்பு அவசியமாகிறது.

ஆரம்ப நிலையில் இருக்கும் சிலர் தவிர்த்து செய்யத் தெரிந்தவர்கள் சிரமம் பாராமல் அளவைக் குறைத்து அனுப்புங்கள். இதைப் போட்டி விதிமுறையிலும் தெரிவித்திருக்கிறோம். ஒரு வேண்டுகோளாகவே வலியுறுத்தியும் வருகிறோம்.

எப்படி அளவைக் குறைக்கலாம் என்பதையும் இந்தப் பதிவில் விளக்கியிருக்கிறோம்: http://photography-in-tamil.blogspot.in/2012/04/blog-post_15.html

கற்றுக் கொள்ளுங்கள். கற்றதை செயல்படுத்திப் பழகுங்கள். ஏனெனில், PiT போட்டிகள் உங்களை மெருகேற்றிக் கொள்ளவும் பல சர்வதேசப் போட்டிகளில் கலந்து கொள்ள உதவும் பயிற்சிக் களமாகவும் இருக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். அது போன்ற பெரிய போட்டிகளில் படத்தின் அளவு விதிமுறையில் குறிப்பிட்டபடி இருக்காவிட்டால் படங்கள் விலக்கப்பட்டு விடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

விதிமுறைகளைச் சரியாகப் பின்பற்றுவதை ஒருவழக்கமாகக் கொள்வது உங்களுக்கே பயன் தரும்.

அன்புடன்
PiT குழு.


==============
 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff