Showing posts with label Lightroom. Show all posts
Showing posts with label Lightroom. Show all posts

Monday, September 15, 2014

வணக்கம்.

இன்றைய நமது கட்டுரையில் நாம் விவாதிக்க இருப்பது படத்தின் நிறத்தை கூட்ட Vibrance_ அல்லது  Saturation_ஆ  என்பது குறித்தது, புகைப்படக் கலைஞர்கள் தங்கள் படத்திற்கு நிறங்களை கூட்ட போட்டோஷாப் அல்லது கிம்பிலோ நாடுவது Hue/Saturation தான் ஆனால் இக்கட்டுரையில் நான் குறிப்பிடப்போவது Vibrance குறித்தே, காரணம் நான் ஃபோட்டோஷாப்பில் இருக்கும் இந்த Hue/Saturation அவ்வளவாக பயன்படுத்துவது கிடையாது காரணம் இதனுடைய வெளியீடு மிகவும் அதிகமாக இருக்கும் ஒரு சிறு உதாரணம், கீழேயிருக்கும் படத்திற்கு நான் Hue/Saturation இல் 100 சதவீத மதிப்பை கொடுக்கிறேன்,வெளியீடை பாருங்கள்.படத்தின் அழகை கெடுத்து விட்டதை பாருங்கள்.


அதே படத்திற்கு நான் Vibrance இல் இருக்கும் Saturation மதிப்பை 100 ஆக ஆக்குகிறேன், Not bad இல்லையா?
ஆக Hue/Saturationகும்,Vibranceஸில் இருக்கும் Saturationகும் நிச்சயமாக வித்தியாசம் இருப்பதை நீங்கள் உணரலாம்.

சரி முதலில் இந்த Vibranceகும் Saturationகும் உள்ள வித்தியாசத்தை பார்ப்போம்.Saturation என்பது உங்களின் படத்தில் நிறத்தை எல்லா இடத்திலும் ஒரே அளவாக அதிகரிக்கும்ஆனால் Vibrance கூட்டும் போது படத்தில் எந்த இடத்தில் நிறம் Fade ஆகி இருக்கிறதோ அந்த குறிப்பிட்ட நிறத்தை மட்டுமே அதிகரிக்கும். (அதாவது Dull Colors,Muted Colors). அதேநேரத்தில் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு வண்ணங்களை கவனமாக கையாளும் ஏனென்றால் படத்திலிருக்கும் Skintoneகளை பாதுகாக்கவேண்டியே…..

ஆக, உங்கள் படத்தில் மனிதர்கள் இல்லையேல் நீங்கள் அந்த படத்திற்க்கு Saturation கொண்டு படத்தின் நிறங்களை கூட்டிக்கொள்ளலாம். கீழேயுள்ள படத்தை பாருங்கள் இதில் நான் Saturation மதிப்பை  60 க்கு கொண்டு போகையிலே படத்திலிருக்கும் மனிதரின் Skintone ஆனது பாதிக்கப்படுகிறதை பாருங்கள்.

இதுபோன்ற வேளைகளில் Vibrance பயன்படுத்தி உங்களது படத்திற்கு நிறத்தினைக்கூட்டிக்கொள்ளவும்.

இதே படத்தை நான் Vibrance கொண்டு adjust செய்கிறேன் பாருங்கள் Vibranceன் மதிப்பை 75 க்கு கொண்டுபோகையிலும் Skintone பாதிக்காமல் இருப்பதை பாருங்கள்.
குறிப்பு:இக்கட்டுரை Camera Raw விற்கும், Lightroom ற்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.  

உங்கள் படங்களுக்கு நிறங்களைக்கூட்டுவது குறித்த விபரங்களை தெளிவாகப் புரிந்து கொண்டிருப்பீர்கள் என நம்புகிறேன்.
***

Tuesday, March 11, 2014

வணக்கம் பிட் மக்கா.....நலமா?

Vignette என்பது லென்ஸுகளின் ஒருவித குறைபாடு ஆகும்,ஆனால் பின்நாளில் அதுவே ஒரு எபக்ட்டாக புகைபடக்கலைஞர்களிடம் உருவெடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது படத்தின் ஓரங்களை சற்று கருப்பு வண்ணத்தையோ அல்லது வெள்ளை நிறத்தையோ உருவாக்கி படத்தின் சப்ஜெக்ட்டை மட்டும் பளிச்சென காட்டும் யுத்தியாக இன்று Vignette Effect விளங்குகிறது.

[இந்த Vignette போடுவது குறித்த பதிவை எங்களது பிட் குடும்பத்தின் அங்கத்தினரான திரு.ஆனந்த் விநாயகம் அவர்கள் ஏற்கனவே கிம்பில் உருவாக்குவது குறித்த கட்டுரையை இங்கே பதிவிட்டுள்ளார்.]

இந்தக் கட்டுரையில் நான் போட்டோஷாப் மற்றும் Lightroom பயனாளர்கள் எப்படி இந்த Vignette எபக்ட்டை உருவாக்குவது என விரிவாக பார்க்கலாம்.


இங்கே ஒரு விஷயத்தை உங்களுக்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
அதாவது ஒரு குறிப்பிட்ட எபக்ட்டை போட்டோஷாப்பில் பலவிதமாக உருவாக்கலாம்,எனவே இதுதான் சிறந்தது அதுதான் சிறந்தது என்றெல்லாம் கிடையாது.ஏனெனில் இந்த Vignette எபக்ட்டை பொறுத்தவரையில் போட்டோஷாப்பில் பலவிதமாக உருவாக்கலாம்.எனினும் நான் போட்டோஷாப் யிற்சி தரும் நண்பர்களுக்கும்,ஒரு சில கம்ப்யூட்டர் பயிற்சி வகுப்பு எடுக்கும் Facultiesகளுக்கும் சொல்லித்தரும் உத்தியைத்தான் தங்களுக்கும் விளக்குகிறேன்.இது பிற உத்திகளுடன் ஒப்பிடும் போது சற்று எளிமையும் கூட அதைவிட‌ more flexible கூட.

சரி முதலில் உங்களது படத்தை போட்டோஷாப்பில் திறந்துகொள்ளவும்.

இப்போது Filter>Convert to Smart Filters என்பதனை அழுத்தி உங்களது லேயரை Smart Object ஆக மாற்றிக்கொள்ளவும்.உங்களது படம் Smart Object ஆக  மாறுவதன் மூலம் நம்முடைய பிற்சேர்க்கையானது Non-Destructive ஆக நடைபெறும் என்பதும் ,மேலும் உங்களது பிற்சேர்க்கையில் மாற்றம் வேண்டுமெனில் நம் Smart Object  லேயரை நேரடியாக எடிட் செய்து கொள்ளலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.


இப்போது Filter>Lens Correction  என்பதனை தேர்வு செய்யவும்.இப்போது தோன்றும் Lens Correction விண்டோவில் Custom என்பதை தேர்வு செய்யவும்.




இதில் Vignette என்ற பகுதியில் இருக்கும் Amount மற்றும் Midpoint_டை உங்களது ரசனைக்கேற்ப செட் செய்து கொள்ளவும். Amount ஸ்லைடரை இடமிருந்து வலமாக நகர்த்த வெள்ளை நிற Vignette ம்,வலமிருந்து இடமாக நகர்த்த கருப்பு நிற Vignette ம் கிடைக்கும் என்பதை நினைவில்கொள்ளவும்.

குறிப்பு: நீங்கள் போட்டோஷாப் பழைய பதிப்புகளை(Below CS4) பயன்படுத்துவதாக இருப்பின் இந்த Lens Correction பில்டரானது
 Filter>Distort>Lens Correction என்பதிலிருந்து தேர்வுசெய்து பயன்படுத்தவேண்டும்.

சரி Vignette போட்டாச்சு இப்போது நீங்கள் இன்னும் சில மாற்றம் செய்ய விரும்பினால் உங்களது லேயர் பேலட்டில் இருக்கும் Lens Corrections  Smart Filter_ இருமுறை கிளிக் செய்தால் நீங்கள் என்ன மதிப்பு கொடுத்திருந்தீர்களோ அதே மதிப்பில் அப்படியே அந்த விண்டோ மீண்டும் திறக்கும்,உங்களின் விருப்பப்படி மதிப்புகளை மாற்றிக்கொள்ளலாம்.


சரி இதே Vignette effect_ வேறு ஒரு படத்திற்கு போட்டு பார்க்கவேண்டும் என விரும்பினால் உங்களது லேயரின் மீது மவுஸால் ரைட் கிளிக் செய்யவும் பின்னர் வரும் ஆப்ஷனில் Replace Contents என்பதனை தேர்வு செய்யவும்.


 பின்னர் புதிய படத்தை தேர்வு செய்து ஓகே செய்துகொள்ள உங்களின் புதிய படம் நீங்கள் கொடுத்திருந்த மதிப்பில் Vignette_டுடன் தோன்றும்.


 இப்போது Vignette_ன் மதிப்பில் மாற்றம் செய்ய விரும்பினால் மீண்டும் லேயர் பேலட்டில் Lens Corrections Filter_ஐ இருமுறை கிளிக் செய்ய Lens Corrections விண்டோவானது மீண்டும் தோன்றும்இந்தபடத்திற்கு ஏற்றவாறு Vignette_ன் மதிப்பை கொடுத்துக்கொள்ளவும்.

Lightroom பயன்படுத்துபவர்கள்படத்தை Lightroom_ன் Develop_ல் திறந்துகொண்டுபின்னர் Effects பேனல் சென்று இந்த Vignette எபக்ட்டை உருவாக்கிக்கொள்ளலாம்.


அவ்வளவுதான்,என்ன பிட் மக்கா Vignette Effect எளிமையாக உருவாக்கும் நுட்பத்தினையும் அதனுடன் போட்டோஷாப்பில்  Smart Object_ன் பங்கு என்ன என்பதைக்குறித்த தகவல்களையும் தெரிந்துகொண்டீர்கள் தானே??

அன்புடன்,
நித்தி ஆனந்த்
 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff