Showing posts with label pit monthly contest. Show all posts
Showing posts with label pit monthly contest. Show all posts

Tuesday, April 1, 2014

அனைவருக்கும் வணக்கம்,

வண்ணங்களில் முக்கியமான ஒரு நிறம் தான் இந்த மாத தலைப்பு, இது எனக்கு பிடித்த வண்ணம் கூட. வானம் மற்றும் கடல் ஆகியவற்றில் பரவி கிடக்கும் நிறம் நீலம்.
நீல நிறம் பொதுவாக நல்லிணக்கம், பற்றுறுதி மற்றும் நம்பிக்கை தொடர்புடைய நிறம்.

இம்மாதத் தலைப்பு: நீலம்

படத்தின் ஒரு பகுதில் மட்டும் நீல நிறம் இருந்தால் போதாது. படத்தில் நீல நிறத்திற்க்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்க வேண்டும்.

சில மாதிரிப் படங்களைக் பார்ப்போம்.

நாதஸ்:


ராமலக்ஷ்மி:



ஆன்டன் க்ரூஸ்:


நாதஸ்:


நாதஸ்:


போட்டி விதிமுறைகள் இங்கே.

படங்கள் வந்து சேரவேண்டிய கடைசித்தேதி: 20-4-2014

அன்புடன்,
நாதஸ்

Monday, December 3, 2012

வணக்கம் நண்பர்களே,

2012 இன் இறுதிக்கு வந்துவிட்டோம். மழைக்காலமும் ஆரம்பமாகியாச்சு. விடுமுறை, பண்டிகை, மழைக்கு குடை வாங்க, குளிருக்கு ஆடை வாங்க என எல்லோரும் பிஸியா இருப்பீங்க. மாரியோ கோடையோ, சந்தோசமோ துக்கமோ, நினைவுகளையெல்லாம் பதிவு செய்யும் போட்டோகிராபி நம்மலோட இணைஞ்சி பிஸியா இருக்கும். ஆகவே, நீங்க மாரிகாலத்துல புடிச்ச நல்ல படங்கள “மழைக்காலம்” என்ற தலைப்புக்கேற்ப அனுப்பிவிடுங்க. என்னவெல்லாம் அனுப்பலாம்? மழைத்துளி, குளிருக்காக போர்த்திய மனிதன், மழையில் நனையும் பூ, குடை பிடித்துச் செல்லும் குழந்தை என என்னவெல்லாம் “மழைக்காலம்” என்ற தலைப்புக்குப் பொருத்தமாயிருந்தாலும் அனுப்புங்க. படத்தப் பார்த்ததுமே மழைக்காலம் அதில பிரதிபலிக்கனும். அதுதான் ரொம்ப முக்கியம்.

தலைப்பு: மழைக்காலம்

மாதிரிப்படங்கள்:

#1 அன்டன்

#2 ராமலக்ஷ்மி


#3 அன்டன்

#4 சர்வேசன்

#5 சர்வேசன்

#6 நவ்ஃபல்


படங்கள் அனுப்ப வேண்டிய கடைசித் திகதி: 20 டிசம்பர் 2012
போட்டி விதிமுறைகள்: இங்கே 

அன்புடன்
அன்டன்

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

நீங்கள் அனுப்பும் பெரிய அளவுப் படங்களால் பிகாஸாவின் கொள்ளளவு அடிக்கடி நிரம்பி விடுகிறது. இதனால் பலரது போட்டிப்படங்கள் தானாக ஆல்பத்தில் சேர இயலாது போகிறது. இருபது பேர்களின் படங்கள் இடம்பெறக் கூடிய அளவை ஒருவரது படமே எடுத்துக் கொள்கிறது. இது தொடர்ந்தால் மூன்று மாதங்களுக்கொரு முறை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரியில் மாற்றம் கொண்டு வர வேண்டிய சூழல் ஏற்படும். பலர் கவனியாமல் பழைய முகவரிக்கே அனுப்ப நேரிடும். 

இந்தக் குளறுபடிகள் நேராமல் தவிர்க்க.. உங்கள் ஒத்துழைப்பு அவசியமாகிறது.

ஆரம்ப நிலையில் இருக்கும் சிலர் தவிர்த்து செய்யத் தெரிந்தவர்கள் சிரமம் பாராமல் அளவைக் குறைத்து அனுப்புங்கள். இதைப் போட்டி விதிமுறையிலும் தெரிவித்திருக்கிறோம். ஒரு வேண்டுகோளாகவே வலியுறுத்தியும் வருகிறோம். 

எப்படி அளவைக் குறைக்கலாம் என்பதையும் இந்தப் பதிவில் விளக்கியிருக்கிறோம்: http://photography-in-tamil.blogspot.in/2012/04/blog-post_15.html

கற்றுக் கொள்ளுங்கள்.  கற்றதை செயல்படுத்திப் பழகுங்கள். ஏனெனில்,

PiT போட்டிகள் உங்களை மெருகேற்றிக் கொள்ளவும் பல சர்வதேசப் போட்டிகளில் கலந்து கொள்ள உதவும் பயிற்சிக் களமாகவும் இருக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். அது போன்ற பெரிய போட்டிகளில் படத்தின் அளவு விதிமுறையில் குறிப்பிட்டபடி இருக்காவிட்டால் படங்கள் விலக்கப்பட்டு விடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். 

விதிமுறைகளைச் சரியாகப் பின்பற்றுவதை ஒருவழக்கமாகக் கொள்வது உங்களுக்கே பயன் தரும். 

அன்புடன்
PiT குழு.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


Sunday, July 1, 2012

வணக்கம் நண்பர்களே,
மீண்டும் உங்களை மாதாந்தப் போட்டியில் சந்திப்பதில் மகிழ்ச்சி.
  • இந்த மாதத் தலைப்பு "காகிதம்".
  • போட்டிக்கான விதிமுறைகள் இங்கே
  • படங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி: 15-07-2012


தலைப்பு: காகிதம் (paper)
காகிதம் அல்லது தாள் அல்லது கடதாசி இந்த தலைப்புக்கு ஏற்ற படங்களை முடிவுத் திகதிக்குள் அனுப்பி விடுங்கள். காகிதத்துடன் தொடர்புடைய எதுவும் படமாக அமையலாம். புத்தகம், ஒரிகாமியில் செய்யப்பட்ட காகித உருவங்கள், பணம் (நோட்டுத்தாள்), காகிதத்தால் சுற்றப்பட்ட பொருட்கள், செய்தித்தாள் சுவரொட்டி, இப்படி எதுவாகவும் இருக்கலாம்.


தலைப்புக்குப் பொருந்தமான படம் எடுத்தால் பாதி வெற்றி. மீதி வெற்றி ஒளிப்படக்கலையின் அடிப்படைகளையும் நுட்பங்களையும் அதில் உள்வாங்கியிருப்பது. இறுதியில் படைப்பாற்றலை (creativity) பயன்படுத்துவது. இதையெல்லாம் எங்கு கற்பது? இங்கேயே கிட்டத்தட்ட 500 பதிவுகள் உள்ளன. நிச்சயம் அவை உங்களுக்கு உதவ முடியும்.


தலைப்பிற்கு சில உதாரணங்கள் பின்வருமாறு:


# நவ்ஃபல்


# நவ்ஃபல்

# நவ்ஃபல்

# ராமலக்ஷ்மி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff