Thursday, March 5, 2015

வணக்கம்,

இம்மாத போட்டித் தலைப்பு: Negative Space

எல்லா படங்களிலும் வெற்றிடங்கள் அல்லது தேவையில்லாத இடங்களைத் தவிர்க்க வேண்டும் என்பதில்லை. சில நேரங்களில் இந்த வெற்றிடங்கள் ஒரு படம் தரும் உணர்வையே மாற்றி அமைத்துவிடும். ஒரு தேவையை உருவாக்கிவிடும்.

அச்சுத் தொழிலில் படங்களின் ஓரத்தில் எழுத்துக்களை சேர்ப்பதற்கும் இந்த வகையில் கட்டம் கட்டுவதை (கம்போஸ்  செய்வதை) கடைப்பிடிக்கிறார்கள்.

நீங்கள் எடுக்கும் படம் Minimalism ஆக கூட இருக்கலாம்.

அதாவது நீங்கள் செய்ய வேண்டியது... கருப்பொருளைச் சுற்றியிருக்கும், கவனத்தைக் கலைக்காத வெற்றிடத்தை சரியான வகையில் பயன்படுத்தி ஆஹா!சொல்ல வைக்க வேண்டும்

உங்களுக்கு எளிதாக புரிந்துகொள்வதற்கேற்ப கீழேயுள்ள படங்களுடன் அதற்கான காரணங்களும் செர்க்கப்படுள்ளன. மேலும் படங்களுக்கு இங்கே பாருங்க.

1) இந்தப் படத்தில் இருக்கும் வெற்றிடம், இந்தப் படகு செல்லும் திசையில் என்ன இருக்கிறது, மேலும் கடலின் பிரமாண்டத்தையும் நமக்கு உணர்த்துகிறது:

#Naufal MQ


2) இந்தப் படம் மினிமலிசத்திற்கு நல்ல எடுத்துக்காட்டு. பிள்ளையாரின் சிலையைச் சுற்றியிருக்கும் வெற்றிடம் ஒரு அமைதியை நமக்கு கடத்துகிறது:

#Ramalakshmi

3) இந்தப் படத்தில் சப்ஜெக்ட் மேலே மூலையில் ஓரங்கட்டப்பட்டு அலைகளுக்கு இடம் ஒதுக்கி கப்பல் கரை தட்டியிருப்பதை காட்டுகிறது:

#Naufal MQ


4) இந்தப் படங்களில் சப்ஜெக்டின்  மேற்பகுதியிலும் கீழ்ப்பகுதியிலும் இடம் ஒதுக்கப்பட்டு சப்ஜெடின் மீது நமது கவனத்தை அழகாக ஈர்க்கிறது:

#Ramalakshmi

#


5) இதில் ஒதுக்கப்பட்டுள்ள வெற்றிடம் மனிதன் இயற்கையின் பிரமாண்டத்தின் முன் சிறிய புள்ளிதான் என்பதை காட்டுவதாக உள்ளது:

#Naufal MQ

#

6) ரெட் சிக்னல் தான் இதில் சப்ஜெக்ட். பாதசாரிகள் கடந்து போகும் இடத்தை இதில் நெகடிவ் ஸ்பேசாக காட்டப்பட்டுள்ளது:

#Naufal MQ


நெகடிவ் ஸ்பேஸ்னா என்னன்னு இப்போ ஓரளவுக்கு புரிந்திருக்கும். மேலும் படங்களுக்கு இணையத்தில் தேடுங்க. கலக்கலான படங்களை எடுத்து போட்டிக்கு அனுப்புங்க. வாழ்த்துகள்!

போட்டி விதிமுறைகள் இங்கே.

படங்கள் வந்து சேரவேண்டிய கடைசித் தேதி 20 மார்ச் 2015
***

இதுவரை போட்டிக்கு வந்திருக்கும் படங்களைக் காண இங்கே செல்லலாம்:
https://picasaweb.google.com/111715139948564514448/201503#

Wednesday, March 4, 2015

வணக்கம் நண்பர்களே!

                வெற்றிபெற்ற படங்களைப் பார்க்குமுன் கவனத்தை ஈர்த்த படங்களைப் பார்ப்போம்.

சிறப்புக் கவனம் : நிவேதா




சிறப்புக் கவனம் : விவேக்



முதல் மூன்று இடங்களைப் பிடித்தப் படங்கள்:

மூன்றாம் இடம்: ராஜ்குமார்




இரண்டாம் இடம் : பிரபு



முதல் இடம்: அமுதா ஹரிஹரன்



 வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்! 

போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி!

Saturday, February 28, 2015

அனைவருக்கும் வணக்கம்,
இந்த முறை எழுபதற்க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் போட்டிக்கு வந்தன, கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி!

முதல் சுற்றுக்கு முன்னேறும் பதினைந்து படங்கள்.
எந்தத் தரவரிசையின் படியும் அமையவில்லை

அமுதா ஹரிஹரன்


அசோகன்


நிவேதா


கல்பனா


மைரான்


நடராஜன் பிரேம்குமார்


நடராஜன்


பிரபு


பிரமீளா


ரகு முத்துக்குமார்


ராஜ்குமார்


சபின் குமார்


ஷாஜி


சுபான் பீர் மோஹ்மத்


விவேக்


முதல் சுற்றுக்கு முன்னேறிய பதினைந்து பேருக்கும் வாழ்த்துக்கள்!!

Monday, February 23, 2015

 ***வணக்கம் பிட் மக்கா! நலமா...

இன்றைய கட்டுரையில் நாம் போட்டோஷாப்பில் பதிவிறக்கம் செய்யப்பட்ட Action கோப்பினை போட்டோஷாப்பில் எப்படி இயக்குவது என பார்க்கலாம்.**

பொதுவாக நாம் செய்த ஒரு Processஐ மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவோ அல்லது நமக்கே ஒரு குறிப்பிட்ட வகையான Process ஐ திரும்பத்திரும்ப தேவைப்படும் தருவாயில் அதனை நாம் Action கோப்பாக போட்டோஷாப்பில் சேமித்துக்கொண்டு தேவையான போது அதனை இயக்கிக்கொள்வோம்.


சரி இந்த கட்டுரையில் நான் உங்களுக்கு இலவச இணைப்பாக நான் உருவாக்கிய Sepia Tone Action வழங்குகிறேன்.
முதலில் இந்த Sepia Tone Action ஐ உங்களது கணினியில் பதிவிறக்கம் செய்துகொள்ளவும்.

Download Here


இப்போது நீங்கள் போட்டோஷாப்பை இயக்கவும்.ஏதாவது ஒரு படத்தை திறக்கவும். பின்னர் Window  மெனு சென்று Action தேர்ந்தெடுக்கவும்



பின்னர் Actions Properties கிளிக் செய்து பின்னர் Load Action என்பதை தேர்ந்தெடுங்கள்.



இனி நீங்கள் பதிவிறக்கம் செய்துகொண்ட என்னுடைய Sepia Tone Action தேர்ந்தெடுத்துக்கொள்ளவும்.



பின்னர் இந்த Action ஐ ரன் செய்துகொள்ள நொடியில் Sepia Tone தயார்.








குறிப்பு :உங்களது ரசனைக்கேற்ப ஹைலைட்ஸ் மற்றும் ஷேடோஸ் Adjust செய்துகொள்ள ஏதுவாக Curves Adjustment layer இணைத்திருக்கிறேன், Final Touch செய்துகொண்டு உங்களது படத்தினை மெருகேற்றிக்கொள்ளவும்.

அன்புடன்,
நித்தி ஆனந்த்

Wednesday, February 4, 2015

வணக்கம் நண்பர்களே!

இம்மாதப் போட்டித் தலைப்பு: பூச்சி/பூச்சிகள் (Insects) 

உலகில் அதிகமாகக் காணப்படும் உயிரினம் பூச்சிகள் தான். பூச்சிகளே இல்லாதே இடங்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு எல்லா இடத்திலும் பூச்சிகள் நிறைந்துள்ளன.

பூச்சிகள் கெடுதல் மட்டும் அல்ல நன்மையும் செய்பவை. மேலோட்டமாக பார்க்கும் போது அவை பயத்தையும் வெறுப்பையும் அளிக்கலாம். ஆனால் அவற்றை உற்று நோக்கினால் பல புதுமைகள் தெரியும்.

உதாரணத்திற்குச் சில படங்கள்:
































படங்கள் வந்து சேர வேண்டிய கடைசித் தேதி பிப்ரவரி 20, 2015.

வழமையான விதிமுறைகள்: இங்கே
 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff