Saturday, September 15, 2007

PiT - வண்ணங்கள் போட்டி - முடிவுகள்

27 comments:
 
போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்து. இரசனை ஒவ்வருக்கும் ஒரே மாதிரி இருப்பது இல்லை. இந்த போட்டியின் முடிவுகள் எங்களது இரசனைக்கு பிடித்த படங்களே அன்றி வேறு ஏதும் இல்லை.

வண்ணங்கள் என்ற தலைப்புக்கு பூக்கள், பச்சை புல்வேளி, இயற்கை காட்சிகள், மாலை, மீன்கள், பாம்பு, பறவை, விளையாட்டு பொருட்கள் என்று பலவித படங்கள்.

பொதுவாகவே பல வண்ணங்கள் ஒரே படத்தில் இருக்குமாறு எடுப்பதில் உள்ள சிக்கல்கள் இந்த போட்டிப் படங்களிலும் நன்றாகவே தெரிகிறது

உதாரணதிற்கு Blown highlights.





இள,வெளிர் வண்ணங்கள் காணமல் போகிவிடும் வாய்ப்பு அதிகம். இந்த படங்களில் கிளியின் இளம் பச்சை, வானத்தின் நீலம, வெள்ளை மேற்புறம், அறிவிப்பு பலகை எல்லாம் தொலைந்து விட்டன. கண் காணும் அளவிற்கு கேமராவில் காணமுடியாது.

இந்த வண்ணங்கள் வெளிறிப் போவதை Histogram பார்ப்பதின் மூலம் தெரிந்து கொள்ளலாம். (விரைவில் CVR பாடம் நடத்துவார். இப்போதைக்கு இது beyond the scope of this post)


சரி மீதியை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம். போட்டியின் முடிவுகளுக்கு வருவோம்.

மூன்றாவது இடம்
இந்த முறை இரண்டு படங்களுக்கு. இம்சையின் பச்சை பாம்புவும், சுந்தரின் மயில் இறகும். பாம்பு கொஞ்சம் தெளிவாக முகத்தை திரும்பி இருந்தால் இந்த படம் இன்னும் சிறப்பாக வந்து இருக்கும்.











இரண்டாவது இடம்

யாத்திரீகனின் இந்த படம்.

அழகான வண்ணங்கள். படத்தில் நிறைந்து இருக்கும் வெண்மை இன்னும் அழகு.





முதல் இடம்
ஒப்பாரியின் இந்த படத்திற்கு. போட்டிக்கு அவர் அனுப்பி இருந்த இரண்டு படங்களுமே நன்றாக இருந்தன. இருப்பினும் இந்த படம் மிக எளிமையாகவும், தலைப்புக்கு பொருத்தமாகவும். வண்ணங்களின் அழகு குறையாமலும் இருந்ததால் எங்களின் ஓட்டு இந்த முறை ஒப்பாரிக்கே







இந்த போட்டியில் கலந்துக் கொண்டு சிறப்பித்த போட்டியாளர்கள் அனைவருக்கும் நன்றி. அடுத்தப் போட்டியில் கலந்துக் கொண்டு இன்னும் சிறப்பான படங்களை எடுத்து அனுப்புவீர்கள் என்கிற நம்பிக்கை எங்களுக்கு நிச்சயம் உண்டு.


இந்தப் போட்டியின் முதல் 10 படங்கள் மற்றும் மீதிப்படங்களின் விமர்சனங்களை அடுத்தப் பதிவில் பார்ப்போம்.

27 comments:

  1. வாழ்த்துக்கள் , சுந்தர், இம்சை மற்றும் யாத்ரீகன்.

    நடுவர்களுக்கு நன்றிகள்.

    மகிழ்ச்சி. ஆனால் எதிர்பார்கவேயில்லை வேற என்ன சொல்ல. யாத்ரீகன், சுந்தர், சர்வேசன் இன்னும் எவ்வளவோபேர் சிறந்த படங்களை அனுப்பியிருந்ததால் இந்த முறையும் "சொக்கா எனக்கில்லை" மனநிலைதான். :)

    இந்த படம் எடுத்தபடி சின்ன எடிட்கூட செய்யாமல் அப்படியே போட்டது ஒருவேளை எடிட் செய்திருந்தால் கவனம் சிதறியிருக்குமோ? நல்லவேளை நேரமில்லாமல் போனது.

    முதல் படத்தில் கொஞ்சம் contrast adjust செய்திருந்தேன். அதிலிருக்கும் freezing and details எனக்கு பிடிக்கும் என்பதால் என்னுடைய அபிமான படம் ஆணால் unlucky picture இதுவரை இரண்டு போட்டியில் தோற்றிருக்கிறது.
    நன்றி ஜீவ்ஸ் அன்ட் An&

    ReplyDelete
  2. aahaa, inimel oppaari pera maathikkalaam thane! Anaivarukkum vaazhthukkal!

    ReplyDelete
  3. நல்ல தீர்ப்பு...

    வெற்றி பெற்ற எல்லோருக்கும் என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. மயிலிறகு வருடிய உணர்வு :-) நன்றி நடுவர்களே.

    கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் வெற்றி பெற்றவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

    நன்றி.

    ReplyDelete
  5. எல்லோருக்கும் வாழ்த்துக்கள்!!
    படங்களை அனுப்பி போட்டியை சிறப்பித்த அனைவருக்கும் நன்றி!! :-)

    ReplyDelete
  6. வெற்றி பெற்றவர், ஒப்பாரி! அவருக்கும் மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. Good selection!

    ஒப்பாரியின் வெங்காயம் வராதது சோகமே. ஒப்பாரி, விடாதீங்க, இன்னும் பலப்பல போட்டிக்கு அத அனுப்புங்க. முயற்சி பலணளிக்கும். :)

    வளையலும், மயிலிறகும் அருமை.
    மயிலிறகு லுக்ட் professional - good work.

    பாம்பு 'படமெடுத்திருந்தா' நல்லா இருந்திருக்கும். - கொஞ்சம் அவுட்-ஆப்-போகஸ் மாதிரியும் இருக்கு.

    ReplyDelete
  8. வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள். யாத்திரீகனுக்கு special பாராட்டு! (டேய்... பாராட்டல்லாம் செஞ்சிருக்கேன். ஏதாவது பரிசு கொடுத்தாங்கன்னா ஒழுங்கா வீட்டுக்கு கொண்டு வந்துரு!) :-)

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள் இம்சை, யாத்ரீகன் மற்றும் ஒப்பாரி....

    ReplyDelete
  10. //இந்தப் போட்டியின் முதல் 10 படங்கள் மற்றும் மீதிப்படங்களின் விமர்சனங்களை அடுத்தப் பதிவில் பார்ப்போம்.//

    ஆஹா...அதுலயாவது நம்ம இடம் இருக்கா?? சீக்கிரம் சொல்லுங்க..

    ReplyDelete
  11. hats off to judges.
    we the participents learned tips to click a good snap.

    ReplyDelete
  12. எனக்கா மூன்றாவது இடம் !!!!!!
    ம்ம்ம்ம் ... தொடர்ந்து 3 மாசமா இந்த இம்சையொட இம்சையை தாங்க முடியாம மூன்றாவது இடம்
    குடுத்து இருக்கிங்கன்னு தோனுது.

    ReplyDelete
  13. எனக்கா மூன்றாவது இடம் !!!!!!
    ம்ம்ம்ம் ... தொடர்ந்து 3 மாசமா இந்த இம்சையொட இம்சையை தாங்க முடியாம மூன்றாவது இடம்
    குடுத்து இருக்கிங்கன்னு தோனுது.

    ReplyDelete
  14. Blown highlights. ஐ சுட்டிக்காட்டி சொன்னதுக்கு ரொம்ப டாங்க்ஸ்... இதை.. photoshop ல் சரி செய்ய முடியுமா... (எப்படின்னு ஒரு பதிவு கண்டிப்பா வேணும்)அப்படி செய்த படங்களை போட்டிக்கு அனுப்பலாமா...( disqualify பண்ணமாட்டீங்களே)

    ReplyDelete
  15. Great choices. வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள். பங்கு பெற்ற அனைவருக்கும் பாராட்டுகள் :)

    ReplyDelete
  16. போட்டியில் பங்குபெற்ற அனைவருக்கும் வாழ்த்து(க்)கள்.

    ReplyDelete
  17. தீபா
    உங்கள் படத்தின் வானத்தின் நீலத்தை மீட்பது மிக எளிது. உங்களிடம் இருக்குமெனில் செய்ய வேண்டியது இதுதான்.

    1. Open the pic in photoshop
    2. Duplicate the layer ( Ctrl J)
    3. Layer-> New Adjustment Layer -> selective color
    4. Choose white and move cyna to +46 , majenta=> +26.
    5. you should get a nice blue sky.
    6. Play around with the sliders to get the blue you want.



    முயன்று பாருங்கள். வேண்டுமானால் படத்துடன் விளக்க முயற்சிக்கிறேன்

    ReplyDelete
  18. A&N
    Thanks for the reply..Tried that but still dont see any change in the sky.. howiever i tried
    layer copy - gradient fill
    start:-a8c9e0 ... end-FFFFFF
    this was the closest i could get to the "grey sky"..

    ReplyDelete
  19. Did you set method to Absolute in
    selective color options dialog box ?

    Here is the screen shot

    ReplyDelete
  20. வெற்றி பெற்ற ஒப்பாரி, யாத்ரீகன், இம்சை மற்றும் சுந்தர் அவர்களுக்கு என் வாழ்த்துகள்.

    ReplyDelete
  21. ok.. got it..
    thanks...
    ஆனா இப்படி மாற்றம் செய்யப்பட்ட படங்களை போட்டிக்கு வைக்கலாமா ?... disqualify செய்யமாட்ட்ங்களா ? ? ??

    ReplyDelete
  22. அருமையான தெரிவுகள். வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  23. அது போட்டிக்கு போட்டி மறுபடும் தீபா மேடம்.
    இந்த போட்டிக்கு பொருந்தவரை as long as the reality of the scene is preserved பிற்தயாரிப்பு நுணுக்கங்களை பயன் படுத்தலாம்.
    Morph செய்வது ஆட்களை,பொருட்களை சேர்ப்பது/குறைப்பது/மாற்றுவது போன்ற விஷயங்கள்தான் எங்கும் அவ்வளவாக அனுமதிக்கப்பட மாட்டாது.

    எதற்கும் ஒரு போட்டிக்கு அனுப்புவதற்கு முன் அந்தந்த நடத்துனர்களிடம் பிற்தயாரிப்பு செய்யலாமா என்று கேட்டுக்கொள்வது நலம்.

    ReplyDelete
  24. நன்றி CVR... கண்டிப்பா நினைவில் இருக்கும் :)

    ReplyDelete
  25. கையில் இருக்கிற படப்பொட்டி எல்லாத்தாயும் வித்துற வேண்டியதுதான். இப்படி படங்களா பார்த்தா ...வேற என்ன பண்றது?

    ReplyDelete
  26. அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    என்னடா,, நம்ம படம் முதல்ல இருக்கேனு பார்த்தேன். நல்லா வாரி இருந்தீங்க.. அடடா... நோக்கியா3230-ல எடுத்த படத்துக்கே இந்த மதிப்பா.. அப்போ ஒழுங்கா நல்லா காமிரால எடுத்தா நல்லா இருந்திருக்கும் போலனு தோன்றுகிறது...

    இனிமேல் இன்னும் சிறப்பா எடுக்க முயல்கிறேன்...

    ReplyDelete
  27. ஆஹா நம்ம படத்துக்கு இரண்டாவதா... வாவ்.. "தமிழில்" புகைப்படக்குழுவினருக்கு மிகவும் நன்றி...

    வெற்றி பெற்ற சுந்தர், இம்சை மற்றும் ஒப்பாரி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..

    அல்வாசிட்டி விஜயின் பேட்சிலர் ரூமும் சரி, ஆதியின் ஜெய்ப்பூர் அரண்மனையின் புகைப்படமும், சுந்தரின் கலர் க்கூயுபின் படமும் கொஞ்சம் கிலியைக்கொடுத்தன.... ஒரிஜினல் படத்தை கொஞ்சம் ஷார்பன் பண்ணதும் கிடைத்ததுதான் போட்டிக்கான புகைப்படம்... போஸ்ட் ப்ராசசிங்கில் அவ்வளவாய் விருப்பமில்லாவிடினும், இதுவரை வந்த புகைப்படங்கள் அந்த எண்ணத்தை கொஞ்சம் மாற்றியுள்ளன..

    ஒவ்வொரு முறையும் பொறுமையாய் போட்டிக்கான புகைப்படங்களை தொகுப்பதும், அதற்கான சுட்டிகளை தொகுப்பதும், முடிவு அறிவிக்கும்போது, வெறும் முடிவுகள் மட்டுமின்றி, ஆக்கபூர்வமான தகவல்கள் கொடுப்பதுமென... சிறப்பான காரியம்... மிகவும் நன்றி.. :-)

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff