Thursday, June 26, 2008

PIT - ஜூன் 2008 - புகைப்படப் போட்டி முடிவுகள்

23 comments:
 
வணக்கம் நண்பர்களே!
அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஜூன் மாதப் புகைப்படப் போட்டி முடிவுகள் இதோ. ஒவ்வொரு படத்துக்குக் கீழேயும் அதற்குண்டான விமர்சனங்களைக் காணலாம்.



சர்வேசன் : போட்டித் தலைப்புக்கு மிகப் பொருத்தமான படம் இதுதான். அருவாள் வீச்சு முடிந்ததும் பிடிக்காமல் அருவாள் பாதி வீச்சில் இருக்கும்போது பிடித்திருந்தால், மேலும் மெருகேறியிருக்கலாமோ? :) பின்னணியில் இருக்கும் தேங்காய்களும், பாழடைந்த சுவரும், முறுக்கேறிய கைகளும், முண்டாசும் படத்துக்கு value சேர்கின்றன.

கைப்புள்ள : நாங்கள் மிகவும் எதிர்பார்த்த காட்சியமைப்பு இப்படத்தில் வெகு சிறப்பாக வெளிவந்திருக்கிறது. படத்தில் இளநீர் வெட்டுபவருக்குப் பின்னால் இரைந்து கிடக்கும் இளநீர் கூடுகளைக் காணும் போது, எவ்வளவு தூரம் அவர் உழைத்திருக்கிறார் என்பது தெளிவாகிறது. அத்துடன் எடுத்துக் கொண்ட வேலையில் அவருடைய ஈடுபாடும் நன்றாக வெளிப்பட்டிருக்கிறது. கொஞ்சம் உத்துப்பாத்தா வெட்டிய இளநீரிலிருந்து சிதறும் சில்லு ஒன்றையும் காணலாம். இளநீர் வெட்டுபவரைச் சுற்றும் முற்றும் இடையூறாக எந்தவொரு பொருளும் இல்லை. Close enough to cover the subject, just long enough to cover the essential background. சர்வேசன் சொன்னா மாதிரி வெட்டற கத்தி கொஞ்சம் மேல இருக்கற மாதிரி இருந்திருந்தா தசாவதார லெவலுக்கு(உலகத்தரம்...ஹி...ஹி) போயிருக்கும். கலரில் இப்படம் எப்படியிருக்கும் என்று காணும் ஆசையும் வருகிறது.


சர்வேசன் : அருமையான தருணத்தில் அழகாக க்ளிக்கப்பட்ட படம். மெய்மறந்து நாதஸ் ஊதுபவரும், பின்னணியில் இருக்கும் அந்த அம்மாவும், தத்ரூபமாக வந்துள்ளனர். படத்தில் உள்ள ஒரு extra textureம் (increased color contrast?) நல்லாவே இருக்கு பார்க்க. ஒரே குறை, படம் horizontal framing செய்யாமல், vertical frameing செய்தது. இன்னும் நிறைய பக்த கோடிகள் இடப்பக்கம் தெரிந்திருந்தால், படம் அடுத்த கட்டத்துக்கு போயிருக்கும்.

கைப்புள்ள :தன்னை மறந்து நாதஸ்வரம் இசைக்கும் ஒரு கலைஞரை வெகு அழகாகச் சித்தரிக்கிறது இப்படம். அவருக்கு அருகில் பயபக்தியுடன் கும்பிட்டுக் கொண்டிருக்கும் அப்பெண்ணைக் காணும் போது, அது இவருடைய இசையின் விளைவாகத் தான் என்றும் வெகு சுலபமாகத் தொடர்பு படுத்திப் பார்க்க முடிகிறது(அவ்வாறு இல்லாது போயிருந்தாலும்:) ) படத்தின் இடது புறம் மேலே தெரியும் வெள்ளை patch சற்று இடையூறாக இருக்கிறது. இருப்பினும் வலப்புறம் தெரியும் வண்ணத் தோரணங்களைக் காட்டுவதற்காக அதை crop செய்யாமல் வைத்திருக்கிறார் போலும்? படத்தில் உபயோகப் படுத்தியிருக்கும் effectsஉம் காட்சியமைப்பும் படத்தை ஒரு ஓவியம் போலத் தோன்றச் செய்வது அழகு.



சர்வேசன் : எறும்புகள் பேசிக் கொள்வது போல படம் அமைந்திருப்பது அழகு.

கைப்புள்ள : எறும்புகள் தான் உழைக்கும் வர்க்கத்திற்கு(Working Class)நாம் காட்டும் எடுத்துக்காட்டு. சின்ன வயசுல எத்தனையோ தடவை உத்து உத்து எறும்புகள் என்ன பேசிக்குதுங்கன்னும், பண்ணுதுங்கன்னும் பாத்துருப்போம். அதை அப்படியே கச்சிதமாப் பதிவு செய்திருக்கு இந்தப் படம். சுறுசுறுப்பா ஓடிக்கிட்டிருக்கற எறும்புகள் நின்னு பேசிக்கும் போது எடுக்க நல்ல டைமிங் வேணும்.


ஸ்பெஷல் மென்ஷன்: Surveysan's Picks
இந்த மாதிரிப் படங்களெல்லாம் நிறைய காட்சிப்படுத்த வேண்டும். இதெல்லாம் என்னான்னே தெரியாம நிறைய பேர் வளர்றாங்க. அருமையான முயற்சி. ஸ்லோ ஷட்டர் நல்ல முயற்சி. ஆனால், நெல் எறியும் தாத்தா, உடம்பு பாதி அழிந்தது போல் இருக்கிறது. சூரியனுக்கு அந்தப் பக்கத்திலிருந்து முயன்றிருக்கலாம்
குழந்தை சீரியஸாக கையில் ஸ்க்ரூ ட்ரைவருடன் வண்டியைப் பார்ப்பது அருமை.

வெற்றி பெற்ற மூவருக்கும் எங்கள் வாழ்த்துகள். வெற்றி பெற்ற படங்களைத் தவிர முதல் பத்தில் இடம் பெற்ற மற்ற படங்களைக் குறித்தான கருத்துகளுடன் ஓரிரு நாட்களில் இன்னுமொரு பதிவை எதிர்பாருங்கள்.

போட்டியில் பங்கு கொண்ட அனைத்து படங்களைக் குறித்தும் கருத்துத் தெரிவிக்கும் ஒரு எண்ணமும் இருக்கின்றது. அன்றாட வேலையினூடே எந்தளவு அது சாத்தியம் என்று தெரியவில்லை:) இயன்றவரை முயற்சிக்கிறோம். நன்றி.

23 comments:

  1. அருமை.

    வென்றவர்களுக்குப் பாராட்டுகள்.

    நடுவர்களுக்கு நன்றி.

    பி.கு: எங்கே நம்ம படம்
    ஜெயிச்சுருமோன்னு நடுங்கிக்கிட்டு இருந்தேன்:-))))

    ReplyDelete
  2. அசத்திய அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    தேர்வு குழுவினருக்கும் என் பாராட்டுக்கள்

    அன்புடன்
    கிரி

    ReplyDelete
  3. வென்றவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்,பாராட்டுகள்.


    //எங்கே நம்ம படம்
    ஜெயிச்சுருமோன்னு நடுங்கிக்கிட்டு இருந்தேன்//

    @teacher, அதே பயத்துல தான் நான் கலந்துக்கவேயில்லை. :p

    ReplyDelete
  4. //துளசி கோபால் said...
    அருமை.

    வென்றவர்களுக்குப் பாராட்டுகள்.

    நடுவர்களுக்கு நன்றி.

    பி.கு: எங்கே நம்ம படம்
    ஜெயிச்சுருமோன்னு நடுங்கிக்கிட்டு இருந்தேன்:-))))//

    சொல்லேய்! சொல்லேய்! மறுக்கா சொல்லேய்! :)))))

    வாசி!ஸ்ரிகாந்த்! சத்தியன்!அமல்! நால்வருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்!

    ReplyDelete
  5. srikanth படம் ரொம்ப பிடிச்சது, PP என்ன ? எப்படி பன்னாருன்னு தெரிஞ்சா நல்லாருக்கும்.

    ReplyDelete
  6. ஸ்ஸ்ஸ்ஸ்....வெங்கடேசனை விட்டு விட்டேன்.தெரியாமல் தான்.:-0

    வாழ்த்துகள் வெங்கடேசன்.:)))

    ReplyDelete
  7. வெற்றி பெற்றவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்!

    //சின்ன வயசுல எத்தனையோ தடவை உத்து உத்து எறும்புகள் என்ன பேசிக்குதுங்கன்னும், பண்ணுதுங்கன்னும் பாத்துருப்போம்.//

    உண்மை. இது போன்ற ஒவ்வொரு படத்துக்கான தங்கள் கருத்துக்களும் அவற்றை வேறு விதமான கோணத்தில் பார்க்க வைக்கின்றன. அறிவித்திருக்கும் அடுத்த பதிவிற்க்கான ஆவலையும் தூண்டுகின்றன. நடுவர்கள் யாவருக்கும் நன்றி.

    ReplyDelete
  8. வெற்றி பெற்றவர்களுக்கும், அருமையாக வடிவமைத்து வழங்கிய நடுவர்களுக்கும் வாழ்த்துகள்!! :-)

    ReplyDelete
  9. //எங்கே நம்ம படம் ஜெயிச்சுருமோன்னு நடுங்கிக்கிட்டு இருந்தேன்:-))))//
    என் படம் ஜெயிச்சதை பார்த்து நான் இப்போ நடுங்கி போய் ஒக்கார்ந்திருக்கேன். முதல் முறையா என் படம் முதல் மூன்றில் இடம் பெற்றிருப்பதில் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு. வெற்றி பெற்ற வாசி மற்றும் ஸ்ரீகாந்துக்கு வாழ்த்துக்கள். வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றிகள்!

    ReplyDelete
  10. நல்ல படமே வெற்றி அடைந்திருக்கிறது. வாழ்த்துகள் வாசி,ஸ்ரீகாந்த்,அமல்,சத்தியன்.

    ReplyDelete
  11. நாட்டாமைகளுக்கு நன்றி. இந்த படத்திலிருப்பவர் வாடிக்கையாளர்களை கையாண்ட விதம் என்னை மிகவும் கவர்ந்தது. அழைக்கும் விதம் வெட்டும் வேகம் எல்லாம் சூப்பர். இருந்தாலும் கொஞ்சம் வலித்தது சீவிய மட்டைகள் அங்கேயே கிடப்பது. கடைத்தெருவும் மெயின் ரோடும் கூடுமிடத்தில் இந்த குப்பை அகற்றப்படாமல் இருந்தது வலித்ததுதான். இளநீர் வெட்டும் முறை இன்னும் மாறவில்லையாதலால் கருப்பு வெள்ளை அனுப்பிவைத்தேன்.
    முதல் முறையா என் படம் முதல் இடம் பெற்றிருப்பதில் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு. வெற்றி பெற்ற சத்யா மற்றும் ஸ்ரீகாந்துக்கு வாழ்த்துக்கள். வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றிகள்!

    சர்வேசன் கேட்டதற்கிணங்க வண்ணப்படம் இங்கே; http://picasaweb.google.com/shivatkp/DubaiTheWayISeeIt/photo#5216205980041058258

    வாசி.

    ReplyDelete
  12. பங்கு பெற்றவர்களுக்கும் ,வெற்றி பெற்றவர்களூக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

    @சர்வே
    ///அருமையான முயற்சி. ஸ்லோ ஷட்டர் நல்ல முயற்சி///

    You meant to say,fast shutter?? :)

    ReplyDelete
  13. ஸ்ரீகாந்த் முதலாவதாகவும் அமல் இரண்டாவதாகவும் வருவார்கள் என்று நினைத்தேன்.. நல்ல தேர்வு..

    வெற்றி பெற்ற நண்பர்களுக்கு வாழ்த்துக்கள். :)

    ReplyDelete
  14. வெற்றியாளர்களுக்கு வாழ்த்துக்கள்.

    1) வாசி, வண்ணப்படம் அருமை. நல்ல வேளை B&w போட்டிக்கு அனுப்பினீங்க. கலர்ல, நிறைய கட்சிக் கொடி நெருடல்கள் :). அருவாளை பாதி தூக்கிய மாதிரி ஏதாச்சும் படம் புடிச்சீங்களா?

    2) srikanth, இந்தப் படம் எடுத்தது பத்தியும், என்ன டச்சிங் பண்ணீங்கன்னும் ஒரு பதிவு போட்டா ப்ரயோஜனமா இருக்கும்.

    CVR, //You meant to say,fast shutter?? :)//

    no. i really meant slow-shutter. looks like a slow shutter pic 'waterfall' like pick to me. the old mans body is blending with the tree, may be due to movement while the shutter is open?
    hope amal explains :)

    ReplyDelete
  15. The grains fall down to the ground a lot faster than water trickles down a tall fountain!
    Here he has captured a fast action for which he should have used fast shutter!

    Would love to see the shutter speed of this pic.. ;)

    ReplyDelete
  16. congrats வென்றவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்,பாராட்டுகள்.

    ReplyDelete
  17. cvr,

    //The grains fall down to the ground a lot faster than water trickles down a tall fountain!
    Here he has captured a fast action for which he should have used fast shutter!//

    An& அண்ணாச்சியதான் கேக்கணும் :)
    if its fast shutter, it doesnt explain why the old mans body blended with the tree/wall.

    btw, this is a 12 year old pic and is a scanned version not a digi :)

    ReplyDelete
  18. பங்கேற்றவர்களுக்கும் வெற்றி பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்!

    ரொம்பவே குழப்பிவிட்ட நம்ம படத்தின் டீடெய்லு இதோ:-)

    //
    CVR said...
    The grains fall down to the ground a lot faster than water trickles down a tall fountain!
    Here he has captured a fast action for which he should have used fast shutter!

    Would love to see the shutter speed of this pic.. ;)
    //

    CVR சொன்னது மிகச் சரி. இந்த படம் fast shutter speed (1/250 என நியாபகம்)-ல் எடுத்ததுதான். ஆனால் நெல்மணிகள் பறக்கும் வேகத்திற்கு இந்த shutter speed கம்மி என்பதால் அந்த நெல்மணிகளின் formation கிடைத்தது.
    அடுத்து..

    //
    SurveySan said...

    if its fast shutter, it doesnt explain why the old mans body blended with the tree/wall.

    btw, this is a 12 year old pic and is a scanned version not a digi :)
    //

    சர்வேசன், மேலேயே பதிலும் உள்ளது (this is a 12 year old pic and is a scanned version not a digi ). உங்களுக்காக மறுபடியும் அந்த print-ஐ எடுத்துப் பார்த்தேன்:-). print-ல் விவசாயியின் உடம்பிற்கும் மரத்திற்கும் வித்தியாசம் நன்றாகவே தெரிகிறது. ஆனால் scan (low resolution) செய்யும்போது அவர் உடம்பின் கட்டுக்களும் (Abs?), தென்னைமரத்தின் கட்டுக்களும் ஒரே நிறம் மற்றும் அமைப்பால் merge ஆனதுபோல் ஒரு தோற்றம். அவ்வளவு தான்:-). கொஞ்சம் படத்தை zoom செய்து பார்த்தால் உங்களுக்கே தெரியும்.
    விளக்க வாய்ப்பளித்ததற்கு நன்றி!

    ReplyDelete
  19. Amal, thanks for the explanation.

    I stand corrected :)

    ReplyDelete
  20. நாட்டாம தீர்ப்ப குத்தம் சொல்லறதா தயவுபண்ணி யாரும் தப்பா நெனக்கப்படாது.
    என்னைப் பொருத்தவரை அமலின் நெல்மணிகள் படமே முதலிடத்திற்கு வந்திருக்க வேண்டும். குறைகளற்ற அசத்தலான படம். நிறய மெனக்கெட்டிருப்பது நன்றாக தெரிகிறது.
    அவரது மற்ற படங்களிலும் கற்றுக்கொள்ள நிறய இருக்கிறது.

    Hard luck Amal!

    ReplyDelete
  21. மக்கள்ஸ், வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் !!

    ReplyDelete
  22. சூர்யா,

    //நாட்டாம தீர்ப்ப குத்தம் சொல்லறதா தயவுபண்ணி யாரும் தப்பா நெனக்கப்படாது.//

    அப்படியெல்லாம் லேசுல தப்பா நெனைக்க மாட்டோம். :)

    அமல் படம் பிடித்துப் போனதால்தான் ஸ்பெஷலா சொல்லியிருக்கோம். ஆனா, ஸ்கேன் பண்ணதாலோ என்னவோ, படத்துல வேண்டிய அளவுக்கு 'பன்ச்' இல்லாம‌யிருக்கு.

    ReplyDelete
  23. வெற்றி பெற்றவர்களுக்கு என் வாழ்த்துக்கள்!!!நெல் தூற்றும் படமே எனக்குப் பிடித்தது.

    ஓகே! ஜூலையில் இரவில் களமிரங்குவோம்!!!

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff