சமீப இடுகைகள்...

Disclaimer : Copyrights to the Photos shown in this blog belongs to the respective owner of the photo(s). Refrain Copying and using the photo from this blog with out permission from the owner of the photo.

Wednesday, February 18, 2009

பிப்ரவரி 2009 மாத பிட் போட்டி - முதல் பத்து இடங்கள்

அநியாயத்துக்கு படுத்திட்டீங்க மக்களே....
இப்படி ஆளாளுக்கு அழகழகா படம் எடுத்தா அப்புறம் என்னை மாதிரி நடுவர்கள் என்ன செய்வது.


மிகவும் சிரமப்பட்டு தேர்ந்தெடுத்த முதல் பத்து(எந்தவித வரிசைப்படுத்தலும் இல்லாமல்)



ஒப்பாரி


சூர்யா


அமல்


கைப்புள்ள


காரூரன்


கருவாயன்


கயல்விழி முத்துலெட்சுமி


பிரகாஷ்


MQN


நந்து


முதல் பத்தில் வராவிட்டாலும் கடைசியில் என்னை மண்டை காய வைத்த பிற படங்கள் சில (Special mention)
இவை மிக நல்ல படங்கள் தான் ,ஆனால் முதல் பத்து படங்களின் உயர் தரத்தினால் இவைகளின் சிறிய குறைகளும் பெரியதாக தெரிகிறது..

ஸ்ரீராம்

மறுக்க முடியாத ஆக்‌ஷன் படம்,ஆனால் காட்சியமைப்பில் சற்றே குறைபாடு.இடது பக்கம் தேவையில்லாமல் இருக்கும் மனிதரால் கவனம் சிதறடிக்கப்படுகிறது.சற்றே சுற்றியிருக்கும் பகுதிகளை வெட்டி விட்டு இன்னும் கவனத்தை ஆக்‌ஷனுக்கு எடுத்து சென்றிருக்கலாம்.

Truth

முகத்தை சுற்றிய இடங்கள் எல்லாம் overexposed.கூடவே அதிகப்படியான ப்ளாஷினால் படத்தில் செயற்கைத்தனம் சற்று அதிகமாகவே இருப்பது போன்ற உணர்வு.பிற்பகுதி வெள்ளையாக இல்லாமல் கருப்பாக இருந்தால் படம் எங்கேயோ போயிருக்கும்.சட்டையும் வெள்ளையாக இருப்பதால் படத்தில் contrast பெருமளவு அடிப்பட்டு போய்விட்டது.

நந்தகுமார்

இவரு அந்த இடத்துக்கு வருவாருன்னு அனுமானித்து காத்திருந்து எடுத்தீங்களா?? இல்லனா வரது பாத்து உடனே எடுத்தீங்களான்னு தெரியாது,ஆனா வருபவர் உங்களுக்கு தெரியாதவராக இருக்கும் பட்சத்தில் இது சூப்பர் டைமிங்.படத்தில் ஒளியமைப்பு மற்றும் framing வெகு பிரமாதம்.ஆனா படத்தை பார்த்தா ஆக்‌ஷன் படம் என்ற உனர்வு வராதது படத்தின் மிகப்பெரிய மைனஸ் :(

வெங்கட்நாராயணன்

அற்புதமான ஒளியமைப்பு இந்தப்படத்தில்.அதனால தான் இதே மாதிரி எடுக்கப்பட்ட ஜோவின் வசந்தகுமார் அவர்களின் படத்தை பின்னுக்கு தள்ளி இந்தப்படம் எனது கடைசி பதினான்கில் இடம் பிடித்தது.ஆனா படம் ரொம்ப சாதாரணமாக (cliched) இருந்ததால் மற்ற படங்களோடு ஒப்பிடும்போது அடிப்பட்டு போய் விட்டது.

இந்த முதல் பத்து படங்களை நான் தேர்ந்தெடுக்கும் போது பார்த்த விஷயங்கள்.

1.)தலைப்பிற்கு பொருத்தம்
2.)ஈர்ப்புத்தன்மை(இது மனிதருக்கு மனிதர் மாறுபடும்.ஒருத்தருக்கு பிடிச்சது ஒன்னொருத்தருக்கு பிடிக்காம போகலாம்.ஒருத்தருக்கு ரொம்ம்ம்ம்ப பிடிச்சது இன்னொருத்தருக்கு கம்மியா பிடிக்கலாம்.Its a variable factor)
3.)சாதாரண கோணத்தில் எடுக்காமல் வித்தியாசமாக எடுக்கப்பட்ட படங்கள்.வித்தியாசமான கருப்பொருள்களை கொண்ட படங்கள்
4.)ஷேக் ஆகாமல் தெளிவு,contrast,காட்சியமைப்பு,ஒளியமைப்பு சிறப்பாக அமைந்த படங்கள்.

சீக்கிரமே முதல் மூன்று படங்களோடு சந்திக்கிறேன். தனியாக உங்கள் படங்களை பற்றிய கருத்துக்கள் வேண்டுமென்றால் பின்னூட்டத்திலோ அல்லது மின்மடலிலோ தொடர்பு கொள்ளுங்கள்.நேரம் கிடைக்கும்போது மறுமொழி அளிக்கிறேன்.
வரட்டா?? :-)

23 comments:

Anonymous said...

Very Nice Selection !
All the Best for the Top 10 !!!
-nathas

வால்பையன் said...

முதல் படத்தில் பின்னிருப்பது(போவது) ஒரிஜினல் பஸ்ஸா? இல்லை இணைப்பா?

வால்பையன் said...

எல்லாம் அருமை!
திருவாளர் நந்து அவர்கள்
தண்ணீரின் ஆக்‌ஷனை மட்டும் படமெடுத்திருப்பது அவரது தண்ணி பற்றை காட்டுது.

ராமலக்ஷ்மி said...

அத்தனையும் அருமை. அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

முத்துலெட்சுமி-கயல்விழி said...

ஹைய்யா முதல் தடவையா .. என் படம் முதல் சுற்றுலயே வெளியே தள்ளப்படல.. :)

சரவணகுமரன் said...

அமல் அட்டகாசம்

சரவணகுமரன் said...

கைப்புள்ள கலக்கல்

priya said...

Congrats to top 10 winners:)

CVR said...

@வால்பையன்
தனது படத்தை பற்றி ஒப்பாரி ஒரு தனிப்பதிவே போட்டிருக்கிறார்.
படிச்சு பாருங்க :)

SurveySan said...

very good selection.

congrats to winners.

//ஹைய்யா முதல் தடவையா .. என் படம் முதல் சுற்றுலயே வெளியே தள்ளப்படல.. :)//

:) kalakkiputteenga! sema padam adhu!

தமிழ் பிரியன் said...

அத்தனையும் அருமை. அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

ஒப்பாரி said...

congrats to top 10
முதல் பத்தில் தேர்வானதில் மகிழ்ச்சி.

\\முதல் படத்தில் பின்னிருப்பது(போவது) ஒரிஜினல் பஸ்ஸா? இல்லை இணைப்பா?//

வால் பையன் அந்த படம் சர்ச்சைகுரிய படம் அல்ல. தனிப்பதிவு போட்டிருக்கேன்.

//ஹைய்யா முதல் தடவையா .. என் படம் முதல் சுற்றுலயே வெளியே தள்ளப்படல.. :)//

:) kalakkiputteenga! sema padam adhu!//

ரிப்பீட்டேய் , இதுவரைக்கும் நான் பார்த்த உங்க படங்களில் இதுதான் பெஸ்ட். வாழ்த்துக்கள்.

venkatnarayanan said...

நன்றி

ஏற்கனவே ஒரு புகைப்படம் அனுப்பியதால் இதில் உள்ள படங்களை போட்டிக்கு அனுப்ப முடியவில்லை.

http://picasaweb.google.co.in/nvenkatnarayanan/AeroShow#

படங்களை பற்றி உங்கள் கருத்தை சொல்லுங்கள் (+ve or -ve)

All pictures are taken with 1/3200 or 1/4000 shutter speed

நானானி said...

நானும் முத்துலெட்சுமியையே ரிப்பீட்டிக்கிறேன்!!

வென்றவர்களுக்கு வாழ்த்துக்கள்!!!

நான் ஆதவன் said...

எல்லா படமும் அருமை..அனைவருக்கும் வாழ்த்துகள்

நான் ஆதவன் said...

எல்லாப்படமும் அருமை. வாழ்த்துகள்

காரூரன் said...

வெற்றி பெற்ற எல்லோருக்கும் வாழ்த்துக்கள். எனது வேறு சில படங்கள் இந்த தளத்தில்.
http://colourfotos.blogspot.com

ஆ! இதழ்கள் said...

7வது ஃபோட்டோவிற்கு பின்னால் இருப்பது ஸ்கீரீனா?

படங்கள் அனைத்தும் .... முதல் தரம்.

PIT gets tougher.

முத்துலெட்சுமி-கயல்விழி said...

7 வது படத்தில் பின்னால் இருப்பது தட்டி போர்ட்.. ராமேஸ்வரம் கோயில் போன்றதொரு மண்டப அமைப்பு..தட்டி மங்கலான ஒன்றாக இருந்தது. அதனால் தெளிவாக இல்லை..

கார்த்திக் said...

நான் ரொம்ப ரசிச்ச படம் எல்லாமே வந்திருக்கு
அனைவருக்கும் வாழ்துக்கள்.

அதுலையும் எங்க ஊரு தொழிலதிபர்கள் நந்துணாவும்,சுரேஸ்ணாவும் தேர்வாகிருப்பது டபுல் சந்தோசம்.

சதங்கா (Sathanga) said...

அனைத்து படங்களும் அருமை.

கைப்புள்ளையின் கலக்கல் படம் ... ஒரு கனம் சிலிர்க்க வைத்தது உண்மை.

goma said...

அனைத்து படங்களும் அருமை என்று அமைந்து நடுவர்களை திக்கு முக்காட வைத்திருக்கும்.
தேர்வு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

Anonymous said...

naa anupna padam ungaluku vanthuducha nu enaku theriyalaye....epdi therijukrathu

Post a Comment

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

PiT இணைப்பு

வருகைப் பதிவேடு

PiT'ers in Flickr

PIT Group - View this group's photos on Flickriver

  © Blogger template 'Neuronic' by Ourblogtemplates.com 2008

Back to TOP