Wednesday, November 25, 2009

முன்னேறிய 15 'வாண்டுகள்'..

16 comments:
 
அன்பு நண்பர்களே, வாண்டுகள் தலைப்பு கொடுத்தவுடன் கொஞ்ச நாட்களில் ஒரு போட்டோவும் வராததை கண்டு கொஞ்சம் வெறுத்து தான் போனேன். அதே சமயம் சில நிபந்தனைகளை தளர்வு செய்த பின் இவ்வளவு படம் வரும் என்றும் நினைக்கவில்லை. அதற்கு அனைவருக்கும் என் நன்றி. வந்திருந்த படங்கள் அனைத்திலும் வாண்டுகள் இருந்தாலும் 3 படங்கள் இந்த தலைப்புக்கு கீழ் வருமா என்று யோசிக்க வைத்தது..

  1. amal
  2. prakash
  3. ramachandran.

இந்த படங்களை பார்த்தால் வாண்டுகள் என்று சொல்வதை விட,மிகவும் பரிதாபத்திற்குரியவர்களாக தான் தெரிகிறது..

பொதுவாக வாண்டுகள் எனும்போது அவர்களின் சேட்டையை வைத்தே அந்த பெயர். மேலே இருப்பவர்களின் பரிதாப நிலையில் அவர்களின் சேட்டையை எங்கே பார்ப்பது ?

இந்த படங்கள் `street photography, life on streets`போன்றவற்றிற்க்குக்கு கீழ் வருமே தவிர,வாண்டுகள் தலைப்புக்கு வராது என்பது எனது கருத்து.

குழந்தைகளின் தனிப்பட்ட பிரச்சனைகள் என்பது வேறு, உணவு,உடை,கல்வி,குழந்தை தொழில் போன்ற வாழ்க்கை பிரச்சனைகள் என்பது வேறு..

ஒரு குழந்தை குறும்பு அல்லது அடம் பண்ணி, சாப்பாட்டிற்க்கு வழியில்லாமல் அழுவதற்க்கும் நிறைய வித்தியாசம் உள்ளது..

குறும்பு பண்ணி அழற குழந்தைகளை படம் எடுக்கலாம்,அது வாண்டுத்தனம். ஆனா இந்த மாதிரி சோகம் அப்படி ஆகாதுங்க.

இந்த மாதிரி படம் எடுக்கும் போது, நம்மால சில நடைமுறை காரணங்களால் அவர்களுக்கு உதவி பண்ணுவதற்க்கு வழியில்லாமல் போகலாம்,அந்த மாதிரி நேரத்தில்,அவ்ர்களை நாம் சிரிக்கவாவது வைக்கலாம். அப்படி சிரிக்க வைத்து, படம் எடுத்து அவர்களுக்கு காட்டினால் எவ்வளவு சந்தோஷப்படுவார்கள். அல்லது அவர்களது போட்டோவை print போட்டு தரலாம்..கண்டிப்பாக அவர்கள் மிகவும் சந்தோஷப்படுவார்கள்.

அப்புறம் valli simhan மற்றும் yaar yaar.. இந்த படங்களை எப்படிங்க எடுத்துக்கிறது? அந்த வாண்டுகளே இப்போ பெரிய வாண்டுகளுக்கு அம்மா அப்பாவா இருப்பாங்களே என்ன சொல்றீங்க. படமும் சுத்தமா தெளிவின்றி இருக்கிறது.

கடைசி பத்து....

  1. VANDOKAL(over exposure)
  2. SRINI (poor composition,அழும் குழந்தை,flash அதிகம்)
  3. SELVA(poor composition,poor exposure)
  4. GURUPANDI(poor composition,subject எங்கே?)
  5. THIRUMAL(poor processing,focus)
  6. TULSI GOPAL(poor shot,poor focus,)
  7. ARURAN(தேதி,குழந்தையுடன் பெரியவங்க இருப்பது,தெளிவின்மை)
  8. ARUN(இதெல்லாம் லொள்ளு)
  9. GOPAL(harsh flash,nothing special)
  10. DAS(poor focus,flash)

தயவு செய்து நிறைய பயிலவும்.. நீங்கள் கற்றுக்கொள்ளவேண்டியது நிறைய உள்ளது..உங்கள் படங்கள் அனைத்தும் இன்னமும் அருமையாக எடுத்திருக்க முடியும். ஏற்கனவே சொன்னது தான். உங்களால் முடியும். நிறைய எடுத்துப் பழகுங்க.

கடைசி 10 க்கு அப்புறம் வெளியேறியவர்கள்....

படங்கள் தலைப்புக்கு ஏற்றபடி இருந்தாலும்,குறைகள் சில இருப்பதால் வெளியேறியவைகள்.....அரையிறுதிக்கு கிட்டதட்ட நெறுங்கிய படங்களும் உண்டு,அவைகளுக்கு மட்டும் இங்கேயே comment கொடுத்துள்ளேன்..

  1. DHANU
  2. NAGAPPAN( வெளிநாட்டுல போட்டோ புடிக்கிறது கஷ்டம் தான்,படம் நன்றாக இருந்தாலும் blur அதிகமாக உள்ளது)
  3. VANDU
  4. BUHAIRAJA
  5. PMT
  6. MANIVASAGAM(படம் நன்றாக இருந்தாலும் composition சிறப்பாக இல்லை)
  7. SIVARK
  8. BOOPATHI(same as manivasagam)
  9. DUDE
  10. MATHAN
  11. VISA
  12. RAGU
  13. GB
  14. MATHANLAL
  15. MURALI
  16. KAAVIYAM
  17. ARULRAJ
  18. VIJAY
  19. NANDAKUMAR
  20. VINOD
  21. ராஜேஷ்
  22. VENNILA MEERAN
  23. MUTHULETCHUMI
  24. MAN(I)MATHAN
  25. SEEMACHU
  26. KAMAL
  27. JEYA
  28. BHARATHI
  29. OPPAREE
  30. NARAYANAN( அழகான pose, blur அல்லது out of focus)
  31. KARTHIKEYAN ( same as nagappan)
  32. RAMALAKSHMI ( படம் தெளிவாக இருந்தாலும்,simple ஆக உள்ளது)
  33. RAGU
  34. NATARAJ

இன்னும் நல்லா படம் எடுங்க...இதெல்லாம் பத்தாது நண்பர்களே... மத்தவங்க பாத்து மெரண்டு போகனும். ரெடியா இருங்க அடுத்த போட்டிக்கு

அரையிறுதிக்கு முன்னேறியவர்கள்....

Udayabaskar Truth Tjay Senthil S.M.Anbu Anand Rajesh Natarajan Nirmala Devi.R Nila's Mom MQN Karthikero Karthik Karthi Sathiya Adith Ayilyan விரைவில் முதல் மூன்றுடன் சந்திக்கிறேன்... -கருவாயன்..

16 comments:

  1. முதல் பதினைந்துக்கு முன்னேறிய வாண்டுகளுக்கு நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. கலக்கல்.

    கடைசி பத்தை போட்டிருக்கீங்க. வீட்டுக்கு ஆட்டோ வந்தாலும் வரலாம் :)
    ஆனா, ஆக்கபூர்வமான அலசல், உபயோகமா இருக்கும் எல்லாருக்கும்.

    ReplyDelete
  3. ஆஹா நானும் தேரிட்டனா

    அனைவருக்கும் வாழ்துக்கள்

    இது கார்த்திகை மாசம்கிறதால
    அதிக கார்த்திகள் இருக்கோமோ :-))

    ReplyDelete
  4. முதல் 15க்கு நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  5. ஹையா.. ஜாலி.. 15 க்குள்ள திரும்பவும் வந்துட்டேன்.

    Rajesh Natarajan

    ReplyDelete
  6. ஒரு நண்பர்( anonymous) கடைசி 10 ஐ பற்றி வருத்தப்பட்டு எழுதியுள்ளார் அதை PIT முழுதாக வெளியிட முடியாது...அவர்க்கு எனது பதில்...

    கோவிச்சுக்காதீங்க anonymous உங்க கோபம் எனக்கு புரியுது... நான் எழுதியது கொஞ்சம் harsh தான்..எனக்கும் உங்களை மாதிரி கோபம் வந்ததால் அப்படி எழுத வேண்டிய நிலைமை.. எவ்வளவோ technology வந்து விட்டது..digital camera புரட்சி வந்த பின் நமக்கு போட்டோ எடுப்பதை மேலும் எளிதாக்கி தந்துள்ளது..அதையும் நாம் அழகாக பயன்படுத்தவில்லையென்றால் எப்படிங்க??

    இது புகைப்படபோட்டி,போட்டிக்கு என்று பார்த்தால், நான் முன்னர் சொன்னதில் தவறு இருப்பதாக எனக்கு தெரியவில்லை..சும்மா பொழுதுபோக்கிற்க்காக என்றால் நான் கண்டிப்பாக அப்படி சொல்லியிருக்க தேவை இருந்திருக்காது... நான் அப்படி சொல்வதும், நீங்கள் அடுத்த முறை நன்றாக படம் எடுக்க வேண்டும் என்ற் ஒரே நோக்கத்தில் தானே தவிர,கண்டிப்பாக உங்கள் யாரையும் தாழ்த்திக்கூறவில்லை..

    உங்களுக்கு அது காயப்படுத்தியிருந்தால்,அதை வெளியிடவில்லை...ஒ.கே ங்லா...

    ReplyDelete
  7. நண்பர்களே அனைவருக்கும் வணக்கம்..
    புதியவன் நான் இந்த தளத்திற்க்கும் போட்டோகிராபிக்கும்.. உங்களின் இந்த போட்டி முயற்ச்சிகள் அனைவரையும் ஊக்குவிக்கின்றன என்பதில் இருவேரு கருத்து இல்லை..

    என் முதல் முயற்ச்சியே எதோ ஓரளவு பரவாயில்லை என்று தேர்வானதில் மகிழ்ச்சியே.. எனினும் போட்டோகிராபியில் இன்னும் கற்று தேறவேண்டியது அதிகமே..

    போட்டியின் கடைசி தேதிக்கு பிறகே (இதே தலைப்பிற்க்கான) சில புகைப்படங்களை உங்கள் மேலான “கருத்திற்க்காக” மட்டும் இங்கே பகிர்ந்துள்ளேன்..

    http://picasaweb.google.com/pitcontests/PITNov2009#5407607278313538706

    http://picasaweb.google.com/pitcontests/PITNov2009#5407607284606282370

    http://picasaweb.google.com/pitcontests/PITNov2009#5407607287738972018

    தவறாமல் அனைவரும் தங்கள் கருத்துக்களையும் அறிவுரைகளையும் பதியவும் / பகிரவும்..

    ***
    நீதிபதிகள்/குழும நிர்வாகிகளுக்கு ஒரு வேண்டுகோள்!!

    ***

    இது போல் சிலர் / பலரின் வேறு சில புகைப்படங்களையும் இது போல் எதாவது ஒரு “ FOLDER ” இட்டு அனைவரின் கருத்து மட்டும் அறிவுரை வழங்க ஏன் ஆவன செய்யக்கூடாது??

    புகைப்படத்திற்க்கு.. PTI யில் போட்டோகிராபியின் கருத்து கேட்காமல் வேறு எங்கு கேட்பது??

    நன்றி..

    ரகு

    ReplyDelete
  8. முதல் பதினைந்துக்கு முன்னேறிய வாண்டுகளுக்கு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. அரையிறுதிக்கு தகுதி பெற்ற நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  10. முதல் 15 இடங்களுக்கு முன்னேறிய அனைத்து நண்பர்களுக்கும் பாராட்டுக்கள்...

    ReplyDelete
  11. MQN இன்னுமா நீங்க போட்டியாளரா இருக்கீங்க? உங்க படங்களை எல்லாம் பாக்கும் போது எனக்கு வெட்க வெட்கமா வருது. வாண்டு தலைப்புக்கு அருமையா பொருந்துற படம் உங்களோடது. Top class. வாழ்த்துகள்.

    ReplyDelete
  12. Nila's Mom உங்களோட படமும் தலைப்புக்கு நல்லா பொருந்துது. குழந்தையோட கண்ணுல குறும்பு தெரியுது பாருங்க...அங்கே தான் நிக்கிறீங்க நீங்க. அது தான் ஒரு சாதா குழந்தையை வாண்டு குழந்தையா மாத்துது :)

    இந்த படத்துக்கு Selective colouring நல்ல தேர்வு.

    ReplyDelete
  13. ரகு,

    //இது போல் சிலர் / பலரின் வேறு சில புகைப்படங்களையும் இது போல் எதாவது ஒரு “ FOLDER ” இட்டு அனைவரின் கருத்து மட்டும் அறிவுரை வழங்க ஏன் ஆவன செய்யக்கூடாது??

    ////


    பிளிக்கரில் பிட்டிக்கு என்று ஒரு இடம் இருக்கு, இதில் உங்களின் படங்களை இணையுங்கள்.

    இந்த பிளிக்கர் தளம் போட்டி படங்களுகளுக்கு மட்டும் இல்லை. உங்களின் அனைத்து படங்களுக்கும்.



    http://www.flickr.com/groups/pit-group/

    ReplyDelete
  14. வணக்கமுங்க கைப்புள்ள.....

    உண்மைய சொல்லனும்னா சாதா குழந்தைய வாண்டா ஆக்கள..நிலா எப்போவுமே வாண்டு தான்...ஆனா படம் எடுக்கும் பொது நல்லா ஒத்துழைப்பு குடுப்பா ...

    நன்றி

    ReplyDelete
  15. அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்,,,

    ReplyDelete
  16. Congrats to everyone!

    Special congrats to Suresh! Comment's ellaam konjam harsh'a dhaan pottirukkeenga. But ellaarum adhai konjam positive'a eduthukkanum. Naan film camera'la(non slr) photo edutha kaalathula, enga veetula Appa/Anna/Thambi ellaam idhai vida bayagaramaa ottuvaanga....adhukkaagave naan photography'a hobby'a eduthu kathukittu irukken. Ippo avangale paraatturaanga...

    Summa, "good", "parava illa", "Nice", "ok" appadeenu nallaa illaadha padangalukkum comment potta, adhanaala oru effect'um irukaadhu. Idhu varaikkum neraya per, en padathula kurai ennannu sollunga, sollunga'nu keppaanga....ippo adhai velippadaiyaa solli irukkaaru Suresh...avvalodhaan.

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff