Friday, November 27, 2009

முதல் மூன்று `வாண்டுகள்`.....

16 comments:
 
அன்பு மக்களே, முன்னேறிய 15 ல் இருந்து முதல் மூன்று இடங்களை பிடித்தது யார் என்பதற்க்கு முன் அரையிறுதியில் வெளியேறிய `வாண்டுகள்`பற்றி பார்ப்போம்.. ayilyan karthikero rajesh natarajan udhaya baskar t.jay senthil truth anbu anand karthik adith மேலே கூறிய அனைவரது போட்டோவும் கிட்டதட்ட ஒரே மாதிரியான portrait type படங்கள்... இதில், ayilyan - composition மற்றும் pose அழகாக இருந்ததால் அரையிறுதிக்கு வந்தது,வாண்டு தெளிவாக(sharpness) இல்லாததால் வெளியேறுகிறது.. karthikero - யதார்த்தமான அழகிய புன்னகைக்காக அரையிறுதிக்கு வந்தது, பின்னாடி(back ground) over white ,மேலும் இந்த மாதிரி (portrait) படங்கள் ஷார்ப்பா இருந்தால் தான் எடுபடும்..கொஞ்சம் ஒவர் exposure படத்தை tone மாற்றினால் மட்டும் போதாது.. rajesh natrajan - கலர்ஃபுல் பட்டாம் பூச்சி முகத்திற்காக அரையிறுதிக்கு வந்தது, ஆனால் தவறான crop மற்றும் தெளிவின்மை காரணமாக வெளியேறுகிறது.. anbu anand - selective colouring(கண்டுபிடிக்க முடியலை) மற்றும் different composition காரணமாக அரையிறுதிக்கு வந்தது, இடது பக்கம் crop செய்திருக்க வேண்டும் சுவர் distract செய்கிறது,அதே சமயம் poseம் இந்த தலைப்புக்கு எடுபடவில்லை.. அடுத்த குரூப்,இவங்க படங்கள் எல்லாம் கலர்ஸ் கொஞ்சம் தூக்கல்,மற்றும் நல்ல composition காரணங்களுக்காக முன்னேறியது.. udhayabaskar - உங்கள் வாண்டு அருமை, ஆனால் noise தொந்தரவு மற்றும் இந்த சேட்டை பத்தலைங்க.. tjay - pink கலர் dress,neat BG, நம் கண்களை இரண்டாக பிரிக்காத centered subject எடுபட்டாலும்.. 15 pixel camera வை இன்னும் நன்றாக பயன்படுத்தி தெளிவாக எடுத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்..அதுவுமில்லாமல் சொல்லி வைத்து எடுத்தது போல் உள்ளது. truth - வெளிநாட்டுல குழந்தையை எப்படியோ அழகா எடுத்த காரணத்திற்காக முன்னேறினாலும்..உங்கள் திறமைக்கு இந்த படம் தெளிவு குறைவு மற்றும் நல்ல ஒரு pose மட்டுமே..இது தலைப்புக்கு பத்தவில்லை.. adith - கொஞ்சம் அழகான green back ground மற்றும் நல்ல தெளிவான படம் காரணமாக முன்னேறியது...ஆனால் சிரித்திருந்தாலோ,வேறு உணர்வுகளை பிடித்திருந்தாலோ நன்றாக இருந்திருக்கும்.. அடுத்து குரூப் soft type, karthik - அட்டகாசமான புன்னகை, soft tone, பூ வைத்த அழகான சுருட்டை முடி எல்லாம் இருந்தும்,அநியாயமா கழுத்தை வெட்டி எடுத்த மாதிரி crop பன்னிட்டீங்களே..தவறான crop தான் வெளியேற்றுகிறது.. senthil - ரொம்ப அழகா படுத்துகிட்டு கேமராவை உற்று பார்ப்பது மிகவும் அழகு..அந்த பிஞ்சு இதழ்,கை இரண்டும் ஆளை இழுக்குது..ஆனால்,over soft foucs distract செய்கிறது.crop செய்திருக்கலாம்.. முன்னேறிய 15 ல் 10 வாண்டுகள் அரையிறுதியில் வெளியேறிவிட்டன.. இறுதி சுற்றுக்கு வந்த 5 வாண்டுகள், MQN sathiya karthi nila`s mom nirmala devi.r. இதில் மூன்றாம் இடத்திற்க்கு 3 வாண்டுகளிடையே போட்டி நிலவியது, அவர்கள் MQN,sathiya,karthi.. இதில் karthi யின் படம் கவிதை போல் உள்ளது.tone மற்றும் lightings மிகவும் அருமை.ஏதோ ஒன்றை இயல்பாக think பன்னுவது மிகவும் அழகு.முகத்தில் கொஞ்சம் மென்சோகம் தெரிவது போல் இருப்பது படத்திற்கு அழகாக இருந்தாலும் அதுவே இந்த `வாண்டுகள்` தலைப்பிற்கு perfect பொருத்தமாக இல்லை..அதனால் வெளியேறுகிறது...மற்றபடி வேறு குறைகள் ஏதுமில்லை நண்பரே.. அடுத்து MQN மற்றும் sathiya ஆகிய இருவரும் ஒரே மாதிரி எடுத்துள்ளனர்.. இவர்களில்,MQN நல்ல தெளிவாகவும் ,composition perfectஆகவும்,,,கண்கள்,உதடு இரண்டும் தேடுவதையும் அழகாக எடுத்துள்ளார்.. ஆனால் கொஞ்சம் இயற்கை தன்மை குறைவது போல் உள்ளது,மேலும் வாண்டை விட குளிர்பானம்(sprite) தான் கொஞ்சம் அதிகம் தெரிகிறது..அதனால் ஒரு விளம்பர படம் போல் உள்ளது.. ஆனால் sathiya வின் படமும்,தேடுகின்ற பொருளும் இயற்கை...கண்கள் பழத்தை ஆசையுடன் பார்ப்பது மிகவும் அழகாக உள்ளது.. இருந்தாலும், கொஞ்சம் exposure அதிகம், unusual crop size,50mm prime lens வேற,இத வெச்சு இன்னும் நல்லா தெளிவா எடுத்திருக்கலாம் என்பது என் கருத்து..கொஞ்சம் வாய் பகுதியும் தெரிந்திருந்தால் கலக்கலாக இருந்திருக்கும்.. இவர்களில்,MQN ன் வாண்டு, கொஞ்சம் set up type படமாக இருந்தாலும்,இவரது படம் நல்ல தெளிவானது,distraction எதுவும் இல்லாதது. போட்டிக்கு அனுப்பக்கூடிய ஒரு படம் எப்படி நல்ல தெளிவாக எடுக்கவேண்டும் என்பதற்கு இவர் படம் ஒரு முன்னுதாரனம் என்பதற்காக... மூன்றாமிடம் பிடிப்பது MQN இறுதியாக, முதலிடத்திற்கு போட்டி போடுவது nila`s mom மற்றும் nirmala devi.r... சபாஷ்... சரியான போட்டி... இவர்களில், nila`s mom படத்தில், நிலாவின் குறும்பு பார்வை ஒன்று போதும்..கொள்ளை அழகு..செலக்டிவ் கலரிங்கும் மிக அருமையாக வந்துள்ளது..compositionனும் அருமை,dressம் அருமை..ஆனால்,இவ்வளவு processing செய்திருந்தும்,முக்கியமான contrast மற்றும் sharpness மிஸ் ஆகுது..அதுவுமில்லாமல் red border படத்தின் அழகை கெடுக்குது.. nirmaladevi யின் படத்தில், focus error மற்றும் backgroundல் உள்ள வெயில் இரண்டும் கொஞ்சம் தொந்தரவு செய்தாலும், ஊஞ்சல் விளையாடும் அந்த குழந்தையின் சிரிப்பு, மற்றும் லேசா ஜட்டி தெரியற மாதிரி இயல்பா ஊஞ்சல் ஆட்டிவிடும் அழகும் எல்லா குறைகளையும் தூக்கி சாப்பிட்டு விட்டது..மொத்த படமும் ரொம்பவும் இயல்பாக வந்திருப்பது ப்ளஸ் பாயிண்ட்.. இதில்,இருவரின் படங்களிலும் சம அளவில் நிறை,குறைகள் இருந்தாலும், nila`s mom ன் வாண்டு படம் pose வகை.. nirmala devi யின் வாண்டுகள் விளையாட்டு, இயல்பான வகை.. எனவே,இரண்டாம் இடம் பிடிப்பது NILA`S MOM உங்கள் படம் இப்படி வ்ந்திருந்தால்,இன்னும் நன்றாக இருந்திருக்கும்.. இயல்பான படத்தை எடுத்தற்காக முதலிடம் பிடித்து வெற்றி பெறுவது.. NIRMALA DEVI.R. வெற்றியாளர்கள் மற்றும் பங்கு பெற்றவர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.... அப்புறம் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள், நீங்கள் கூற விரும்பும் கருத்துக்கள் எதுவாக (including குட்டு) இருந்தாலும் கண்டிப்பாக comments ல் தெரிவிக்கவும்.அப்பொழுது தானே எங்களுக்கு ஊக்கமாகவும், நாங்களும்(PIT) மென்மேலும் வளர முடியும்... நன்றி கருவாயன்..

16 comments:

  1. வெற்றி பெற்ற மூவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. நிலாஸ் மாம் அவங்க போட்டோதான் ஜெயிக்கும்ன்னு நினைச்சேன் அதுபோலவே ஜெய்ச்சுட்டாங்க வாழ்த்துக்கள்ங்க மற்ற இருவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. கலக்கல். வாழ்த்துக்கள்.

    MQN, ஒவ்வொரு மாசமு அசத்தறீங்க.

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள், மிகவும் ஆழமான் அளசல், எனக்கு பிடிச்சிருக்கு,புதுசா வரவங்க பயந்திருவாங்கன்னு தோனுது, எப்படியிருந்தாலும் நிறைய தெரிஞ்சிக்க முடியும்.

    ReplyDelete
  5. சொக்கா .....ஐயோ....சொக்கா....நன்றி மக்கா...

    .பக்கத்துல யாருமே இல்லியே...சொக்கா

    சத்தியமா சொல்றேன்...நம்பவே இல்லை முதல் மூணுல வருவேன்னு.....ஒரே சந்தோசமா இருக்கு....

    மறுபடியும் நன்றி.....நிர்மலா தேவி அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    MQN-க்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. ஒன்று மட்டும் சர்ப்ரைஸ், இரண்டும் மூன்றும் எதிபார்த்ததுதான். மூவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. வெற்றி பெற்ற முதல் மூன்று வாண்டுகளுக்கு வாழ்த்துக்கள்! ஆக்சுவலா, இந்த முறை நிஜ ஹீரோ நீங்கதான் கருவாயன்! இது முக ஸ்துதிக்காக அல்ல! அறுபது படங்களை அலசுவதே கொஞ்சம் கஷ்டமான வேலைதான். ஆனா, அதுக்கு கூட இந்தப் பாராட்டு இல்லை. பாராட்டு எதுக்குன்னா, சிலர் ஹார்ஷாக இருக்குன்னு சொன்னாலும் உங்களோட அக்கறையான விமர்சனங்களும் வார்த்தைகளும் உங்களுக்கு போட்டோகிராபியிலுள்ள ஆழமான காதலையே காட்டுதுன்றதாலதான்! அதனால உங்களுக்கும் ஒரு ஜே!

    ReplyDelete
  8. முதல் மூன்று இடத்தை பிடித்த NIRMALA DEVI.R, NILA`S MOM, MQN மூவருக்கும் வாழ்த்துக்கள்...

    உதயபாஸ்கர் சொன்னது போல சிறப்பு முதல் இடத்தை பிடித்தது நீங்கள் தான்... மிக பொருமையாக, நிதானமாக, உண்மையாக, புகைப்படக்கலையில் உங்களின் ஈடுபாட்டை முழுமையாக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  9. Congrats winners, very good selection and comments.

    ReplyDelete
  10. வாழ்த்திய எல்லாருக்கும் நன்றி.

    வெற்றி பெற்ற, பங்குபெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  11. வெற்றி பெற்ற மூவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. வெற்றி பெற்ற மூவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  13. அருமையான அலசல் அண்ட் உபயோகமான விளக்கங்கள். இந்த மாதிரி விமர்சனங்களை படிச்சாலே நிறைய கற்றுக்கலாம். வாழ்த்துக்கள் சுரேஷ்.
    வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  14. வெற்றி பெற்ற மற்றும் கலந்துகொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்..

    ”நடுவர்களுக்கு” கண்டிப்பா ஒரு ஜே போடனும்..மிக எதார்த்தமாக எடுத்த புகைப்படங்கள் மற்ற செயற்க்கையாக எடுக்கப்படுபவைகளை விட என்றுமே ஒரு படி மேலே என்று நிரூபித்ததற்க்கு..

    ReplyDelete
  15. வாழ்த்திய எல்லாருக்கும் நன்றி.

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff