Tuesday, November 10, 2009
2009 நவம்பர் மாத போட்டி, நிபந்தனைகள் சில தளர்வுகள்....
அன்பு மக்களே,
சிரமத்திற்கு மன்னிக்கவும்.. நான் சொன்ன மாதிரியே எல்லோரும் கண்டபடி திட்டியிருப்பீங்க... ஆனா,இவ்வளவு சீக்கிரம் நடக்கும்னு நெனைக்கவே இல்லை.. நான் முன்ன பின்ன வெளியே போயிருந்தா குழந்தைகளை படம் பிடிப்பது கஷ்டம்னு கொஞ்சமாவது தெரிஞ்சிருக்கும்.. இப்போ நல்லாவே புரிஞ்சுகிட்டேன்..
அதனால,கொஞ்சம் நிபந்தனைகளை மட்டும் தளர்த்திக்கொள்ளலாம் என்று முடிவுக்கு வந்துள்ளோம்..
தலைப்பு வாண்டு(கள்) தான், அதனால, ஒரு வாண்டு இருந்தாலும் பரவாயில்லை..கண்டிப்பா நீங்க ஒரு குழந்தையையாவது படம் எடுத்திருப்பீங்க..இந்த தலைப்பு உங்களுக்கு சிரமம் இருக்காது என்று நினைக்கிறேன் மக்களே...
ஆனா மக்களே, எங்க வீட்ல நானும் ஒரு குழந்தை மாதிரி தான்,அப்படின்னு உங்க photoவை அனுப்பீடாதீங்க...
ஆகவே,மீசை வெச்ச குழந்தைகளும்,தாவணி போட்ட தீபாவளிகளும் கண்டிப்பா கிடையாது...
மேலும்,இது வரையில் அனுப்பியவர்களுக்கும் இன்னொரு வாய்ப்பு தருகின்றோம்..
அவர்களும் இன்னொரு முறை அனுப்பலாம்..ஏனென்றால்,அவர்கள் இதை விட நல்ல படமும் வைத்திருக்கலாம்..
அதுவுமில்லாமல், மேலும் 5 நாட்கள் நீட்டிப்பு செய்கிறோம்,எனவே போட்டிக்கு புகை படங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி:20-11.2009
சில சாம்பிள்கள்...
என்ன மக்களே,இப்போ உங்களுக்கு சந்தோஷம் தானே... புதுசு புதுசா அசத்துங்க...
Subscribe to:
Post Comments (Atom)
நல்ல வேலை சொன்னீங்க, நான் ஒரு விபரீத முடிவுக்கு வந்திருந்தேன். தப்பிச்சுட்டீங்க :-)
ReplyDeleteஅருமையான தலைப்பு! புகுந்து வெளாடலாம்.
ReplyDeleteவரேன்..வந்துகிட்டே இருக்கேன்.
Photo sent......Please check.
ReplyDeleteI sent my photo today.
ReplyDeleteI sent my photo yesterday, but it does not appear in Picasaweb. Do I have to resend it again? Would you please confirm? Thanks.
ReplyDeleteAntha "Green Color" Gown potta pappa padam ungalodathu thaane. Athu listla irukke !
ReplyDeleteVera ethavathu padam anupuneengala ? appadi iruntha marubadiyum anupavum !
- nathas
athuthaan, ippo irukku! :) Thx
ReplyDeleteI have just sent in my photo today..
ReplyDeleteThanks.
Ragu
என்னோட வாண்டுகள் இங்க இறக்கி வெச்சிருக்கேன்.
ReplyDeleteபோட்டிக்கான தேதி முடிவடைகிறது..இனி வரும் புகைப்படங்கள் போட்டிக்கு ஏற்றுக்கொள்ளப்படாது..
ReplyDeleteநன்றி
கருவாயன்