வணக்கம் மக்கா,
முதலில், இந்த போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு எங்களுடைய நன்றியும், வாழ்த்துக்களும் !!!
இம்மாத வெற்றிப் படங்களை கீழே தந்துள்ளேன்.
மூன்றாம் இடத்தில்: மன்(ணி)மதன்
Mathan.jpg)
இந்த படத்தின் சிறப்பு கண்கள் தான். கோபமும், வருத்தமும் கலந்த பார்வை. அந்த ஜன்னல்(?) கம்பிகள் படத்திற்கு மேலும் வலு சேர்க்கிறது. படத்தை கொஞ்சம் நேர்(straighten) படுத்தி இருக்கலாம். மேலும் சிறுவனின் கைகள் முழுவதும் தெரிந்து இருந்தால் இன்னும் நன்றாக வந்து இருக்கும் என்று என் எண்ணம் :)
இரண்டாம் இடத்தில்: கருவாயன்
இவரு குழந்தைகளை வச்சு எடுக்கற படம் எல்லாம் கவிதை மாதிரி இருக்கு. அக்கா தம்பியோட(?) மகிழ்ச்சி நமக்கும் தொத்திக்குது. Backlite Hair is TooGood !. கொஞ்சம் டைட் க்ராப்.
முதல் இடத்தில:
Greg

தாயின் பூரிப்பு, குழந்தையின் சிரிப்பு, இவை இலகுவாக இந்த படத்தை முதல் இடத்துக்கு கொண்டு வந்துடுச்சு. இவரு பெரிய ப்ரொஃபஷனல் போல இருக்கு. இந்த படத்துக்கு எங்க எங்க லைட் வச்சு படம் எடுத்தீங்கன்னு சொன்னா எங்கள் அனைவருக்கும் உதவியா இருக்கும் :) இந்த படத்துல குறைன்னு பாக்கறப்போ கொஞ்சம் வெளிச்சம் ஜாஸ்தி :D
சிறப்பு கவனம் பெற்ற படம் -
MQN
மிக அருமையான படம். என்ன கண்கள் அது?. பட்டாஸா இருக்கு. ஆனா "உணர்வுகள்" என்ற தலைப்பு வரும் போது இந்த படத்தால முதல் மூன்று இடங்களில் வர முடியவில்லை :(
வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள் !!!
ஒவ்வொரு படத்திற்கான விமர்சனத்தையும் Picassa Web Albuthula போட்டாச்சு :)
...மேலும் படிக்க...
... பதிவுச்சுருக்கம்...
அனைவருக்கும் வணக்கம் !
ஏற்கனவே ஒருத்தர் சொன்ன மாதிரி இந்த மாசத் தலைப்பை "குழந்தைகள்" அப்படின்னு வச்சு இருக்கலாம். அம்புட்டு குழந்தை படங்கள். அவர்களிடம் தான் கள்ளம் கபடமில்லாத உணர்வுகளை காணலாம். இது கூட காரணமாக இருந்து இருக்கலாம் :)
முதல் சுற்றுக்கு தேர்வான படங்கள் கீழே !
1.) அனு

2.) அமல்

3.) மன்(ணி)மதன்
4.) MQN

5.) பூபதி

6.) யோக்பால்

7.) Greg

8.) ஒப்பாரீ

9.) அணிமா

10.) கருவாயன்

11.) நந்து f/o நிலா

12.) அன்பு

13.) சூர்யா
விரைவில் முதல் மூன்று மற்றும் மற்ற படங்களின் விமர்சனங்களுடன் சந்திக்கிறேன் :)
...மேலும் படிக்க...
... பதிவுச்சுருக்கம்...
வணக்கம் மக்கா,
இந்த முறை மற்றுமொரு சுவாரஸ்யமான தலைப்போடு வந்து இருக்கேன்.
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்னு சொல்லுவாங்க. நம் உள்ளத்தின் எண்ணங்களை/நிலையை பிறருக்கு சட்டுன்னு தெரிவிப்பது நம் உணர்வுகள் தான். மகிழ்ச்சி, சோகம், களிப்பு, கோபம், பெருமிதம், பொறாமை, நாணம், இயலாமை, வெறுப்பு, குறும்பு...... யப்பா இன்னும் எத்தனையோ இருக்கு. இந்த வாட்டி நீங்க உணர்வுகளை படம் பிடிக்க போறீங்க.
இந்த மாசத்தலைப்பு - "உணர்வுகள்" (Emotions)
போட்டிக்கான விதிகள் இங்கன இருக்கு
எடுத்துக்காட்டாக சில படங்கள் கீழே
ஜீவ்ஸ்

சர்வேசன் 
CVR

தீபா
நாதஸ்
உங்களுடைய உணர்வு குவியல்களை காண ஆவலோடு இருக்கிறேன் ! வாழ்த்துக்கள் மக்கா !!!
P.S: கோபமான உணர்வு வேணும்னு நீங்க யாரையாவது கோபப்படித்தி, உங்களுக்கோ உங்க புகைப்பட பெட்டிக்கோ எதாவது ஆச்சுன்னா அதுக்கு கம்பெனி பொறுப்பு கிடையாது :P
...மேலும் படிக்க...
... பதிவுச்சுருக்கம்...