Saturday, May 29, 2010

அதிகாலையும் அந்தி மாலையும் முதல் மூன்றும்!

19 comments:
 
மக்களே, கருவாயன் எங்கிற சுரேஷ் அவர்களுக்கு Fotoflock இல் இந்த மாதம் முதலிடம் பெற்றதற்கு மீண்டும் நாம் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டு இந்த மாத வெற்றியாளர்களை கவனிக்கப் போகலாம். அதற்கு முன்னால் நாம் சூரியோதய/அஸ்தமன புகைப்படங்களுக்கான அடிப்படைகளை மீண்டும் ஒரு முறை பார்ப்போம்
  • நல்ல படங்கள் கிடைக்க சூரியன் உதயம் ஆகும் அந்த நொடியில் இருந்து அதிகப் பட்சம் பத்து அல்லது பதினைந்து நிமிடங்களுக்குள் எடுக்கப் படவேண்டும்.
  • ஒரே மாதிரியான சிந்தனையில் இருந்து வெளி வந்து சற்றே வித்தியாசமாக சிந்திக்க வேண்டும். இல்லாவிட்டால் ஒரு வட்டம் சில "சில்ஹவுட்" மட்டுமே உங்களுக்கு கிடைக்கும்.
  • சில நேரங்களில் வேண்டுமானால் சில அற்புதமான படங்கள் கிடைக்கலாம். ஆனால் சூர்யோதயமோ அல்லது அஸ்தமனமோ தேவையான ஏற்பாடுகள் இல்லாமல் போனால் ஏனோ தானோ புகைப்படம் தான் கிடைக்கும். சில இடங்களை தேர்வு செய்து வைத்துக் கொண்டு அல்லது சூர்யோதயமோ அல்லது அஸ்தமனத்திற்கு குறைந்தது அரை மணிக்கு முன்பே கோணங்களை தேர்வு செய்து வைத்துக் கொண்டால் எதிர் பார்க்கும் நல்ல புகைப்படங்கள் கிடைக்கும்.
  • நிர்மலமான வானம் இருப்பதை விட மேகங்கள் நிறைந்திருந்தால் நன்று
  • படத்தில் சூரியன் இருந்தால் மட்டுமே அது சூர்யோதயம்/அஸ்தமனம் என்றில்லை. அதன் விளைவுகளை எடுத்துக் காட்டுவதாய் இருந்தாலும் போதும்.
  • வழக்கமாக சொல்லுவது தான். Follow the rule and Break it when you feel that will create better result.
  • ஒரே விதமான எக்ஸ்போஷரில்/செட்டிங்க் முயற்சிக்காமல் பல செட்டிங்கில் மாற்றி எடுக்க வேண்டும். உதாரணத்துக்கு ஒயிட் பேலன்ஸ். ஒவ்வொரு ஒயிட் பேலன்ஸ் செட்டிங்கிற்கும் ஒவ்வொரு விதமான படம் கிடைக்கும்
  • HDR முறை நல்ல பலன் தரும்
  • கேமராவின் "ஆட்டோ " செட்டிங்க் சன்ரைஸ்/சன்செட் க்கு தயவு செய்து உபயோகிக்காதீர்கள். எஸ்.எல்.ஆர் குடும்பஸ்த்தர்கள் மேனுவல் மோடிலும் பாயிண்ட்&ஷூட் குடும்பஸ்த்தர்கள் சன்செட் மோடிலும் வைத்து எடுங்கள்
  • சூரியன் கடலில் குளித்து தூங்கப் போன பின்பும் மிச்சமிருக்கும் ஒளிவண்ணக் கலவையை ட்ரைபாட் வத்து குறைந்த வேக ஷட்டரில் எடுத்துப் பாருங்கள். புகைப்படத்தின் இன்னொரு பரிமாணம் புலப்படும். எப்போதும் அபெர்ஷர் கொஞ்சம் அதிக அளவிலேயே இருக்கட்டும்.
  • உங்களைச் சுற்றி இருப்பவற்றை பார்த்துக் கொண்டே இருங்கள். அது புகைப்படத்திற்கு புதிய கற்பனையை ஊட்டும்.
  • உதயமோ அஸ்தமனமோ... பலமுறை சுட்டுக் கொண்டே இருங்கள். ஒவ்வொரு நிமிடத்திற்கும் சூரிய பகவான் தன் கிரணத்தையும் வண்ணங்களையும் மாற்றிக் கொண்டே இருப்பார்.
சரி இப்போது மூன்றாம் இடத்துக்கான புகைப்படம். இதற்கு இரண்டு பேர் போட்டி . இரண்டுமே என் பார்வைக்கு சமமானதாக இருந்ததால் மெர்வினும் நந்தகுமாரும் மூன்றாம் இடத்தைப் பகிர்ந்துக் கொள்கிறார்கள். இருவருக்கும் வாழ்த்துகள்.

சிறப்புக் கவனம் - ஹேமா - வித்தியாசமான சிந்தனையும் படப் பிடிப்பும். வாழ்த்துகள் ஹேமா
இரண்டாவது இடம். கமல். வாழ்த்துகள் கமல்.
முதலிடம் அமல். அருமையான காட்சியமைப்பு. பார்க்கும் போது நாமே அந்த இடத்தில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. மீண்டும் முத்லிடத்திற்கு வந்ததற்கு வாழ்த்துகள் அமல். வெற்றிப் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். மற்றவர்களுக்கு - ரொம்பவே அதிக டஃப் குடுத்திருக்கீங்க. ரொம்ப குறைவான வித்தியாசத்தில் தான் பின் தங்கி இருக்கிறீர்கள். அடுத்த போட்டியில் முதல் மூன்று இடம் உங்களிடம் இருந்து வர்ம் என்று வெகுவாக நம்புகிறேன். வெற்றியாளர்களைக் காட்டிலும் உங்களுக்கு என்னுடைய அதிக வாழ்த்துகள். மீண்டும் அடுத்தப் போட்டியில் சந்திப்போம். அமல், மீண்டும் வேண்டுகோள். இந்தப் புகைப்படம் எடுத்தவிதம் பற்றிய உங்கள் பதிவு தாருங்கள். அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

19 comments:

  1. அமலின் படம் மிகவும் அருமை..வாழ்த்துக்கள் அமல்..

    மேலும் மெர்வின்,நந்தகுமார்,ஹேமா,வாசி அனைவரின் படங்களும் அருமை.. வெற்றிக்கு வாழ்த்துக்கள் நண்பர்களே..

    மோசமான உடல்நிலையிலும் சரியான நேரத்திற்குள் முடிவுகளை அளித்த ஜீவ்ஸ்க்கு ஸ்பெசல் வாழ்த்துக்கள்(ஜட்ஜ்மெண்ட் ரொம்ப கஷ்டம்)

    -கருவாயன்

    ReplyDelete
  2. சரியான தீர்ப்பு. வெற்றி பெற்றவர்களுக்கு என் வாழ்த்துகள்!

    ReplyDelete
  3. Congratulations to Amal, Mervin, Nandhakumar, Hema and Vaasi. Long time I am following this site. Now I got a camera. I entered first time in the competition. It was interesting.

    ReplyDelete
  4. அருமையான தேர்வு.வாழ்த்துகள்.

    ராஜேஷ்

    ReplyDelete
  5. தேர்வான படங்கள் யாவுமே வெகு அருமை. அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

    விரிவாகக் கொடுத்திருக்கும் அடிப்படை விதிகள் பயனுள்ளவை. நன்றி ஜீவ்ஸ்.

    ReplyDelete
  6. வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!

    ReplyDelete
  7. பங்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் !!


    ஜீவ்ஸ் நல்ல கேமரா வாங்கி குடுத்தா அடுத்த போட்டியில் அசத்திவீடுவேன் :)

    ReplyDelete
  8. பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி
    //


    அவ்வ்வ்வ்
    ஜீவ்ஸ் புண்படுத்தி விடலையே :)

    ReplyDelete
  9. thanks to all. for selecting my picture.

    ReplyDelete
  10. நன்றி ... வெற்றி பெற்றவர்களுக்கு என் வாழ்த்துகள் !

    ReplyDelete
  11. ரொம்ப நாளைக்குப் பிறகு முதலிடம் வந்தது குறித்து மகிழ்ச்சி. வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.
    புகைப்படம் எடுத்தவிதம் பற்றிய குறிப்பை நேரம் கிடைக்கையில் அனுப்புகிறேன் ஜீவ்ஸ்!

    ReplyDelete
  12. மூன்றாவது முறையாக மூன்றாம் பரிசுக்கு என் படம் தேர்வு செய்ததற்கு மிக்க நன்றி.

    வெற்றி பெற்ற மற்ற போட்டியாளர்களுக்கு
    என் வாழ்த்துகள்.

    ReplyDelete
  13. பெயரை மாற்றிய நடுவர்களுக்கு நன்றி. புகைப்படம் அனுப்பாமலேயே பெயர் வந்திருக்க வியந்தேன். வெற்றி பெற்ற அனைத்துப்படங்களும் மிக்க நன்றாக இருக்கிறது. அமல் எப்பொழுதும் போலவே கலக்கல். கமல் நந்தகுமார் மெர்வின் ஆகியோருக்கும் வாழ்த்துக்கள். நடுவர் ஜீவ்ஸுக்கு ஜீவனே போயிருக்கும். வந்த படங்களில் நிறைய படங்கள் அருமையாக இருந்தது.

    வாசி

    ReplyDelete
  14. When will u announce the June compertition? Waiting.....

    ReplyDelete
  15. மிகவும் சிறப்பாக செயல் பட்டு வரும் எமது பிட் குழுவிற்கு வாழ்த்துக்கள் . வெற்றி கிடைத்தவர்களுக்கு தங்கள் சார்பில் சான்றிதல் எதாவது கொடுக்கும் வழக்கம் உண்டுமா எனக்கு உங்கள் நடைமுறை தெரியாதென்பதால் கேட்கிறேன்.

    ReplyDelete
  16. நன்றி நன்றி நன்றி

    எனது புகைப்படத்திற்கு 2வது இடத்திற்கு தேர்வு செய்தமைக்கு

    மிக்க நன்றி

    மீண்டும் 2வது இடம்... நானும் புகைப்படத்தில் தேறிவிட்டேன்...

    PiT குழுவினர்களுக்கும் ஜீவ்ஸ் அவர்களுக்கும் மற்றும் என் தேவதைக்கும் நன்றிகள் பல...

    (ஜீவ்ஸ் அண்ணாச்சி நேரம் கிடைக்கும் போது இதன் செய்முறை விபரமாக எழுதி அனுப்புகிறேன்...) நன்றி

    ReplyDelete
  17. உங்களது வலைப்பூவிற்கு முதன் முறை என்னுடைய வலைப்பூ ரசிகர் மூலம் விசிட் செய்தேன். மிக அருமையான முயற்சி. என் வாழ்த்துக்கள். இது போல புகைப்படக் கலை பற்றி தமிழில் இணைத்தளங்கள் இல்லையே என்று நினைத்த என்க்கு மிகவும் திருப்தியளிக்கிறது. புகைப்பட கலையை ஒரு 30 ஆண்டுகளாக நேசித்துவரும் என்க்கு இது மிகவும் மகிழ்ச்சியூட்டுகிறது.

    இந்த வலைப்பூவில் உள்ள எல்லா கட்டுரைகளையும் படிக்கவில்லை. படித்துவிட்டு விவரமாக எழுதுகிறேன்.

    ரவி நடராஜன்
    http://geniusraja.blogspot.com

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff