Thursday, May 6, 2010
தரை மட்ட படம் எடுக்க (Ground level Photography, DIY, Ground Pod )
வணக்கம் மக்கா,
கீழே உள்ள படம், அந்த பறவையோட Eye-Levelல எடுக்கப்பட்டது. அப்படி எடுக்கறதால நம்ப சப்ஜக்டோட profile முழுசா தெரியும், அதே சமயம் background நல்லா Out of Focus ஆகி disturbance இல்லாம இருக்கும்.
இந்த படத்தை தரைல படுத்துகிட்டு எடுத்தேன். இப்படி எடுக்கும் போது வெறும் கையில்(HandHeld) எடுக்கமுடியாது. நமக்கு வாகா இருக்காது, அதே சமயம் balance இருக்காது. சில ட்ரைபாட்கள் மட்டும் தான் தரை மட்டத்துக்கு விரிச்சு வைக்க முடியும், அப்படியும் அது முழுசா தரையோடு இருக்காது, கொஞ்சம் ஆட்டமும் இருக்கும். பெரும்பாலான ட்ரைபாட்களில் "Center Column" இருக்கும், அவற்றை தரை மட்டத்துக்கு விரிச்சு வைக்கவே முடியாது.
தரை மட்ட படம் எடுக்க ட்ரைபாட்களுக்கு மாற்றாக "Ground Pod" உள்ளது. அவற்றின் சில வகை "Panning Ground Pod" மற்றும் "Skimmer"
இதெல்லாம் காசு ரெம்ப கூட. இது எல்லாம் வாங்க முடியாது என்பவர்களுக்கு ஒரு எளிய மாற்று உள்ளது.
உங்ககிட்ட இருக்குற பழைய வானலிய எடுத்துகோங்க, அந்த வானலியின் "நடு சென்டர்ல" ;) ஒரு ஓட்டைபோட்டு, நீங்க வச்சு இருக்குற ட்ரைபாட் ஹெட் பொருத்துவதற்கு ஏதுவான ஒரு ஸ்க்ருவை மாட்டவும். உங்களுடைய "Ground Pod" தயார். விளக்கப் படங்கள் கீழே.
இந்த செய்முறை படங்களின் உதவி - http://taloncraft.com
வேறு வகையான "Ground Pod" செய்யும் முறை இந்த காணொளியில் விளக்கப்பட்டுள்ளது.
தரை மட்டத்தில் எடுக்கப்பட்ட மற்றும் சில படங்கள் -
இனிமேல் தரையில் உருண்டு புரண்டு படம் எடுக்க வேண்டியது தான் :)
பி.கு: ஆர்வக்கோளாருல நல்லா இருக்குற வானலியில் ஓட்டை போட்டு, சமையல் செய்வதற்கு திண்டாடினால் நாங்க பொறுப்பு கிடையாது ;)
Subscribe to:
Post Comments (Atom)
நல்ல உபயோகமான தகவல்களுடன் கூடிய பதிவும், படங்களும் அருமை நாதாஸ்!
ReplyDeleteSooperu..
ReplyDeleteRam
Sooperu..
ReplyDeleteRam
படங்கள் அனைத்தும் மிக மிக அருமை நாதஸ்... நல்ல உபயோகமான தகவலும் கூட..
ReplyDelete-கருவாயன்
juper :)
ReplyDeletearumaiyana pakirvu nathas
ReplyDeletesooooper idea - sooooper padam :)
ReplyDeleteSrini
அந்தக் கடைசிப்படம் கொள்ளை அழகு!
ReplyDeleteUseful idea. thanks.
ReplyDeleteஅருமையான தகவலுக்கு மிக்க நன்றி பாஸ்
ReplyDelete