Monday, May 3, 2010
Slow Sync Flashing, curtain sync
சமீபத்தில் ஒரு புகைப்படம் ஈமெயிலில் வந்தது. நம்ம ஜீவ்ஸ் அண்ணாச்சி அனுப்பியிருந்தாரு.
ஏதோ ஒரு பெருந்தகை Hannes Lochner என்றவரின் புகைப்படங்கள் அவை.
இவரு புகைப்படத் துறையில் வல்லவரு. அதை நீங்க அவரு எடுத்த புகைப்படங்களை பாக்கும்போதே புரிஞ்சுக்கலாம். எல்லா படங்களும் பட்டையை கிளப்பியது. ஒரு படம் 'எப்படி எடுத்திருப்பாரு' என்ற தேடலைத் தந்தது.
நான் மேலும் அளப்பதர்க்கு முன், படத்தை பாருங்க.
photo source: Hannes Lochner
சிங்கம் வயிறு ஃபுள்ளா சாப்பிட்டுட்டு ஹாப்பியா உடம்பை ஸ்ட்ரெச் பண்ணுது. அதை ஃப்ளாஷ் போட்டு எடுத்திருக்காரு. ஆனா, வானத்துல பாத்தீங்கன்னா, வட்ட வட்டமா ஒளிக்கீற்று தெரியுது. அநேகமா, நட்சத்திரங்களா இருக்கும். ஆனா, அந்த மாதிரி ஒளிக்கீற்று புகைப்படத்தில் வரணும்னா, ஷட்டரை ஒரு சில பல நிமிஷங்களாவது திறந்து வைக்கணும்.
எல்லா DSLRகளிலும், ஷட்டர் வேகத்தை விருப்பத்துக்கு ஏத்த மாதிரி திறந்து வைக்க முடியும்.
ஆனா, நீங்க 1/2 மணி நேரம் தொறந்து வச்சிருந்து, வானத்தை பாத்து க்ளிக்கினாலும், தரையில் இருக்கும் சிங்கம், அம்புட்டு நேரம், அந்த ஸ்ட்ரெட்ச் பண்ணி போஸ் கொடுத்து ஸ்டைலா நிக்குமா என்ன? குறைந்தது இரண்டு மூன்று விநாடிகளில், அது சோம்பல் முறிச்சுட்டு, அடுத்த மானை கபளீகரம் பண்ணக் கெளம்பிடும்.
இந்த மாதிரி நேரங்களில் தான் Slow Sync Flashing என்னும் யுத்தி உபயோகப்படும்.
எல்லா DSLR களிலும், இந்த வசதி இருக்கும். 'front/rear Curtain sync'னு சில கேமராவில் சொல்லியிருப்பாங்க. சிலதில், Slow Syncனே இருக்கும்.
இந்த சிங்கம் + வானத்தின் ஒளிக்கீற்றை படம் பிடிக்க:
1) ராத்திரி காட்டுக்கு போங்க
2) கேமரா. Manualல், போட்டு front curtain sync என்ற ஆப்ஷனை தெரிவு செய்து கொள்ளுங்கள்
3) ஷட்டர் வேகத்தை bulb modeல் வைத்துக் கொள்ளுங்கள் (bulb modeல், க்ளிக்கரை க்ளிக்கியதும், ஷட்டர் திறந்து விடும். பிறகு மீண்டும் க்ளிக்கரை அமுக்கியபின்னே மூடும்)
4) ஃப்ளாஷை திறந்து வைத்துக் கொள்ளுங்கள்
4) கேமராவை ட்ரைபாடில் பொறுத்தி வைத்துக் கொள்ளுங்கள்
5) சிங்கம் வந்து, ஹாஆஆவ்னு சோம்பல் முறித்ததும், கேமராவை க்ளிக்கவும்.
6) இப்ப ஃப்ளாஷ் பளிச்னு அடிச்சுடும். சோம்பல் முறிக்கும் சிங்கம் சென்ஸாரில் பதிஞ்சுடும்.
7) சிங்கம் சோம்பல் முறித்து முடித்ததும், உங்களை ஒரு லுக்கு விட்டுட்டு போயிடும். ஃப்ளாஷ் அடித்து முடிந்ததால், இனி சிங்கம் என்ன செய்தாலும், சென்ஸாரில் ஏறாது.
8) கேமரா இன்னும் ஷட்டர் திறந்தது திறந்த படி, வானத்தில் என்ன ஒளிக்கீற்று இருக்கோ, அதையெல்லாம் உள்வாங்கிக் கொண்டே இருக்கும். சிங்கம் இருக்கும் இடம் இருட்டாக இருப்பதால், ஏற்கனவே பதிந்த 'சோம்பல் முறித்தலை' சென்ஸார் தக்க வைத்துக் கொள்ளும்.
9) ஒரு 1/2 மணி நேரம் கழித்து, க்ளிக்கரை அமுக்கி, ஷட்டரை மூடவும்.
அம்புட்டுதேன். படம் ரெடி.
இப்ப, இந்த slow sync என்ன பண்ணிச்சுன்னு பாப்போம்.
slow syncல் இரண்டு வகை. நாம மேலே உபயோகிச்சது front curtain sync என்ற முதலாம் வகை. இந்த modeல், ஃப்ளாஷ் முதலில் பளிச்சுன்னு அடிச்சுடும், அப்பரம், ஷட்டர் நம் தேவைக்கேற்ப திறந்திருக்கும்.
இரண்டாம் modeல் (rear curtain sync), ஃப்ளாஷ், கடைசியில், ஷட்டரை மூடுவதற்க்கு முன் பளிச்சிடும்.
உங்க இடம், பொருள், ஏவலுக்கேற்ப, 1st slow sync அல்லது 2nd slow sync இவற்றில் ஏதாவது ஒன்றை தெரிவு செய்து, அமக்களமாய் எடுக்க வாழ்த்துக்கள்.
இந்த டெக்னிக்கில் எடுக்கப்பட்ட பல வகை படங்கள் ஃப்ளிக்கரில் பாருங்கள்.
நன்றீஸ்!
Subscribe to:
Post Comments (Atom)
Cool Technique !
ReplyDeleteOff-Camera Flash pathi ethavathu therincha sollunga. Flash payan paduthuvathaal exposure vithyaasama irukku.
அருமையான விளக்கம். ஃப்ளாஷ் அடிச்சப் பிறகு சிங்கம் நம்மைப் பார்த்துட்டுப் போய்டும்ன்னு சொல்றது மட்டும் தான் கொஞ்சம் டவுட்டா இருக்கு
ReplyDeleteDear Friends how can i try the Slow Sync Flashing in my camera. camera model is canon powershot A580
ReplyDeleteby
K.Ramesh
இந்த சிங்கம் + வானத்தின் ஒளிக்கீற்றை படம் பிடிக்க:
ReplyDelete1) ராத்திரி காட்டுக்கு போங்க.....
ஹஹ்ஹ .....படம் எல்லாம் நல்லா தான் வரும். ஆனால் இப்படி நேரம் கேட்ட நேரத்துல காட்டுக்கு போனால் எங்கட போடோக்கு மாலய போட்டுடுவாங்க அப்பு ....நல்லா தராங்க டீடைலு ...!!!!
இது flash இல்லாமே long shutter மட்டும் பயன்படுத்தி எடுத்த படம்!
ReplyDeletehttp://www.flickr.com/photos/abyss3/4356796152/
Ram
Do we have this option in Canon EOS 400D?
ReplyDeleteநாதஸ், off-camera flash பத்தி, மண்டபத்துல கேட்டு பதிவை தேத்தறேன் ;)
ReplyDeleteKVR, சிங்கம் பாத்துட்டுப் போகுமா போகாதுன்னு, ட்ரை பண்ணாம இப்படி டவுட் செய்வது சரியில்லை ;)
ReplyDeleteanonymous, in canon a580 its called "Slow Synchro" setting. check it out and let us know if you are not able to find it.
ReplyDeletecheck this out http://www.storyphoto.com/journalism/phototip_nine.html
chosenone, Ram, thanks for the visit.
ReplyDeleteRam, intersting pic.
Jayashree, in 400D, set it to manual, and in options its under custom function (C.fn) , #9.
ReplyDeleteThank you Surveysan I will try it
ReplyDeleteby
K.Ramesh
Thanks Surveysan. I will try it tonight.
ReplyDeleteIf I select 2nd slow sync, I am getting flash the moment I click the shutter, and then at the end of the shot, I am seeing one more flash. Is that the way it is supposed to work?
ReplyDeleteJayashree, it does fire twice in canon, even on my one. I am made to believe the 1st flash is for metreing and the 2nd on is the real flash.
ReplyDeleteso, i would assume, the desired effect would be achieved. check it out.