Friday, May 28, 2010

மே 2010 போட்டிக்கான முதல் கட்டத் தேர்வு.

12 comments:
 
வணக்கம் புகைப்பட ஆர்வலர்களே மற்றும் புகைப்படக் கலைஞர்களே! அந்தி மாலையும் அதிகாலையும் உங்களை மிகவும் கவர்ந்திருக்கிறது என்று வந்திருந்த படங்களைப் பார்த்ததுமே தெரிந்து விட்டது. முதல் சுற்றில் என்னைக் கவர்ந்த இருபத்தோரு படங்களை வைத்துப் பார்த்தேன். அத்தனையும் அழகு. அதற்காக முதல் சுற்றில் வராதவர்களின் படம் அழகில்லை என்று இல்லை. ஆனால் சிலவற்றில் அவை தவறிப் போயின. படத்தின் நடுவில் எழுத்துகள், படத்தை மீறித் தெரியும் பெயர் விளம்பரம், வெட்ட வேண்டியவற்றை வெட்டாமை, Flat Composition போன்ற சில காரணிகளால் அவை முதல் சுற்றில் தேர்வாகவில்லை. பொதுவாக ஊரில் சொல்லுவாங்க. துலக்க துலக்க பித்தளையும் தங்கம் அப்படின்னு. போட்டோவும் அப்படித்தான். எடுத்தப் புகைப்படத்தை யாரோ எடுத்த மாதிரி தயவு தாட்சண்யம் இல்லாம நீங்களே விமர்சிக்கனும். எங்கெங்க வெட்டனும்னு தோணுதோ அங்க வெட்டிடுங்க. அதுக்கு தேவையான பாடங்கள் ஏற்கனவே இங்கே விவாதிக்கப் பட்டிருக்கின்றன. மேலே இருக்கும் இருபத்தொன்றில் இருந்து அடுத்தக் கட்டத்துக்குப் போக வேண்டிய படங்களைத் தேர்ந்தெடுக்க பட்ட அவஸ்த்தை கொஞ்சம் அதிகம் தான். இருந்தும் என்னுடைய ரசனையின் பேரில் தேர்வு செய்த படங்கள் கீழே..











முதல் மூன்று படங்களுடன் விரைவில் சந்திப்போம். அதுவரைக்கும் வர்ட்டா...

12 comments:

  1. என் வானமும் முதல் சுற்றிலா? மிக்க மகிழ்ச்சி. கொலாஜ் ஐடியா அருமை.

    அடுத்த சுற்றுக்குத் தேர்வான படங்கள் ஜொலிக்கின்றன.

    அத்தனை பேருக்கும் என் வாழ்த்துக்கள்.

    //முதல் மூன்று படங்களுடன் விரைவில் சந்திப்போம்.//

    நடுவரே:)! நல்ல அவஸ்தைதான்:))!

    ReplyDelete
  2. அய்.. முதல் கட்டத்திற்கு என் படமுமா? நன்றி நன்றி..

    வெல்லப் போகிறவர்களுக்கு வாழ்த்துகள்..

    ReplyDelete
  3. இரண்டாம் கட்டத்துக்குத் தேர்வாகியுள்ள படங்கள் அத்தனையும் அருமை.

    என் வானமும் முதல் சுற்றிலா? மிக்க மகிழ்ச்சி!!!

    ReplyDelete
  4. I never believed that my photo would be selected for first round. But was very suprised to see that myself in round 2 selection. Bit anxious of finals but i am already happy and celebrations have started :P :P :P

    ReplyDelete
  5. என் அந்திவானம் முதல் சுற்றிலா.. ஆஹா!!! மிக்க நன்றி.

    இரண்டாம்சுற்றில் வந்திருக்கும் அத்தனையும் அருமை.
    தேர்ந்தெடுப்பது சுகமான அவஸ்தையாகத்தான் இருந்திருக்கும் :-))

    ReplyDelete
  6. நன்றாக இருக்கு உங்கள் தேர்வுகள்.

    ReplyDelete
  7. முதல் சுற்றில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. வணக்கம்
    நண்பர்களே

    உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.

    உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
    நன்றி
    தலைவன் குழுமம்

    www.thalaivan.com

    ReplyDelete
  9. அருமையான படங்கள். முதல் சுற்றில் வந்தவர்களுக்கும்,அடுத்த சுற்றில் வந்தவர்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
  10. nantri nantri nantri . muthalil mr karuvayan avargalukku valthukkal. muthal irandu idathai piditha nanpargalukku valthukkal. moontamidam thervanathirku migavum nantri judges. one more thanks

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff