Thursday, September 30, 2010

2010 அக்டோபர் மாத புகைப்பட போட்டி......

17 comments:
 
அன்பு மக்களே வணக்கம்...

கடந்த மாத போட்டியில் அருமையாக வளர்ப்பு பிராணிகள் படங்களை அனுப்பி கலக்கிட்டீங்க... வாழ்த்துக்கள்..

இந்த மாதத்திற்கான போட்டி என்ன வைக்கலாம் என்று யோசிச்சிக்கிட்டு இருந்தப்ப, என் வீட்டுக்கு வெளியே ஒரே குழந்தைகள் சத்தம்.. என்னென்னு போய் பார்த்தா எல்லா குழந்தைகளும் தன்னை மறந்து சத்தம் போட்டு நன்றாக விளையாடிக்கொண்டிருந்தார்கள்...

எல்லாம் காலாண்டு தேர்வு விடுமுறை என்பதால் இந்த விளையாட்டு... அவ்வளவு மகிழ்ச்சி..

`மாலை முழுவது விளையாட்டு` என்பது இப்பொழுதெல்லாம் இந்த மாதிரி விடுமுறை நாட்களின் மாலையில் மட்டும் தான் என்று சுருங்கிவிட்டதை நினைக்கும் போது வருத்தமாக இருந்தது.. தினமும் விளையாடினால் எவ்வளவு சந்தோசமாக இருக்கும்..

உடம்பு,மனசு இந்த இரண்டும் ஒரு சேர புத்துணர்வு அடைவது என்பது இந்த விளையாட்டினால் மட்டும் தானே..

எனவே, இந்த மாதம்,
போட்டிக்கான தலைப்பு ` விளையாட்டு`
போட்டிக்கான விதிமுறைகள்,எப்படி அனுப்புவது என்பது இங்கே... கானலாம்..
போட்டிக்கான கடைசி தேதி :15-10-2010













வாங்க மக்களே.. ஏதோ நம்மளால முடிந்த அளவு இந்த புகைப்பட போட்டியின் மூலமாக `விளையாட்டு` என்பது நம் அன்றாட வாழ்வில் மிக முக்கியம் என்பதை கொஞ்சம் விழிப்புணர்வூட்டுவோம்..

indoor games , outdoor games என்று எந்த விளையாட்டு வேண்டுமானாலும் விளையாடலாம்..ஆனா விதி மட்டும் விளையாடக்கூடாது..

ச்சும்மா பூந்து விளையாடுங்க மக்களே..

-கருவாயன்..

17 comments:

  1. நல்ல தலைப்புங்க சுரேஷ். எப்படியிருக்கீங்க. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. கலக்கல்.. இந்த மாசத்துலயாவது களத்துல இறங்கமுடியுதான்னு பாக்குறேன். ஹிஹி..

    ReplyDelete
  3. Sony - Cyber-shot T99 14.1-Megapixel Digital Camera - Black..


    Can you pls tell me about this Model. Am Planning to get this one

    ReplyDelete
  4. விளையாடிடலாம்!

    ReplyDelete
  5. பரக்கத், அபுதாபிOctober 5, 2010 at 2:33 PM

    கேனோன் டி5 மறறும் டி7 பற்றி விளக்கவும் - ப்ளீஸ். குறும்படங்கள் எடுக்க பொருத்தமான கேமராவா? ஆர்தர் வில்சன் - பாலாஜி சக்திவேல் புதிய படத்தில் பயன்படுத்தி வருகிறார்கள்.

    உங்களின் சேவை தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. @raja...

    sony T-99 கேமரா ஒரு features rich கேமராவாக தெரிகின்றது..பக்கமாக தான் release செய்திருப்பார்கள் போல் தெரிகின்றது..

    25-100mm zoom range ஓ.கே. தான்.
    aperture f3.5 தான்..கொஞ்சம் slow.

    மற்றபடி 3 இன்ச் LCD SCREEN ,hd video mode,touch screen,புதிய சென்சார் என்று பல பல attractive features நிறையவே உண்டு..

    ஆனால்,இந்த featuresகளால் picture quality என்பது இதற்கு முந்தைய விலை குறைவான கேமராவை விட சிறந்ததாக இருக்குமா என்றால் வாய்ப்பு கம்மி தான்..

    விலையும் கொஞ்சம் கூடுதலாக தெரிகின்றது..rs.12,000++ விற்கின்றார்கள் போல் தெரிகின்றது..

    உங்களுக்கு features முக்கியம் என்றால் , விலை பரவாயில்லை என்றால் இந்த கேமராவை வாங்குங்கள்..

    LCD பெரிதாக இருப்பதால் கண்டிப்பாக battery சீக்கிரம் தீரும்..

    அடுத்த முறை ஏதாவது சந்தேகம் இருந்தால் `கேள்வி-பதில்` பகுதியில் கேட்கவும்..

    -கருவாயன்..

    ReplyDelete
  7. @பரக்கத்...

    canon 5d and 7d கேமராவில் புதிதாக video mode அறிமுகப்படுத்தியுள்ளார்கள்.. இதில் புதிய முயற்சியாக திரைப்படம் எடுக்கின்றார்கள் என்பது உன்மை தான்.. ஆனால் அதன் result எப்படி என்பது படம் வந்தால் தான் தெரியும்.. கேமரா சிறியதாக இருப்பதால் ஒரு சில இடங்களுக்கு பெரிய வீடியோ கேமராவை எடுத்து செல்ல முடியாத இடங்களில் எளிதாக பயன்படுத்துவதற்காக இந்த கேமராக்களை பயன்ப்டுத்தலாம்..

    canon 7d ல் வீடியோ autofocus பயன்படுத்தி எடுக்கலாம்,அதே சமயம் shutter speed,aperture போன்றவற்றையும் வீடியோவில் நாம் கண்ட்ரோல் பன்னலாம்..

    அதே சமயம், இதன் சென்சார் என்பது வீடியோ கேமராக்களை விட பெரியதாக இருப்பதால் படத்தின் தரம் என்பது கண்டிப்பாக குவாலிட்டியாக இருக்கும்..

    அதே சமயம், நமக்கு பிடித்த பல்வேறு வகையான லென்ஸ்களை நம் விருப்பத்திற்கேற்ப மாற்றி பயன்படுத்தலாம்.. இதன் லென்ஸ் என்பது வீடியோ கேமராக்களின் லென்ஸ்களை விட கண்டிப்பாக குவாலிட்டியாக தான் இருக்கும்..

    இதெல்லாம் SLR கேமராவில் வீடியோ எடுப்பதால் வரும் நன்மைகள்..

    இவ்வளவு நன்மைகள் இருந்தாலும்,இந்த கேமராக்கள் சிறியதாக இருப்பதால் வீடியோவை ஆடாமல் எடுப்பது சற்று சிரமமாக தான் இருக்கும்..

    அதே சமயம், auto focus என்பது ரொம்பவும் slow வாக தான் இருக்கின்றது.. இது ஒருவரை ஆடாமல் இருக்க வைத்து படம் எடுப்பதற்கு ஓ.கே.. மற்றபடி ஓடும்,வேகமாக அசையும் படங்களை எடுப்பதற்கு இந்த வகை கேமராக்கள் வீடியோவிற்கு இப்போதைக்கு ஒத்து வராது..

    future ல் வரலாம்.. அப்படி வரும் பட்சத்தில் கண்டிப்பாக இது வீடியோ கேமராக்களை விட நல்ல ஒரு கேமராவாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை..

    அடுத்த முறை ஏதாவது சந்தேகம் இருந்தால் `கேள்வி-பதில்` பகுதியில் கேட்கவும்..

    -கருவாயன்..

    ReplyDelete
  8. Have sent my entry named "veera.jpg" to this month contest. :)

    ReplyDelete
  9. நேற்று படம் அனுப்பி விட்டேன். இன்னும் அப்டேட் ஆகவில்லையே.

    விளையாட்டு-அக்டோபர் PiT - போட்டிக்கான என் பதிவு.

    ReplyDelete
  10. என்ட்ரி ரொம்ப கம்மியா இருக்கு? எல்லாம் சேர்த்து போடுறீங்களா ?
    இந்த முறை நான் எஸ்கேப். வெற்றி பெறுபவர்களுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்......

    ReplyDelete
  11. I've sent my picture for the contest...

    ReplyDelete
  12. போன தடவை மாதிரியே இப்போதும் என் படம்,'Naanaai.jpg' பதிலாக Deepa.jpg / PVR.jpg என்று பதிவாகியிருக்கிறது(19-வது படம்). பெயர் மாற்றம் செய்யவும், தயவு செய்து. நன்றி!

    ReplyDelete
  13. இத்துடன் போட்டிக்கான படம் அனுப்பவேண்டிய நேரம் முடிவடைந்தது... இனிமேல் வரும் படங்கள் போட்டிக்கு ஏற்றுக்கொள்ளப்படாது..

    செஞ்சுரி அடிச்சிரலாம்னு பார்த்தா,குவார்ட்டர் தான் முடிஞ்சிருக்குதே..

    -கருவாயன்

    ReplyDelete
  14. நானானி, சரி பண்ணியாச்சு.

    ReplyDelete
  15. விளையாடும் குழந்தைகளின் உற்சாகம் ததும்பும் முகங்களை ஒரே ஒரு frame-லாவது கொண்டுவரலாம் என்ற எனது முயற்சி தோல்வியில் முடிந்ததால் இந்தமாதப்போட்டியில் பங்கு பெற முடியவில்லை. அடுத்த முறை முயற்சிக்கிறேன்.

    ReplyDelete
  16. PIT ஆர்வலர்கள் சந்திப்பு எப்போது? எங்கே?

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff