Thursday, October 28, 2010

2010 அக்டோபர் மாத போட்டி முடிவுகள்.... வெற்றி பெற்ற முதல் மூன்று `விளையாட்டுகள்`

11 comments:
 
அன்பு நண்பர்களே...

இந்த முறை `விளையாட்டு` போட்டியில் படங்கள் அதிகம் வரும் என்று ரொம்பவும் எதிர்பார்த்திருந்தேன்.. ஆனால் 26 படங்கள் மட்டுமே வந்திருந்தது எங்கள் வேலையை குறைத்தாலும் படங்கள் குறைவாக வந்தது சிறிது ஏமாற்றமே..

சரி இனி முதல் இடங்களை பிடித்தவர்களை பற்றி பார்பதற்கு முன் இறுதி சுற்று வரை வந்த படங்களை பார்ப்போம்..

1.மோகன் குமார்
2.வினோத்
3.சிவபரணீதரன்
4.சுபாஷ் சந்திரன்

5.சத்தியா

6.rasena.


இதில் சுபாஷ் அவர்களின் படத்தில் ,




இரு சிறுவர்கள் பிரம்மாண்ட செஸ் செட்டப்பை பார்த்து விளையாடுவதை அழகாக 10mm wide angle ல் படம் பிடித்துள்ளார்.. foreground focusing நன்றாக பயன்படுத்தி இருந்தாலும் பின்னால் சில distractions இருக்கின்றது..

அதுவுமில்லாமல் படத்தை பார்ப்பதற்கு சிறுவர்கள் விளையாடுவது போல் இருந்தாலும், இதில் விளையாடுவது என்பது முடியாது என்று நினைக்கின்றேன்..



அடுத்தது rasena,

ஒரு சிலருக்கு இது சாகஸ நிகழ்ச்சியாக தெரிந்தாலும் இதுவும் ஒரு வகை விளையாட்டு தானே.. அருமையாக கம்போஸ் செய்துள்ளார்..சப்ஜெக்ட்டும் அருமையாக வந்துள்ளது.. விமானம் புகையை அழகாக கக்கிக்கொண்டு ஒரு டைவ் அடித்துச்சென்றுள்ளது என்பதை புரிந்து கொள்ளமுடிகின்றது.. அருமை..

ஆனால், சில போர்டுகள்,பின்னால் தெரியும் கட்டிடம்?.. படத்தின் சப்ஜெக்டிடம் நமது கன்கள் செல்லாமல் தொந்தரவு செய்கின்றன.. இதுவே இப்படத்திற்கு ஒரு மைனஸ்..

அடுத்தது மூன்றாம் இடத்திற்கு போட்டி போடுவது,

சிவபரணீதரன் மற்றும் வினோத்.

இரண்டு பேருமே இரு நல்ல action படத்தை தந்துள்ளனர்..

இதில் வினோத் எடுத்திருப்பது ஒரு நல்ல action shot.. ஆனால் ரொம்பவும் wide ஆக க்ராப் இருப்பது பெரிய பலன் தரவில்லை..இருந்தாலும் பேட்ஸ்மேன் மற்றும் ஸ்லிப்பில் இருப்பவரின் action ம் அருமையாக இருக்கின்றது..

சிவபரணீதரன் அவர்களின் படத்தில் கலர்ஸ் அருமையாக வந்துள்ளது.. நல்ல காண்ட்ரஸ்ட்டுடன் action ம் நன்றாக வந்துள்ளது.. இருந்தாலும் இப்படத்தில் composition என்பது ஒரு சிறிய குறையே.. முக்கிய சப்ஜெக்ட் செண்டரில் இருப்பதும், மேலே டைட்டாக க்ராப்/கம்போஸிசன் செய்திருப்பதும் ஒரு குறை..

இவ்விரண்டு படங்களும் சமமாகவே இருப்பதால்

மூன்றாமிடம் பிடிப்பவர்கள்

சிவபரணீதரன்


மற்றும்

வினோத்



அடுத்து முதல் இடத்திற்கு போட்டி போடுவது சத்தியா மற்றும் மோகன்குமார்..

இவர்களில் மோகன்குமார் அவர்களின் படத்தில், ஒருவர் சைக்ளிங் விளையாட்டில் வேகமாக போவதை மிக அழகாக panning ஷாட்டாக படம் பிடித்துள்ளார்.. panning ம் குறையில்லாமல் வந்துள்ளது படத்திற்கு பலமாக உள்ளது.

அடுத்து சத்தியா அவர்களின் படத்தில், இரு வாண்டுகள் தன்னை மறந்து கடற்கரையில் மண் வீடு கட்டி விளையாடுகின்றனர்.. டைட் கம்போஸிசன் மற்றும் கொஞ்சம் சாஃப்ட் ஆக படம் இருந்தாலும் டோன் மற்றும் கடற்கரை பேக்கிரவுண்ட் படத்திற்கு அழகு சேர்ப்பதால் அது ஒரு குறையாக தெரியவில்லை..
இந்த சூழ்நிலைகளை பார்க்கும் போது நாமும் போய் மண் வீடு கட்டி விளையாடலாம் போல் உள்ளது.
அதுவுமில்லாமல் வெளிநாட்டில் குழந்தைகளை படம் எடுப்பது என்பது சிரமம் என்று கேள்விபட்டிருக்கின்றேன்.

இரண்டு படங்களும் சமமாக இருந்தாலும் முதலிடம் என்பது ஒருவருக்கு தான் என்று வரவேண்டியிருக்கின்றது.. எனவே,


இரண்டாமிடம் பிடிப்பது

மோகன்குமார்



முதலிடம் பிடிப்பது

சத்தியா


முதல் மூன்று இடங்களை பிடித்த அனைவருக்கும் PIT ன் வாழ்த்துக்கள்..

சரி நண்பர்களே.. இனி அடுத்த போட்டிக்கு தயாராகுங்க.. விரைவில் புது தலைப்புடன் உங்களை சந்திக்கின்றோம்..

நன்றி
கருவாயன்

11 comments:

  1. மிக நேர்த்தியான தேர்வு

    வெற்றிப் பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. வாழ்த்துகள்.. வெற்றி பெற்றவர்களுக்கு

    ReplyDelete
  3. இறுதி சுற்று வரை வந்தவருக்கும் முதல் மூன்று இடங்களைப் பிடித்த நால்வருக்கும் வாழ்த்துக்கள்! அருமையான தேர்வு.

    ReplyDelete
  4. பகிர்வுக்கு நன்றிங்க சுரேஷ். எனக்கும் இதில் கலந்து கொள்ள ஆசைதான். நல்ல கேமராவும் இருக்கிறது.....அடுத்த முறை கட்டாயமாக முயற்ச்சிக்க வேண்டும்.....நன்றி.

    ReplyDelete
  5. வெற்றிப் பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. please share comments about other photos which were sent for this contest too. I am learning now, and I would like to improve. Pl. Thanks.

    ReplyDelete
  7. Wow... Really happy to see my photo got selected for TOP 3... Will surely take your suggestions and would bring up a better photo for next competition...
    Many thanks....

    ReplyDelete
  8. ஹைய்யோ! மூன்று வருடங்களுக்கு முன் பிட் போட்டியில் முதன் முதலாக கலந்து கொண்டேன். அன்றையில் இருந்து இன்று வரை எனது படங்கள் முதல் இடத்தை பிடித்ததில்லை. இது தான் முதல் முறை. மிக்க மகிழ்ச்சி.

    இந்த முறை போட்டியில் கலந்து கொள்ளாதவங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி:) நான் ஒரு ஐம்பது படங்களாவது எதிர் பார்த்தேன். போட்டி கடுமையாக இருக்கும் என்று நினைத்தேன். ஏனென்றால் தலைப்பு அப்படி. ஆனால் எதிர் பார்த்த அளவு இல்லை.

    போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கும், வெற்றி பெற்றவர்களுக்கும் மற்றும் நடுவராக சிறப்பாக செயல் பட்டு கொண்டிருக்கும் சுரேஷ் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.

    எனது படம் சிங்கப்பூர் Sentosa தீவில் எடுக்கப்பட்டது. அந்த வாடுகளுக்கு தெரியாமல் மிகவும் தொலைவில் (200 mm) இருந்து எடுக்கப்பட்டது. இங்கு குழந்தைகளின் பெற்றோர் அருகில் இருந்தால் தான் படம் எடுப்பது சிரமம். சில வாண்டுகள் படம் எடுத்த பின்பு, அதன் பெற்றோரிடம் போட்டு கொடுத்து விடுவதும் உண்டு:)

    ReplyDelete
  9. என் படம் முதல் மூன்றில் வந்ததில் மிக்க மகிழ்ச்சி, வெற்றி பெற்ற மற்றவர்களுக்கு என் வாழ்த்துகள்

    ReplyDelete
  10. Congratulations.....
    1.மோகன் குமார்
    2.வினோத்
    3.சிவபரணீதரன்
    4.சுபாஷ் சந்திரன்
    5.சத்தியா
    6.rasena.

    ReplyDelete
  11. என்னுடைய பிறந்தநாளுக்கு இதை விட சிறந்த பரிசு வேற இருக்க முடியாது :)

    PIT குழுவினருக்கு நன்றி. வெற்றி பெற்ற மற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff