Tuesday, June 14, 2011

இறுதித் துளி - செய்முறை விளக்கம்

4 comments:
 
எல்லாருக்கும் வணக்கம்.

நேற்று என்னுடைய பதிவில் ஒரு படம் 'இறுதித் துளி' (Last Drop) என்று பெயரிட்டு போட்டிருந்தேன். 'Save Water' என்பது தான் அதன் கரு. அந்த படத்தை எப்படி எடுத்தீர்கள் என நண்பர் ஆதவன் கேட்டிருந்தார். அவருக்காக மட்டுமில்லாமல் எல்லாருக்கும் பயனாக இருக்கட்டுமே என எண்ணி இங்கு பொது விளக்கம். :)


இதுதான் அந்த படம்:



மிகவும் எளிதான படம் தான். இது எப்படி எடுக்கப்பட்டது என கீழே:

நான் பயன்படுத்தியவை...
* ஒரு வெற்று தண்ணீர் பாட்டில்
* ஒரு நீல நிற A4 அளவு காகிதம்
* நீல நிற பள்ளி பை
* tripod
* Ext flash with hot shoe
* அப்புறம் முக்கியமா கேமரா, மேக்ரோ(50mm) லென்சுடன்.

இதெல்லாம் இந்த படத்துல இருக்குற மாதிரி வச்சுக்கிட்டேன்.


இதுல, நீல நிற காகிதமும், நீல நிற பையும் flash வெளிச்சம் படும்போது அந்த நீல நிறம் (Aqua) கொடுப்பதற்காக. அது மட்டும் போதாது நீல நிறம் பெற. ஒயிட் பேலண்சையும் cool color range-க்கு (fluorescent WB என்னோட கேமராவுல) மாற்றிக்கொண்டேன். முக்கியமா ஃபிளாஷ் வெளிச்சம் பின்னணியில் மட்டும் படுமாறு வைத்துக்கொண்டேன். சிறியளவு வெளிச்சம் பாட்டில் மீது படுமாறு இருந்ததால், என்னுடைய மகளிடம் ஒரு வெள்ளைத் தாளை கொடுத்து பாட்டிலுக்கும் ஃப்ளாஷுக்கும் நடுவில் பிடிக்குமாறு செய்திருந்தேன்.

இடது புறம் உள்ள ஃப்ளாஷுக்கும் கேமராவுக்கும் ஒரு ஆள் அமரும் அளவுக்கும் இடைவெளி இருந்தது. அப்புறம் என்ன.... பாட்டிலின் நுணியில் ஒரு துளி தண்ணீரை இட்டேன். அதன் மீது மட்டும் ஃபோகஸ் படுமாறு இருக்க பெரிய aperture வத்துக்கொண்டேன். ஷட்டரின் வேகம் ஃப்ளாஷுக்கும் கேமரவுக்குமான sync speed 1/200 வைத்துக் கொண்டேன். அவ்ளோதான் கிளிக் கிளிக் கிளிக்.

EXIF: f/5.0;1/200;ISO-100; Ext Flash with Fluorescent White Balance.

கேமராவிலிருந்து எனக்கு கிடைத்த ரிசல்ட் இது...


அப்புறம்... பிற்சேர்க்கையில், நீல நிறத்தில் சிறிய மாற்றம் செய்தேன். அப்புறம் சிறிய சிறிய இடங்களில் cloning செய்தேன். அப்புறம் கொஞ்சம் ஷார்ப் ஆக்கினேன். அவ்வளவுதான் நம்ம படம் ரெடி. :)



ரொம்ப எளிதுதான் இல்லையா?.... நல்ல படங்களுக்கான 'கரு' நம்மைச் சுற்றிலும் விரவிக்கிடக்கின்றன. காண்பதற்கு கொஞ்சம் கலைக்கண் இருந்தால் போதும். :)

4 comments:

  1. இண்ட்லி’யில் இடாமைக்கு என் கண்டனங்கள்... சூப்பர் விளக்கம். நானும் கேக்கனும்’னு இருந்தேன். நம்ம கிட்ட உள்ள சின்ன கெமராவில் இதெல்லாம் முடியுமா?? என்பது கேள்விக் குறி..

    ReplyDelete
  2. விரிவான விளக்கம். பிற்சேர்க்கை செய்த விதமும் அருமை.

    //நல்ல படங்களுக்கான 'கரு' நம்மைச் சுற்றிலும் விரவிக்கிடக்கின்றன. காண்பதற்கு கொஞ்சம் கலைக்கண் இருந்தால் போதும்.//

    உண்மைதான்:)!

    நன்றி.

    ReplyDelete
  3. //நம்ம கிட்ட உள்ள சின்ன கெமராவில் இதெல்லாம் முடியுமா??//

    இதை Entry level DSLR அல்லது Point-and-Shoot Camera with Manual மோட் கேமராக்களில் எடுக்கலாம். முக்கியமாக கவனிக்கவேண்டியது Apreture மற்றும் வைட் பாலன்ஸ். நல்ல செய்முறை விளக்கம். Flash power எவ்வளவு வைத்தீர்கள் என்பதை குறிப்பிடவும்.

    ReplyDelete
  4. ஃபாயிக், இந்த இடுகையின் பின்னுட்டங்களை நான் கவனிக்கவில்லை. மன்னிக்கவும்.

    உங்களுக்கு தெளிவாகவும் சரியாகவும் பதிலளித்த மீனாட்சிசுந்தரத்துக்கு நன்றி.

    ஃபிளாஷ் பவர் - நான் மேனுவல் மோடில் 1/8 பயன்படுத்தினேன்.

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff