Monday, January 30, 2012

போஸ் கொடுப்பது எப்படி?

7 comments:
 
PiTல், கடந்த சில வருடங்களில், காமெரா வாங்குவதிலிருந்து, ஒரு காட்சியை கட்டம் கட்டி சரியாக க்ளிக்குவது, க்ளிக்கிய படத்தை பிற்சேர்க்கையில் சரி செய்வது என சகல வித்தைகளையும் கற்று வருகிறோம்.


இன்னும் கற்றுத் தேரவும், பகிரவும், நிறைய விஷயங்கள் இருந்து கொண்டே இருக்கும். கலை சம்பந்தப்பட்ட விஷயம் எதுவா இருந்தாலும் இப்படித்தான். முடிவே இல்லாம தொடர்ந்துகிட்டே இருக்கும். கற்க கற்க நம் திறமை மேம்படும். 
 ஸோ, கற்போம், கலக்குவோம்.


 இவ்வளவு வருஷம் கடந்தும், நான் இன்னும் இந்தத் துறையில் கத்துக் குட்டிதான். ஆயிரமாயிரம் படங்கள் எடுத்திருந்தாலும், இன்னமும் கூட, ஒரு காட்சியை ஒரே க்ளிக்கில் பதிந்துவிட முடிவதில்லை. அஞ்சு பத்து தடவை ஒரு காட்சியை வேறு வேறு அளவுகளில் எடுத்தால்தான் அதிலிருந்து ஒன்றை ஓரளவுக்கு தேற்ற முடிகிறது.


ஒவ்வொரு புகைப்படுமும், உலகில் வேறு எந்த ஒரு புகைப்படத்திலும் இல்லாத ஒரு  தனித் தன்மையை தன்னுள் கொண்டுள்ளது. அந்த நொடியில், அந்த வெளிச்சத்தில், அந்த கோணத்தில், அந்த அள்வுக் கோல்களில், அந்தக் காட்சியை, வேறு எந்த புகைப்படமும் எடுத்ததுமில்லை, இனி எடுக்கப் போவதுமில்லை.
இப்படி ஒரு தனித்தன்மை வாய்ந்த ஒரு  நிகழ்வை காலம் கடந்தும் மற்றவர்கள் காணும் வாய்ப்பை உங்களின் ஒரு க்ளிக் அளிக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். Click, responsibly :)


கொசுவத்தி போதும், இனி தலைப்புக்கு வாரேன்.

இது நாள் வரையில், காமெராவுக்கு பின்னால் நின்று இயக்க என்னென்ன செய்யணும்னு பாத்துட்டு வந்தோம், இன்னிக்கு, காமெராவுக்கு முன் நீங்கள் இருந்தால், அந்தக் காட்சியை எப்படிக் கையாளணும்னு  பாப்போம்.

என் நட்பு வட்டத்தில் ஒரு பாலாஜி இருக்கான். இருபது பேர் ஒரு படத்தில் கூட்டமாய் இருந்தாலும், அவன் மட்டும் தனியாய் தெரிவான். காரணம், சிரித்த முகத்துடன் புததுணர்ச்சி பீய்ச்சும் அவன் முகம். எல்லாரும் சிரிச்சா படத்தில் நல்லாத்தான் பதிவோம், ஆனா, நம்மில் சிலர் செய்யும் தவறு, ஓவராய்ச் சிரித்தல். படத்துக்கு போஸ் கொடுக்கும்போது, அழகாச் சிரிங்க, ஆனா செயற்கைத் தனம் இல்லாம, எப்பவும் சிரிக்கரமாதிரி அளவா அழகாச் சிரிங்க.

பாலாஜி அப்படின்னா, மகேஷ்'னு ஒருத்தன் இருக்கான். இவன் வேர மாதிரி. இவனுக்கு, புகைப்படத்துக்கு போஸ் கொடுப்பது பிடிக்காது. படம் நிறைய எடுத்தா ஆயுசு கொரஞ்சிரும்னு நம்பர கோஷ்ட்டி. ஒருத்தர் உங்களை படம் பிடிக்க ரெடியாயிட்டாருன்னா, சில நேரங்களில் தப்பிக்க வழி இருக்காது. அந்த மாதிரி நேரங்களில், கப்பல் கவிழ்ந்தது போல் முகத்தை வைத்துக் கொள்ளாமல், மனசை லேசாக்கி, கொஞ்சமாவது முகத்தில் ஒரு மலர்ச்சியைக் காட்டிடுங்க. நீங்கள் இருக்கும் படம், பல வருஷங்க்களுக்கு, பல நபர்களால் பார்வையிடப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

மகேஷு அப்படின்னா, வெங்கின்னு ஒருத்தன் இருக்கான். அவன் படத்துக்கு போஸ் கொடுக்கும்போது சிரிப்பான். ஆனா, ஷட்டரை அமுக்கரதுக்குள்ள, அட்டென்ஷன் போஸ்ல  வெரப்பா நிப்பான். ஃபோட்டோவுல மத்தவனெல்லாம் ரிலாக்ஸ்டா இருக்கும்போது, இவன் மட்டும் விரைப்பா நிப்பான். எப்பவுமே, காமெராவுக்கு நேரா கட்ட்டம் மாதிரி நிக்காம, கொஞ்சம் அந்தப் பக்கமோ, இந்தப் பக்கமோ திரும்பி நின்னு, ஒரு மாடல் கணக்கா போஸ் கொடுக்க முயற்சி செய்யுங்க, நச்சுனு இருக்கும்.

உங்க முக அமைப்பு உங்களுக்கே தெரியும். வட்ட முகமா? நீட்டு முகமா? சீரான முகமா? மூக்கு ஷார்ப்பா? நெத்தி பெருசா? உங்க முகத்தை எந்தக் கோணத்திலிருந்து  ப்டம் புடிச்சா, அழகா தெரியும்னு காமெரா காரனை விட உங்களுக்குத் தான் தெரியும். ஷட்டரை திறக்கும் முன், சடால்னு திரும்பி, 'பக்கா'வான கோணத்தில் முக அமைப்பை காமெராவுக்கு காட்டுங்கள். அழகாய்த் தெரிவீர்கள்.

சமீபத்தில் நடந்த ஒரு ஆய்வில் என்ன கண்டுபிடிச்சிருக்காங்க தெரியுமா? ஆண்கள் புகைப்படத்துக்கு போஸ் கொடுக்கும்போது, தலையை சற்று பின்னாக நகர்த்தி தூக்கி, காமெராவுக்கு சற்று  மேலாக பார்த்தாலும், பெண்கள் சற்று முன் பக்கமாக தலையை நகர்த்திப் பார்த்திருந்தாலும், ஃபோட்டோ டாப்பாக வருமாம்.

வேறென்ன? போஸ் கொடுத்து ஜமாய்ச்சிடுவீங்கல்ல இனி?

source: http://lifehacker.com/5879115/how-to-look-your-best-in-photos

pic: vino.b


7 comments:

  1. அருமை:)!

    கொடுத்திருக்கும் லிங்கில் உள்ள குறிப்புகளும்..!!

    ReplyDelete
  2. \\ஆண்கள் புகைப்படத்துக்கு போஸ் கொடுக்கும்போது, தலையை சற்று பின்னாக நகர்த்தி தூக்கி, காமெராவுக்கு சற்று மேலாக பார்த்தாலும், பெண்கள் சற்று முன் பக்கமாக தலையை நகர்த்திப் பார்த்திருந்தாலும், ஃபோட்டோ டாப்பாக வருமாம்\\.
    superb..

    ReplyDelete
  3. பயனுள்ள பதிவு

    ReplyDelete
  4. உங்க நண்பன் வெங்கி போல நிறைய பேரு தேசிய கீதம் போட்டது போல நேரா நிமிர்ந்துதான் போஸ் குடுப்பாங்க.. செம காமெடியா இருக்கும்...

    ReplyDelete
  5. அழகாக உள்ளது ! பயனுள்ள பதிவு ! வாழ்த்துக்கள் ! நன்றி நண்பரே !

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff