Thursday, September 18, 2008

PiT மெகா போட்டி வாக்கெடுப்பு ஆரம்பம்

41 comments:
 
வாங்க மக்கள்ஸ்.

PiT மெகா போட்டியின் இறுதிச் சுற்றுக்கு முப்பதொன்று படங்கள் வந்துள்ளன. கட்டமைப்பு/Architecture கொஞ்சம் சிரமமான தலைப்பாச்சே, சரியா வருமான்னு ஒரு சின்ன நெருடல் இருந்தது.
ஆனா, எல்லாரும் அனாயாசமா அடிச்சு ஆடிட்டாங்க.
ஒவ்வொரு படம் கட்டம் கட்டியிருப்பதைப் பார்க்கும்போதும், க்ளிக்கியவரின் உழைப்பும், கலைப் பார்வையும் தெரிகிறது.

கலக்கிட்டீங்க! ரியலீ!

ஒரு வருஷத்துக்கு முன்னாடி நாம எல்லாம் க்ளிக்கியதர்க்கும், இன்னிக்கு ஒரு காட்சியை க்ளிக்குவதர்க்கும், நல்ல மாற்றம் இருக்கிறது.
க்ளிக்கரை அமுக்குவதர்க்கு முன், இது சரியா இருக்குமா, பாக்கரவங்கள இழுக்குமான்னு, ஆயிரத்தெட்டு கேள்விகள் மனசுல தோணுது.
இந்த பொறுப்பான எண்ணமே நாம் கற்ற பாடங்களின் வெற்றிதான் ;)

இனி வள வளன்னு இழுக்காம மேட்டருக்கு வரேன். :)

அறிவிப்பின் போது சொன்ன மாதிரி, முதல் மூன்று படங்களை, இம்முறை, வாசகர்களின் வாக்கெடுப்பையும், PiT குழுவினரின் மதிப்பெண்களையும் கூட்டிக் கழிச்சு, தேர்ந்தெடுக்கப் போகிறோம்.

without further ado, கீழே வாக்குப்பெட்டி இருக்கு.

மொத்தம் மூணு வாக்குப்பெட்டி இருக்கு.
உங்களுக்கு எந்த படம் முதல் பரிசை பெறவேணும்னு தோணுதோ, அந்தப் படத்தை முதல் பெட்டியில் சூஸி, வாக்களிக்கணும்.
எந்தப் படம் இரண்டாம் பரிசு வாங்கணும்னு நெனக்கறீங்களோ, அந்தப் படத்துக்கு இரண்டாம் பொட்டியில் வாக்களிக்கவும்.
மூன்றாம் பரிசு படத்துக்கு, மூணாம் பொட்டி.
Got the point?
தயவு செய்து, மூன்று வாக்குகளையும் அந்தந்த பெட்டியில் மறவாமல் போடவும்.

இதில் வரும் வாக்குகளையும், குழுவினரின் மதிப்பெண்களையும், கலந்து, ஜனநாயக முறைப்படி, வெற்றியாளர்களை தெரிவிப்போம்.
என்னாது? கணக்கு இடிச்சுதுன்னா என்னா பண்ணுவமா? PiT குழுவுல கணக்கு(maths) பட்டதாரிகளெல்லாம் இருக்கோம்ல. படிச்சது யூஸ் பண்ண இதவிட நல்ல வாய்ப்பு வேறெங்க கெடைக்கும்? ;)

வாக்குப்பெட்டி 22ஆம் தேதி இரவு மூடப்படும்.

எங்க கெளம்பிட்டீங்க? வாக்கு போடரதுக்கு முன்னாடி எல்லா படங்களையும் இங்க க்ளிக்கி ஆர அமர பாத்துட்டு வாக்குப் போடுங்க மக்கள்ஸ். ஒவ்வொரு படத்தின் மேலும் க்ளிக்கி, அந்த படத்தை பெருசா பாத்து நல்லா அனுபவிச்சு ஆராஞ்சு, உங்க வாக்கை முடிவு பண்ணுங்க.


நல்ல படம் வெல்லட்டும்!

(please be patient while the survey loads, and please vote in all 3 boxes separately. Use firefox to view the album using the above link to get the pics in the same order as it is listed in the survey. thanks!)

வாக்கெடுப்பு முடிவடைந்தது. முடிவுகள் விரைவில்!

பரிசு: மெகா போட்டியாச்சே பரிசில்லாமலா? ரூ.3500 மொத்தப் பரிசுத்தொகை.
முதல் பரிசு: ரூ 2000, இரண்டு: ரூ 1000, மூன்று: ரூ 500.

ஸ்பான்ஸர்ஸ்: CVR (ரூ1000), மதுமிதா (ரூ1000), நிஜமா நல்லவன் (ரூ1000), ஜீவ்ஸ் (ரூ500).

பங்கு பெற்று சிறப்பித்த அனைத்து படைப்பாளிகளுக்கும் நன்றிகள்.
ஸ்பான்ஸர்ஸுக்கு ஸ்பெஷல் டாங்க்ஸ்!!!

வாக்கெடுப்பு இனிதே துவங்கட்டும்!

-சர்வேசன்

41 comments:

 1. சொல்ல மறந்துட்டேன்.

  படங்களைப் பற்றிய கருத்துக்களை பகிர்ந்து கொள்ளா மறவாதீர்.

  ReplyDelete
 2. நடுவர்கள் படங்களைப் பார்த்து எந்தப் படத்தை தேர்ந்தெடுப்பது என்று திண்டாடியதைப் பார்த்து மகிழ்ந்த ரசிகர்களே, இன்று நீங்களும் அந்த திண்டாத்தில் திளைப்பீர்களாக

  ஆமென்

  :))

  ReplyDelete
 3. எல்லப்படங்கலுமே அருமை

  யாருக்கு ஒடுப்போடுரதுன்னே தெரியலை.

  யாருக்கு வாக்களித்தேன்னு சொல்லலாமா ?

  ReplyDelete
 4. சர்வேசன் படங்கள் அனைத்தும் அருமை எனக்கு ஒப்பாரி,நந்து படம் மிகவும் பிடித்து இருக்கு.

  பிறகு மக்களே ஓட்டு போட்டு செயிக்க வைச்சா கிடைக்கும் பரிசு தொகையில் ஆளுக்கு பாதி பாதி என்ற டீல்க்கு யார் யார் ஒத்து வருகிறீகளோ அவுங்களுக்கா பூத் கைப்பற்ற படும்.

  முதலில் வந்து டீல் பேசுபவர்களுக்கே முன்னுரிமை!

  ReplyDelete
 5. சர்வேசன் படங்கள் அனைத்தும் அருமை எனக்கு ஒப்பாரி,நந்து படம் மிகவும் பிடித்து இருக்கு.

  பிறகு மக்களே ஓட்டு போட்டு செயிக்க வைச்சா கிடைக்கும் பரிசு தொகையில் ஆளுக்கு பாதி பாதி என்ற டீல்க்கு யார் யார் ஒத்து வருகிறீகளோ அவுங்களுக்கா பூத் கைப்பற்ற படும்.

  முதலில் வந்து டீல் பேசுபவர்களுக்கே முன்னுரிமை!

  ReplyDelete
 6. கார்த்திக்,

  யாருக்கு வாக்களித்தேன்னு சொல்ரதுல ஒண்ணும் தப்பில்லை.

  propaganda is fine as well.

  ஆனா, வாக்களர்கள், படத்தின் தரத்துக்கு வாக்களிக்கணும். யார் எடுத்தது, எப்படி வெளம்பரம் பண்ணாங்கன்னு பாக்கக் கூடாது :)

  கள்ள வாக்கு, நோ நோ! சொல்லிப்புட்டேன்.

  ReplyDelete
 7. குசும்பன், நன்றி.

  துட்டு டீலிங்கெல்லாம், மறைமுகமா வச்சுக்கோங்க.
  வோட்டிங் பூத்லயே வந்து டீல் பேசரது நல்லால்ல ;)

  ReplyDelete
 8. //நல்ல படம் வெல்லட்டும்!//

  அதே! அதே!!

  பி.கு: சிங்கப்பூர்காரர்களின் ஒற்றுமை ஓங்குக!

  ReplyDelete
 9. இதில் வெற்றி, தோல்வி எல்லாத்தையும் விடுங்கள்...

  பெரிய பெரிய புலிகளோட மொத விட்டு எங்க திறமையை கூர் தீட்டுகிற இந்த முயற்சிக்கு என்னோட சல்யூட்!

  ReplyDelete
 10. நடுவர்களின் மதிப்பெண்களுக்கு கொஞ்ச்சம் அதிக வெயிட்டேஜ் தரலாம்...

  பதிவர்களில் பெரும்பாலானோர், நல்ல படங்களுக்கு வாக்களிப்பதைவிட தங்களுக்கு வேண்டியவர்களின் படத்திற்கே வாக்களிப்பார்கள்... எனவே நடுவர்களின் மதிப்பெண்களுக்கு அதிக வெயிட்டேஜ் தருவது நன்றாக இருக்கும்... (60% - 40% அல்லது 70% - 30%)

  ReplyDelete
 11. My photo in your albumn is still very small and low grade picture (40 kb). The one I submitted with the blog link ( http://photos.jayakanthan.net -->> http://2.bp.blogspot.com/_fPK9tH2tG1g/SNARI2-0sNI/AAAAAAAADF8/yfSpbKL1yh0/s1600-h/HinduTemple.jpg) was bigger and had more details. Not to blame anyone, just wanted to make sure the picture what others see is more clear! Let me know 2005jay@gmail.com

  ReplyDelete
 12. //நடுவர்களின் மதிப்பெண்களுக்கு கொஞ்ச்சம் அதிக வெயிட்டேஜ் தரலாம்...

  பதிவர்களில் பெரும்பாலானோர், நல்ல படங்களுக்கு வாக்களிப்பதைவிட தங்களுக்கு வேண்டியவர்களின் படத்திற்கே வாக்களிப்பார்கள்... எனவே நடுவர்களின் மதிப்பெண்களுக்கு அதிக வெயிட்டேஜ் தருவது நன்றாக இருக்கும்... (60% - 40% அல்லது 70% - 30%)//

  ரிப்ப்ப்ப்பீபீட்ட்ட்ட்ட்டேய்ய்ய்!

  ReplyDelete
 13. பங்கேற்றவர்களும் வாக்களிக்கலாமா?

  ReplyDelete
 14. @ கார்த்திக்

  நன்றி தலைவா...
  மொதோ போனி நல்ல படியா இருக்கு.

  ~உண்மை.

  ReplyDelete
 15. வோட்டுப் போட்டாச்சு. ஜெகதீசன் கருத்துக்கு ஒரு ரிப்பீட்டேய்!!

  ஆனா அவருக்குத்தான் நிறையா ஓட்டு விழுந்திருக்கு!! :))

  இந்த மாதிரி படங்கள் எல்லாம் பார்த்துதான் நம்ம படத்தை எல்லாம் உள்ளே வெச்சுப் பூட்டிட்டேன். ஆட்டத்துக்குக் கூட வரலை! :(

  ReplyDelete
 16. வோட்டு போட்டாச்சுங்க ..! நன்றி

  இத்தனை கோணங்கள் -ஆ ......அருமையான படங்கள்..

  ReplyDelete
 17. is there a way to check the current status? Live-a status paaka mudiyaada?

  ReplyDelete
 18. jeyakanthan, fixed your pic

  now shows,
  1600×1200 pixels – 279KB

  ReplyDelete
 19. Jagadheesan, Point taken. :)

  Koths said, ungalukkudhaan idhuvarai neraya vote vizhundhirukku.
  adhuvum, in all 3 surveys :)

  ReplyDelete
 20. Amal said...
  //பங்கேற்றவர்களும் வாக்களிக்கலாமா?//

  சர்வேசன், இதற்கின்னும் பதில் சொல்ல வில்லையே நீங்கள்?

  Jeeves said...
  //நடுவர்கள் படங்களைப் பார்த்து எந்தப் படத்தை தேர்ந்தெடுப்பது என்று திண்டாடியதைப் பார்த்து மகிழ்ந்த ரசிகர்களே, இன்று நீங்களும் அந்த திண்டாத்தில் திளைப்பீர்களாக//

  எப்படிப் பட்ட திண்டாட்டம் எனப்து இப்போது நன்றாகப் புரிந்து போய் விட்டது:)! நான் எடுத்தவற்றிலேயே எதைக் கொடுப்பது எனத் திண்டாடும் எனக்கு இங்கு வரிசை கட்டி நிற்கும் படங்களைப் பார்த்து வாயடைத்துப் போகிறது:))!

  ReplyDelete
 21. //
  SurveySan said...

  Jagadheesan, Point taken. :)

  Koths said, ungalukkudhaan idhuvarai neraya vote vizhundhirukku.
  adhuvum, in all 3 surveys :)

  //
  நன்றி சர்வேசன்...
  எனக்கு 8 ஓட்டுக்களும், நாதாஸ் படத்துக்கு 2 ஓட்டுக்களும் இருந்ததைப் பார்த்து கொஞ்சம்(ரெம்பவே) நெருடலாக இருந்தது... அதனால் தான் நடுவர்கள் மதிப்பெண்களுக்கு அதிக வெய்ட்டேஜ் தருமாறு கேட்டுக் கொண்டேன்...

  ReplyDelete
 22. Amal,

  //பங்கேற்றவர்களும் வாக்களிக்கலாமா///

  இவ்வளவு நல்லவரா நீங்க?

  தேர்தல்ல நிக்கர எம்.எல்.ஏக்கும் வாக்குண்டு, ஜனநாயக உலகில் ;)

  ReplyDelete
 23. வோட்டு போட்டாச்சு....ஜெகதீசன் அண்ணா சொன்ன கருத்துக்கு ஒரு ரிப்பீட்டு போட்டுக்கிறேன்...:)

  ReplyDelete
 24. ஜெகதீசனுக்குத்தான் அதிக ஓட்டு என்று பார்த்தால் மனுஷன் ஒரு கருத்தைச் சொல்லி, மனசைக் கொள்ளையடிச்சுட்டாரு! நல்ல கருத்து ஜெகா! சபாஷ் & ரிப்பீட்!

  ReplyDelete
 25. முதல் வருட சிறப்பு போட்டியில் பங்குபற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  Architecture என்பது போட்டியின் கருப்பொருள்.
  ஆனால் சிறந்த Architecture அல்ல பரிசு. அதை வித்தியாசமாகவும் ஆச்சரியப்படத்தக்கதாகவும் படம்பிடிப்பதற்குத்தான் பரிசு. அந்த விதத்தில் எனது 3 வோட்டுக்களையும் போட்டுவிட்டேன்.

  வோட்டுப்போடுபவர்கள் சிறந்த Architecture க்கு வோட்டுப்போடாமல் சிறந்தவிதமாக கருப்பொருளை படத்தில் காட்டியதற்கே வோட்டுப்போடவேண்டுமென நினைக்கிறேன். போட்டியும் அதுதானே!!!
  (இதுவரையுள்ள முடிவுகளை பார்த்து சொன்னேன். தப்பாக யாரும் நினைக்க வேண்டாம்.)

  ReplyDelete
 26. ஃஃபி.கு: சிங்கப்பூர்காரர்களின் ஒற்றுமை ஓங்குக!ஃஃ

  :)

  //நடுவர்கள் படங்களைப் பார்த்து எந்தப் படத்தை தேர்ந்தெடுப்பது என்று திண்டாடியதைப் பார்த்து மகிழ்ந்த ரசிகர்களே, இன்று நீங்களும் அந்த திண்டாத்தில் திளைப்பீர்களாக//

  i took 20 min

  ReplyDelete
 27. ஃஃபி.கு: சிங்கப்பூர்காரர்களின் ஒற்றுமை ஓங்குக!ஃஃ

  :)

  //நடுவர்கள் படங்களைப் பார்த்து எந்தப் படத்தை தேர்ந்தெடுப்பது என்று திண்டாடியதைப் பார்த்து மகிழ்ந்த ரசிகர்களே, இன்று நீங்களும் அந்த திண்டாத்தில் திளைப்பீர்களாக//

  i took 20 min
  :(
  its really hard to judge
  ஏனேனில் எல்லாருமு சிறப்பாக பங்களித்திருக்கிறார்கள்

  ReplyDelete
 28. நல்லா பண்ணி இருக்காங்க....
  .
  .
  .
  .
  .

  .

  .

  ..
  .

  .
  .
  .
  .
  .
  பூத் கேப்சரிங்கை.... பூத்தை ரெளடியிசத்துடன் கேப்சர் செய்தவர்களுக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 29. //Blogger தமிழ் பிரியன் said...

  நல்லா பண்ணி இருக்காங்க....
  .
  பூத் கேப்சரிங்கை.... பூத்தை ரெளடியிசத்துடன் கேப்சர் செய்தவர்களுக்கு வாழ்த்துக்கள்!//

  ஒரு நிமிடம் அதைச் செய்யுமுன் மனசாட்சியை கேட்டு நடப்பார்களாக..

  ஆமென்.


  மக்களே!

  இந்த போட்டிகள் தனிப்பட்ட ஒருவரின் புகைப்படத் திறனை மேம்படுத்த எங்களின் சொந்த வேலைகளின் இடையில் செய்கிறோம்.

  கள்ள வோட்டு போட்டு எங்களின் முயற்சியைக் கேவலப் படுத்த வேண்டாம். இது எங்களின் வேண்டுகோள்

  ReplyDelete
 30. /இந்த போட்டிகள் தனிப்பட்ட ஒருவரின் புகைப்படத் திறனை மேம்படுத்த எங்களின் சொந்த வேலைகளின் இடையில் செய்கிறோம்.
  /

  தனிப்பட்ட பங்கேற்கும் ஒவ்வொருவரின் என்று கொள்க

  ReplyDelete
 31. // கள்ள வோட்டு போட்டு எங்களின் முயற்சியைக் கேவலப் படுத்த வேண்டாம். இது எங்களின் வேண்டுகோள் //

  ரிப்ப்ப்ப்பீபீட்ட்ட்ட்ட்டேய்ய்ய்!

  ReplyDelete
 32. /*மக்களே!

  இந்த போட்டிகள் தனிப்பட்ட ஒருவரின் புகைப்படத் திறனை மேம்படுத்த எங்களின் சொந்த வேலைகளின் இடையில் செய்கிறோம்.

  கள்ள வோட்டு போட்டு எங்களின் முயற்சியைக் கேவலப் படுத்த வேண்டாம். இது எங்களின் வேண்டுகோள்*/

  yeah, very true. இங்கயாவது கரெக்ட்-எ வோட் போடுவோமே. என்ன நான் சொல்றது?

  ReplyDelete
 33. Guys,

  lets not get too much hung up on Kalla-votes :)

  There is a difference between kalla-votes and biased-friends-votes. so, some pictures are getting the later one, mostlfy ;)
  ( difference between Kolai-veri-rasigargal and koolip-padai ;) )

  We will deal with kalla-votes when we do the final judging.

  as we said earlier, PiT members + the survey results will determine the winner.

  so, keep voting and cooperate to make this event successful.

  Nanri ;)

  ReplyDelete
 34. எஸ் ஆர் நாதன்September 20, 2008 at 10:29 AM

  சிங்கப்பூர்காரர்களின் ஒற்றுமையின் மேல் கல்லெறியும் சிலரது கருத்துக்களை சிங்கை சிங்கங்களின் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்.

  ReplyDelete
 35. வோட்டு போட்டாச்சுங்க ..! நன்றி
  நாம என்ன வோட்டு போட்டாலும் நடுவர்கள் தலைப்புக்கும் படத்திற்கும் சரியாக உள்ள படத்திற்கு தான் மார்க் போடுவாங்க இதில் நடுவர்கள் திர்ப்பே சரி.

  Pmt

  ReplyDelete
 36. வாக்கெடுப்பு முடிவடைந்தது. முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும்.

  வாக்களித்து சிறப்பித்த அனைவருக்கும் நன்றி!

  ReplyDelete
 37. அடடா! இப்படி ஒண்ணு இருக்கு என்கிறதை மறந்தே போயிட்டேனே!
  ஓட்டு போச்சே, மூணு ஓட்டு போச்சே!
  :-((

  ReplyDelete
 38. இ கொ பங்கேற்காததுதான் வருத்தம்! போன தரமே ஐடியாவுக்கு அவருக்குத்தான் என் ஓட்டு.

  ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff