Sunday, August 5, 2012

வாங்க கொண்டாடலாம் - ஆகஸ்ட் 2012 போட்டி அறிவிப்பு

23 comments:
 
டேங்கரின் டேங்கோ. அழுத்தமான ஆரஞ்சு. இதுதான் 2012 கொண்டாடிக் கொண்டிருக்கும் வண்ணம். பளிச் என ஒளிரும் இந்நிறம் ‘உலகின் பொருளாதாரச் சிக்கல்கள் சரியாகி மக்களின் வாழ்வு மேம்பட வழிவகுத்து, நல்ல விஷயங்களை நோக்கி உற்சாகமாக நம்மை நகர்த்தும்’ என்பது இதைத் தேர்ந்தெடுத்த வல்லுநர்களின் கருத்து. வண்ணத்துக்கும் வாழ்வுக்கும் என்ன சம்மந்தம்? கேள்வி எழும்பினாலும் நல்லதொரு நம்பிக்கையை விதைக்கும் விஷயத்தை நாமும் கொண்டாடி விடுவோமே:)!

இம்மாதத் தலைப்பு: ஆரஞ்சு (இளஞ்சிகப்பு)

கொண்டாடலாம் வாங்க!

கவனிக்க வேண்டியவை: சிகப்பை ஏற்கனவே சீரும் சிறப்புமாக நாம் கொண்டாடி விட்டுள்ளோம். இப்போது வண்ணம் சிகப்பை நோக்கிச் சாய்ந்திடாமல் ஆரஞ்சுக்கு.. இளஞ்சிகப்புக்கு.. முக்கியத்துவம் கொடுக்கட்டும். பிரதானமாக ஈர்க்கும் கருப்பொருள் அல்லது வண்ணம் ஆரஞ்சாக அமையட்டும். அருமையாய் படமாக்கிட ஐநூறு பதிவுகளை(அதைத் தனியாகப் பிறகு நாம் கொண்டாடிலாம்) நெருங்கிக் கொண்டிருக்கும் PiT தளத்தில் பாடங்களுக்கா பஞ்சம்:)? எல்லா நுணுக்கங்களையும் கருத்தில் கொண்டு அழகழகான ஆரஞ்சுடன் வாருங்கள்!

சில மாதிரிப் படங்களைக் பார்ப்போம்.

#1 ராமலக்ஷ்மி



# ஆனந்த் விநாயகம்


# ராமலக்ஷ்மி



# நாதஸ்


# ராமலக்ஷ்மி


# ஐயப்பன் கிருஷ்ணன்


# சர்வேசன்

போட்டிக்கான விதிமுறைகள் இங்கே.

படங்களை அனுப்ப வேண்டிய கடைசித் தேதி: 20 ஆகஸ்ட் 2012.

பி.கு: சில மாதம் தேதி 15 ஆக, சில மாதம் 20 ஆக அறிவிப்பாவது சிலருக்குக் குழப்பத்தைத் தருவதால் எளிதாக நினைவில் நிற்க, இனி வரும் எல்லா மாதங்களிலும் 20ஆம் தேதியே கடைசித் தேதியாக இருக்கும்.

23 comments:

  1. எல்லா படங்களும் அருமை... நன்றி...

    அன்பான இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. எல்லோருக்கும் வணக்கம்,
    நான் கலந்துகொண்ட முதல் போட்டியான "சீர்" ல் முதல் சுற்றிலேயே வெளியேறினேன்,
    இரண்டாவது போட்டியான "காகிதத்தில்" இரண்டாம் சுற்றுவரை முன்னேறினேன்,
    இது எனக்கு மூன்றாவது போட்டி கட்டாயம் வெற்றி பெற முயற்சி செய்கிறேன்,
    விரைவில் எனது "ஆரஞ்சு" நிற படைப்புடன் உங்களை சந்திக்கிறேன்,
    அனைவரின் ஆதரவுக்கும் நன்றி...

    ReplyDelete
  3. இந்த முறை ஒரு படம்தான் அனுப்ப வேண்டும் என்ற விதியைத் தளர்த்தியிருப்பது குறித்து சந்தோஷம்



    ஆறு அஞ்சு படம் அனுப்பலாம் என்று கூறி விட்டீர்கள் நன்றி,,,........:-)))))))))

    ReplyDelete
  4. முதல் முயற்சி... பிழைகள் இருப்பின் பொறுத்துக்கொள்ளுங்கள். picasa web உங்கள் தளத்தின் சுட்டி பிளீஸ்
    http://www.flickr.com/photos/53327589@N04/7722378988/in/photostream

    ReplyDelete
  5. @ கோமா,
    ஆறஞ்சு எடுங்கள். தி பெஸ்ட் ஆரஞ்சை அனுப்புங்கள். கண்ணே கண்ணாக ஒண்ணே ஒண்ணு:)!

    ReplyDelete
  6. @ anonymous (shan shageevan)

    இம்மாதப் போட்டிப் படங்களுடனான பிகாஸா ஆல்பம் விரைவில் முகப்பில் சேர்க்கப்படும்.

    ReplyDelete
  7. எனது முதல் முயற்சி..

    karthik

    ReplyDelete
  8. வருக கர்ணா,
    வெற்றி பெர்க,
    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  9. Here is my first try.

    Amarabharathi.JPG

    -Amarabharathi

    ReplyDelete
  10. நானும் ஒரு படம் அனுப்பி இருக்கேன்.
    சாம்பிள் படங்கள் மிரட்டுகின்றன.!

    ReplyDelete
  11. i sent photo for this month contest...

    ReplyDelete
  12. I entered in orange contest..........

    ReplyDelete
  13. ஆகஸ்ட் மாத போட்டிக்கு எனது படைப்பையும் இட்டிலி வடிவில் வழங்கியிருக்கிறேன்.....

    ReplyDelete
  14. போட்டிக்கான எனது பங்களிப்பா ஆரஞ்சுகளை அனுப்பியிருக்கேன்.

    ReplyDelete
  15. எனது ஒரே படம் ஆல்பத்தில் இரு முறை சேர்க்க பட்டுள்ளது. ஒன்றை மட்டும் வைத்து கொண்டு மற்றொன்டை நீக்கி விடலாமே.....

    ReplyDelete
  16. I have sent my photo for this month competition.
    Thanks Pit.

    ReplyDelete
  17. இந்த முறை ஏராளமானவர்கள் போட்டியில் கலந்துக்கிட்டு இருக்கோம். நல்ல முன்னேற்றம்.

    நடுவர்கள் பாடுதான்..... நினைச்சால் கவலையா இருக்கு;-))))

    ReplyDelete
  18. My first experiment starts here. Comments are always WC. Thanks.

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff