Wednesday, August 29, 2012

ஆகஸ்ட் 2012 - ‘ஆரஞ்சு’ போட்டி - இறுதிச் சுற்றில் வென்றவர்கள்

23 comments:
 
முதல் சுற்றுக்கு முன்னேறிய பதினைந்தும் பலரின் மனதில் இடம்பெற்று விட்டிருந்ததை உங்கள் கருத்துகள் மூலமாக அறிந்து கொள்ள முடிகிறது. மகிழ்ச்சி. வெற்றி பெற்ற படங்களைப் பார்க்கும் முன் வெளியேறும் சில படங்களைக் கவனிப்போம்:

# நவோதயா செந்தில்
அழகான படம்.

# பன்னீர் ஜவஹர்
அருமையான முயற்சி.

செந்தில், ஜவஹர் நீங்கள் இருவருமே வாட்டர் மார்க்கை தவிர்த்திருக்கலாம். PiT தளத்தில் மட்டுமல்ல, எல்லா புகைப்படப் போட்டிகளுமே இதைத் தவிர்க்கக் கேட்டுக் கொள்கின்றன என்பதை நினைவில் கொள்க. மேலும் PiT அளவைக் குறைத்தே இப்போது படங்களை சமர்ப்பிக்கக் கேட்பதால் உங்கள் படங்களை யாரேனும் தவறாகப் பயன்படுத்தி விடுவார்களோ என்கிற கவலையும் வேண்டாம். அப்படியும் போட்டுதான் ஆகவேண்டுமெனில் நித்தி க்ளிக்ஸ், வெங்கட்ராமன், நிலா ஆகியோர் படங்களில் உள்ளது போல (ஒபாஸிடி குறைத்து) உறுத்தல் இல்லாமல் ஓரமாகப் பதியலாம்.



# ஷகீவன்
கலைநயத்துடன் உள்ளது. ஷார்ப்பாக இல்லாதது குறை.

# சத்தியா
கருப்புப் பின்னணி காண்ட்ராஸ்டாக அமைய எதிர் திசைகளில் பார்க்கும் இரட்டை ஆரஞ்சு ஃப்ளெமிங்கோ அசத்தல். ஆனால் டைட் க்ராபிங் ஆகி விட்டதே சத்தியா. பறவையின் பார்வை செல்லுமிடத்தில் இடப்பக்கம் இன்னும் கொஞ்சமே கொஞ்சம் இடம் விட்டிருந்திருக்கலாம்.

# R.N. சூர்யா
தெறிக்கும் தண்ணீரில் அமிழும் ஆரஞ்சு. கவனத்தை ஈர்க்கிறது. பிரமாதமான டைமிங்கும். பழத்தின் மேல் வெளிச்சம் ஓவர் எக்ஸ்போஸ் ஆகியிருப்பது சின்ன குறை.

வெற்றி பெற்ற படங்கள் கூடுதல் சிறப்பாக அமைந்து விட்டதால் விலகுகின்றன முதல் சுற்றின் பிற படங்கள். மற்றபடி பெரிய குறையென்று ஏதுமில்லை.

இனி, என் ரசனையின் அடிப்படையில் அமைந்த தேர்வுகள்:

மூன்றாம் இடம்: Asjaloys Devadass

வானத்தின் ஆரஞ்சு வசீகரம்.

இரண்டாம் இடம்: குசும்பன்

மேகங்களிலும் நீரின் பிரதிபலிப்பிலும் மிளிருகிறது ஆரஞ்சு. லைட்டிங் பிரமாதம். நேர்த்தியான படம்.

முதல் இடம்: குமரகுரு

அம்மை அப்பனைச் சுற்றி வந்து மாம்பழத்தைத் தட்டிச் சென்ற பிள்ளையாரப்பனைப் போல் சின்னஞ்சிறு கண்ணைச் சுற்றி அற்புதமாக ஆரஞ்சைப் படர விட்டு முதல் இடத்தைத் தட்டிக் கொண்டு விட்டார் குமரகுரு:)!

சிறப்புக்கவனம்:

# நிலா
போட்டி ஆல்பத்தில் பார்த்ததுமே பாராட்டத் தோன்றிய படம்.
படம் நடுவே செல்லச் செல்ல அவுட் ஆஃப் ஃபோகஸ் ஆகியிருப்பதும் நீர்த்திவலைகள் மேல் வெளிச்சம் ஓவர் எக்ஸ்போஸ் ஆகியிருப்பதும் குறைகள். ஆயினும் பளிச் ஐடியாவைப் பளிச் எனக் காட்டிய விதத்தில் சிறப்புக் கவனம் பெறுகிறார் நிலா.


# ராஜசேகரன்
துல்லியமாகப் படமாக்கிப் பிரமிக்க வைத்த விதத்தில் சிறப்புக் கவனம் பெறுகின்றவர் ராஜசேகரன்.
படத்தின் பின்னணி ஆரஞ்சாக இருந்தாலும் ப்ளெயினாக இருப்பதால், நீர்த்துளிகளுக்குள் இருக்கும் ஆரஞ்சு மலர்களையே கருப்பொருளாகக் கண்கள் நோக்குகின்றன. அளவில் அவை சிறியதாகி விட்டது குறை. இதேபடம் இரண்டு அல்லது மூன்று துளிகள்(மலர்கள்) மட்டும் தெரிகிற மாதிரி க்ராபிங் செய்யப்பட்டிருந்தால் நிச்சயம் முதல் மூன்று இடங்களுக்குள் வந்திருக்கும். முடியுமானால் க்ராப் செய்து அனுப்பி வையுங்களேன். காண ஆசை:)! போட்டி ஆல்பத்தில் பார்வைக்கு சேர்த்திடலாம்.

வெற்றி பெற்றவர்களுக்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும்! கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் நன்றி! தொடர்ந்து பங்கு பெற்று வாருங்கள்! விரைவில் அடுத்த போட்டிக்கான அறிவிப்பு வெளியாகும்.
***

23 comments:

  1. மிக்க நன்றி...ரொம்ப சந்தோசம்.

    ReplyDelete
  2. வெற்றி பெற்றவர்களுக்கும், கலந்து கொண்டவர்களுக்கும் வாழ்த்துக்கள்...

    பகிர்வுக்கு நன்றி...

    ReplyDelete
  3. வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்..

    ReplyDelete
  4. இந்த தளத்தில் முதல் இடம் பெரும் படங்களை பார்த்து நான் கற்றுக்கொண்டது ஏராளம். இன்று எனது படம் முதல் இடத்தில். மிக்க மகிழ்ச்சி . நன்றி

    ReplyDelete
  5. குசும்பன் ... நல்ல வாத்தியார்; நல்ல சிஷ்யன்!

    வளர்க..........

    ReplyDelete
  6. வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்

    ReplyDelete
  7. வெற்றி பெற்ற அனைவருக்கும் இனிய வாழ்த்து(க்)கள்.

    ReplyDelete
  8. வெற்றி பெற்றவர்களுக்கும், கலந்துகொண்டவர்களுக்கும், பரிசளித்தவருக்கும் என் பாராட்டுக்கள்.
    //சின்னஞ்சிறு கண்ணைச் சுற்றி அற்புதமாக ஆரஞ்சைப் படர விட்டு//
    பரிசை தேர்ந்தெடுக்க ரொம்ப சிரமப்பட்டு அதை சொன்ன விதம் அருமை.

    சகாதேவன்

    ReplyDelete
  9. 125+ படங்களில் இருந்து மூன்றை தேர்வு செய்வது மிக மிக கடினம்:) அருமையான படங்கள், நல்ல தேர்வு & விளக்கங்கள்! வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  10. //குசும்பன் ... நல்ல வாத்தியார்; நல்ல சிஷ்யன்!

    வளர்க..........//

    தருமி ஐயா அதுதான் மேட்டரே...நல்ல வாத்தியார் கையில் என்னை மாதிரி ஒரு மக்கு மாணவன் சேர்ந்தாலும் அவர் எப்படியும் அவனை பாஸ் செய்ய வெச்சிடுவார்!

    ReplyDelete
  11. Good Selection and I like very much PiT...
    Sundaramoorhty.P
    Cuddalore.

    ReplyDelete
  12. Nice selection and i like very much PiT...
    Sundaramoorthy.P
    Cuddalore.

    ReplyDelete
  13. வெறி பெற்றவர்களின் படங்கள் உள்ளத்தைக் கொள்ளை கொள்கின்றன. வெகு நேர்த்தி. மனம் நிறைந்த பாராட்டுகள்.

    ReplyDelete
  14. வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.. :)

    ReplyDelete
  15. வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  16. //நல்ல வாத்தியார் கையில் என்னை மாதிரி ஒரு மக்கு மாணவன் சேர்ந்தாலும் அவர் எப்படியும் அவனை பாஸ் செய்ய வெச்சிடுவார்!//

    நான் சொன்னது: நல்ல வாத்தியார் ... நல்ல சிஷ்யன்.
    ஏன்னா, சில மக்கு மாணவன வச்சிக்கிட்டு வாத்தியாரால ஒண்ணும் பண்ண முடியாத கேசுல்லாம் எங்களுக்குத் தெரியும்ல.....! பாவம் அந்த வாத்தியார் .......

    ReplyDelete
  17. வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  18. Thanks for the selection and awarded third place for my picture.

    ReplyDelete
  19. Thanking for awarded with third place for my image.

    ReplyDelete
  20. Good Photos, marvelous effort in collecting, filtering and selecting the photos for each round and winners.

    Just have a look at this too and give your valuable feed back/comments when you find time.

    http://concurrentmusingsofahumanbeing.blogspot.in/2012/08/bridge.html

    I felt it is one of my good photo! and taken in a mobile phone camera...

    iK way

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff