மே - 2015 மாத போட்டியான அறிமுகமற்றவரின் உருவப்படம் (Portrait of the unknown) முடிவிற்கு வந்துள்ளோம். போட்டியில் பங்கு பெற்ற ஒவ்வோர் படமும் ஒவ்வோர் விதத்தில் அழகு.
வெற்றி பெற்ற படங்களை தெரிந்து கொள்ளும் முன், மற்றவர்களின் படங்கள் ஏன் வெற்றி பெறவில்லை என்ற காரணங்களை கூறி விடுகிறேன்.
#சிவராமன்
பெரியவர் திரும்பி நிற்கும் திசையில் அதிகம் இடம் அளித்து படத்தின் இடது பகுதியை சற்று குறைத்து கூட்டமைவு (Compose) செய்திருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்கும்.
#RKC
நல்ல படம். ஆனால் Focus பாட்டியின் முகத்தில் இல்லாமல் குடையில் இருப்பதினால் படம் சிறப்பாக அமையவில்லை.
# ஆறுமுகவேல்
சிறப்பான படம் தான். ஆனால் கூட்டமைவு (Composition)வில் சற்று கவனம் செலுத்தி கைகள் சற்று வெட்டப்படாமல் படம் எடுத்திருக்கலாம்.
சிறப்புக் கவனம்:
# கார்த்திக் ராஜா
பொதுவாக Portrait படங்கள் எடுக்கும் பொழுது, யாரை படம் எடுக்கிறோமோ, அவர்களிடம் அனுமதி பெற்று எடுப்பது அவசியம். அப்பொழுது மட்டுமே அவர்கள் கேமராவைப் பார்ப்பது சாத்தியமாகும். ஏனெனில் ஒருவரின் படத்திற்கு உயிர் கொடுப்பதே அவர்களின் கண்கள் தான். அவர் கண்கள் காமெராவை பார்த்திருந்தால், முதல் மூன்றுக்குள் இடம் பெற்றிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
# பாரிவேல்
ஒருவரின் படத்துடன், அவர்களின் வாழும் சூழலையும் சேர்த்து படம் எடுப்பது அவர்களைப் பற்றி கூடுதல் தகவலை அளிக்கும். அவ்வகையில் இப்படம் மிகச்சிறப்பாக அமைந்திருக்கிறது. ஆதலால் சிறப்பு கவனத்தையும் பெறுகிறது. Post Processing -ல் சற்று கவனம் செலுத்தி இருந்திருக்கலாம்.
இனி வெற்றி பெற்றப் படங்களைப் பார்ப்போம்.
இரண்டாம் இடம் - ஜவஹர் ஜெயபால்
மனதை அசைத்துப் பார்க்கும் உயிரோட்டம் நிறைந்த படம். Frame சற்று அகலமாக இருந்திருந்தால் மிகச் சிறப்பாக இருந்திருக்கும். மேலும் கையெழுத்து சற்று உறுத்தலாகவும், கால்கள் வெட்டப்பட்டும் உள்ளது. இவ்விரண்டும் சரியாக இருந்திருந்தால் முதல் இடத்திற்கு கண்டிப்பாக தேர்வு செய்யப்பட்டிருக்கும்.
# முதலாம் இடம்: பாலமுருகன்
நல்ல படம்.
Portrait - க்கு தேவையான முக அமைப்பு, உணர்வு ஆகியன மிகச் சிறப்பாக பதிவு செய்யப்பட்டிருகிறது. வாழ்த்துக்கள் பாலமுருகன்!!!.
நல்ல படம்.
Portrait - க்கு தேவையான முக அமைப்பு, உணர்வு ஆகியன மிகச் சிறப்பாக பதிவு செய்யப்பட்டிருகிறது. வாழ்த்துக்கள் பாலமுருகன்!!!.
அன்புடன்
- வனிலா பாலாஜி
வெற்றி பெற்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...
ReplyDelete- Jmr
மிகவும் அருமையான படங்கள். வெற்றியாளர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅர்ஜூனம்மா.
Nice pictures. Next month competition Eppo poduvenga.? Plz fast.,
ReplyDelete-Kalusulingam.,