எந்தரோ மகானுபாவலு...அந்தரிகி வந்தனமுலு. டாப் 10இல் இடம்பிடிச்ச படங்கள்ல 5 படங்களுக்கான விமர்சனங்களை நேத்தே பாத்துட்டதால இப்புடு எஞ்சிய 5 படங்களுக்கான விமர்சனமுலு.
6.
Ila
சர்வேசன் : நல்ல composition. ஆனா, அவர் பார்ப்பது, லேப்-டாப்னு, பளிச்னு தெரியல. மொதல்ல பாக்கும்போது, மெடிட்டேஷன் பண்றாறோன்னு நெனச்சுட்டேன். 'a day at work' என்ற தலைப்பை நையாண்டி செய்வது போல், ராத்திரி நேரத்து ஃபோட்டோவை போட்டதும் தெய்வ குத்தமயாயிடுச்சு. மொத்தத்தில், நல்ல லைட்டிங்கில், அழகாக பதியப் பட்ட படம். குறைய தேடினாலும், கெடைக்க மாட்டேங்குது. கைப்புள்ள : பாத்த உடனே 'வாவ்' சொல்ல வச்ச படம். நல்ல காட்சியமைப்பு. வழக்கமா இப்படி இரவு காட்சியில Flash போட்டு கெடுத்துடுவோம் - இந்த படம் இருக்கிற ஒளியையே பயன்படுத்தி இருக்கிறதுதான் இப்படத்தின் சிறப்பு. கொஞ்சம் Blurred மாதிரி தெரிவது பலவீனம்.
சர்வேசன் : படத்தை க்ளிக்கிய angle எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது. வரையப்படும் படமும், புகைப்படத்துக்கு ஒரு ஏத்தத்தைக் கொடுக்குது. unlucky shot. நிறைய பேர், 'ஆ'ன்னு இவரை சுத்தி நின்னு பாக்கர மாதிரி இருந்திருந்தா தூக்கியிருக்கும். ஓவியரை மட்டுமே காட்டுவதால், இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு, கீழ படுத்து கிடுத்து, கட்டடங்களை விச்தாரத்தை காட்டி, angle மூலம் கவர்ந்திருக்கலாம். கைப்புள்ள : Point-of-View தான் இந்த படத்தின் வெற்றி. கேமராவை தரை மட்டத்தில் வைத்து எடுத்ததனால் படத்தின் காட்சியமைப்பு மற்ற படங்களில் இருந்து தனிப்பட்டு இருக்கு. இவரு என்னத்த வரையறாருன்னு ஓரக் கண்ணால் பார்க்கும் அந்த பார்வையாளர் அம்மணியும் சேர்த்து இருப்பது படத்துக்கு அழகு சேர்க்குது. குறைன்னு பாத்தா அந்த வெள்ளைப் பை பின்னாடி உறுத்துது - கொஞ்சம் நகர்ந்து எடுத்திருக்கலாமோ? அருகில் இருக்கும் கட்டிடங்களின் பிரமாண்டத்தை காட்டுவதற்காக முயற்சி செஞ்சிருக்கலாம். இந்த படத்தில என்ன கத்துக்கலாம்? எப்போதும் தோள் / கண் மட்டத்தில் இருந்துதான் எல்லாரும் படம் எடுக்கறோம். அதனால்தான் நம்ம படங்கள் எல்லாம் வழக்கமானவையாய் இருக்கு. வெட்கம் பாக்காம உருண்டு படுத்தோ, உயரமான எடத்தில இருந்தோ எடுத்தாதான் வித்தியாசப்படுத்திக் காட்ட முடியும்.
Point of Viewக்கு ஒரு எடுத்துக்காட்டு பாருங்க - கற்கை நன்றே கற்கை நன்றே. அருமையா காட்சியமைப்பு செய்யப்பட்ட ஒரு படத்தையும், குறைவான சொற்களையும் பயன்படுத்தி படிக்கிறவங்களைச் சிந்திக்க வச்சிருக்காரு பாருங்க. கெளசிகனோட தரை ஓவியம் படம் போன்றே இருக்கும் இன்னொரு படத்தைப் பாருங்கள். ஓவியம், வரைபவர் இரண்டின் மேலும் கவனம் செல்லுவதற்காக ஓவியத்தைத் தலைகீழாய் படம்பிடித்திருக்கும் உத்தியைக் கவனியுங்கள். இவர் இப்படத்தில் காட்ட விரும்புவது, ஓவியத்தின் அழகினை அல்ல, வரைந்தவரின் திறமையை என்பது படம் பார்க்கும் போதே தெரியுதில்லையா? 
சர்வேசன் : நிறைய disturbance படத்துல. ஒண்ணு, இந்த ரெண்டு வேலையாட்களை தனியா க்ளிக்கியிருக்கலாம். ஒருத்தர் மும்முரமா வேலை செய்வதும், இன்னொருவர் தம்மடித்து வெட்டியா இருப்பதும், ஒரு interesting சப்ஜெக்ட்டாய் மாறியிருக்கும்.இல்லன்னா, இடது புற வேலையாளை மட்டும் ஓரத்தில் வைத்து, கார்/ரோடெல்லாம் காட்டியிருக்கலாம்.
கைப்புள்ள : இன்னும் கொஞ்சம் நகர்த்தி, தெருவைப் பெருக்குபவரை ஒரு ஓரத்தில் வைத்து விரைந்து செல்லும் வாகனங்களைப் பின்புறத்தில்(background) வைத்து எடுத்திருந்தால் நன்றாய் இருந்திருக்கும். "They also serve who only stand and wait"னு சொல்லற மாதிரி இருந்திருக்கும்.
| 
சர்வேசன் : கச்சிதமா இருக்கு. ஆனா, இழுக்கல.கார் மேல இருக்கர பேப்பர், distract பண்ணுது போல. கலர் தூக்கிட்டீங்களா? இத, interestingஆ மாத்தணும்னா, ஷட்டர் ஸ்பீடு கொறச்சு, spray paint சர்ர்னு வர மாதிரி காட்டினாதான் உண்டு :) கைப்புள்ள : அருமையான பிற்தயாரிப்பு(Postprocessing). பிசிறு, குறைபாடு என்று பிற்தயாரிப்பில் எதுவும் தெரியவில்லை. இவர் பயன்படுத்தியிருக்கும் உத்தியின் பெயர் 'selective colouring'. நமது கருப்பொருளின்(subject) மீது பார்வையாளர்கள் கூடுதல் கவனத்தைச் செலுத்த வைக்கும் ஒரு உத்தி. இப்படத்தில் வண்டியின் மீது வண்ணம் இருக்குமாறும், மற்ற எல்லாவற்றையும் கறுப்பு வெள்ளையாக வைத்திருந்தால் இப்படம் கவிதையாக இருந்திருக்கும். அதாவது, வண்ணம் இல்லா உலகுக்குத் தன் உழைப்பால் வண்ணம் தீட்டிச் சிறப்பு சேர்க்கின்றார் என்று. இதுக்கு ஒரு எடுத்துக்காட்டு பாருங்களேன். சர்வேசன் : royal shot! நான் ஒண்ணும் சொல்றதுக்கில்லை. எல்லாரும் flickrலயே நிறைய சொல்லிட்டாங்க.குறிப்பா, நிழல் அருமையா இருக்கு படத்துல. ஆனால், அருவா/எளநீரு பக்கத்துல, இந்த மாதிரி 'a day at work' எல்லாம் எடுபடாம போயிடுச்சு என்பதே மெய்! :) படத்தில் ஒரு குறையும் லேது.
கைப்புள்ள : அருமையான டைமிங். கொஞ்சம் பகல் வெளிச்சமும் இருக்கும் பொன் மாலை பொழுதில் இப்படத்தை எடுத்திருப்பது சிறப்பு. அருமையான புகைப்படங்கள் எடுப்பதற்கு இந்த சமயமே சிறந்தது என்று புகைப்பட வலைத்தளங்கள் பலவற்றிலும் கூட குறிப்பிட்டிருப்பார்கள். இதை படிப்பவர்கள், இவ்வாறான சமயத்தில் புகைப்படங்களை எடுத்து பாருங்கள். உங்கள் படங்கள் வெகு சிறப்பானதாக அமையும். சர்வேசனார் சொன்னது போல படத்தில் குறை என்று ஒன்றும் தெரியவில்லை.
...மேலும் படிக்க...
... பதிவுச்சுருக்கம்...
வணக்கம் நண்பர்களே! அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஜூன் மாதப் புகைப்படப் போட்டி முடிவுகள் இதோ. ஒவ்வொரு படத்துக்குக் கீழேயும் அதற்குண்டான விமர்சனங்களைக் காணலாம்.
வாசி
 சர்வேசன் : போட்டித் தலைப்புக்கு மிகப் பொருத்தமான படம் இதுதான். அருவாள் வீச்சு முடிந்ததும் பிடிக்காமல் அருவாள் பாதி வீச்சில் இருக்கும்போது பிடித்திருந்தால், மேலும் மெருகேறியிருக்கலாமோ? :) பின்னணியில் இருக்கும் தேங்காய்களும், பாழடைந்த சுவரும், முறுக்கேறிய கைகளும், முண்டாசும் படத்துக்கு value சேர்கின்றன.
கைப்புள்ள : நாங்கள் மிகவும் எதிர்பார்த்த காட்சியமைப்பு இப்படத்தில் வெகு சிறப்பாக வெளிவந்திருக்கிறது. படத்தில் இளநீர் வெட்டுபவருக்குப் பின்னால் இரைந்து கிடக்கும் இளநீர் கூடுகளைக் காணும் போது, எவ்வளவு தூரம் அவர் உழைத்திருக்கிறார் என்பது தெளிவாகிறது. அத்துடன் எடுத்துக் கொண்ட வேலையில் அவருடைய ஈடுபாடும் நன்றாக வெளிப்பட்டிருக்கிறது. கொஞ்சம் உத்துப்பாத்தா வெட்டிய இளநீரிலிருந்து சிதறும் சில்லு ஒன்றையும் காணலாம். இளநீர் வெட்டுபவரைச் சுற்றும் முற்றும் இடையூறாக எந்தவொரு பொருளும் இல்லை. Close enough to cover the subject, just long enough to cover the essential background. சர்வேசன் சொன்னா மாதிரி வெட்டற கத்தி கொஞ்சம் மேல இருக்கற மாதிரி இருந்திருந்தா தசாவதார லெவலுக்கு(உலகத்தரம்...ஹி...ஹி) போயிருக்கும். கலரில் இப்படம் எப்படியிருக்கும் என்று காணும் ஆசையும் வருகிறது.
Srikanth

சர்வேசன் : அருமையான தருணத்தில் அழகாக க்ளிக்கப்பட்ட படம். மெய்மறந்து நாதஸ் ஊதுபவரும், பின்னணியில் இருக்கும் அந்த அம்மாவும், தத்ரூபமாக வந்துள்ளனர். படத்தில் உள்ள ஒரு extra textureம் (increased color contrast?) நல்லாவே இருக்கு பார்க்க. ஒரே குறை, படம் horizontal framing செய்யாமல், vertical frameing செய்தது. இன்னும் நிறைய பக்த கோடிகள் இடப்பக்கம் தெரிந்திருந்தால், படம் அடுத்த கட்டத்துக்கு போயிருக்கும்.
கைப்புள்ள :தன்னை மறந்து நாதஸ்வரம் இசைக்கும் ஒரு கலைஞரை வெகு அழகாகச் சித்தரிக்கிறது இப்படம். அவருக்கு அருகில் பயபக்தியுடன் கும்பிட்டுக் கொண்டிருக்கும் அப்பெண்ணைக் காணும் போது, அது இவருடைய இசையின் விளைவாகத் தான் என்றும் வெகு சுலபமாகத் தொடர்பு படுத்திப் பார்க்க முடிகிறது(அவ்வாறு இல்லாது போயிருந்தாலும்:) ) படத்தின் இடது புறம் மேலே தெரியும் வெள்ளை patch சற்று இடையூறாக இருக்கிறது. இருப்பினும் வலப்புறம் தெரியும் வண்ணத் தோரணங்களைக் காட்டுவதற்காக அதை crop செய்யாமல் வைத்திருக்கிறார் போலும்? படத்தில் உபயோகப் படுத்தியிருக்கும் effectsஉம் காட்சியமைப்பும் படத்தை ஒரு ஓவியம் போலத் தோன்றச் செய்வது அழகு.
Sathiya

சர்வேசன் : எறும்புகள் பேசிக் கொள்வது போல படம் அமைந்திருப்பது அழகு.
கைப்புள்ள : எறும்புகள் தான் உழைக்கும் வர்க்கத்திற்கு(Working Class)நாம் காட்டும் எடுத்துக்காட்டு. சின்ன வயசுல எத்தனையோ தடவை உத்து உத்து எறும்புகள் என்ன பேசிக்குதுங்கன்னும், பண்ணுதுங்கன்னும் பாத்துருப்போம். அதை அப்படியே கச்சிதமாப் பதிவு செய்திருக்கு இந்தப் படம். சுறுசுறுப்பா ஓடிக்கிட்டிருக்கற எறும்புகள் நின்னு பேசிக்கும் போது எடுக்க நல்ல டைமிங் வேணும்.
ஸ்பெஷல் மென்ஷன்: Surveysan's Picks
Amal

இந்த மாதிரிப் படங்களெல்லாம் நிறைய காட்சிப்படுத்த வேண்டும். இதெல்லாம் என்னான்னே தெரியாம நிறைய பேர் வளர்றாங்க. அருமையான முயற்சி. ஸ்லோ ஷட்டர் நல்ல முயற்சி. ஆனால், நெல் எறியும் தாத்தா, உடம்பு பாதி அழிந்தது போல் இருக்கிறது. சூரியனுக்கு அந்தப் பக்கத்திலிருந்து முயன்றிருக்கலாம் Venkatesan PS 
குழந்தை சீரியஸாக கையில் ஸ்க்ரூ ட்ரைவருடன் வண்டியைப் பார்ப்பது அருமை.
வெற்றி பெற்ற மூவருக்கும் எங்கள் வாழ்த்துகள். வெற்றி பெற்ற படங்களைத் தவிர முதல் பத்தில் இடம் பெற்ற மற்ற படங்களைக் குறித்தான கருத்துகளுடன் ஓரிரு நாட்களில் இன்னுமொரு பதிவை எதிர்பாருங்கள்.
போட்டியில் பங்கு கொண்ட அனைத்து படங்களைக் குறித்தும் கருத்துத் தெரிவிக்கும் ஒரு எண்ணமும் இருக்கின்றது. அன்றாட வேலையினூடே எந்தளவு அது சாத்தியம் என்று தெரியவில்லை:) இயன்றவரை முயற்சிக்கிறோம். நன்றி.
...மேலும் படிக்க...
... பதிவுச்சுருக்கம்...
வணக்கம் மக்கள்ஸ், ஜூன் மாதப் போட்டிக்கானத் தலைப்பை அறிவிச்சப்போ, தலைப்பு ரொம்ப கஷ்டமாயிருக்குன்னு சில பின்னூட்டங்கள் வந்துச்சு. ஆனா வந்திருக்கற படங்களின் தரத்தைப் பாக்கும் போது, எந்த தலைப்பும் நம்ம மக்கள்ஸுக்குக் கஷ்டமானது இல்லைன்னு ரொம்பத் தெளிவாத் தெரியுது. சரி, இப்ப இந்த மாதப் போட்டியில தேர்வான முதல் பத்து படங்கள் உங்கள் பார்வைக்கு.
கூடிய விரைவில் முதல் மூன்று படங்களுடன் உங்களைச் சந்திக்கிறோம். சர்வேசன்/கைப்புள்ள
...மேலும் படிக்க...
... பதிவுச்சுருக்கம்...
வழக்கம் போல இந்த மாசமும் கலக்கல் படங்கள்.
ஒவ்வொரு மாசமும் போட்டிக்கான தலைப்பு வைக்கும்போது பல தலைப்புகள் அலசி, நிறை குறைகளை கலந்து பேசி, கடைசியா ஒண்ண தேர்ந்தெடுத்து அறிவிப்போம். இந்த மாதமும் அது நடந்தது.
"அன்றாட வேலையினூடே ஒரு நாள் (A Day at Work)"னு தலைப்பு முடிவானதும், எனக்கு உள்ளூர ஒரு சந்தேகம் இருந்தது. வேலை செய்யர ஆளு/மிருகம்/உயிரினம் எல்லாம் கேக்கறோமே, நம்ம மக்கள் தைரியமா, களம் இறங்கி க்ளிக்குவாங்களான்னு.
கைப்ஸ் போட்ட, போட்டி அறிவிப்பு பதிவில் இடம் பெற்ற ஸாம்பிள் படங்கள் எல்லாம் பாத்திருப்பீங்க. குறிப்பா, நம்ம ஜீவ்ஸின் கொல்லிமலை டீ-ஆத்தா போட்டோவெல்லாம் பாத்திருப்பீங்க.
டீ-ஆத்தாவின் முகத்தில் தெரியும் புன்முறுவல் என்ன? முகத்தில் தெரியும் தன்னம்பிக்கை என்ன? அடுப்பின் புகை என்ன? படத்தில் நிழலின் சிறப்பென்ன? கலக்கியிருக்காருல்ல மனுஷன்?
அதிலிருந்தே தெரிஞ்சிருக்கும், இந்த தலைப்புக்கு என்னவெல்லாம் எடுக்கமுடியும்னு.
எடுத்திருக்காங்களா நம்ம மக்கள்?
லேசுல விட்டுருவாங்களா?
கீழ பாருங்க.
போட்டிக்கு வந்த 50 படங்கள் கட்டம் கட்டியிருக்கோம். (லோடாக கொஞ்சம் நேரம் ஆகலாம், பொறுமைஸ்)
ஏதாவது விடுபட்டிருந்தாலோ, தவறிருந்தாலோ, தெரிவிக்கவும். வாசகர்களும், சக போட்டியாளர்களும், உங்களுக்குப் பிடித்த நிறை குறைகளை சொல்லிட்டுப் போங்க. படம் புடிச்சவங்களுக்கு உபயோகமா இருக்கும்.
டாப்-10னுடன் விரைவில் சந்திக்கிறோம்.
பங்கு பெற்று சிறப்பித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றீஸ் பல.
-சர்வேசன்/கைப்புள்ள
பி.கு: PIT ஆசிரியர் குழுவில் இருப்பவர்களின் படங்கள், சும்மா பார்வைக்காக மட்டுமே. போட்டியில் சேர்த்துக் கொள்ள படமாட்டாது.
...மேலும் படிக்க...
... பதிவுச்சுருக்கம்...
எச்சரிக்கை : இது ரொம்ப ரொம்ப சிறுபில்லத்தனமான பதிவு. "ஐயே! இது கூட எங்களுக்குத் தெரியாதுன்னு சொல்லவந்துட்டாண்டா கூறுகெட்ட என் குக்கரு"ன்னு எல்லாம் படிச்சிட்டு நீங்க என்ன வைய சான்ஸ் இருக்கு. அதான் முன்னாடியே டிஸ்கி போட்டுக்கறேன். அதுக்கும் முன்னாடி PiTகுழுமத்துல கைப்புள்ள என்ன பண்ணிட்டிருக்கான்னு ஒரு டவுட் வந்துருக்கும். அந்த டவுட் எனக்கும் வந்துச்சு. அதனால PiTகாரங்க கிட்ட "என்கிட்ட இருக்குற எது உங்களை ஹெவியா லைக் பண்ண வச்சுதுன்னு" ஆரியா படத்து ஸ்நேக் பாபு பாவனா கிட்ட கேட்ட மாதிரி கேட்டேன். அதுக்கு அவிங்க "எவ்வளவு அடிச்சாலும் தாங்கற நல்லவன் ஒருத்தன் நீ மட்டும் தான் இப்ப மாட்டுனே"ன்னு சொன்னாய்ங்க.
ஜோக்ஸ் அபார்ட்...பள்ளிக்கூடத்துல படிக்கும் போது ஒன்னு கவனிச்சிருக்கீங்களா? சில சமயம் வாத்தியார் சொல்லி தரதை விட உங்க கூட படிக்கிற பையன் எக்சாமுக்கு அரை மணி நேரம் முன்னாடி அவன் படிச்சதை எல்லாம் சொல்லித் தர்றது ஈஸியா புரியற மாதிரி இருக்கும். அது ஏன்னா ஒரு மாணவனா நீங்க படிச்சி புரிஞ்சிக்கிறதுல என்னென்ன கஷ்டங்களை அனுபவிச்சீங்களோ அதெல்லாம் உங்களுக்குச் சொல்லித் தர்ற அந்த பையனுக்குத் தெரியும். அதனால உங்களுக்குப் புரியற மாதிரி கடைசி நேரத்துல அவன் சொல்லிக் குடுக்கறது எளிமையா உங்களுக்குப் புரியும். அதே மாதிரி போட்டோ எடுக்கும் போது நான் தெரிஞ்சிக்கிட்டது கத்துக்கிட்டது இப்படின்னு சில சில்லியான விஷயங்களை உங்களோட ஒரு சக மாணவனா இருந்து பகிர்ந்துக்கலாம்னு இந்தப் பதிவை எழுதறேன்.
நீங்க ஃபோட்டோ எடுக்கும் போது "சே! எவ்வளவு முயற்சி பண்ணாலும் நம்ம படம் ஏன் அடுத்தவங்க படம் அளவுக்கு நல்லா வரமாட்டேங்குது"ன்னு பல தடவை யோசிச்சிருக்கீங்களா? "ஐ! இந்தப் படம் நல்லாருக்கே...என்ன கேமரா யூஸ் பண்ணறீங்கன்னு" கேட்டா "இந்த மாடல் DSLRல, இந்த ஃபோகல் லெங்க்த்ல, இந்த அபெர்ச்சர் ஸ்பீட்ல, இத்தனை எம்.எம் லென்ஸைப் போட்டு எடுத்தது இந்த படம்னு வர்ற பதிலைக் கேட்டு "சே! நம்ம கிட்ட இருக்கற பாயிண்ட் அண்ட் ஷூட் கேமரால இந்த மாதிரியெல்லாம் எடுக்க முடியாது போலிருக்கு" அப்படின்னு நெனச்சி நொந்து போயிருக்கீங்களா? DSLRல எடுத்த படத்தை விட சூப்பரா இருக்கறதா உங்களுக்குப் படற இன்னொரு படம், உங்க கிட்ட இருக்கறதை விட சுமாரான ஒரு பாயிண்ட் அண்ட் ஷூட் கேமரால எடுக்கப்பட்டதுன்னு தெரிஞ்சு விரக்தியின் எல்லைக்கே போயிருக்கீங்களா? கவலை வேணாம். உங்களுக்கு மட்டும் இப்படியெல்லாம் நடக்கறதில்லை. நம்மள்ல பலருக்கு இப்படித் தான் நடக்குது. நானும் பலமுறை இந்த மாதிரி யோசிச்சிருக்கேன்.
நம்ம படம் எடுத்த நமக்கே நல்லால்லாத மாதிரி இருக்கும் போது, அந்த படத்தைப் பாக்கற ஒரு மூன்றாம் மனிதருக்கு அது கண்டிப்பா பிடிக்காது. சரி, இது நல்ல புகைப்படம்னு ஒரு பார்வையாளரைச் சொல்ல வைக்கறது எது? நல்ல படங்களை நோக்கி நம்மை இழுப்பது எது? கீழே இருக்கற படங்களைப் பாருங்க. அதைப் பாத்தா என்ன தோணுது?

 முதல் படத்துல பச்சையா நெறைய செடிகள் இருக்கு. பின்னாடி எதோ மலை இருக்கற மாதிரியும் இருக்கு இல்லாத மாதிரியும் இருக்கு. அதே மாதிரி ரெண்டாவது படத்துலயும் பின்னாடி ஒரு மலை இருக்கு, முன்னாடி ஒரு மரத்தோட கொம்பு மலையை மறைச்சிக்கிட்டு இருக்கு. மொத்தத்துல ரெண்டு படத்துலயும் என்ன சொல்ல வர்றாங்கன்னே புரியலை. கவனிக்க "என்ன சொல்ல வர்றாங்கன்னே" - ஏன்னா ஒவ்வொரு படமும் எதையாச்சும் ஒன்னு சொல்லனும். இது தான் நல்ல படம் எடுக்கறதுக்கு முதற்படியா நான் நெனக்கிற விஷயம். மேலே இருக்கற படங்கள்ல படம் எடுத்தவரு(நான் தான்) மலைகளின் அழகைப் பத்தி சொல்ல வர்றாரா, அடர்ந்த காடுகளைப் பத்தி சொல்ல வர்றாரா அப்படீங்கறது படத்தைப் பாத்ததும் பாக்கறவங்களால சொல்ல முடியலை. அது தான் இந்த படம் நல்லால்லதுக்குக் காரணம்.
இந்த படங்கள்ல குறைன்னு பாத்தீங்கன்னு, சொல்ல வந்தது என்னன்னு முடிவு பண்ணாதது. சொல்ல வந்த பொருள்னு சொன்னேன் இல்லையா இதை புகைப்படக்கலைல சப்ஜெக்ட்னு சொல்றாங்க. சப்ஜெக்ட் மரமா, செடியா, மலையான்னு ஒரு நொடி யோசிச்சிட்டு, படக்குன்னு க்ளிக் பண்ணாம சப்ஜெக்டை ஃபோகஸ் பண்ணி எடுத்திருந்தா படம் நல்லாருந்துருக்கும். நாம டிஜிட்டல் கேமராக்கள்ல பண்ணற இன்னொரு மிகப்பெரிய தப்பு, ஒரு காட்சியைக் கண்டதும் சடக்குன்னு க்ளிக்கறது தான். இந்த மாதிரி பண்ணும் போது கேமரா சரியா ஃபோகஸ் ஆகறதில்லை. பல சமயங்கள்ல உங்க படங்கள் ஆட்டம் கண்ட மாதிரியோ, வெளிறிப் போயோ தான் வரும். டிஜிட்டல் கேமராக்கள்ல மெல்லமா முதல்ல ஒரு அரை க்ளிக்(Half Clickனு சொல்லுவாங்க) பண்ணிட்டு அப்புறமா முழுசா க்ளிக் பண்ணி எடுத்தீங்கன்னா படம் சரியா ஃபோகஸ் ஆகித் தெளிவா விழும்.
கீழே இருக்கற படத்தைப் பாருங்க. படத்தின் பெரும்பான்மையான இடத்தை செடிகளும் செம்பருத்தி மலர்களும் ஆக்ரமித்து இருப்பதால் அநேகமா மலர்களைப் பத்தி சொல்ல வர்றாங்கன்னு யூகிக்க முடியுது. இருந்தாலும் மலர்களின் அழகு இந்தப் படத்துலயும் வெளிப்படலை. படத்துல எதோ ஒரு கட்டிடத்தின் சுவர், குளிர்சாதனப் பெட்டி இதெல்லாம் கூடத் தெரியுது. அதெல்லாம் புகைப்படத்துலேருந்து நம்ம கவனத்தைத் திருப்புது. புகைப்படம் எடுக்கும் போது கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் படத்தை சிம்பிளாக வைத்திருப்பது தான்(Keep it simple).
 சொல்ல வந்த விஷயம் மலர்களின் அழகுன்னு முடிவான பிறகு, மலர்களைத் தவிர்த்து மற்ற சமாசாரங்களை உங்க படத்துலேருந்து நீக்கிடுங்க. இது பார்க்கறவங்களின் கவனம் நீங்க சொல்ல வர்ற விஷயத்தின் மீது மட்டுமே போக வழிவகுக்கும். கீழே இருக்கற படத்தைப் பாருங்க. இது மேக்ரோ மோட்ல மலருக்கு அருகாமையில் போய் மலரின் அழகு மட்டுமே வெளிப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் எடுத்தது. கும்பலா நிறைய மலர்களை எடுக்கறதை விட ஒரு மலரை நல்லா ஃபோகஸ் பண்ணி எடுத்தா இன்னும் நல்லாருக்கும்னு நெனச்சி எடுத்த படம் இது. சொல்ல வர்ற விஷயத்தைத் தெளிவா இந்தப் படம் சொல்லுது.

கீழே இருக்கற இந்தப் படத்தைப் பாருங்க. சொல்ல வர்ற விஷயத்திற்கு அருகில் போய் எடுத்தால் படம் நன்றாக விழும் என்ற எண்ணத்தில் மிக அருகில் சென்று எடுத்ததாலும் சரியான கேம்ரா மோட் உபயோகிக்காததாலும் சொல்ல வந்த விஷயமான செடியில் காய்த்திருக்கும் தக்காளி மங்கலாக அவுட் ஆஃப் போகஸ் ஆகிவிட்டது. படங்கள்லேருந்து எவ்வளவு தூரத்திலிருந்து அல்லது எவ்வளவு அருகாமையிலிருந்து எடுத்தால் படம் நன்றாகத் தெளிவாக விழும் என்று அனுமானித்தல்(judgment) அவசியம்.

படங்களை எடுக்கும் போது கவனிக்க வேண்டியது என்னன்னு இன்னிக்கு பார்த்தது. 1. படங்கள்ல நீங்க சொல்ல வர்ற விஷயம் என்னன்னு முடிவு பண்ணுங்க 2. சொல்ல வர்ற விஷயம் என்னன்னு முடிவு பண்ணதுக்கப்புறம் அதை சரியா ஃபோகஸ் பண்ணுங்க 3. ஃபோகஸ் பண்ணும் போது, சொல்ல வர்ற விஷயத்துக்கு இடையூறா இருக்கற விஷயங்களைப் படத்துலேருந்து நீக்குங்க 4. சொல்ல வர்ற விஷயத்துக்கு முடிந்த வரையில் அருகில் சென்று உங்கள் படங்களை எடுங்கள். அதே சமயம் சரியான தூரம் எது என்பதையும் தீர்மானித்தல் அவசியம்.
மேலே சொன்ன விஷயங்கள்லாம் என்னன்னு நெனக்கிறீங்க? டெக்னிக்கலா சொல்லனும்னா இதை Compositionனு சொல்லுவாங்க, தமிழில் காட்சியமைப்பு. சரி, காட்சியமைப்புன்னா என்ன? நாம் ஒரு புகைப்படங்கள் நிறைந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நம்மைச் சுற்றி பேசிக் கொண்டும், நின்று கொண்டும், நடந்து கொண்டும், பறந்து கொண்டும், தவழ்ந்து கொண்டும், ஓடிக் கொண்டும், விளையாடிக் கொண்டும் ஆயிரமாயிரம் படங்கள் உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அதை ஒரு காட்சியாய், படமாய் அழகுணர்ச்சியோடு வெளிக்கொண்டு வருதலே காட்சியமைப்பு ஆகும்.
இந்த காட்சியமைப்புங்கிறது எதோ புரியாத ஒரு விஷயம் மாதிரி இருக்கலாம். ஆனா உண்மையிலே நம்ம எல்லாருக்கும் அது ஏற்கனவே தெரியும். அது தான் காட்சியமைப்புன்னு நாம் உணர்வதில்லை. உதாரணத்திற்கு டிஜிட்டல் கேமராக்கள் வருவதற்கு முன்னர் நம்மில் பலரும் ஃபிலிம் கேமராக்களை உபயோகித்து படங்களை எடுத்திருப்போம். குடும்பத்துடன் தாஜ்மகாலைப் பார்க்க ஒரு இன்பச் சுற்றுலா செல்கிறோம். தாஜ்மகாலை பேக்க்ரவுண்டாக வைத்து நம் குடும்பத்தினரை முன்னனியில் நிற்க வைத்து ஒரு ஞாபகத்திற்காகப் படம் பிடித்து வைத்துக் கொள்ள நினைப்போம். நீங்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கும் போது குறுக்கே ஒருவர் செல்கிறார் என்றால், நாம் என்ன சொல்வோம் - "சார்! ப்ளீஸ் கொஞ்சம் தள்ளிக்கோங்க". "சார்! ப்ளீஸ் கொஞ்சம் தள்ளிக்கோங்க"ன்னு நம்ம சொல்ல வைப்பது எது? நாம் எடுக்கும் புகைப்படத்தில் அழகான ஒரு பொருள் என நாம் நினைக்கும் தாஜ்மகாலும் நம் குடும்பத்தினர் மட்டுமே விழவேண்டும் என்ற நினைப்பு. நாம் எடுக்க நினைக்கும் அந்த அழகிய படத்திற்கு குறுக்கீடாக எது வந்தாலும் எவ்வழியிலாவது நாம் அகற்ற முற்படுவோம். உங்கள் படத்தில் குறுக்கே நிற்கும் அம்மனிதர் நீங்கள் கேட்டுக் கொண்ட பின்னரும் விலகவில்லையென்றால் என்ன செய்வீர்கள்? படம் எடுக்கும் நாம் சற்று விலகி தாஜ்மகாலும் நம் குடும்பத்தினரும் மட்டும் படத்தில் விழுமாறு பார்த்துக் கொள்வோமில்லையா? இது தான் காட்சியமைப்பின் அடிப்படை.
இது நமக்கு டிஜிட்டல் கேமரா உபயோகிக்கறதுக்கு முன்னாடியே தெரிஞ்சு தான் இருந்தது இல்லையா? ஆனா படங்கள்ல நம்ம குடும்பத்தினரோ, அல்லது ஒரு முக்கியமான கட்டிடமோ இருந்தா நமக்கு ஃபோகஸ் பண்ணி எடுக்கறது சுலபமா இருக்கு. ஏன்னா அப்போ நம்ம படங்கள்ல இந்த நாலு பேரும் இந்த கட்டிடமும் மட்டும் தான் விழனும்னு நமக்கு தெரியும். அதுவே இயற்கை காட்சியோ, இல்லை பொதுவான ஒரு விஷயத்தைப் பத்தி படம் எடுக்கும் போது, காட்சியின் அழகில் மதிமயங்கிப் போயிடறோம். நம்மோட எண்ணம் எல்லாம் அந்த அழகைப் படம்பிடிக்க வேண்டும் என்பதுல மட்டும் தான் இருக்குது. அதனால சொல்ல வர்ற விஷயம் அப்படீங்கற ஒன்னு மேல கவனத்தைச் செலுத்தாம போயிடறோம். இப்படி பட்ட படங்கள்லேயும் சொல்ல வர்ற விஷயம் என்னன்னு சரியா முடிவு பண்ணற தெறமை வந்துடுச்சுன்னா, அதுக்கப்புறம் நம்மோட எல்லா படமும் நல்ல படம் தான்.
சரி காட்சியமைப்புன்னா என்னன்னு பாத்தோம், காட்சியமைப்பைப் பத்தி க்ரூப் ஸ்டடி பண்ண இன்னும் சில லெஸன்ஸ் இருக்கு. எக்சாம் ஆரம்பிக்கிறதுக்குள்ள சீக்கிரமே இன்னொரு பதிவோட வரேன். நன்றி.
...மேலும் படிக்க...
... பதிவுச்சுருக்கம்...
|