Saturday, February 13, 2010

எந்த கேமரா நமக்கு சிறந்த கேமரா?? - பாகம் - 5 / சென்சார் பெட்டிக்குள் பிக்ஸல் பழங்கள்...

5 comments:
 
வணக்கம் நண்பர்களே, சென்ற பகுதியில் சென்சார்களின் வகைகளையும், அதன் முக்கியத்துவத்தையும் பார்த்தோம். இந்த பகுதியில்,
  • சென்சார்கள் வெவ்வேறு அளவுகளில் ஏன் வருகின்றன?
  • அப்படி பல்வேறு அளவுகள் இருப்பதால் பிக்சர் குவாலிட்டி என்பது வித்தியாசப்படுமா?
  • சின்ன சென்சார்,பெரிய சென்சார் இரண்டிலும் எப்படி ஒரே அளவு பிக்சல்கள் வருகின்றன? என்பதை பார்ப்போம்..
ஒரே அளவு சென்சாரில் வெவ்வேறு பிக்சல்கள் எப்படி? nikon d40 - 6 mp nikon d40x - 10mp nikon d300 - 12mp மேலே சொன்ன அனைத்து கேமராக்களும் DSLR வகை மற்றும் ஒரே அளவு சென்சார்கள்...ஆனால் வெவ்வேறு பிக்சல்கள்..ஒரே அளவு சென்சாரில் எப்படி பல்வேறு pixelகள் வருவதை பற்றி பார்ப்போம்... உதாரணமாக,ஒரே அளவு கொண்ட மூன்று பெட்டி முழுவதிலும் இடைவெளி இல்லாமல் ஆரஞ்சு பழங்கள்அடுக்கிவைக்கபட்டுள்ளன. ஒரு பெட்டியில் 6 பழங்களும், மற்ற பெட்டிகளில் 12 மற்றும் 18 பழங்களும் இருப்பதாக வைத்துக்கொள்வோம்.. ஆனால் மூன்று பெட்டிகளும் ஒரே எடை தான் .. ஒரே எடை என்றால்,ஒவ்வொறு பெட்டியிலும் பழங்களின் சைஸில் தான் வித்தியாசம் என்று நமக்கு உடனடியாக புரிந்துவிடும்.6 ஆரஞ்சுகள் இருக்கவேண்டிய பெட்டிக்குள் 12 அல்லது 18 ஆரஞ்சுகள் இருந்தால் கண்டிப்பாக பழங்கள் சிறியதாக தான் இருக்கமுடியும். இந்த லாஜிக் தான் டிஜிட்டல் சென்சாருக்கும் பொருந்தும். இதில் பெட்டி என்பது சென்சார்,ஆரஞ்சு என்பது pixels அல்லது photo diodes ஆகும். 6 photodiodes(6MP) இருக்க வேண்டிய ஒரு சென்சாரில்,12 photodiodes இருந்தால், இந்த photodiodesன் அளவு சிறியதாக தான் இருக்கும்.எனவே pixelsன் என்னிக்கை அதிகமாக அதிகமாக photodiodesன் அளவு கண்டிப்பாக குறைந்து கொண்டே போகும். எனவே ஒரு சென்சாரில் பிக்சல் கம்மியாக இருந்தால் photodiodesன் அளவு என்பது பெரியதாக இருக்கும்.. பிக்சல்கள் அதிகமாக இருந்தால் photodiodesன் அளவு சிறியதாக இருக்கும்.. அதாவது, ஒரு 6MP DSLR கேமராவில் உள்ள photodiodesன் அளவு, 10MP DSLR கேமராவின் photodiodesஐ விட பெரியதாக இருக்கும். அதாவது, 6MP கேமராவில் இருப்பது 6 பெரிய ஆரஞ்சுகள், 12 MP கேமராவில் இருப்பது 12 சிறிய ஆரஞ்சுகள். photodiodes என்பது பெரியதாக இருந்தால் படங்களின் தரமும், தெளிவாகவும்,noise குறைவாகவும் இருக்கும்.. மேலே சொன்னது எல்லாம் ஒரே அளவுள்ள சென்சாருக்கு தான் பொருந்தும், வெவ்வேறு அளவு சென்சார்களில் ஒரே பிக்சல்கள் எப்படி? 12mp DSLR சென்சாருக்கும்,12mp compact சிறிய கேமரா சென்சாருக்கும், எப்படி ஒரே அளவு பிக்ஸல்கள் வரும்? உதாரணமாக, nikon d5000-12mp ( 1.5 crop sensor) nikon d700 - 12mp ( full frame sensor) canon s90 - 12mp (5.0 crop sensor) இந்த கேமராக்கள் எல்லாம் ஒரே mpஆக இருந்தாலும்,ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை அளவு சென்சார்கள்.. இதற்கு மேலே சொன்ன ஆரஞ்சு பெட்டி உதாரணத்தையே பார்ப்போம்.. இதில் ஆரஞ்சு பெட்டியின் அளவு மட்டும் மாறுபடும் . பெரிய பெட்டிக்குள் 12 பெரிய ஆரஞ்சுகளும்,சிறிய பெட்டிக்குள் 12 சிறிய ஆரஞ்சுகளும் இடைவெளி இல்லாமல் இருக்கும். இரண்டுமே 12 ஆரஞ்சுகள் தான். ஆனால் எடையும் மாறும் , பழங்களின் சைஸும் மாறுபடும். 6 ஆரஞ்சு மட்டுமே அடுக்க வேண்டிய சிறிய பெட்டிக்குள் 12 ஆரஞ்சுகள் அடுக்கினால் பழங்கள் மிகவும் நெருக்கமாக இருக்கும் இல்லையா.. இதனால் காற்று போவதற்க்கு சிரமம்..பழங்களும் டேமேஜ் ஆகும் வாய்ப்பு உண்டு.. அதே மாதிரி தான் சென்சாரிலும், photodiodes என்பது சிறிய சென்சாரில் மிகவும் நெருக்கமாக இருக்கும், இதனால் நாம் எடுக்கும் ஒளியானது photodiodesன் நெருக்கத்தால் மிக சரியாக பதிவு ஆகாது..இதனால் noiseம் அதிகமாக இருக்கும்.. கலர்கள் சரியாக பதிவாகாது.. ஒரே அளவு megapixels கொண்ட, இரு வேறு சென்சார் சைஸ் கேமராக்கள் தரும் வித்தியாசத்தை இந்த சாம்பிள் படம் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம்.. ( பெரியதாக பார்க்க க்ளிக் செய்யவும்) 1. இது சிறிய வகை சென்சார் உள்ள கேமராவில் எடுத்தது. 2.இது 1.5X crop factor DSLR கேமராவில் எடுக்கப்பட்டது. மேலே உள்ள படங்களை பார்த்தால் நமக்கு வித்தியாசம் தெரிந்துவிடும்.. படம் 1 ல் டீடெய்ல்ஸ் குறைவாகவும்,படம் 2 ல் அதிகமாகவும் தெரியும்.. இந்த வித்தியாசத்தை dynamic range என்று சொல்வார்கள்.. ஒரு பக்கம் வெள்ளை(highlights) அதிகமாகவும், மற்றொரு பக்கம் கருப்பு(shadows) அதிகமாகவும் இருக்கின்றது.. இதுவே சென்சார் அளவு இன்னும் பெரிதானால் டீடெயில்ஸ் இன்னும் நன்றாக தெரியும்.படங்களின் dynamic rangeம் இன்னும் சரியாக பதிவாகும்.. ஒரு 3mp உள்ள full frame சென்சார் கேமரா தரும் picture dynamic range என்பது, 15mp சின்ன சென்சார் கேமராவைவிட அதிகமாக இருக்கும்.. சென்சார்கள் வெவ்வேறு அளவுகளில் ஏன் வருகின்றன?
  • ஒரு பெரிய சென்சாரை தயாரிப்பதற்கு மிகவும் செலவு ஆகும்,அளவில் சிறியதாகும் போது செலவும் மிகவும் குறைந்து விடும்.
  • சென்சார் சைஸ் சிறியதாக சிறியதாக அதன் அளவிற்கேற்ப லென்ஸின் அளவும் சிறியதாக வடிவமைத்தால் போதும்.
  • சென்சார் பெரியதாக இருந்தால்(full frame) dust மற்றும் scratches மிக எளிதில் பதிந்துவிடும்.இதனால் கேமராவுக்கு பாதிப்பு அதிகம்.ஆனால் தற்பொழுது டெக்னாலஜியின் வளர்ச்சியில் இந்த குறைகளை நீக்க பல வழிகள் வந்துவிட்டன.இருந்தாலும் விலை வித்தியாசம் மிக அதிகம்.
  • சென்சார் சிறியதாக இருப்பதால் , லென்ஸ் அளவும் சிறியதாக இருந்தாலே போதும் என்பதால் tele zoom(upto650mm) என்பது சிறிய கேமராவுக்குள்ளேயே மிக எளிதாகின்றது.
  • சென்சார் சிறியதாக இருப்பதால், கேமராவும் உள் பாக்கெட்டில் எளிதாக போடும் அளவுக்கு சிறியதாக தயாரிப்பது என்பது எளிதாகின்றது. இதுவே ஃபுல் ப்ரேம் (நெகட்டிவ் சைஸ்) சென்சார் என்றால் கேமரா செல்போன் என்பது சாத்தியம் இல்லை (இப்போதைக்கு).
சிறிய அளவு சென்சார்களால் பல நன்மைகள் இருந்தாலும்,ஒரே ஒரு மிக முக்கியமான picture quality என்பது குறைவதால், பெரிய சென்சார் என்பதே நல்லது.. எனவே, உங்களுக்கு தெரிந்தவர்கள் யாராவது தன்னிடம் அதிக பிக்சல் கேமரா இருக்கிறது என்று பந்தா பண்ணினால்,ஏறி போட்டு மிதிக்காம... கோவப்படாம... மேல் சொன்ன விவரங்களை எடுத்துச் சொல்லுங்க. பந்தா தானா குறைஞ்சுடும். இனி,optical zoom,digital zoom என்றால் என்ன என்பதை அடுத்த பாகத்தில் பார்ப்போம்.. அது வரைக்கும் போயிட்டு வாரனுங்.. -கருவாயன்..

5 comments:

  1. //உங்களுக்கு தெரிந்தவர்கள் யாராவது தன்னிடம் அதிக பிக்சல் கேமரா இருக்கிறது என்று பந்தா பண்ணினால்,ஏறி போட்டு மிதிங்க..//

    ha ha ha :)

    ReplyDelete
  2. சூப்பரப்பு கண்ண தொறந்துட்டீங்க,

    நீங்க சென்சார பாராட்டுறீங்கள இல்ல ஓட்டறீங்கள........

    எனவே, உங்களுக்கு தெரிந்தவர்கள் யாராவது தன்னிடம் அதிக பிக்சல் கேமரா இருக்கிறது என்று பந்தா பண்ணினால்,ஏறி போட்டு மிதிங்க..

    ஏற்கனவே நாலு பேர் இருகாங்கிய............

    இதெல்லாம் படிச்சா இனிமே யாரவது கேமரா வாங்க அட்வைஸ் கேட்டா நாம கிளாஸ் தான் எடுக்கணும். :)

    ரொம்ப பயனுள்ள பதிவு.

    ReplyDelete
  3. பதிவின் ஆரம்பம் எவ்வளவு அழகு. முடிவில் ஏன் தரம் தாழ்ந்த வார்த்தைகள்

    ReplyDelete
  4. அனானி,

    தவறை சரி செய்தாயிற்று. உங்களின் ஆலோசனைக்கு நன்றிகள்

    ReplyDelete
  5. Thelivaana vizakam pathivuku nandri !
    :-)

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff