சென்ற வருடம் போலவே இந்த வருடமும் ஏராளமான பரிசுகளுடன் காத்திருக்கிறது உங்கள் படங்களுக்காக ரெட் ஃப்ரேம்ஸ்.
பொதுவான விதிகள் மீண்டும் இங்கு:
நீங்கள் நேசிக்கும் ஒரு ஊரின் இடங்களையும், மக்களையும், அதன் கலாச்சாரம் மற்றும் பழக்க வழக்கங்களைப் பிரதிபலிக்கும் காட்சிகளையும் படமாக்க வேண்டும். அது பிறந்த ஊரோ, வசிக்கும் ஊரோ அல்லது குறிப்பிட்ட சிறப்புகளினால் மனதைப் பறிகொடுத்த ஊரோ எதுவாயினும் இருக்கலாம்.
தகுதி: பதினெட்டு வயதான அனைத்து இந்தியர்களும் கலந்து கொள்ளலாம்.
கலந்து கொள்ள கட்டணம் ஏதுமில்லை.
ஒருவர் பத்து படங்கள் மட்டுமே சமர்பிக்கலாம்.
மூன்று இலட்சம் ரூபாய் பெறுமானமுள்ள பரிசுகள் காத்திருக்கின்றன.
படங்களின்
உரிமை முழுக்க முழுக்க எடுத்தவரையே சாரும். பரிசினை வெல்லும் பட்சத்தில்
அவற்றை ரெட் ஃப்ரேம்ஸ் ப்ரோமோட் செய்ய உங்கள் அனுமதியைத் தர வேண்டும்.
படங்கள் வேறு போட்டிகளில் பரிசினை வென்றவையாக இருக்கக் கூடாது.
இரண்டு வருட காலத்துக்குள் எடுத்தவையாக இருக்க வேண்டியது அவசியம்.
சிலைகள்,
சிற்பங்கள், ஓவியங்கள் எனக் கலை சம்பந்தமானவற்றையும் காட்சிப் படுத்தலாம்.
ஆனால் சட்டத்துக்குப் புறம்பாக எடுத்தவையாக இருக்கக் கூடாது.
முடிவுத் தேதி: 20 ஜனவரி 2013
முடிவுத் தேதி: 20 ஜனவரி 2013
---------------------
வாராந்திரப் பரிசுகளும் உண்டு. ஆறாம் வாரத்துக்கான படங்களை அனுப்ப நாளையே (12/12/12) கடைசித் தேதி போன்ற Red Frames-ன் அவ்வப்போதான அறிவிப்புகளையும் நினைவூட்டல்களையும் பெற நீங்கள் ஃபேஸ்புக்கிலும் தொடரலாம்: http://www.facebook.com/redframes.in?fref=ts
[சென்ற வருடப் போட்டி முடிவுகள் மற்றும் பெங்களூரில் நடந்த கண்காட்சி குறித்த பதிவு இங்கே.]
கலந்து கொள்ள இருக்கும் அனைவருக்கும் வாழ்த்துகள்!!!
***
No comments:
Post a Comment
பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி