Monday, December 3, 2012

டிசம்பர் போட்டி அறிவிப்பு

14 comments:
 
வணக்கம் நண்பர்களே,

2012 இன் இறுதிக்கு வந்துவிட்டோம். மழைக்காலமும் ஆரம்பமாகியாச்சு. விடுமுறை, பண்டிகை, மழைக்கு குடை வாங்க, குளிருக்கு ஆடை வாங்க என எல்லோரும் பிஸியா இருப்பீங்க. மாரியோ கோடையோ, சந்தோசமோ துக்கமோ, நினைவுகளையெல்லாம் பதிவு செய்யும் போட்டோகிராபி நம்மலோட இணைஞ்சி பிஸியா இருக்கும். ஆகவே, நீங்க மாரிகாலத்துல புடிச்ச நல்ல படங்கள “மழைக்காலம்” என்ற தலைப்புக்கேற்ப அனுப்பிவிடுங்க. என்னவெல்லாம் அனுப்பலாம்? மழைத்துளி, குளிருக்காக போர்த்திய மனிதன், மழையில் நனையும் பூ, குடை பிடித்துச் செல்லும் குழந்தை என என்னவெல்லாம் “மழைக்காலம்” என்ற தலைப்புக்குப் பொருத்தமாயிருந்தாலும் அனுப்புங்க. படத்தப் பார்த்ததுமே மழைக்காலம் அதில பிரதிபலிக்கனும். அதுதான் ரொம்ப முக்கியம்.

தலைப்பு: மழைக்காலம்

மாதிரிப்படங்கள்:

#1 அன்டன்

#2 ராமலக்ஷ்மி


#3 அன்டன்

#4 சர்வேசன்

#5 சர்வேசன்

#6 நவ்ஃபல்


படங்கள் அனுப்ப வேண்டிய கடைசித் திகதி: 20 டிசம்பர் 2012
போட்டி விதிமுறைகள்: இங்கே 

அன்புடன்
அன்டன்

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

நீங்கள் அனுப்பும் பெரிய அளவுப் படங்களால் பிகாஸாவின் கொள்ளளவு அடிக்கடி நிரம்பி விடுகிறது. இதனால் பலரது போட்டிப்படங்கள் தானாக ஆல்பத்தில் சேர இயலாது போகிறது. இருபது பேர்களின் படங்கள் இடம்பெறக் கூடிய அளவை ஒருவரது படமே எடுத்துக் கொள்கிறது. இது தொடர்ந்தால் மூன்று மாதங்களுக்கொரு முறை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரியில் மாற்றம் கொண்டு வர வேண்டிய சூழல் ஏற்படும். பலர் கவனியாமல் பழைய முகவரிக்கே அனுப்ப நேரிடும். 

இந்தக் குளறுபடிகள் நேராமல் தவிர்க்க.. உங்கள் ஒத்துழைப்பு அவசியமாகிறது.

ஆரம்ப நிலையில் இருக்கும் சிலர் தவிர்த்து செய்யத் தெரிந்தவர்கள் சிரமம் பாராமல் அளவைக் குறைத்து அனுப்புங்கள். இதைப் போட்டி விதிமுறையிலும் தெரிவித்திருக்கிறோம். ஒரு வேண்டுகோளாகவே வலியுறுத்தியும் வருகிறோம். 

எப்படி அளவைக் குறைக்கலாம் என்பதையும் இந்தப் பதிவில் விளக்கியிருக்கிறோம்: http://photography-in-tamil.blogspot.in/2012/04/blog-post_15.html

கற்றுக் கொள்ளுங்கள்.  கற்றதை செயல்படுத்திப் பழகுங்கள். ஏனெனில்,

PiT போட்டிகள் உங்களை மெருகேற்றிக் கொள்ளவும் பல சர்வதேசப் போட்டிகளில் கலந்து கொள்ள உதவும் பயிற்சிக் களமாகவும் இருக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். அது போன்ற பெரிய போட்டிகளில் படத்தின் அளவு விதிமுறையில் குறிப்பிட்டபடி இருக்காவிட்டால் படங்கள் விலக்கப்பட்டு விடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். 

விதிமுறைகளைச் சரியாகப் பின்பற்றுவதை ஒருவழக்கமாகக் கொள்வது உங்களுக்கே பயன் தரும். 

அன்புடன்
PiT குழு.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


14 comments:

 1. மிகவும் பிடித்த சப்ஜெக்ட். மழையெல்லாம் நின்றுவிட்டதே. :) பழைய படங்களில் தான் தேடவேண்டும்.நன்றி பிட்.

  ReplyDelete
 2. எனக்கும் பிடித்த சப்ஜெக்ட்.வரும் படங்களைக் காண ஆவல்.

  ReplyDelete
 3. மன்னிக்கணும் நீங்கள் சொன்ன வேளை செம மழை பிடித்தது சென்னையில்.
  அதனால் படங்கள் பிடிக்க ஏதுவானது.:)

  ReplyDelete
 4. இன்னும் 10 நாளுக்குள்ள மழை வராமலயா போயிரும் எடுத்துடுவோம். எடுத்த படமெல்லாம் ஒழுங்கா இருக்கான்னு பார்க்க மற்ற நாட்கள்.

  ReplyDelete
 5. its a rite time...coc just n UAE rain came & gone took some phots in Iphone let c how all will like...

  ReplyDelete
 6. Just rain gone from UAE took some photos in Iphone let me c how it will be...

  ReplyDelete
 7. hi i'm joseph and new to this.i have sent the photo what i take.how to check in picasaweb.

  ReplyDelete
 8. @Joseph Amalan,

  தங்கள் படம் கிடைத்தது.

  பிகாஸா ஆல்பம் PiT தளத்திலேயே ஸ்லைட் ஷோ-ஆக வலப்பக்கம் முதலாவதாக உள்ளது.

  ReplyDelete
 9. உங்களின் இந்த வலைதளம், போட்டோகிராபி பற்றி தெரிந்துகொள்ள பயனுள்ளதாக உள்ளது. நன்றி :-)

  ReplyDelete
 10. புகைப்படக்கலையில் விருப்பமுள்ளவர்கள் இந்த போட்டியில் கலந்து கொள்ளுங்கள்.
  உங்கள் திறமை வெளிப்படட்டும்.
  நன்றி Pit Photography in Tamil.

  ReplyDelete
 11. I have sent photo for contest மழைக்காலம். karthikeyan.jpg

  ReplyDelete
 12. sent a photo for the contest

  ReplyDelete
 13. இதுவரை வந்த படங்கள் யாவும் சேர்க்கப்பட்டு விட்டன. யாருடையதேனும் விட்டுப் போயிருந்தால் இங்கே தெரிவியுங்கள்.

  ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff