என்னடா இது நேரடியா முடிவு அறிவிக்கப்பட்டிருக்கேன்னு பாக்குறீங்களா?? வந்ததே பதினெட்டு படங்கள் தான். அதிலிருந்து எப்படி பத்து தேர்ந்தெடுத்து பின்னர் சிறந்த மூன்று அறிவிப்பது... அதான் நேரடியா முடிவு அறிவிக்கலாம்னு. :)
இது மாதிரி தலைப்பு கொடுக்கும்போதே பங்கேற்பவர்கள் எண்ணிக்கை குறையுமே என்று எங்களுக்குள் பேசிக்கொண்டோம். 'பரவாயில்லை, இது எடுத்து வைத்துள்ள படங்களை மட்டும் போட்டிக்கு அனுப்பி பங்கேற்பதற்கான மனநிலையிலிருந்து புதிதாக கற்றுக்கொண்டு போட்டிக்காகவே படமெடுத்து போட்டியில் பங்கேடுப்பவர்களை ஊக்குவிப்போம்' என்று முடிவானது.
இருக்கிற படங்களையே அனுப்புவது என்கிற மனநிலையை மாற்றிக்கொண்டு தலைப்புக்கேற்றவாறு புதிய படங்களை எடுக்க ஆரம்பியுங்கள். போட்டிகள் உங்கள் திறமையை வளர்த்துக் கொள்வதற்கே.
போட்டிக்கு வந்த பதினெட்டு படங்களுமே எங்களுக்கு வெற்றியாளர்களாக தெரிகிறார்கள். இருந்தாலும் டெக்னிகலாக, மற்றும் இருப்பதிலேயே 'எனக்கு' சிறந்ததாக படும் படங்களை அறிவிக்க வேண்டுமல்லவா.
மூன்றாம் இடம் : அன்பு
இரண்டாம் இடம்: குணா அமுதன்
முதலிடம் : நித்யன்
சிறப்புக் கவனம் பெற்ற படங்கள்:
விவி ராஜ்:
ருத்ர குமார்:
சுதா:
எல்லாருக்கும் வாழ்த்துகள்!!
விரைவில் அடுத்த மாத போட்டிக்கான அறிவிப்புடன் சிந்திப்போம்.
வெற்றி பெற்றவர் உட்பட அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteபோட்டிக்கு வந்த பதினெட்டு படங்களுமே எங்களுக்கு வெற்றியாளர்களாக தெரிகிறார்கள்
ReplyDeleteவெற்றி பெறவில்லை என்றாலும் இந்த மாதிரியான வரிகள் எங்களுக்கு ஊக்கம் தான்.
judges appreciation is key role for contestant experimental shot,not only for selected pictures needed for almost entries.personally not happy for no.of entries in last month competition even not participate in the contest :-(
ReplyDeletehttp://www.atheetham.com/?p=5275
ReplyDeletehttp://www.atheetham.com/?p=5281
http://www.atheetham.com/?p=5286
அதீதம் மின்னிதழில்.., வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!