Wednesday, February 5, 2014

2014 பிப்ரவரி மாதப் போட்டி

8 comments:
 
காலில் சக்கரங்கள் கட்டிய மாதிரி ஓடிக்கொண்டிருக்கிற மனிதரை சற்றே நிற்க வைக்கவும் ஆசுவாசப்படுத்தவும் செய்பவை கலையை விட வேறெதுவாக இருக்க முடியும்? நம்ம ஒளிப்படக் கலையையும் சேர்த்துதான்:)! கலைகளைக் கொண்டாட விரும்பித் தந்திருக்கிறார் தலைப்பை, இம்மாதப் போட்டி நடுவராகச் செயலாற்றவிருக்கும் ஐயப்பன் கிருஷ்ணன்.

சிற்பங்களும் ஓவியங்களும்

இதுதான் தலைப்பு.

இந்தப் போட்டியைப் பொறுத்தவரை, வடித்த சிற்பிக்கும் தீட்டிய ஓவியருக்குமே கெரெடிட் என்றால் நமது பங்கு என்ன?

அவர்கள் திறனை அழகாக உலகுக்கு எடுத்துக் காட்டுகிற விதத்தில்..

உங்கள் ஒளிப்படங்கள் அவர்கள் கலைத் திறனுக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக இருக்கப் போவதில்..

சிற்பங்களை பலவித கோணங்களில் எடுக்கலாமென்றாலும் ஒருவர் வரைந்த ஓவியத்தை அப்படியே படமாக்குவதில் என்ன சவால் இருக்கிறது என்கிற கேள்வியும் சிலருக்கு இருக்கிறது. பெரிய பெரிய கேன்வாஸ்களில் வரையப்படுபவற்றை ஸ்கேன் செய்வது நடைமுறையில் அத்தனை எளிதாக சாத்தியப்படாதிருக்க, பல ஓவியர்கள் தங்கள் படைப்புகளைச் சந்தைப் படுத்தவும், தங்கள் ஆல்பத்தில் சேமிக்கவும் இதற்கென்றே செயல்படும் புகைப்படக் கலைஞர்களின் உதவியை நாடியும் வருகிறார்கள். கலையும் கலையும் கைக்குலுக்கிக் கொள்வது போல ஓவியங்களை ஒளிப்படமாக்குவதும் புகைப்படக்கலையின் ஒரு தனிப்பிரிவாக ஆகிவிட்டிருக்கிறது.

ஓவியங்களை அதன் வண்ணங்களின் தன்மை கெடாமல், ஃப்ளாஷ் உபயோகிக்காமல், சரியான ஒளியில் எடுப்பதும் ஒரு சவால்தான். சுவரிலோ, மிக உயரத்தில் மாட்டப்பட்டிருப்பவற்றுக்கு சரியான கோணம் அமைக்க வேண்டும். முடிந்த வரை நேரான கோணத்தில் எடுத்துத் தரப்படுவதையே ஓவியர்கள் விரும்புகிறார்கள் என்றாலும் இந்தப் போட்டியில் அப்படிதான் இருக்க வேண்டுமென்பது அவசியமில்லை. ஓவியத்தில் கூடவே இரசிக்கும் நபரோ, தீட்டிய ஓவியரோ அல்லது தீட்டும் பொழுதில் எடுத்ததாகவோ கூட இருக்கலாம். அது கலந்து கொள்பவர் ரசனைக்கே விடப்படுகிறது. ஆனால் படத்தில் ஓவியம் கவனத்தை ஈர்க்க வேண்டும். தஞ்சாவூர் ஓவியங்களில் அதன் நுண்ணிய வேலைப்பாடுகள் வெளிப்படுமாறு படமெடுக்கலாம்.

பெரும்பாலும் சிற்பங்களை வடித்தவர் பெயர் நமக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான். ஆனால் ஓவியங்களை வரைந்தவர் பெயர் தெரிந்திருப்பின் அதை படத்தின் ஒரு ஓரத்தில் குறிப்பிடும்படிக் கேட்டுக் கொள்கிறோம். ஓவிய ஒளிப்படங்கள் ‘காபிரைட் பிரச்சனைக்கு உள்ளாகி விடாமல்’ பார்த்துக் கொள்வதோடு, கண்டிப்பாக நீங்கள் எடுத்ததாக இருக்க வேண்டுமென்பதைச் சொல்லத் தேவையில்லைதானே!

மாதிரிக்கு சில படங்கள்:

#1
#2


#3

#4

#5

 #6

#7


#8

போட்டி விதிமுறைகள் இங்கே.

படங்கள் வந்து சேரவேண்டிய கடைசித்தேதி: 20 - 2 - 2014



***

8 comments:

  1. படங்கள் அருமை... கலந்து கொள்ள போகிறவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. நான் எடுத்த படத்தை சிறிது edit செய்து அனுப்பலாமா?

    ReplyDelete
  3. @rk bala,

    அடிப்படை திருத்தங்களை நிச்சயமாகச் செய்யலாம். (brightness,contrast,saturation போன்றன). ஆனால் பின்புலங்களை மாற்றுவது, ஒட்டு வேலைகள் போன்ற Manupulation_களுக்கு அனுமதியில்லை.

    ReplyDelete
  4. போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. மார்ச் போட்டி என்ன ஆச்சி??

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff