வணக்கம்
பிட் மக்கா,
பொதுவாக இணையதளத்தில்
போட்டி நடத்துபவர்கள்,போட்டிக்காக அனுப்பப்படும் படங்கள் இத்தனை PPI resolution மற்றும் Longest edge இவ்வளவு
பிக்ஸலில் அனுப்பனும்ன்னு தெளிவா சொல்லிடறாங்க ,ஆனா
இந்த அளவுகள்ல நம்ம படங்கள எப்படி
தயாரிக்கிறது? ***
இப்போ நம்ம
பிட் தளத்தையே எடுத்துக்கோங்க மாதாந்திரபோட்டிக்காக 1024 க்கு 768 அளவுல தான் படங்களை
அனுப்பனும்ன்னு திட்டவட்டமா சொல்லுறாங்க இல்ல?
சரி இதுகுறித்து பிட்டில் ஏற்கனவே ராமலக்ஷ்மி அவர்கள் Irfanview
ல் செய்வது குறித்து கட்டுரை
எழுதியிருந்தார்களே என நீங்கள் கேட்பது
எனக்கு புரிகிறது நண்பர்களே!!, இருப்பினும் சமீபத்தில் சந்தித்த புகைப்படக்கலையில் ஆர்வமுள்ள நண்பர் ஒருவர் இதுகுறித்து
போட்டோஷாப்பில் விளக்கமுடியுமான்னு கேட்டிருந்தார், Photoshop,Lightroom பயனாளர்களும் தெரிந்துகொள்ளட்டுமே என இக்கட்டுரையை உங்களுக்கு
அளிக்கிறேன்.
**
முதலில்
போட்டோஷாப்பை இயக்கி உங்களது படத்தினை
திறந்துகொள்ளவும்,பின்னர் Edit<Image Size செல்லவும்.
பின்னர் Resample என்பதன் “டிக்” மார்க்கினை எடுத்துவிடவும்.
இப்போது
Resolutionல் உங்களுக்கு தேவையான மதிப்பை தேர்ந்தெடுத்துக்கொண்டு
OK செய்யவும். இக்கட்டுரையில் நாம் எடுத்துக்கொண்ட விதிகளின்
படி 300 ppi ஆகும்.
இனி மீண்டும் ஒருமுறை Edit<Image Size செல்லவும்
இம்முறை Resample என்பதனை “டிக்” செய்துகொள்ளவும். இனி
நமக்கு தேவை Longest Edge எது
என்பதை தேர்ந்தெடுத்து அதன் மதிப்பை கொடுத்து
படத்தினை ரீசைஸ் செய்யப்போகிறோம். இப்போட்டியின்
விதிப்படி நமக்கு தேவையான அளவு
Longest Edge 3300 Pixels ஆகும்.
ஒரு படத்தின் “Longest Edge” என்பது படத்தின் அதிகப்படியான
மதிப்பேயாகும்,அதாவது Landscape ஆக
இருந்தால் Widht என்பது Longest
பகுதியாகும். Portrait ஆக இருப்பின் Height
என்பது Longest Edge ஆகும்.
கீழேயுள்ள
படம் Portrait படமென்பதால்
நான் Height இன் மதிப்பை
போட்டிக்கான விதிப்படி 3300 pixels ஆக கொடுக்கிறேன்,என்ன ஆயிற்று என்று
பாருங்கள் ??.
என்னுடைய Widht ன் மதிப்பை தானாகவே போட்டோஷாப் தீர்மானித்துக்கொண்டது. Landscape படமாக இருப்பின் உங்களது Widhtல்
3300 pixels என கொடுக்கும் போது படத்தின் Height ஆனது போட்டோஷாப் தானாகவே தீர்மானித்துக்கொள்ளும்.
கடைசியாக
OK செய்யவும். அவ்வளவே போட்டிக்கான விதிமுறைகளின்
படி படம்
தயார்.
நீங்கள்
Lightroom பயன்படுத்துபவராக இருப்பின் இதில் மிக எளிமையாக
உருவாக்கலாம். படத்தினை Lightroomல் திறந்துகொண்டு பின்னர் File<Export என்பதை
தேர்வு செய்யவும்.
இப்போது
தோன்றும் விண்டோவில் Image Sizing பகுதியில் “Resize to Fit”என்பதில் “Longest Edge” என்பதனை தேர்வு செய்யவும்
பின்னர்,Pixel பகுதியில் உங்களுக்கு
தேவையான மதிப்பை கொடுக்கவும்,நம்
கட்டுரையின் படி 3300 Pixels ஆகும். பின்னர் கடைசியாக
Resolution என்பதனை 300 ஆக மாற்றிக்கொண்டு Export
செய்துகொள்ளவும்.
இக்கட்டுரையை
வாசிக்கும் Photoshop/Lightroom அல்லாத பயனாளர்களாக
இருப்பின் பிட்டில் ஏற்கனவே இராமலக்ஷ்மி அவர்கள்
எழுதியிருக்கும் Irfan view குறித்த
பதிவையும் பார்த்துக்கொள்ளுங்கள்.
***
***
சூப்பர்....அப்படியே light roomla post processing எப்படி பண்ணா நல்லாயிருக்கும் என்பதையும் வரும் posta சொன்னா நல்லாயிருக்கும்:))
ReplyDeleteவிளக்கம் கலந்து கொள்பவர்களுக்கு மட்டுமல்ல... பலருக்கும் உதவும்...
ReplyDeleteநன்றி...
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
ReplyDeleteமேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/02/thalir-suresh-day-6.html) சென்று பார்க்கவும்... நன்றி...